இஸ்ரவேலின் நியாயாதிபதி.
முக்கிய வசனம்:
நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய். அவன் தலையின்மேல் சவரகன் கத்திபடலாகாது, அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான், அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார்.” (நியா: 5)
சுருக்கமான குறிப்புகள்.
v தாண் வம்சத்திலிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒரு குழந்தை.
v அவன் மனோவாவுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குழந்தையாகப் பிறந்தான்.
v இஸ்ரவேலரின் விரோதியான பெலிஸ்தியரோடு யுத்தம்பண்ண முன் குறிக்கப்பட்டிருந்தான்.
v அவன் இஸ்ரவேல் சட்டத்திற்கு எதிராக திருமணம் செய்தான்.
v அவன் தன்னையே பழிவாங்கி ஒரு தியாகியாக மரணமடைந்தான்.
v அவன் பெலிஸ்தியரின் கொடுமையிலிருந்து இஸ்ரவேலரை விடுதலையாக்கின உயர்ந்தவர்களில் ஒருவனானான்.
1. அறிமுகவுரை – அவன் கதை
சிம்சோன் என்றால் சூரியனுக்குச் சமமானவன், திடமானவன் அல்லது பலமானவன் என்று பொருள்படும். அவன் பழைய ஏற்பாட்டில் மிகுந்த புகழ்பெற்ற மனிதர்களுள் ஒருவனாக இருந்தான். அவன் தாண் வம்சத்தானாகிய மனோவாவின் குமாரன். கோராவில் பிறந்தான். அவன் பிறப்பு அவன் பெற்றோர்களுக்கு அற்புதமான விதமாய் அந்தரங்கமாய்த் தெரிவிக்கப்பட்டது. (நியா: 13) அவளுக்கும் அவள் கணவன் மனோவாவுக்கும் ஒரு தேவதூதன் தரிசனமானபின் அதிக காலம் மலடியாயிருந்த, நசரேயனின் பிரமாணத்தைத் தன் மனதிலே வைத்துக்கொண்ட பெண்ணுக்கு வாக்குத்தத்தின் குழந்தையாகப் பிறந்தான். (அதி: 13, ரெபெக்காள், சாராள், ரேய்ச்சல், அன்னாள், எலிசபெத்) அவன் நசரேயனானவன். (நியா: 16: 17) அவன் சட்டத்திற்குப் புறம்பானபடி (யாத்: 34 : 16; உபா: 7 : 3) திம்னாத்திலுள்ள பாலஸ்தீனப் பெண்ணைத் திருமணம் செய்தான். (நியா: 14 : 5-9) சிம்சோனுக்கு நடக்கப்போகிற திருமணம் அவன் பெற்றோர்களால் தடைசெய்யப்பட்டது. ஏனென்றால் அது விருத்தசேதனமில்லாத விக்கிரகாராதனைக்காரர்களோடு விரும்பத்தகாத ஐக்கியம். (ஏசா, ஆதி: 26 : 34 – 35) அதற்குப் பிறகு அவன் ஒரு விடுகதையைப் பிரகடனப்படுத்தினான். அதில் அவன் மனைவி அழுத்தத்தின் கீழ் பாலஸ்தீனியர்களுக்கு தெரியப்படுத்தினான். அந்த நஷ்டத்தை ஈடுகட்டிட, அஸ்கலோனிலுள்ள முப்பது பாலஸ்தீனியர்களைக் கொன்று கொள்ளையடித்தான். ஆனால் அவன் மனைவி அவள் தகப்பனால் வேறொருவனுக்குக் கொடுக்கப்பட்டாள். (நியா: 14 : 19 – 20) பழிவாங்கும் எண்ணத்தில் சிம்சோன் நரிகளைப் பிடித்து தீப்பந்தங்களை வாலில் வைத்துக் கட்டி, பாலஸ்தீனியர்களின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, அவர்கள் விளைச்சலை அழித்துப்போட்டான். சிம்சோன் தெலீலாளால் காட்டிக் கொடுக்கப்பட்டு, பாலஸ்தீனர்களால் பிடிக்கப்பட்டு, குருடாக்கப்பட்டு காசாவில் அவனைச் சிறைச்சாலையில் அடைக்குமட்டும் பழிவாங்கும் யுத்தம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. (நியா: 15) தங்கள் தேவனாகிய தாகோனுக்கு பலி செலுத்தவும், விளையாடவும் அவனைக் கொண்டுவந்தார்கள். அவன் தன்னையும், அவர்களையும் ஒரு பொதுவான அழிவில் சம்பந்தப்படுத்தினான். அவன் சமுதாயத்தில் ஒரு சகோதரன் அவன் உடலை எடுத்துக்கொண்டு வந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே உள்ள குடும்பத்தினர் அடக்கம் பண்ணும் இடத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் பண்ணினான். சிம்சோன் இஸ்ரவேலை 20 வருஷங்கள் நியாயம் விசாரித்தான். (நியா: 16) எபி: 11 : 32 – 33ன்படி அவன் விசுவாசத்தின் வீரர்களோடு இணைக்கப்பட்டான்.
2. அவன் சரித்திரத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள்.
a) பலமும் நிறைவேற்றுதலும்.
i) அவன் நசரேயனாக பிறந்ததிலிருந்து தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டான்.
ii) அவன் அளவிடமுடியாத சரீர பலமுள்ளவன். அவன் அதை தேவனுக்காகவும், அவன் சொந்த மகிமைக்காகவும் உபயோகப்படுத்தினான்.
iii) அவன் பிறக்கும் முன்னால் அவன் பெற்றோர்களைச் சந்தித்த தேவதூதனின் அறிவிப்பின்படி சிம்சோன் தேவனின் நோக்கத்தை நிறைவேற்றினான். அவனுடைய கடைசி முடிவின்படி சிம்சோன் இஸ்ரவேலை பாலஸ்தீனியர்களிடமிருந்து காப்பாற்றத் துவங்கினான்.
iv) அவன் எபிரேயர் 11ல். விசுவாசத்தின் குறிப்பில் பட்டியலிடப்பட்டிருந்தான். புதிய ஏற்பாடு சிம்சோனின் தோல்வியையோ அல்லது அவனின் வல்லமையின் வீரச் செயலையோ குறிப்பிடவில்லை. எபிரேயரில், விசுவாசத்தின் மூலம் இராஜ்யத்தை அடைந்தவர்கள், நீதியை ஆட்சி செய்கிறவர்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளில் வென்றவர்கள், இன்னும் மற்ற வழியில் தெய்வத்தன்மையுள்ள உதவி பெற்றவர்கள் இவர்களோடு அவன் சாதாரணமாக குறிப்பிடப்பட்டிருக்கிறான். கடைசியில் சிம்சோன் தேவன் மேல் சார்ந்திருப்பதை உணர்ந்து கொண்டான். அவன் மரணமடையும்போது தேவன் தோல்வியையும், வெற்றியடையாததையும் வெற்றியாக மாற்றினார்.
v) அவன் பாலஸ்தீனியர்களின் கொடுமையிலிருந்து இஸ்ரவேலரை விடுதலை செய்தவர்களில் உயர்ந்தவனாயிருந்தான்.
b) சிம்சோனின் பலவீனங்களும் தவறுகளும்
i) அவன் அநேக சமயங்களில் பிரமாணத்தையும், தேவனின் சட்டத்தையும் மீறினான்.
ii) அவன் சிற்றின்ப சம்பந்தமான காரியங்களில் கட்டுப்படுத்தப்பட்டான். ஒழுங்கின்மை அவனது வீழ்ச்சியைக் கொண்டுவந்தது. அவனது தன்னலம் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சி, புனிதமான பிரமாணத்தை மறந்துவிடுதல் இவைகள் கடுமையான, தைரியமான, உயர்ந்த நோக்கத்திலிருந்தாலும் அவனை ஆபத்தில் கொண்டு வந்துவிட்டது. ஆனதால் அவன் தேவபக்தியுள்ள வீரனாக இல்லாததால், தேவனின் சுவிசேஷத்திற்கு உதாரணமாக விளங்கமுடியாது. அவன் சட்ட விரோதமான அன்பின் உணர்ச்சிக்கு அடிமையானான். அவன் தெய்வீகப் பிரமாணத்தோடு விளையாடினான். தெலீலாளின் மடியில் உறங்கினான். இவைகளினால் அவன் முடி, அவன் சக்தி, அவன் கண்கள், அவன் சுதந்திரம் இவைகளை வெற்றியுடன் இழந்தான். ( நியா: 16 : 4-22)
iii) தவறான ஜனங்களிடம் தன்னை ஒப்படைத்தான். அவன் நம்பிக்கைத் துரோகம் செய்த தெலீலாள், பாலஸ்தீனியர்களை நம்பினான்.
iv) சிம்சோன் அவனின் பரிசுகள், திறமைகளை விவேகமில்லாமல் உபயோகித்தான்.
3. முடிவுரை
வாழ்க்கையின் ஒரு பகுதியிலுள்ள மிகுந்த வல்லமை, அடுத்த பகுதியிலுள்ள மிகுந்த பலவீனங்களுக்கு ஒத்துவராது. ஒரு மனிதனின் தீர்மானம் தேவனின் பிரசன்னத்தால் மேற்கொள்ள முடியாது. மேலும் தேவன், ஒருவன், ஒருத்தியின் தவறுகளின் வருந்துதலால் ஒரு நம்பிக்கையுள்ள மனிதனை உபயோகப்படுத்த முடியும்.
4. வேதாகமக் குறிப்புகள்:
அவன் கதை நியா: 13 – 16ல். சொல்லப்பட்டிருக்கிறது. எபி: 11 : 32லும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
5. விவாதத்திற்குறிய கேள்விகள்.
5.1. ஒரு நசரேயனின் பிரமாணம் என்ன?
5.2. சிம்சோன் ஒரு வல்லமையுள்ள மனிதன். அவன் வல்லமையைத் தேவனின் நோக்கத்திற்காக மட்டும் உபயோகித்தானா?
5.3. அவன் எப்படி பாலஸ்தீனர்களின் எதிர்ப்பிலிருந்து இஸ்ரவேலைக் காப்பாற்றினான்?
5.4. சிம்சோனை எப்படி மதிப்பிடுவாய்?
5.5. அவனுடைய பலவீனங்கள் எவைகள்?
Translated by:
Mdm. Nayagam Pattu
St. James Church.
No comments:
Post a Comment