119
அப்போஸ்தலனும் இரத்தசாட்சியுமாகிய
சீமோன் பேதுரு
கரு வசனம்:
மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. மத்தேயு 16:18
சுருக்கத்திரட்டு
· மீன் பிடிக்கிறவனாகிய சீமோன் “பேதுரு” என பெயர் மாற்றம்
பெற்றான். · தன் எஜமானைச் சுற்றி மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் இவனும் ஒருவன்.
· பேதுரு கிறிஸ்துவை அறிந்திருந்ததை மறுதலித்தான்.
· இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப்பின், சபைக்கு தலைமையேற்று நடத்துமாறு அவரது அழைப்பைப்பெற்றவன்.
· பெந்தைகொஸ்தே என்னும் நாளில் இவன் பிரசங்கித்த போது 3000 போ; இரட்சிக்கப் பட்டனர்.
1.
அறிமுக
உரை - இவனது கதை
1.1 முன் வரலாறு
எபிரேய
மொழியிலே தெளிவாக சொல்லப்படுகிற சீமோன் என்ற பெயர் தான் பேதுருவின்
உண்மையான பெயர்.
(அப்போஸ்தலர்
15:14,
2பேதுரு1:1). இவனுடைய தகப்பனார் பெயர் யோனா (மத்தேயு 16:17, யோவான் 21:15). இவன் திருமணமானவன்
(மாற்கு1:30)
இவனது
மனைவியும் இவனது மிஷனரி ஊழிய நாட்களில், இவனோடு இணைந்திருந்தாள் (1கொரிந்தியர் 9:5) இவன் பெத்சாயிதா
ஊரான் என்று நான்காம் சுவிசேஷம் கூறுகிறது (யோவான் 1:44). ஆனால் இவனுக்கு கலிலேயாவிலுள்ள
கப்பர்நகூமில் வேறு ஒரு
வீடு இருந்ததாக மாற்கு 1:21ம் வசனம் கூறுகிறது.
இந்த இரண்டு இடங்களும் ஏhpயின் கரையோரமாகவே இருந்தது. இவன் இங்கு மீன்
பிடிக்கிறவனாக காணப்பட்டான். இந்த இரண்டு இடங்களிலேயும் புறமதஸ்தர் அநேகர்
வாழ்ந்தபடியால் அவர்களோடு அதிக தொடர்பு இவனுக்கு இருந்தது. கிரேக்க மொழியில்
இவனுடைய சகோதரன் பெயர் அந்திரேயா என்பதாகும். இவன் அராமிக் மொழியை வலுவான வட நாட்டு
உச்சரிப்புடன் பேசுகிறவனாகவும் (மாற்கு14:70) தெய்வ பக்தியுடையவனாகவும்
காணப்பட்டான் (அப்போஸ்தலர்10:14). ஆலோசனை சங்கத்தில் நிறுத்தப்பட்ட போது பவுலைப் போன்று
சட்ட அறிவு இல்லாத போதும் மிகவும் ஞானமாய் பேசி அலோசனை சங்கத்தினரால்
அனுப்பிவிடப்படுகிறான் (அப்போஸ்தலர் 4:14). யோவான் ஸ்நானகனுடைய
நடவடிக்கைகள் இவன் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. (அப்போஸ்தலர் 1:22). இவனுடைய சகோதரன்
அந்திரேயா,
யோவான்
ஸ்நானகனின் சீஷனாயிருந்தான் (யோவான்1:39)
1.2 இவனது அழைப்பு
பேதுரு
இவனுடைய சகோதரன் அந்திரேயாவால் இயேசுவிடம் அறிமுகப்படுத்தப்பட்டான் (யோவான் 1:41). இதனிமித்தம் பின்னர்
இயேசு இவனை கடலோரத்தில் கண்டு அழைத்தபோது அதிக புரிந்துணர்வோடு உடனே
பின்சென்றான் (மாற்கு1:16). இவர்களுடைய அழைப்பைத் தொடர்ந்து மற்ற சீஷர்களும் இயேசுவின் அழைப்பைப் பெற்றனர்
(மாற்கு3:16).
புதிய
பெர்
சீமோன்
பேதுரு,
கேபா(அராமிக்
மொழி) என்னும் புதிய பட்டப் பெயரைப்
பெற்றான். அராமிக் மொழியில் கேபா என்றால் கல் அல்லது பாறை என்று பொருள் (1கொரிந்தியர் 1:12,15:5, கலாத்தியர் 2:9). வழக்கமாக புதிய
ஏற்பாட்டில் காணப்படுகிற பத்ரோஸ் என்னும் பெயர் கிரேக்க பதம் ஆகும். இயேசு தாமே
இந்த பெயரை பேதுருவுக்கு வழங்கினார்.
1.3 இயேசுவின்
ஊழியத்தில் பேதுரு
சீஷர்களிலே முதலாவது
அழைப்பைப் பெற்றவன் இந்த பேதுரு. சீஷர்களுடைய பெயர் பட்டியலில் இவன் எப்பொழுதும்
முதலில் நிற்பவன். இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான 3 சீஷர்களில் இவனும் ஒருவன்
(மாற்கு5:37,9:2).
இவனுடைய
உணர்ச்சிப்பூர்வமான பக்தி அவ்வப்போது சித்தரிக்கப்படுவதை நாம்
காணமுடிகிறது (மத்தேயு 14:28,மாற்கு 14:29, லூக்கா5:8). இவன்
பன்னிருவருக்கும் பிரதிநிதியாக செயல்பட்டான் (மத்தேயு15:15). பேதுரு தன்னை
மறுதலிப்பான் என இயேசு கூறிய போது அதை ஏற்க மறுத்தான். அவனுடைய இராஜ பக்தியை
குறித்து தாக்கிப் பேசுகையில் எதிர்ப்புரைக்கிறதை இங்கு காணலாம். ஆனால் பின்னர் அவனே
இயேசுவை மறுதலித்தான் என்பதையும் காணமுடிகிறது. பிலிப்பி, செசரியா பட்டணங்களில் கடந்து
போகையில் இயேசு கேட்ட ஒரு கேள்விக்கு (மாற்கு 8:27-29) பதிலளிக்கையில் இவன் முழு குழுவிற்கும் பிரதிநிதியாக
செயல்பட்டு பதிலளிக்கிறான். இதினால் இதனைத் தொடர்ந்த கடிந்து கொள்ளுதலுக்கும் அனைவரும்
பங்காளர்கள் என தோன்றுகிறது. (மாற்கு 8:33)
பேதுருவுக்கு இயேசுவின் மறுரூபமாகுதலை காணும் ஒரு வாய்ப்பும் அதற்கு சாட்சியாகும் ஒரு சந்தர்ப்பமும் கிடைத்தது (மாற்கு 9:1). பேதுரு இயேசுவை மறுதலித்தானானாலும் அவனுடைய இராஜ பக்தியையும் வெளிப்படுத்துகிறதை மாற்கு 14:66-72 வசனங்களில் காணலாம். பேதுரு உயிர்த்தெழுந்த இயேசுவை முகமுகமாய் காணும் வாய்ப்பைப் பெற்றான் (லூக்கா24:34, 1கொரிந்தியர்15:5).
ஈ)
பேதுருவின் தனி பொறுப்பு
புதிய
எற்பாட்டில் அதிகமாக விவாதிக்கப்படுகிற பகுதி மத்தேயு 16. இயேசு கிறிஸ்து தாமே
பேதுருவுக்கு பாறை என பொறுப்பு உரிமை அளிக்கிறார். பேதுருவின் நம்பிக்கையும், இயேசுவே இரட்சகர் என
இவன் ஒப்புக்கொண்டதும் ஆகிய இவை இவனது ஊழியத்தின் முக்கிய பகுதி ஆகும். வரலாற்றுப்
பூர்வமாக பாறை என்பது கிறிஸ்துவின் மேல் வைக்கப்பட்ட நம்பிக்கை மாத்திரமல்ல
கிறிஸ்துவைக் குறித்த அப்போஸ்தலர்களின் அறிக்கையும் கூட. வேறு ஒரு இடத்தில் இவன்
சபையின் அஸ்திபாரம் என்று கூறப்பட்டுள்ளது
(எபேசியர் 2:20).
தெர்துல்லியன் போன்ற
வேதாகம வல்லுனர்கள் பேதுரு சபையின்
அஸ்திபாரம் எனக் ஒப்புக்கொள்ளுகின்றனர். ஆனால் குல்மான் என்பவர் இந்தக் கருத்தை
மறுக்கிறார்.
உ)
பேதுரு ஒரு அப்போஸ்தல சபை
பெந்தேகொஸ்தே
என்ற நாளுக்கு முன்னர் வரை சமூகத்தில் முன்னணியில் இருந்தவன்(அப்போஸ்தலர் 1:15) பின்னர் இவன் முதன்மைப்
போதகனானான் (அப்2:14,3:12). பேதுரு தெய்வீக சக்தியினால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான்
(அப்5:15).
இவன்
புறஜாதிகளின் ஊழியத்தில் பங்குள்ள முதல் நபராக காணப்பட்டான் (10:1). பின்னர் ஒரு கட்டத்தில் பவுல்
இந்த புறஜாதிகளின் ஊழியத்தைப் பொறுப்பெடுத்துக் கொண்டார். அப்போஸ்தலனாகிய பவுல்
பேதுருவோடு உண்மைக்காக எதிர்த்து நின்றார்; (கலாத்தியர் 2:11). யூதரல்லாதோரை
தவிர்க்காமல் இருக்குமாறும் அனைவரையும்
தேவனுடைய குடும்பத்தில் ஏற்குமாறும் வேண்டிக்கொண்டார். பேதுரு ஒரு போலியான
வாழ்க்கை வாழ்ந்து வந்தான், ஆனால் பவுல் இவனை நேசித்ததினால் அவைகளை நேரடியாக
அவனுக்கு எடுத்துரைத்தார்.
ஊ)
பேதுருவின் முதலாம் நிருபம்
இந்த
கடிதமானது இந்த அப்போஸ்தலனுடைய பெயரியிலேயே அனுப்பப்பட்டது. பேதுருவின் இரண்டு
நிரூபங்களும் பவுலின் இறை சித்தாந்தத்தைத் தழுவியது என்று பலர் கருதுகின்றனர்.எ) பேதுரு ரோமாபுரியில் நீரோ அரசனின் காலத்தில் (கி.பி 6ல்) இரத்த சாட்சியாக மரித்ததாக நம்பப்படுகிறது. இதை குறித்து யோவான் 21:18-19ல் காணலாம்.
முடிவுரை
பேதுருவின்
வாழ்க்கையில் இயேசு நுழைந்த போது, மீன் பிடிக்கிறவனாய் இருந்தவன் புதிய நோக்கத்தோடும்
புதிய முன்னுரிமையோடும் ஒரு புதிய
மனிதனாக மாறினான். இன்னும் இவன் ஒரு நிறைவான மனிதனாக மாறவில்லை, அவன் சீமோன்
பேதுருவாக இருப்பதை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. பாறை என்று அவனது பெயர்
காணப்பட்டாலும் அவன் பல நேரங்களில் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. கிறிஸ்து இவனை
தம்முடைய பணியில் பயன்படுத்தினாh;. இயேசு தம்முடைய சீடர்களை தெரிந்தெடுக்கும்போது
போலியானவர்களைத் தேடாமல் உண்மையானவர்களையே
தேடினார். அவர்
தேர்தெடுத்தவர்கள் அவருடைய
அன்பினால் மாறக்கூடியவர்களாயிருந்தனர். பின்னர் அவர் அவர்களை வெளியே அனுப்பி மற்றவர்களையும் (குறைவுள்ளவர்களாயினும்)
தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கும் படிக்கு தொடர்பு கொள்ள அனுப்புகிறார். இயேசு பேதுரு
அவ்வாறு குறைவுள்ளவன் என்றபோதிலும் அவனையும் ஏற்றுக் கொண்டார். பேதுரு தேவனுக்காக
பெரிய காரியங்களைச் செய்ய புறப்பட்டான்.
2.
பெலனும்
பெலவீனமும்
2:1 இயேசுவின் சீடர்களில்
அங்கிகரிக்கப்பட்ட ஒரு தலைவனாகவும், மிகவும் நெருங்கிய வளையத்தில் மூவரில் ஒருவனாகவும்
காணப்பட்டான.
2:2 பெந்கொஸ்தே
காலத்திலும் அதற்குப் பின்னரும் சுவிசேஷத்தை அறிவபிப்பதலில் முன்னோடியாக நின்றான்.
2:3 மாற்குவிற்கு, மாற்கு என்கிற
சுவிசேஷத்தை எழுத பேதுரு பல தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது. (1பேதுரு5:13)
2:4 1பேதுரு, 2பேதுரு ஆகிய நிறுபங்களை எழுதினவன்.
3.
பெலவீனமும்
தவறுகளும்
3:1 அடிக்கடி
சிந்திக்காமல் பேசுபவன். அவசரமாக மற்றும் திடீர் உணர்ச்சி வசப்படுபவன்.
3:2 இயேசுவின்
விசாரனையின் போது, அவரைத் தெரிந்திருந்தும் தெரியாது என
கூறி 3 முறை மறுதலித்தான்.
3:3 புறஜாதி கிறிஸ்தவர்களைச் சமமாக
நடத்துவதில் அதிக சிரமத்தை எதிர்கொண்டான்.
4.
இவனது வாழ்க்கையிலிருந்து
பாடங்கள்
4:1
நம்பிக்கை
மற்றும் புர்ந்துணர்வு இவைகளின்
ஆதரவு இல்லாமல் உற்சாகமானது தோல்வியில் முடியும்.
4:2 நமது நம்பிக்கை
கடவுளுடைய நம்பிக்கைக்கு ஒரு போதும் ஈடு கொடுக்க முடியாது.
4:3 பின்தொடர முடியாத
ஒரு சீடனாக இருப்பதைக் காட்டிலும் பின்தொடர்ந்தும் தோல்வியைத் தழுவுகிற சீடனே மேல்.
5.
வேதாகமக்
குறிப்புக்கள்
பேதுருவின்
கதையானது சுவிசேஷங்களிலும், அப்போஸ்தலர் புத்தகத்திலும் மற்றும் கலா.1:18,2:7-14, 1கொரி1:12,9:5,15:5லும் இவன் எழுதின 1, 2 பேதுரு
நிருபங்களிலும் காணலாம்.
6.
கலந்தாலோசனைக்கான
கேள்விகள்
6:1 தேவன் சீமோனை
பேதுருவாக மாற்றியது ஏன்?
6:2 இவன் ஏன்
கிறிஸ்துவை மறுதலித்தான்?
6:3 இயேசுவின் உயிர்தெழுதலுக்குப் பின்
இவன் எப்படிப்பட்ட மாற்றத்தைப் பெற்றான்?
6:4 பெந்தெகோஸ்தே
நாளில் இவன் செய்த ஊழியத்தை குறித்து கருத்துரை.
6:5 இவனுடைய
பெலவீனங்கள் என்ன?
6:6 இவனது
வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள் யாவை?
மொழிபெயர்ப்பு
ஜான் ஆரோக்கியசாமி,
பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான்
மொழிபெயர்ப்பு
ஜான் ஆரோக்கியசாமி,
பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான்