6 அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின் படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். 7 எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள். (லூக்கா 1:6-7)
- இவர் ஸ்தாபக அருளப்பரின் தந்தை
- இவர் கடமை தவறாதவர்.
- குடும்ப வழக்கப்படி இவருக்கு அருளப்பர் என்று பெயர் சூட்டினார்.
- இவருடைய மனைவி எலிசபெத் ஒரு மலடி. கடவுள் இவர்கள் வாழ்க்கையில் ஒரு மகனைத் தந்து புதுமை புரிந்தார். அவர் ஒரு போதகராக இரந்தார்.
- இவர் குருத்துவ பணிகளைக் கடமை தவறாமல் செய்து வந்தார்.
அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தது யூதர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்தது. இறை அருள் அவர்களுக்கு இல்லை என மக்கள் நினைத்தனர். காரணம் இருவரும் வயது முதிர்ந்தவர்களாக இருந்தனர். அதனால் கடவுளிடம் குழந்தை வரம் கேட்பதையும் விட்டுவிட்டார்கள்.
ஒரு சில நேரத்தில் இறைமக்கள் கூட இறைவன் மீது நம்பிக்கை இழந்து தன் சொந்த அனுபவத்தின் மீத மிகுந்த நம்பிக்கை வைத்து செயல்படுகின்றனர். இறைவனின் வாக்குறுதி மீது நம்பிக்கை இழந்து அது நடைபெறாது என்று நம்புகின்றனர். கடவுளின் ஆற்றலை மீட்புத் திட்டத்தில் பாருங்கள். குறுகிய காரியங்களில் அல்ல; பெருந் திட்டங்களில். இயேசுவின் மீது முழு நம்பிக்கை அவசியம். அவரால் மீட்படைவோம். அவரை நம் கடவுள்>>>>
2.1. அவர் ஒரு நீதிமான்
2.2. இறை ஊழியம் செய்பவர் (கடவுளுக்கும் மனிதருக்கும் உறவு பாலம்)
2.3. இறை தூதனால் நேரடியாக உரையாடியவர்களில் ஒருவர்.
2.4. வயது முதிர்ந்தவராக இருந்தாலும் இறைவனின் துணையோது யோவானுக்குத் தந்தையானார்.
3.1. ஒரு சில விநாடி இறை தூதன் வார்த்தையில் சந்தேகம் ஏற்பட்டாலும், தன் முதிர்ந்த வயதே காரணம்.
3.2. தாவிதும் கோலியத்தும் இறைவனின் வல்லமையில் நம்பிக்கை.
4.1. உடல் பலம் கடவுளின் செயலைக் கட்டுப்படுத்தாது. அவர் எல்லாம் செய்யக் கூடிய வல்லமை படைத்தவர்.
4.2. நாம் எதிர்பார்க்காத விதத்தில் அவர் செய்து முடிப்பவர்.
4.3. அவருடைய வேண்டுதல் நிறைவேறும்போது, கடவுள் தன் மன்றாட்டைக் கேட்கப்படும்போது அவர் தன் சொந்த முறையில், நிறைவேறும் நேரத்தில் அனைத்தும் நிறைவேறும். ஒரு சில நேரம் நம்ப முடியாத விதத்தில் சூழ்நிலையில் செயலாற்றுவார். சக்கரியாவின் மனைவி ஒரு மலடி. இறை வாக்கினர் உரைத்தபடி அவர் அனைத்தையும் நிறைவேற்றினார்.
சக்கரியாவின் கதை லூக்கா 1ல் காணப்படுகிற்து.
1. சக்கரியாவைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?
2. இறை தூதன் என்ன வாக்குறுதியைத் தந்தார்?
3. அவன் ஏன் உடனடியாக இறைதூதனின் வார்த்தையை நம்பவில்லை.
4. இறைவனால் அனைத்தும் முடியும் என்று அடிப்படையின் உரையாடு
5. அவரின் வரலாற்றிறலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்?
No comments:
Post a Comment