Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Saturday, September 17, 2011

118 சீலாஸ்


(பவுலின் ஊழியத்தில் கூடச்சென்றவன்)

 

 

 
கரு வசனம்

25 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணணையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட.

26 எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது.

27 அந்தபடியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள். (அப்போ 15: 25-27)

 

 

 
சுருக்கத்திரட்டு
  • யூதாவும் சீலாவும், பவுலின் ஊழியத்திற்குத் துணையாக இருந்தவர்கள். ரோம மொழியில் சீலாவின் பெயர்; சில்வான்ஸ் என்பதாகும்.
  • ஆற்றல் வாய்ந்த சமய ஏற்பாளன். பவுலோடு இணைந்து செய்த இவனுடைய ஊழியங்கள் முடிந்த பின்னரும் தொடர்ந்து ஊழியம் செய்தவன்.
  • பவுலுக்கும், பேதுருவுக்கும் எழுதும் செயலாளனாக சீலா பணியாற்றினான்.
  • சீலா, பவுல், பர்னபாஸ், மற்றும் தீமொத்தேயு ஆகிய இவர்கள் சம காலத்தவர்கள்.


 
1. அறிமுகம் - இவனது கதை
ஆரம்ப கால திருச்சபையில் முக்கியமான ஒரு அங்கத்தினராக திகழ்ந்தவன். ரோம குடியுமை கொண்டவன் (அப்போ 15:22). ஆரம்ப கால கிறிஸ்தவ மிஷனரிகளின் வாழ்கையைப் பல வார்த்தைகளால் விவரிக்கலாம், ஆனால் “அலுப்பு” என்ற வார்த்தை அதில் ஒன்றாக இருக்க முடியாது. இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டிராத அநேக ஆண்களும், பெண்களும் சுவிசேஷத்தைக் கேட்டு பலன் அளித்த ஆச்சரியமிக்க நாட்கள் அந்நாட்கள். நிலத்திலும் நீரிலும் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது. உடல் நலக் குறைவுகளும் பசியும் இவர்களது அன்றாடக வாழ்க்கையில் ஒன்றாக காணப்பட்டது. மேலும் பல நகரங்களில் கிறிஸ்தவத்திற்கு விரோதமாக வெளிப்படையான தடைகளும் எதிர்ப்புக்களும் காணப்பட்டதன. இயேசுவுக்காக ஊழியம் செய்வது என்பது ஒரு அலுப்பு தட்டாத காரியம்என கண்டறிந்தான் இந்த முதல் மிஷனரிகளில் ஒருவனான சீலா.

சீலா என்ற பெயர் அப்போஸ்தலர் புத்தகத்தில் புற ஜாதிகளுக்கும், யூதர்களுக்கும் இடையே நடந்த பிரச்சனைகளைத் தீர்க்க அமைக்கப்பட்ட தேவாலய மன்ற உறுப்பினர் குழுவின் பட்டியலில் காணப்படுகிறது. ஆரம்ப கால கிறிஸ்தவர்களில் பெரும்பாலனவர்கள் யூதர்களே.

இயேசு என்பவர், பழைய ஏற்பாட்டில் தேவன் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குத் தத்தத்தின் நிறைவேறுதல் என இவர்கள் உணர்ந்தனர். எனினும் இந்த வாக்குத்தத்தம் உலகளாவிய அளவில் புறக்கணிக்கப்பட்டது. இதனால் அநேகர் கிறிஸ்தவர்களாவதற்கு முதலாவது யூதர்களாக மாற வேண்டும் என்ற முன் நிபந்தனை இருப்பதாக கருதினர். தேவன் புறஜாதிகளையும் ஏற்றுக்கொண்டது ஆச்சரியமான ஒன்றாகக் காணப்பட்டது. புறஜாதியினர் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட போது, அவர்களது வாழ்க்கை மாறியது கர்த்தருடைய ஆவி அவர்களை ஆவியினால் நிரப்பி அவர்களது மாற்றத்தை உறுதிப்படுத்தினது. சில யூதர்கள் இன்னும் தயக்கம் காட்டினர் எனினும் மாறாக இந்தப் புதிய கிறிஸ்தவர்கள் பல்வேறு யூத பழக்க வழக்கங்களைக் கடைபிடித்தனர். இந்தக் காரியமானது இதன் உச்ச கட்ட கொதி நிலையில் எருசலேமின் மன்ற உறுப்பினர் குழு (கவுன்சில்) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பிரச்சினை ஏதும் இன்றி தீர்வு காணப்பட்டது. எருசலேமிலிருந்து பவுல் மற்றும் பர்னபாவுடன் அனுப்பப்பட்ட பிரதிநிதிகளில் சீலாவும் ஒருவன். இவர்கள் அந்தியோகியா பட்டணத்திற்குப் புற ஜாதிக் கிறிஸ்தவர்களை வரவேற்கவும் ஏற்றுக்கொள்ளவும், இந்த பணியை பூர்த்தி செய்யக் கூடிய நிருபத்தோடு சென்றனர். இந்தப் பணியை நிறைவேற்றினதினிமித்தம் சீலா எருசலேமுக்குத் திரும்பினான். ஒரு குறுகிய காலத்தில் பவுல் வேண்டிக் கொண்டதின் நிமித்தம் அந்தியோகியாவில் இரண்டாவது மிஷனரி பயணத்தில் அவரோடு இணைந்தான்.

பவுல், சீலா, தீமோத்தேயு ஆகிய இவர்கள் ஒரு பரந்த தீவிரமான ஊழியத்தை ஆரம்பித்தனர். பவுலும், சீலாவும் கடுமையாக தாக்கப்பட்ட பின்பும் பிலிப்பியச் சிறையில் இரவு முழுவதும் பாடல்கள் பாடி தேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது பூமி அதிர்ந்தது, அவர்கள் கட்டுக்கள் கழன்று போயின, இந்தப் பீதியின் முடிவு அந்த சிறைச்சாலையின் காவலர்கள் மனம் மாறி இரட்சிக்கப்பட வழி வகுத்தது. பின்னர் இவர்கள் தெசலோனிக்கேயாவில் மற்றொரு அடிக்கு தப்பி தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் பெரோயா பட்டணத்திற்குச் சென்றனர், அங்கேயும் இன்னும் அதிகமான தொந்தரவுகள் காணப்பட்டதன. ஆனால் சீலாவும். தீமொத்தேயுவும் அங்கேயே தங்கி இளம் விசுவாசிகளுக்குப் போதித்து வந்தனர். அப்பொழுது பவுல் அத்தேனே பட்டணத்திற்குப் பயணப்பட்டார். இறுதியாக இந்தக் குழுவானது கொரிந்து பட்டணத்தில் இணைந்தது. அவர்கள் பார்வையிட்ட ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் ஒரு சிறிய கிறிஸ்தவ குழுவைப் பின் வைத்துச் சென்றனர்.

சீலா என்பவன் கதையில், நுழைந்தது போல் காணப்பட்டாலும் திடீரென மறைகிறான். பேதுரு குறிப்பிடும்போது பேதுரு நிருபத்தை எழுத உதவிய இணை ஆசிரியர் என்று குறிப்பிடுகிறான். இவன் எப்போது பேதுருவோடு இணைந்தான் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது. எருசலேமை விட்டு வெளியேறும் போது இவன் ஒரு தீவிர விசுவாசியாக காணப்பட்டான். பவுலோடு இவனுடைய வேலைகள் முடிந்த பின்னரும் தொடர்ந்து ஊழியம் செய்ய நிச்சயமுடையவனாக காணப்பட் பின்னடைவுகளையும் இவன் சோர்ந்து போகாமல் வாய்ப்புகளாகவும் நன்மைகளாகவும் எடுத்துக் கொண்டான். சீலா என்பவன் ஆரம்ப கால மிஷனரிகளில் அதிகமாக புகழ்பெறாத நபராக காணப்பட்டாலும் இவன் ஒரு முக்கிய ஹீரோவாக போலி மதிப்படைகிறான்.

 

 

 
2. வலிமையும் சாதனையும்
2.1 இவன் எருசலேம் தேவாலயத்தில் ஒரு தலைவன்.
2.2 அந்தியோகியாவிலுள்ள புற ஜாதி விசுவாசிகளுக்கு எருசலேம் சங்கத்தினர் கொடுத்தனுப்பிய ஒப்புதல் கடிதத்தை எடுத்துச் சென்ற ஒரு பிரதிநிதி.
2.3 பவுலின் இரண்டாவது மிஷனரி பயணத்தில் இவன் பவுலுடன் அவரது ஊழியத்தில்
நெருங்கிய தொடர்புடையவனாக காணப்பட்டான்.
2.4 பிலிப்பே பட்டணத்தில் பவுலோடு சிறையிலடைக்கப்பட்ட போது தேவனைத் துதித்து பாடினவன்.
2.5 பவுலுக்கும் பேதுருவுக்கும், எழுதும் செயலாளனாக பணியாற்றினவன்.

 

 

 

 

 
3. இவனுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
3.1 கூட்டாக இணைந்து ஊழியம் செய்வது சிறந்த ஊழியத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
3.2. தம்முடைய ஊழியர்களுக்கு பாதிப்பே ஏற்படாது என்று தேவன் ஒருபோதும் உத்திரவாதம் அளித்ததில்லை.
3.3 கடவுளுக்கு கீழ்ப்படிதல் என்பது பொதுவாக எதைக்குறிக்கிறது என்றால் நமக்கு பாதுகாப்பு என கருதுகிற ஒன்றை விட்டுக்கொடுப்பதையே குறிக்கிறது.

 

 

 
4. வேதாகமக் குறிப்புகள்
சீலாவின் கதையை அப்.15:22-19:10, 2கொரி.1:19, 1தெசலோ 1:1, 2தெசலோ 1:1 மற்றும் 1பேதுரு 5:12லும் காணலாம்.

 

 

 
5. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
5.1 யூதாவும்,சீலாவும் எருசலேமிலுள்ள மன்ற உறுப்பினர் குழு(கவுன்சில்) கூட்டத்திற்கு ஏன் அனுப்பப்பட்டனர்?
5.2 பவுல் சீலாவை எப்படி பயிற்றுவித்தான்?
5.3 பவுலுக்கும் பேதுருவுக்கும் சீலா எங்ஙனம் உதவினான்?
5.4 ஆதிச் சபைக்கு உதவிய சீலாவின் வேறு திறன்களை வரையிட்டு காட்டவும்.

 

 

 

 

 
மொழிபெயர்ப்பு
ஜான் ஆரோக்கியசாமி,
கிள்ளன்.

 

No comments:

Post a Comment