Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, September 11, 2011

36. ஏசாயா தீர்க்கதரிசி

கரு வசனம்:

பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். (ஏசாயா 6:8)
கதைச் சுருக்கம்
1.     பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவர். நியாயத் தீர்ப்பு மற்றும் நம்பிக்கையை உள்ளடக்கிய செய்திகளைக் கொண்டு வந்தான்.
2.     மனாசேயின் ஆட்சிக் காலத்தில் அவன் இரத்த சாட்சியாக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
3.     இவனின் செய்திகள் அனைத்தும் ஜனங்களுக்கு ஆறுதலையும் அதே நேரத்தில் சவால் விடுவதாகவும் அமைந்திருக்கிறது.

1.     முன்னுரைசுய சரிதை
யெகோவா தேவனின் இரட்சிப்புஎன்பது இவன் பெயரின் பொருள். பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று இவன் அழைக்கப்பட்டான். இவனை சதுசேயர் என்றும் தீர்க்கதரிசியென்றும் கூறுவார்கள். இவன் தேசப் பற்று மிக்கவனும் ஒரு தீர்க்கதரிசியாகவும் பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பனித்தவனாகவும் இருந்தான். உசியா, யோதாம், ஆகாய் மற்றும் எசேக்கியா ராஜாக்கள் ஆண்ட காலக் கட்டத்தில் மேற்கூறப்பட்ட காரியங்களைச் செய்தான். இவன் தந்தையான ஆபோங் பற்றிய தகவல்கள் ஏதுவும் தெரியாது. மனாசே ராஜா எந்த சம்பிரதாயத்தின்படி அல்லது கலாச்சாரத்தின்படி, ஏசாயா தீர்க்கதரிசியை இரத்த சாட்சியாக கொலை செய்தான் என்றும் தெரியவில்லை. ஒருவேளை ஏசாயா தான் கடவுளைக் கண்டதாக சொன்னதின் நிமித்தம், அவன் தேவ தூஷனம் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க்க் கூடும்.(மோசே கடவுளைக் காண முடியாது என்ற கூற்றின்படி கொலை செய்யப்பட்டிருக்கலாம்). இவனின் மனைவி ஒரு தீர்க்கதரிசியும் கூட (ஏசா.8:3). இவனின் இரு ஆண் பிள்ளைகளின் நாமம் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளன. மூத்தவன் சேயார்; யாசூப் இளையவன். மகேர்சாலால் ஆஷ்பாஸ் (ஏசா.7:3, 8:3-4). மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ராஜா மரித்த வருடம் தொடங்கி (கி.மு.740) முதல் எருசலேம் பட்டணம் விடுதலையாக்கப்பட்டு, சென்னாசெரிப்பிடம் ஒப்படைக்கப்பட்ட வருடம் வரை தொடர்ந்து (கி.மு.701) திடுதிடுப்பென்று ஏசாயா வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மாயமாய் மறைந்து போனான். இவன் ஊழியம் கிட்டதட்ட 40 ஆண்டு செய்தான். இவனுடைய மற்ற தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலில் உழியம் செய்தவர்கள்; ஓசியா மற்றும் மீகா ஆகியோர்.

ஊசியாவின் நடவடிக்கைகள்என்ற தலைப்பில் இவன் 2 நாளாகமம் 26:22ல் எழுதியுள்ளான். இது மற்ற தீர்க்கதரிசிகளின் எழுத்துச் சுவடுகள் மூலம் மறைந்து போனது.
இவனின் ஜீவியம் சமாரியா, யூதேயா தேசத்து வரலாற்றோடு பிணைக்கப்பட்டுள்ளது. விசேஷமாக யூதேயாவின் வரலாற்றோடு பிணைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இவைகளின் ஆராய்ச்சிகள் ஏசாயாவின் வாழ்க்கை வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து ஆராய வேண்டியுள்ளது.
ஏசாயா புஸ்தகம் ஏசாயாவின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும். இவன் புஸ்தகத்தில் ஒரு சில முரண்பாடுகள் காணப்படுகின்றன. இவனின் புஸ்தகம் இரண்டு பாகங்கள் உண்டு.
                 
) அதிகாரம் 1 – 39
                 
) அதிகாரம் 40 – முடிய

முதல் 39 அதிகாரங்கள் ஏசாயாவைப் பற்றி சொல்லுகிறது. ஆனால் 40 முதல் இறுதி அதிகாரங்கள் பெயர் குறிப்பிடப்படாத ஒரு தீர்க்கதரிசியையே குறித்து எழுதப்பட்டுள்ளது. முதல் பத்தி, தனித் தனி தீர்க்கதரிசனங்களாக எழுதப்பட்டுள்ளது. பிற்பகுதி தொடர்ச்சியாக ஒரே நபரைக் குறித்துக் கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளது. முற்பாதி எழுதப்பட்ட விதமும் பிற்பகுதி எழுதப்பட்ட விதமும் மற்றும் சொல்லாட்சிகள் முற்றிலும் மாறுபட்டுள்ள மன நிலையைக் குறிக்கிறது. 150 ஆண்டுகள் கடந்த பின்பு ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின் உண்மை தன்மை வெளிப்பட்டது.

பிற்பகுதியான அதிகாரங்களான 40-66 வரை இஸ்ரவேல் நிலை நாட்டப்படும் என்ற திர்க்கதரிசனத்தைக் கொண்டதாயிருந்த்து.
NIV
ஆராய்ச்சி வேதாகமத்தின் அடிப்படையில் ஏசாயா மிகவும் ஈடுபாடோடுதான் தீர்க்கதரிசன ஊழியங்களைச் செய்துவந்தான். ஊசியா ராஜா மரித்த பின்பு, அவன் எருசலேமில் ராஜாவின் அரண்மனையில் ஒரு வேதபாதகராக ஏற்படுத்தப்பட்டான்.

இப்பதவி ஒரு பொறுப்பு நிறைந்த பதவியாயிருந்தது. ஆனால், கடவுளின் திட்டம் வேறு விதமாயிருந்தது. கடவுள் அவனை ஒரு தீர்க்கதரிசியாக அழைத்து, ஒரு தரிசனத்தையும் கொடுத்தார். இந்தத் தரிசனம் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

கடவுளோடு ஏற்படும் சந்திப்பு, நிரந்திரமாக ஏசாயாவின் குணாதிசயங்களை மாற்றிப் போட்டது. இந்த குணாதியசம் தான் பிரதிபலிக்கும் தேவனின் செய்திகளில் வெளிப்பட்டன. அவனின் செய்திகள் ஆறுதலாகவும் அதே நேரத்தில் சவால் நிறைந்ததாகவும் அமைந்தது. இதினிமித்தம் ஒரு சில வேதாகம அறிஞர்கள் வேறொரு தீர்க்கதரியிடமிருந்து வந்திருக்கலாம் என்று யூகித்துக் கூறினார்கள். ஆனால், ஏசாயாவின் சாட்சியின்படி கடவுள் ஒருவரே நியாயமாகவும் கிருபையாகவும் இருக்க முடியும் என்று கூறினான்.

ஏசாயா ஒவ்வொரு தடவையும் தீர்க்கதரிசனம் உரைக்கும் பொழுது அதைத் துல்லியமாகவும் பெற்றியுள்ளதாயும் உரைக்குமாறு கடவுள் ஊக்குவிக்கவில்லை. ஜனங்கள் செவி சாய்க்க மாட்டார்கள் என்று ஏற்கனவே கடவுள் ஏசாயாவிடம் தெரிவித்து விட்டார். ஆனால், அதையே சொல்லவும் எழுதவும் ஏவினார். ஒரு வேளை ஒரு சிலர் அதைக் கேட்டு வாசித்து மனமாறக் கூடும். ஏசாயா 6:13ன் படி, இஸ்ரவேல் ஜனங்களைக் கர்த்தர் பின் கூறப்பட்டுள்ள உவமைக்கு ஒப்பிடுகிறார்.

காவலாலி மரமும் அரச மரமும இலையற்றுப் போனபின்பு, அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரம் பரிசுத்த வித்தாயிருக்கும், என்றார் (ஏசா.6:13).

சாதனைகளும் அவனின் பெலனும்
a.     உன்னதமான தீர்க்கதரிசி.
b.     புதிய ஏற்பாட்டில் குறைந்தது 590 முறையாவது குறிப்பிடப்பட்டுள்ளது.
c.     நம்பிக்கை, நியாத் தீர்ப்பு போன்ற அம்சங்களை உள்ளடக்கிய தேவ செய்தியை உடையவனாயிருந்தான்.
d.     தன் ஊழியத்தில் கண்ணும் கருத்துமாயிருந்தான். தன்னுடைய தேவ செய்தியைக் கேட்டும் கேளாதர்கள் போல இருந்தவர்களைக் குறித்து கவலைப்படவில்லை.
e.     அவனின் ஊழியம் உசியா ராஜா முதல் தொடங்கி, யோதாம், ஆகாஸ், ஏசேக்கியா மற்றும் மனாசே ராஜா வரைக்கும் தொடர்ந்தது.

கற்றுக் கொண்ட பாடங்கள்
a.     ஜனங்களை ஆற்றித் தேற்றவும், பாவங்களைக் கண்டித்து உணர்த்தவும் கடவுளின் அணுக்கிரகம் தேவை.
b.     மன்னிப்பு பெற்றவனே மற்றவர்களிடம் மன்னிப்பைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
c.     கெகோவா தேவன் பெய்யாகவே பரிசுத்தரும், பூர்ணமானவரும், நீதியானவரும் அன்பானவருமாயிருக்கிறார்.
வேதாகம ஆதாரம்
a.     ஏசாயாவின் கதைகள் 2 இராஜா.19:2-20ல் சொல்லப்பட்டுள்ளது. மற்றும் 2 நாளாகமம் 26:22, 2 நாளாகமம் 32:20, மத்தேயு 3.3, மத்தேயு 8:17, மத்தேயு 12:17-21, யோவான் 12:35, ரோமர் 10:16:20, 21ல் கூறப்பட்டுள்ளது.
b.     பேக்கர் வேதாகம களஞ்சியம் (முதலாம் வரிசை)
c.     பிரான்ட் ரெப்பிட்ஸ், 1995, (பக்.1046-1052)


மொழிபெயர்ப்பு
ஜெ.ஜி.ராபின்சன் விக்டர்
சிலிம் ரிவர்

1 comment: