எல்கனாவின் மனைவியும், சாமுவேலின் தாயாரும் ஆனவள்.
அப்பொழுது அவள்: என் ஆண்டவனே,
இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ
நான்தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 1சாமுவேல் 1:26
கதைச் சுருக்கம்
· அன்னாள், எல்கனாவின்
மனைவி, சாமுவேலின் தாயார்.
·
அன்னாள் ஒரு ஜெபிக்கும் பெண்மணி.
·
அன்னாள் சாமுவேலைக் கடவுளின் வேலைக்கு அர்ப்பணித்தாள்.
· ஏலி, ஆசாரி அன்னாளை
ஊக்குவித்தான்.
முன்னுரை
ஜெபிக்கும் தாய் (நான் பிள்ளைக்காக யேகோவா கர்த்தரின் வேண்டினேன், அவரும் நான்
கேட்டதை எனக்குக் கொடுத்தார். அதனால், நான் அவனை யேகோவா கர்த்தரிடம் கொடுப்பேன். அவன் வாழ்நாள்
முழுவதும், அவன் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டான்) (1 சாமு.1:26-28).
1. அன்னாள் என்றால்
யேகோவா கர்த்தரின் கிருபை என்று அட்த்தமாம். அவள் எல்கனாவின்
மனைவியும், சாமுவேலின் தாயாருமாவாள். அவள் ஒரு ஜெபிக்கும்
பெண்மணி. பல வருடங்களாக அவள் மலடியாக இருந்தாள். இறுதியாக எப்பொழுதும்
குடும்பத்தோடு செல்லும் சிலோவிலுள்ள தேவாலயத்திற்குச் சென்றனர். இது வாழ்க்கையின்
ஒரு முக்கிய பங்காகும். பிள்ளை வரம் கிடைத்த்தற்காக அவள் ஒரு சத்தியம் செய்தாள். அவள் தன் பிள்ளையைக்
கடவுளுக்கு அர்ப்பணித்தாள் (1சாமு.1:11). அதன் பிறகு, சாமுவேல் என்ற பாலகன் பிறந்தான். வெகு விரைவாக
அன்னாள் அவனைச் சிலோவிலுள்ள தேவாலயத்தில் யெகோவாவின் சேவைக்காக அர்ப்பணித்தாள். அவன் வாழ்நாள்
முழுவதும், அவன் கடவுளுக்குச் சேவை செய்வான் (வ.28). அன்னாள் மேற்கொண்டு
ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் கிடைக்கப் பெற்றாள் (2:21) (2:1-10)
அவள் ஒரு முன்மாதிரியான தாய். அவள் தன் சுயமரியாதையைக் குழந்தை பெற்றதன் மூலம் தக்க வைத்துக் கொண்டாள்.
அன்னாள் நமக்கு அதிகமான விஷயங்களைக் கற்பித்துள்ளாள்.
அவள் ஒரு முன்மாதிரியான தாய். அவள் தன் சுயமரியாதையைக் குழந்தை பெற்றதன் மூலம் தக்க வைத்துக் கொண்டாள்.
அன்னாள் நமக்கு அதிகமான விஷயங்களைக் கற்பித்துள்ளாள்.
2.
அன்னாள் – ஒரு ஜெப வீராங்கனை: கடவுள் அவளின்
வேண்டுதலுக்குப் பதிலளித்த போது, அவள் செய்த சத்தியத்தின் படி சாமுவேலைக் கடவுளின் சேவைக்காக
அர்ப்பணித்தாள். கடவுள் அன்னாளுக்குச் சாமுவேலைச் சேர்த்து மேற்கொண்டு 5 பிள்ளைகளைக்
கொடுத்தார். அன்னாள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அதுவும் முதிர்ந்த
வயதில் தனக்குப் அவளுக்குப் பிள்ளை கிடைக்குமென்றும், மேலும்
5 பிள்ளைகளுக்குத் தாயாவாள் என்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
3.
பிள்ளைகள் யெகோவா தேவனின் வரம்: அன்னாள் தன்
பிள்ளைகளை யெகோவா தேவனுக்கு அர்ப்பணித்தாள். அன்னாள் கண்டுபிடித்த
ஓர் உண்மை, மெய்யான சந்தோஷம் எப்பொழுதும் வருமென்றால், தன்னுடைய குழந்தையைத்
திரும்பவும் கடவுளிடம் கொடுக்கும் பொழுதுதான். ஒரு தாய் தன்னுடைய
குழந்தையை நாளடைவில் சுதந்திரமாக விட்டு விடவேண்டும். அப்பொழுதுதான்
அவர்கள் வளர்ந்து, முதிர்ச்சி அடைய முடியும். எப்படி சாமுவேல்
வளர்ந்தான்? (1 சாமு.1:21). அவன் யெகோவா தேவனின் சந்நிதானத்தில் வளர்ந்தான். யெகோவா, தேவனின் வரம், குழந்தைகள்
மிகவும் கவனமாக ஆயத்தப்படுத்தப்பட்டு, யெகோவா கடவுளிடம் ஒப்படைக்கப்பட
வேண்டும். பெற்றோர்கள் யெகோவா தேவனின் உக்கிரகார்ராயிருக்கிறார்கள்.
4.
அன்னாள் ஆராதிக்கிறவளும் ஜெபிக்கிறவளும்
ஆனவள்: அன்னாள் மிகவும் உற்சாகமாக ஆராதித்து ஜெபிக்கிறவளாயிருந்தாள் (1 சாமு.1:26) அவளின் ஜெபம்
அவளை மாற்றியது. அவள் தன் சிந்தையிலும், குணாதியசத்திலும்
மாற்றம் கண்டாள்.
a. அவள் உண்மையாய்
ஜெபித்தாள் (1சாமு.1:11)
b. ஏலி அவளை உற்சாகப்படுத்தினான் (1சாமு.1:17)
c. அவள் தன்னுடைய
பிரச்சனைகளைக் கடவுளிடம் ஒப்புவித்தாள் (1சாமு.1:18).
இவைதான் நம்முடைய மனச்சோர்வைப் போக்கும் தாரக மந்திரம். அன்னாள் முழுமையாய் இதைக் கடைப்பிடித்தாள்.
இவைதான் நம்முடைய மனச்சோர்வைப் போக்கும் தாரக மந்திரம். அன்னாள் முழுமையாய் இதைக் கடைப்பிடித்தாள்.
5.
பிள்ளைகள் யெகோவா தேவனின் கிருபை வரம்: யெகோவா தேவன்
பிள்ளைகளை மற்றவர்களைப் பாவத்திலிருந்து மீட்கப் பயன்படுத்தக் கொடுக்கிறார். இயேசு ஒரு நல்ல
உதாரணம். இப்படிப்பட்ட வரங்களைக் கடவுள் மற்றவர்களைப் பாவத்திலிருந்து இரட்சிக்க மற்றும்
சேவை செய்யக் கொடுக்கிறார். இக்கதையில், சாமுவேலை யெகோவா கர்த்தர்
ஒடுக்கப்பட்ட ஜனங்களை விடுவிக்கக் கொடுத்தார். சாமுவேல் யெகோவா
கர்த்தருக்கு முன்பான ஊழியம் செய்தான் (1சாமு.1:11).
ஏலி, சாமுவேலைக் கர்த்தரின் ஆலயத்தில்
ஊழியத்திற்குப் பயிற்றுவித்தான். ஆகவே, தான், பிள்ளைகள் கர்த்தருடைய ஊழியத்திற்கும் சுவிசேஷ ஊழியத்திற்கம்
பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
6. அன்னாள் தன்
ஜெபத்திற்குக் கிடைத்த பதிலுக்கு யெகோவா தேவனைத் துதித்தாள் (1சாமு.2:1-10):
அன்னாளின் இத்துதி, கன்னி மரியாளின் துதியோடு ஒப்பிடப்பட்டுள்ளது. அவளின் துதியில்
தீர்க்கதரிசன தன்மை அடங்கியுள்ளது. அதன் கருப்பொருள், யெகோவா, தேவனின் மேலுள்ள
நம்பிக்கை, அவரின் வல்லமை, அவளின் நன்றியுணர்வு
ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. அன்னாள் மற்றும் மரியாள்
போல நாமும் யெகோவா தேவனின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அவரே எல்லா
சம்பவங்களையும் கண்கானிக்கிறார், நடப்பிக்கிறார். நாம் அவளின்
வழிநடத்துதலுக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்வதன் மூலம், நாம் யெகோவா
தேவனின் அதிகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையை ஒப்படைக்கிறேன் என்று பொருள்படும்.
பரிசுத்த வேதாகமம்:
a. அவளின் கதை 1 சாமுவேல் 1-2ல் கூறப்பட்டுள்ளது.
கேள்விகளைக் கலந்துரையாடுக
b. ஏன் எல்கனா
எப்ராமில் மகிழ்ச்சியாக இல்லை?
c. எப்படி கடவுள்
அவளின் வேண்டுதலுக்குப் பதிலளித்தார்?
d. எப்படி ஆசாரியர்
அவளை ஊக்குவித்தான்?
e. என்ன சிறப்பான
பரிசு அன்னாளின் குடும்பத்தின் மூலம் தீர்க்கதரிசன பள்ளிக்கு வழங்கப்பட்டது,
f. என்ன படிப்பினையை
நாம் அவளிடம் இருந்து கற்றுக் கொண்டோம்?
பி. கஸ்தூரி
P. KASTURI
c/o SMK Dato’ Zulkefli Muhamad, S.River,
Perak, Selangor
No comments:
Post a Comment