Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, September 11, 2011

26. எசேக்கியேல் தீர்க்கதரிசி

26.   எசேக்கியேல் தீர்க்கதரிசி

பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார். எசேக்கியேல் 3:10-11


கதைச் சுருக்கம்

1.     யெகோவா தேவனின் காவலாளி / காவல்காரன்.
2.     ஆசாரியனும் தீர்க்கதரிசியும் ஆவான்.
3.     இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் பாபிலோனியரின் அடிமைத் தனத்திலிருக்கும்போது ஊழியம் செய்தான்.
4.     ஜனங்களின் கடின இருதயத்தைத் திருத்தினான்.
5.     ஜனங்களை மனமாற்றி மருரூபமாக்கினான். 



முன்னுரை – சுய சரிதை
நான்கு மகத்தான தீர்க்கதரிசிகளின் ஒருவன் எசேக்கியேல் தீர்க்கதரிசி. ‘பெலப்படுத்துகிறவர் யெகோவா தேவன்’ என்பது அவன் பெயரின் பொருள். அவன் யூதர்களின் ஆசாரியனுமாய் இருந்தான் (எசே.1:3). இருப்பினும், தீர்க்கதரிசன அக்கினி அபிஷேகம் எப்பொழுதும் அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது; அக்கினி மயமான யெகோவா தேவனின் சத்ததின்?? தரிசனமும் அவனுக்குக் கிடைத்தது. ஆசாரியனாகிய பூசி என்பவனின் மகனும் கூட. யூதாவின் ராஜாவாகிய யோயாக்கிமுடன் எசேக்கியேலும் அநேகரோடு அடிமைகளாக கேபார் நதி கரையோரம் உள்ள மேசபொட்டாமிஸ் என்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இங்குதான் எசேக்கியேலின் புத்தகத்தில் அவனுக்குக் கிடைத்த தெய்வாதீன வெளிப்பாடுகள் குறிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட பின்பு, அவன் தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கி, தொடர்ந்து இருபத்திரண்டு ஆண்டுகள், விக்கிரக ஆராதனை மற்றும் துன்மார்க்கத்தனத்தைக் குறித்தும் தைரியமாய் தன் ஜனங்களிடம் எடுத்துக் கூறினான், அவர்களை விலகிடவும் செய்தான். இதினிமித்தம் எசேக்கியேல் தன் ஜீவனை இழந்தான். யூதர்கள் மேதியர்கள் மற்றும் பாரசீகர்கள் எசேக்கியேலின் நினைவுகளை பயபக்தியோடு போற்றி பேணுகிறார்கள். எசேக்கியேல் எரேமியா, யோயாயசின், யோயாகீம் மற்றும் நெபுகாத்நேச்சர் போன்றவர்கள் காலக்கட்டத்தில் வாழ்ந்தவன். பாபிலோனில் (கேபார் நதியண்டையில்) அடிமைத் தனத்திற்குள் இருந்த யூதா ஜனங்களுக்கு எசேக்கியேல் தீர்க்கதரிசியாக ஊழியம் செய்தான்.



எசேக்கியலின் எழுத்துக்ளிள் ஓர் உத்துவேகம் தெளிவாகத் தெரிகிறது. அவ்வெழுத்துகளில், அவன் இருதயத்தின், கீழ்ப்படியாமையை எதிர்ப்பதையும் அடிபனிந்து ஒரு தீர்க்கதசியாக யோசித்து, ஒரு தீர்க்கதரிசியாக உணர்ந்து தன் ஊழியத்தைச் செவ்வையாய் செய்து வந்தான். இது முற்றிலும் எரேமியா தீர்க்கதரிசியின் ஊழியத்தோடு ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்டுள்ளது. எசேக்கியேல் மிகவும் உணர்ச்சி வயப்படக் கூடியவன் என்பதை அவன் மனைவியின் மரணத்தின் மூலம் அறியலாம் (எசே.14:15-18). எசேக்கியேலின் மையக் கருப்பொருள், எருசலேம் பட்டணம் நிர்மூலம் ஆகும் என்று முன் உரைத்ததாகும். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, எசேக்கியேலின் ஊழியங்கள் பாபிலோனில் அடிமையாயிருந்த இஸ்ரவேல் ஜனங்களைத் தேற்றும் நோக்கமாயிருந்தது. எசேக்கியேல், இன்னும் கொஞ்சம் காலத்தில் விடுதலை அடையப் போகிறீர்கள் என்று பாபிலோனில் இருந்த யூத ஜனங்களுக்கு ஆறுதலாக சொல்லித் தேற்றினான். மட்டும் அல்லாமல், பாழடைந்த எருசலேம் மறுபடியும் எடுத்துப் புதுப்பிக்கப்படும் என்று சொல்லி ஆற்றித் தேற்றினான். வரலாற்று வல்லுநர்கள் கூற்றின்படி, பக்தாத் நகரின் அருகில் உள்ள ஒரு கல்லறை போன்ற கட்டடம், எசேக்கியேலின் கல்லறை என்று கூறுகிறார்கள். எசேக்கியேல் தன்னுடைய ஜனங்களின் தலைவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளான் என்று வரலாற்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

எசேக்கியேல் புஸ்தகத்தில் உள்ள மற்ற விவரங்களைக் கவனிக்கும் முன், எசேக்கியேலின் மற்ற விவரங்களை அறிந்து கொள்ளுவோம். எசேக்கியேல் ஆயிரம் வாலிபர்களில் ஒருவனாய் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டான். நாடு கடத்த்தப்படுமுன், எசேக்கியேல் ஒரு ஆசாரியனாக பயிற்சிப் பெற்றான். இஸ்ரவேலின் இருண்ட காலக் கட்டத்தில் யேகோவா தேவன் எசேக்கியேலை ஒரு தீர்க்கதரிசியாக அழைத்தார். 

150 ஆண்டுகளுக்கு முன்பு, ஏசாயா எப்படி ஒரு மகா பயங்கரமான தரிசனத்தைக் கண்டானோ, அவ்வாறே எசேக்கியேலும் ஒரு தரிசனத்தைக் கண்டான். இத்தரிசனத்தின் மூலம் எசேக்கியேல் ஒரு ஆவிக்குரிய எழுப்புதல் அடைந்தான். எசேக்கியேல் தலை வணங்காத கழுத்துள்ள ஜனத்திற்குத் தீர்க்கதரிசியாக விளங்கினான். இந்நிகழ்வுக்குப் பிறகு எசேக்கியேல் மாறுபட்ட மனுஷனாக விளங்கினான். இருப்பினும், யெகோவா தேவனின் செய்திகள் மாறாமல் இருந்தாலும், எசேக்கியேல் மற்றும் ஏசாயா தீர்க்கதரிசிகளின் காலங்களில் உள்ள சூழ்நிலைகள் முற்றிலும் மாறுபட்டிருந்தன. உதாரணத்திற்கு, ஏசாயா, புயல் வரும் என்று முன் அறிவித்தான். எசேக்கியலோ, புயல் மத்தியில் இருந்து, தேசத்துக்கு வரும் தோல்வியையும் அழிவையும் அறிவித்தான். இக்காலக் கட்டத்தில்தான் எருசலேம் பட்டணம் அழிவிலிருந்து தப்பிப் போவதில்லை என்றும் அறிவித்தான். மற்றும் எசேக்கியேலின் மனைவியும் மரித்துப் போனதின் நிமித்தம் மன அழுத்தத்திற்குள்ளானான். 

எருசலேம் மதில்களுக்குள் களவாளியாக இருக்கும்படி யெகோவா தேவன் எசேக்கியலை அழைத்தார். இப்படிப்பட்ட ஒரு அழைப்பு மிகவும் ஆபத்து நிறைந்த ஓர் ஊழியமாயிருந்தது. எசேக்கியேல் தன் வேலையில் கவனக்குறைவு உள்ளவனாய் இருப்பானாகில், அவனும் அவன் பட்டினமும் கவிழ்ந்து போகும் அபாயம் இருந்தது. மற்றும் எசேக்கியேல் தன் ஊழியத்தில் தொடர்ந்து நீடிக்க பேண்டுமாகில், அவன் கண்ணும் கருத்துமாய் கொடுக்கப்பட்டுள்ள பணிகளைச் செவ்வையாய் செய்ய வேண்டும். எசேக்கியலின் செய்திகளின் மையக் கருத்து, ஒவ்வொரு தனி மனிதனும் யெகோவா தேவனக்குத் தன்னுடைய செய்கைக்குத் தக்க பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளான் என்பதாகும். மற்றும், யெகோவா தேவன் கீழ்ப்படிதலையும், ஆராதனைகளையும் ஒவ்வொரு இஸ்ரவேலரிடமிருந்து எதிர்ப்பார்க்கிறார்.


எசேக்கியேல் புஸ்தகத்தின் பொருளடக்கம்
பொதுவாக எல்லா அறிஞர்களாளும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து, இப்பத்தகத்தை எழுதியவர் எசேக்கியேல் என்றும், இவர் கி.மு.592ல் சிதேக்கியாவின் ஆட்சிக் காலங்களில் அல்லது யோயாக்கீம் சிறை பிடிக்கப்பட்ட பின்பு தீர்க்கதரிசனம் உரைக்கும் ஊழியம் செய்தார் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரவேலரிடம் எசேக்கியேல் செல்வாக்கு பெற்றவராயும் விளங்கினார் (எசே.8:1, 14:1, 20:1)

எசேக்கியேலின் புஸ்தகம் ஒன்பது பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இவை சம்பவங்களின் வரிசையின் படி பகுக்கப்பட்டுள்ளதன.
1.     எசேக்கியேல் தீர்க்கதரிசன ஊழியத்திற்கு அழைக்கப்படுதல் (எசே.1-3).
2.     எருசலேம் நிர்மூலம் ஆகும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தல் (எசே.3:15-17).
3.     இஸ்ரவேல் சிறைப்பட்டுப் போகும் தரிசனமும் ஒரு சிலரே தங்களுடைய விசுவாசத்தைக் காத்துக் கொள்வார்கள் என்று உரைக்கப்படுதலும்.
4.     தொடர்ச்சியான முன் எச்சரிக்கையும் கடிந்து கொள்ளுதலும் கொடுக்கப்படுதல் (எசே.12-19).
5.     தொடர்ச்சியாக வரும் ஆக்கினைத் தீர்ப்பு குறித்து முன் எச்சரிக்கை விடப்படுதல் (எசே.20-23).
6.     கடைசி கால நியாயத் தீர்ப்பு முன்னுரைக்கப்படுதல்.
7.     யூதர்கள் மனமாறவும் தங்களைத் தாங்களே மறுரூபமாக்க்கப்பட ஏவப்படுதல் (எசே.33-39).
8.     கடைசி காலத்தில் எழுப்பப்படப் போகும் பட்டணமும் அதின் ஆலயமும் தரிசனம் கொடுக்கப்படுதல்.

இப்புதகம் பொதுவாகக் கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளது.

 2.     சாதனைகளும் அவனின் வல்லமையும்.
2.1.          எசேக்கியேல் ஓர் ஆசாரியன். ஆனால் கடவுள் அவனை ஒரு தீர்க்கதரிசியாக அழைத்தார்.
2.2.          அவனுக்குத் தெளிவான தரிசனமும் வல்லமையான தேவ செய்திகளும் கொடுக்கப்பட்டது.
2.3.          பாபிலோனுக்குச் சிறைபட்டுப் போன இஸ்ரவேல் வம்சத்தாருக்கு யெகோவா தேவனின் செய்தியைக் கொண்டு வருகிறவனாய் திகழ்ந்தான்.
2.4.          யெகோவா தேவன் எசேக்கியேலை அவன் அழைக்கப்பட்ட ஊழியத்திற்கு ஏற்றவாறு உருமாற்றி அமைத்தார் – கடின இருதயமுள்ள இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஏற்றவாறு, எசேக்கியேலை தைரியசாலியாகவும் பெலவானாகவும் மாற்றினார்.



எசேக்கியேல் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்
1.1.          யேகோவா தேவன் நம் ஒவ்வொருவரின் மேலும் தனி அக்கறை உற்றவராயிருக்கிறார். ஆனால், நாம் அந்த இஸ்ரவேல் ஜனங்கள் போல வெகு விரைவில் அதை மறந்து போகிறோம். உலக சூழ்நிலைகளை கவனிக்கும் பொழுது நாம் ஒன்றும் இயலாதவர்கள் போலவும், நம்மை நாமே கருதுகிறோம். ஆனால், யெகோவா தேவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டும், சகலத்தையும் தன்னுடைய அதிகாரத்திற்குள் அடக்கி ஆண்டுக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு யெகோவா தேவனை அறிவதன் மூலம் நாம் நம்முடைய வாழ்வில் புதியதோர் அர்த்தத்தை ஆண்டு கொள்ள முடியும். உங்களுடைய ஆன்மாவின் மதிப்பென்ன என்று தெரியுமா? உங்களுடைய கிரயம் உங்களிடம் இருக்கும் பணம், சொத்து, கல்வி, அந்தஸ்து போன்றவைகளால் ஈடுகட்ட முடியுமா? அல்லது உங்களுடைய ஆன்மாவின் மதிப்பை, யெகோவா தேவனே படைத்து அதைத் தெரிவிக்கிறாரா?

1.2.          யெகோவா தேவன் தம் திட்டத்தைத் திட்டமிட்டபடியே நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். அவருடைய ஜனங்கள் பலமுறை தோல்வியுற்றபோதும், அது அவர் தன் திட்டத்தை நிறைவேற்றும் வேட்கையிலிருந்து பிரளச் செய்யாது.

1.3.          நீங்கள் எடுக்கும் முடிவே, உங்களின் நித்திய ஜீவனின் இலக்கை அடைவதா இல்லையா என்று தீர்மானிக்கும்.

1.4.          ஒவ்வொரு நம்பிக்கையற்ற சூழ்நிலையிலும் யெகோவா தேவன் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்ற ஜனங்களை ஏற்படுத்தியுள்ளார்; ஏற்படுத்துகிறார்.



வேதாகம ஆதாரம்
4.1.          எசேக்கியேலின் கதைகள் 2 இராஜாக்கள் 24:10-17ல் கூறப்பட்டுள்ளது.
4.2.          யூனிவர்சல் அகராதி, பக்கம் 158-159, ஏ,ஆர்.பக்லன்ட்ஸ்.
4.3.          என்.ஐ.வி ஆராய்ச்சி வேதாகமம், பக்கம் 1405
4.4.          IDB வரிசை E-J, பக்கம் 203-305



ஆராய்ச்சிக்கான கேள்விகள்
5.1.          ஏன் எசேக்கியேல் தன் ஜனங்களோடு சிறையிருப்பில் இருக்கும்போது கர்த்தரின் செய்தியை;r சொன்னான்?
5.2.          இஸ்ரவேல் சிறைபிடிக்கப்பட்ட போது எசேக்கியேல் எங்கு ஊழியம் செய்து வந்தான்?
5.3.          எசேக்கியேலை யெகோவா தேவன் எவ்வாறு பண்படுத்தினார்?
5.4.          எசேக்கியேலின் அழைப்பு என்ன?
5.5.          என்ன பாடம் நாம் கற்றுக் கொள்கிறோம்?



மொழிபெயர்ப்பு:
ஜே.ஜி.ராபின்சன் விக்டர்
சிலிம் ரிவர், பேராக்


No comments:

Post a Comment