Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, September 4, 2011

126. பாராக்


கர்த்தரின் விசுவாசமுள்ள தலைவன்


விளக்க வசனம்:
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி எழுந்து போ: கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே. கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா? என்றாள். (நியா 4:14) 

சுருக்கமான குறிப்புகள்:
‘பாராக்’ என்றால் இடி (மின்னல்) என்று பொருள். அவன் கர்த்தரின் மின்னும் பட்டயத்தைப் போல் விசுவாசமுள்ள தலைவர்களில் ஒருவனாகப் பெயரிடப்பட்டான். அவன் கிதியோன், சிம்சோன், யெப்தா போன்ற நீதிபதிகளில் ஒருவனாகக் கருதப்பட்டான்.

அபினோகாமின் மகன் தெபொராள் (நெருப்புப் பட்டயம்) தீர்க்கத்தரிசியின் உதவியால் வட கானானியரின் தலைவனான சிசெராவைப் பிடிக்கவும்  இஸ்ரவேலரை விடுதலையாக்குவதிலும் மிகவும் சுறுசுறுப்பாயிருந்தான். தெபொராள் தீர்க்கத்தரிசி உடன் இருந்ததால் கர்த்தரின் பிரசன்னத்தை நம்பவும், தலைவர்கள், படைகளை தைரியப்படுத்தவும் திட்டமிடப்பட்டது.


அரோசேத் கைப்பற்றப்பட்டது. சிசெரா கொல்லப்பட்டார். யாபீன் அழிக்கப்பட்டான். பாராக்கின் வெற்றியும் முடிவடைந்தது. (நியா: 4) பாராக்கின் உதவியினால் தெபொராள் 10,000 பேர் கொண்ட சேனையை முழுவதுமாக தோற்கடித்தார்கள். அதன் பலனாக இஸ்ரவேல் தேசம் நாற்பது வருடங்கள் அமைதலாயிருந்தது (நியா 8:3). லபிதோத்தின் மனைவி இல்லாவிட்டால் பாராக்குக்கு நம்பிக்கையும், தைரியமும் ஏற்பட்டிருக்காது. தீர்க்கத்தரிசியின் மூலம் பேசி பாராக்குக்கு கர்த்தரின் அழைப்பு கிடைத்தது.


1.   அவன் விவரம்:

          வேதாகமம் தேசிய தலைமைத்துவப் பொறுப்பில் உள்ள பெண்களைபற்றிக் குறிப்பிடுகிறது. அதில் தெபொராள் ஓர் அபூர்வப் பெண்மணி (நியா. 4:4) தெபொராள் ஏபேருக்கு எதிராக, பாராக், இஸ்ர வேல் சேனையோடு கூட பவனி போனாள். பாராக் தெபொராளின் பலத்தையும் திறமையையும் நம்பி இருந்தான் என்பது தெளிவாகிறது. பாராக் அவளிடம் “நீ என்னோடு கூட வந்தால் போவேன்” என்று சொன்னான். (நியா.4:8) தீர்க்கத்தரிசியின் திறமை கர்த்தரின் பிரசன்னத்தில் நம்பிக்கை, தலைவர்களுக்கும் சேனைகளுக்கும் தைரியமுண்டாக்கவும் திட்டமிடப்பட்டது.

தெபொராள் எழும்பி பாராக்கோடு கூடக் காதேசுக்குப் போனாள். அவன் செபுலோன், நப்தலி மனுஷரையும் வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் 15,000 பேர் கூடப் போனான். கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார். சிசெரா ரதத்தை விட்டிறங்கி, கால் நடையாய் ஓடிப்போனான். ஆனால் பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத் மட்டும் துரத்தினான். அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் இஸ்ரவேலின் ஆண், பெண் நீதிபதிகளினால் காப்பாற்றப்பட்டார்கள். அக்காலத்திலே இஸ்ரவேலை நியாயம் விசாரித்த லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் தீர்க்கத்தரிசியோடு சேர்ந்து வேலை செய்தான். அவன் வெற்றிபெற தெபொராளைச் சார்ந்திருந்தான். கர்த்தரின் கிருபையால் பாராக் வெற்றி பெற்றான்.


          பாராக் சிசெராவைப் பின்தொடர்ந்து வந்தான். ஆனால் ஏபேரின் மனைவி யாகேல் சிசெராவைக் கொன்றாள். (நியா 4:21) இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்கினார். வேதாகமம் சொல்லுகிறது : கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்கு மட்டும் இஸ்ரவேல் புத்திரரின் கைகள் மிகவும் பலத்தோடே ஓங்கி நின்றன. (நியா. 4:24)  

          பாராக் நம்பிக்கை, தைரியம் தேவைக்காக அதிகமாகக் குறைகூறப்பட்டான். தெபொராள் அவன் கூடப் போகச் சம்மதித்தது அவனை மறைமுகமாகப் புகழப்பட்டதாக இருக்கலாம். 

கர்த்தர் அவர்கள் பயணத்தில் கூட சென்றார். (நியா. 4) கர்த்த்ர் தாம் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தார் (உபா: 20:4). எதிரிகள் மேல் வெற்றி கிடைத்தது.

கர்த்தரின் வல்லமையையும், இஸ்ரவேலர் மேல் உள்ள அன்பையும் நிரூபித்துக் காட்டுகிறது.



முடிவுரை:
மிக முக்கியமானது: தேவன் நம் முன்னால் நடந்து நம்மை வழிநடத்துகிறார். இஸ்ரவேல் வரலாற்றுப்படி தேவன் எப்பொழுதும் ஜனங்களின் முன் பிரயாணம் செய்கிறார்.  இரண்டாவதாக: ஆண்களும், பெண்களும் அவருடைய நோக்கத்திற்காக உபயோகிக்கப்பட்டார்கள். தேவனுக்கும் அவர் ஜனங்களுக்கும் வெற்றி கிடைக்க நாம் தேவ பக்தியுள்ள ஆண்கள், பெண்களுடன் ஒன்றாகக் கை கோர்த்து நடப்போம்.



2.   வேதாகமக் குறிப்புகள்:
a.     நியா 4 & 5 அதிகாரங்கள்.



3.   மற்ற குறிப்புகள்:
a)              யுனிவர்சல் வேதாகம அகராதி (பதிப்பாளர்:  எ. ஆர். பக்லண்ட்) லட்டர்வர்த் அச்சகம், கிரேட் பிரிட்டன் 1963.

b)     மொழி பெயர்ப்பாளரின் வேதாகமம் (12 பரிமாணங்கள், வியாக்கியானங்கள்) பரிமாணம் 2. அபிங்டன் அச்சகம்.



4.   வாதங்களுக்கான கேள்விகள்:
a)     பாராக் யார்?

b)     அவனுக்கு வெற்றி கிடைக்கும் என்று வாக்குத்தத்தம் பண்ணினவர் யார்? (நியா 4:14)

c)     சிசெரா யார்? (நியா: 4:22)

d)     யாகேல் யார்? (நியா: 4:22)

e)     தெபொராளும் பாராக்கும் பாடின பாட்டின் கருத்து என்ன என்பதை அடையாளம் காண்க. (நியா: 5:1)

f)      ஓர் ஆண் ஒரு பெண்ணோடு ஒத்துழைத்ததின் மூலம் நீ என்ன பாடம் கற்றுக் கொள்வாய்? (நியா: 4:14)





நன்றி:
திருமதி எஸ்.நாயகம் (மொழி பெயர்ப்பு)
திருமதி மேபல் பட்டு (டைப்செட்டிங்)





குறிப்பு:
தாய் – மகளாகிய இவர்கள் இருவரும் கோலாலம்பூர் பரி.யாக்கோபின் சபையைச் சேர்ந்தவர்கள் (எனது சபையும் கூட). என் சபையில் யார்தான் உதவுவார்களோ என்று கவலையுற்றிருந்த நேரம், இரண்டு கட்டுரைகளைக் கொடுங்கள். என் தாயார் முயன்று பார்ப்பதாகச் சொன்னார்கள், என்றார் திருமதி மேபல் பட்டு. முன்னதாக, இந்த மொழி பெயர்ப்புக்குத் தொண்டூழியர்கள் தேவை என்று எங்கள் சபை வாராந்திர சுற்ற்றிக்கையில் அறிவித்திருந்தோம்.

சபை காரியங்களில் ஈடுபடுகிறவர்களை நாம் நான்கு பிரிவுகளாக்க் காணலாம்:

1.     அழைக்காமலேயே தாங்களாகவே சபையின் காரியங்களை அறிந்து கொண்டு பூர்த்தி செய்கிறவர்கள்;

2.     அழைப்புக்குச் செவி சாய்த்து (சற்று தயக்கத்துடன்) சபை காரியங்களைப் பூர்த்தி செய்ய முற்படுகிறவர்கள். திருமதி டப்னி ஜோசப், திரு.ஜான் ஆரோக்கியசாமி, திரு.ராபின்சன் விக்டர், குமாரி ரோகிணி (மாணவராகிய இவரின் மொழி பெயர்ப்பு இன்னும் இடம் பெறவில்லை), திருமதி நாயகம் திருமதி பட்டு ஆகியோர் இப்படிதான் முன் வந்தார்கள்.

3.     தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டால், தாங்களும் மதிக்கப்படுகிறோம் என்ற உற்சாகத்தில் உதவி கரம் நீட்டுகிறவர்கள். (நான் இப்படிதான் சபையின் லே ரீடர் பொறுப்பை ஏற்றேன்).

4.     பொதுவான அழைப்பு விடுத்தாலும், தனிப்பட்ட அழைப்பு விடுத்தாலும், சபையின் காரியங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்கள். இவர்களைச் சபைகளின் அரசியல்வாதிகள் எனலாம்

No comments:

Post a Comment