Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Saturday, December 31, 2011

88 ஆக்கில்லா, பிரிஸ்கில்லா தம்பதியினர்


88 ஆக்கில்லா, பிரிஸ்கில்லா கணவன் மனைவி
பவுலின் மிஷனரி ஊழியத்தில் பங்காளர்கள்.

கரு வசனம்
3. கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
4. அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்;: அவர்களைப்பற்றி நான் மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களா யிருக்கிறார்கள்.  ரோமர் 16:3-4

சுருக்கத்திரட்டு
·         ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இருவரும் பவுலின் மிஷனரி ஊழியத்தில் பங்காளர்கள்.
·         இவர்கள் மற்றவர்களுக்கு பாரமாய் இராதபடிக்கு கூடாரம் பண்ணுகிற தெரிழில் செய்து அவர்களது பணத் தேவைகளைச் சந்தித்துக் கொண்டனர்.
·         இவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்தனர் என பவுல் கூறுகிறார்.

1. அறிமுக உரை - அவர்களது கதை
சில தம்பதியினர்களுக்கு வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தெரியும். அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து, விட்டுக்கொடுக்காது, ஒருவரின் பெலத்தை மற்றவர் மூலதனமாய் வைத்து ஒரு திறமையான அணியை வடிவமைத்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட இருவரின் இணைப்பு சுற்றி இருந்தவர்களைப் பிரம்மிக்கச் செய்யும். ஆக்கில்லா மற்றும்  பிரிஸ்கில்லா ஆகிய இவர்களும் இப்படிப்பட்ட ஒரு தம்பதியினராக காணப்பட்டனர். இவர்களை வேதம் ஒருபோதும் தனித்தனியாக பிரித்து கூறவே இல்லை. இவர்கள் குடும்ப வாழ்விலும் சரி ஊழியத்திலும் சரி இணைந்தே செயல்பட்டனர்.


பவுல் கொரிந்துவிற்கு மேற்கொண்ட இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவரை அங்கே சந்தித்தனர். யூதருக்கு எதிராக கிளாடியஸ் என்ற மன்னனின் தீர்ப்பின்படி இவர்கள் ரோமாபுரியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இவர்களது வீடானது கூடாரத்தைப்போல அவர்களாலேயே அவ்வப்போது இடமாற்றக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. இவர்கள் தங்களது இல்லத்தைப் பவுலுக்குத் திறந்து கொடுத்தனர். பவுலும் இவர்களோடு கூடாரம் செய்யும் தெரிழிலில் இணைந்து கொண்டார். பவுல் ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இவர்களோடு அவருக்கிருந்த ஆவிக்குரிய ஞானத்தின் ஐஸ்வர்யத்தை பகிர்ந்து கொண்டார்.  

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இருவரும் இந்த சந்தர்பத்தை நன்கு பயன்படுத்தி தங்களது ஆன்மீக கல்வியில் கவனம் செலுத்தினர். இவர்கள் பவுலது போதனைகளைக் கவனமாக கேட்டு, தாங்கள் கேட்டவற்றைத் தியானித்தனர். இவர்கள் அப்பொல்லோவினுடைய பேச்சினை கேட்டபோது அவனுடைய திறமைகளால்; ஈர்க்கப்பட்டனர். ஆனால் இவனது தகவல்கள் முழுமை பெறவில்லை என்று இவர்கள் புரிந்து கொண்டனர். இவர்கள் இவனிடத்தில் அங்கேயே நேருக்கு நேர் எதிர்த்து நிற்காமல் அமைதியாக அவனைத் தங்களது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டனர். அதுவரை கிறிஸ்துவைப் பற்றின செய்தியை அப்பொல்லோ யோவான்ஸ் நானகனின் மூலமே கேட்டிருந்தான். ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இருவரும் இயேசுவினுடைய வாழ்க்கை, அவரது மரணம், அவரது உயிர்தெழுதல் மற்றும் தேவன் பரிசுத்த ஆவியாக நம்மோடு உண்மையாக ஜீவிக்கிறார் என்பதையும் இவனுக்கு தெரிவித்தனர். இப்பொழுதோ முழு விவரமும் தெரிந்தவனாக இவன் மிகுந்த சக்தியோடு தெரிடர்ந்து பிரசங்கித்தான்.

ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இருவரும் தங்களது இல்லத்தை ஓர் அன்புள்ள பயிற்சி மையமாகவும், ஆராதனை ஸ்தலமாகவும் பயன்படுத்தி வந்தனர். பல வருடங்களுக்குப் பின் ரோமாபுரிக்குத் திரும்பி  அவர்களால் முன்னேற்ற மடைந்த ஓர் ஆலயமாக்கப்பட்ட வீட்டில் தங்கியிருந்தனர். அப்பொல்லோவைப் போல, இந்த பிரிஸ்கில்லாளும் எபிரேயர் நிருபத்தை எழுதியிருக்க வாய்ப்புள்ளது.

ஒரு காலக் கட்டத்தில் அநேகரது கவனம் கணவன் மனைவி ஆகிய இவர்கள் இருவருக்கிடையே என்ன நடக்கிறது என்பதில் தான் இருந்தது. ஆனால் இந்த ஆக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகிய இவர்கள், கணவன் மனைவி ஆகியவர்கள் மூலமாக என்ன நடக்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தனர். இவர்களது திறமையானது இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவின் நெருக்கத்தையும் காண்பிக்கிறது. அவர்களின் விருந்தோம்பல் பண்பானது அநேகரை இரட்சிப்புக்குள்ளாக வழி நடத்த ஒரு பெரிய வழி வாசலைத் திறந்தது. கிறிஸ்தவர்களது இல்லமானது சுவிசேஷத்தைப் பரப்பும் ஒரு சிறந்த கருவியாக இன்றும் காணப்படுகிறது. நமது கேள்வி என்னவென்றால் நமது இல்லமானது நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு கிறிஸ்துவைக் கண்டுகொள்ளக் கூடிய இடமாக அமைந்துள்ளதா என்பதுதான்?

2. வல்லமையும் சாதனையும்
2:1 தலைசிறந்த தம்பதியினராக ஆரம்ப கால சபைகளில் தேவனுக்கு ஊழியம் செய்தனர்.
2:2 கூடாரம் செய்து அவர்களது அன்றாட தேவைகளை அவர்களாகவே சந்தித்துக் கொண்டனர்.
2:3 இவர்கள் பவுலின் நெருங்கிய நண்பர்களாக காணப்பட்டனர்.
2:4 கிறிஸ்துவின் முழு செய்தியையும் அப்பொல்லோவிற்கு விவரமாக தெரிpவித்தனர்.

3. அவர்களது வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
3:1 தம்பதியினர் இணைந்து ஒரு பயனுள்ள ஊழியத்தைச் செய்ய முடியும்.
3:2 நமது இல்லமானது சுவிசேஷத்திற்கு விலையுயர்ந்த கருவியாகும்.
3:3 தேவ சபையில் என்ன பொறுப்பு வகித்தாலும் சரி, ஒவ்வொரு விசுவாசியும் கடவுளைப் பற்றின நம்பிக்கையில் நன்கு கற்பிக்கப்படவேண்டும்.

4. வேதாகமக் குறிப்புகள்
அவர்களது கதையானது அப்போஸ்தலா; 18லும், ரோமர் 16:3-5, 1 கொரிந்தியர் 16:19, 2 தீமோத்தேயு 4:19 ஆகிய பகுதிகளிலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

5. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
5:1 ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாவும் தங்களது பணத்தேவைகளை எப்படி சந்தித்துக் கொண்டனர்?
5:2 அவர்களது இல்லத்தை தேவனுடைய ஊழிய வேலைகளுக்கு எப்படி பயன்படுத்தினார்கள்?
5:3 அப்பொல்லோ மேலும்  கிறிஸ்தவனாக வளருவதற்கு இவர்களிருவரும் எப்படி உதவினார்கள்?


மொழிபெயர்ப்பு:
ஜான் ஆரோக்கியசாமி,
பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான்.

Friday, December 30, 2011

56. மல்கியா தீர்க்கதரிசி




கருவசனம்
1 இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.  (மல்கியா 4:1-2)

கதைச் சுருக்கம்
·       கடவுள் என்றும் மாறாதவர் என்று உரைத்தான்.
·       ஜனங்களின் பாவங்களை உணர்த்தினான் (தசம பாகம்).
·       ஜனங்களுக்கு நம்பிக்கையும் பாவ மன்னிப்பையும் குறித்து பிரசங்கித்தான்.
·       மனமாறி கடவுளிடம் திரும்புக என்று பிரசங்கித்தான்.

1.     முகவுரை – அவன் கதை
‘மல்கியா’ என்றால் ‘என்னுடைய தூதன்’ அல்லது ‘யெகோவாவின் தூதன்’ என்று பொருள்படும் (1:1) ஜேரோம் என்பவர் அவரை எஸ்ரா என்று கூறுகிறார். கி.மு.430 காலக்கட்டத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள் ஆகாய், சகரியா மற்றும் நெகேமியா போன்றவர்களின் காலத்தில் வாழ்ந்தவன். ஆலயம் எழும்பி 100 ஆண்டுகள் ஆகியும் மக்கள் அல்லது ஜனங்கள் யெகொவா தேவனைத் தொழுது கொள்வதில் உற்சாகம் இழந்தும், ஏசயா மற்றும் தீர்க்கதரிசிகளின் மேசியாவின் தீர்க்கத்தரிசனங்களைக் குறித்தும் குழப்பம் அடைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கி.மு.586ல் எருசலேம் தேவாலயம் அழிக்கப்பட்ட காலத்தில், அநேக ஜனங்கள் யூதேயா தேசத்தில் என்ன என்ன பாவங்களைச் செய்து கொண்டு இருந்தார்களோ அதே பாவங்களை மீண்டும் செய்து கொண்டு வந்தார்கள். மல்கியா ஜனங்களின் பாவங்களையும் போலியான வாழ்க்கை முறைகளையும் கண்டித்து நீதியான யெகோவா தேவனும் கடின இருதயமுள்ள மக்கள் உரையாடுவது போல் பிரசங்கித்தான்.

பின்னணி என்ன?
மல்கியா, ஆகாய், செஜரியா தீர்க்கதரிசிகள் சிறையிருப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட யூதேயா நாட்டு தீர்க்கதரிசிகள் எருசலேம் தேவாலயம் கட்டப்படுவதில் சுணக்கம் ஏற்பட்டதால் ஆகாய் மற்றும் செவறியா தீர்க்கதரிசகள் கண்டித்தனர். ஜனங்ள் ஆலயத்தைக் கவனிக்காமல் விட்டு விட்டதையும் போலியான ஆராதனை மேற்கொண்டதையும் மல்கியா கண்டித்துத் தட்டிக் கேட்டான்.

மல்கியா, மக்களை தாங்கள் செய்த பாவங்களுக்குக் கடவுளிடம் மன்னிப்பைத் தேடச் சொல்லி கண்டித்தான். கடவுளிடம் உண்மையாய் இருப்பது முக்கிய அக்கறையாகும். அவர்கள் கடவுளிடம் உண்மையில்லாதவர் ஆவார்கள். மல்கியாவிடம் ஒரு சிறந்த எதிர்காலம் இருந்த்து.

(எகா.) மல்.3:7-8, கடவுள் கூறினார், என்னுடன் திரும்பு; நான் உன்னுடன் திரும்புகிறேன் என்று யெகோவா தேவன் கூறுகிறார். ஆனால், ‘எப்படி நாங்கள் திரும்புவோம்?‘ என்று மக்கள் கேட்கின்றனர்,.

அவரின் போதனை
கடவுளின் அன்பு ஒழுக்கமானது மற்றும் முழுமையானது. யெகோவா தேவனின் அன்பு செயல்பாடும் அன்பு மற்றும் பாதுகாப்பும் ஆகும். அவர் உண்மையானவர். அவர் உண்மையாக மக்களுக்கு சத்தியம் செய்பவர். ஜனங்கள் அன்பான யெகோவா தேவனை பெருமை நிமித்தம் ஏற்றுக் கொள்ளாமல் உடன் படுக்கையை மீறி அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி தங்கள் சுயநலத்திற்காக வாழ்ந்தார்கள். அதனால் அவர்களின் தொடர்பு முறிந்து போனது.

ஆனால், இந்த மீறுதல்கள் மாற்றப்படக் கூடியவை. எல்லா நம்பிக்கைகளும் வீண் போகவில்லை. யெகோவா தேவன் சுகமாக்கி மறுபடியும் கட்டுகிறார். மன்னிப்பு அளிக்கிறார். அதுதான் கிருபை. இதுதான் மல்கியாவின் போதனை. இப்போதனை தூதர்களை நினைவுப்படுத்தியது. தூதர்கள் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள். தூதர்களுடைய மனப்பூர்வமான கீழ்ப்படியாமை, அவர்களின் ஆசாரியர்களிடம் (1.1-2:9) தொடங்கி மற்ற மற்ற யூதர்களிடம் பரவிற்று (2:10-3:15). அவர்கள் கடவுளின் நாமத்தை அவமதித்தார்கள் (1:6)அவர்கள் போலியான ஆராதனைகளை மேற்கொண்டனர் (1:7-14). கடவுளின் காணிக்கைகளைத் தங்களுக்கு என்று வைத்துக் கொண்டனர் (3:8-12). அவர்கள் அகங்காரங்கமாய் நடந்து கொண்டார்கள் (3:13-15). யெகோவா தேவனுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள உறவு முறிந்து தண்டிக்கப்படத் தக்கவர்கள் ஆனார்கள். இருப்பினும் துன்மார்கர் மத்தியில் ஒரு சிலர் நேர்மையாகவும் உண்மையாகவும் யெகோவா தேவனை நேசித்து கனம் படுத்தி வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்டவர் மேல் யெகோவா தேவன் ஆசீர்வாத்த்தை ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் பொலிந்தருளினார் (3:16-18).

மல்கியா, இஸ்ரவேலர்களின் பின்வாங்கிப் போகும் தன்மையை அழகாக சித்தரித்திருக்கிறார். இஸ்ரவேலர்கள் தங்களின் பாவத்தின் நிமித்தம் தண்டிக்கப்படத் தக்கவர்கள். இருப்பினும் மல்கியாவின் போதனை நம்பிக்கையை ஊட்டுகிறது. எல்லோருக்கும் மன்னிப்பு உண்டு. மல்கியா 4:2ல், ‘ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும், நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்‘.

மல்கியா தன்னுடைய புஸ்தகத்தை இவ்வாறு முடிக்கிறான். எலிசா தீர்க்கதரிசி வருகிறான் என்று முடிக்கிறான். அவர் வந்து யெகோவா விசுவாசிக்கிற எல்லா ஜனங்களுக்கும் அளிக்கிறார் (4:5-6)

மல்கியா தீர்க்கதரிசி புஸ்தகம் பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கம் ஒரு பாலமாக அமைகிறது.


2.        மல்கியாவின் முக்கியக் குறிப்புகள்
மல்கியா, கிமு.450ல் ஜீடாவில் துர்க்கதரிசியாக இருந்தான். அவன் ஒரு கடைசி பழைய ஏற்பாட்டிற்கான..

அ)      காலக்கட்த்தின் சூழ்நிலை: எருசலேம் நகரம் எழுப்பியும் மற்றும் புதிய ஆலயம் எழுப்பியும் 100 ஆண்டுகள் ஆனது. ஆனால் மக்கள் கடவுளின் மீது நிர்பிசாரம் கொண்டுள்ளனர்.

ஆ) தலைமை கருத்து
ஜனங்கள் செய்த பாவங்களினால் அவர்களுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தொடர்பு முறிவுபட்டது. மற்றும் அவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள். ஆனால், யாரொருவர் மனம் திருந்தினால் அவர்கள் கடவுளின் ஆசீர்வாத்த்தைப் பெறுவர். அவர் வாக்குத்தத்தத்தில் மேசியாவை அனுப்புவதாக ஆணித்தரமாக கூறியுள்ளார்.

இ)      கதையின் முக்கியத்துவம்
மாயஜாலம், கடவுள் மேல் அக்கரையின்மை மற்றும் ஏனோதானோ என்று வாழும் வாழ்க்கை மிக பயங்கரமான பின் விழைவை விளைவிக்கும். கடவுளை சேவிப்பது தொழுது கொள்வதும் அன்றி வேறொன்றும் இன்மையிலும் மறுமையிலும் முக்கிய குறிக்கோளாக இருக்க்க் கூடாது.

சமகால தீர்க்கதரிசிகள் – கிடையாது


3.        பெரிய தலையங்கம்
தலையங்கம்             விளக்கம் / முக்கியத்துவம்

அ)      கடவுளின் அன்பு
கடவுள் தன் ஜனங்களை நேசிக்கிறார் – யெகோவா தேவனைக் கண்டு கொள்ளவில்லை என்றாலோ, கீழ்ப்படியவில்லை என்றாலும் நிச்சயம் யெகோவா தேவன் அவர்களை நேசிப்பார். யெகோவ தேவனக்கு உத்தம்மான உண்மையாய் இருப்பவர்களுக்கு அளவில்லாத ஆசீர்வாதங்களை அளிக்க்க் காத்துக கொண்டிருக்கிறார். யெகோவா தேவனின் அன்புக்கு எல்லை கிடையாது.

ஆ)      கடவுள் அளவற்ற பிரியம் வைத்திருப்பது நிமித்தம் போலி வாழ்க்கையும், அக்கறையில்லாத வாழ்க்கையும் வெறுக்கிறார். இப்படிப்பட்ட வாழ்க்கை அவரோடு உறவாடுவதைத் தடை செய்கிறது. நாம் எதைக் கடவுளுக்கு எவ்வாறு கொடுக்கிறோமோ அது நம்முடைய மெய்யான அன்பின் அளவைக் குறிக்கிறதாய் இருக்கிறது.

இ)      ஆசாரியர்களின் பாவங்கள்
மல்கியா ஆசாரியர்களைக் குற்றம் சாட்டுகிறான். யெகோவா தேவனின் தேவைகளை அவர்கள் அறிவர். அவர்களின் தியாகங்கள் பலியானது மற்றும் நேர்மையற்றது. யெகோவா தேவனை ஆராதிக்கும் போது ஒரு சிந்தை இல்லாமல் ஆராதித்தல்.
யெகோவா தேவன் நம்முடைய மதிப்பிற்கம் மரியாதைக்கும் உரிய தேவனாக இருக்கிறார். பெருமை நிமித்தம் கடவுளிடம் கொடுக்க வேண்டிய ஆராதனை, கல்யான வைபவங்கள், பணம், குடும்பம் ஆகியவை கொடுக்காமல் இருக்க்க் கூடாது.

இ)      கடவுளின் வருகை
விசுவாசமுள்ள மக்களைக் கடவுள் நேசித்து, அந்நேசத்தின் நிமித்தம் மேசியாவாக இப்பூலோகத்திற்கு வருகிறார். அம்மேசியா ஜனங்களை வழி நடத்தி நம்பிக்கையூட்டுகின்றன. அந்த நாள் ஜனங்களுக்குச் சுகத்தையும் சௌபாக்கியத்தையும் கொடுக்கின்றன. நாளாக இருக்கும். ஆனால் அவரைத் தள்ளிவிடும் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளாக விளங்கும்.

கிறிஸிதுவின் முதல் வருகை அவரை விசுவாசிக்கிற யாவரையும் பரிசுத்தப்படுத்தும் பக்குப்படுத்தும்.


4.        வேதாகமக் குறிப்பு:


5.        கலந்துரையாடுவதற்காக்க் கேள்விகள்
1.        மல்கியாவின் பொருள் என்ன?
2.        எப்பொழுது பரிமாரினார்?
3.        கடவுளின் அன்பைப் பற்றி என்ன கூறினான்?
4.        என்ன பாவங்கள் ஆசாரியர்கள் செய்தனர்?
5.        மேசியாவின் பாத்திரம் என்ன?

மொழிபெயர்ப்பு
குமாரி கஸ்தூரி பரமேஸ்வரன்
பரி.பவுல் ஆலயம், சிலிம் ரிவர்.

55. லாபான்


55. லாபான்
பெத்துவேலுடைய மகனும், ரெபெக்காளின் சகோதரனும் ஆவான்

கரு வசனம்
என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.  (ஆதி.31:42)

சுருக்கம்
·       பெத்துவேலின் மகனும், யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் மாமனுமானவன். (ஆதி.24:29).
·       ஈசாக்கும் ரெபெக்காவும் திருமண பந்தத்தில் இணைவதற்கு அனுமதி அளித்தவனும் இவனே.
·       யாக்கோபுக்கு ராகேல் மேலுள்ள மோகத்தினிமித்தம், லாபான் யாக்கோபினிடம் 14 வருட உழைப்பை ஏமாற்றி பெற்றுக் கொண்டான். (ஆதி.??)
·       லாபான் வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்து கொண்டான் (ஆதி.26).
·       யாக்கோபோடு ஓர் உடன்படிக்கையை செய்து கொள்ள உடன்பட்டான் (ஆதி.30).
·       யாக்கோபு ஏமாற்றியதால் ஜெயிக்கவில்லை, மாறாக, கடவுளோடு பண்ணின கிருபையின் உடன்படிக்கையினிமித்தம் ஜெயம் கொண்டான்.

முன்னுரை
எபிரேய மொழியில் லாபான் என்றால் ‘வெண்மை’ என்று பொருள்படும். நாம் எல்லோரும் ஒரு வகையில் சுயநலவாதிகள். இது எல்லாரிடமும் உள்ள பெலவீனம். அதுபோலவே, லாபானும் தன் வாழ்க்கையை சுயநலத்தேயே மையமாய் வைத்து ஓட்டிக் கொண்டிருந்தான். மற்றவர்களையும் தன் சுயநல ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். உதாரணத்திற்கு, தன் தந்தை ரெபெக்காளை, ஈசாக்கு திருமண பந்த்த்தில் இனைத்த்து, தன் மகள்களைத் தன் சுயநலத்திற்காக பந்தயப் பொருட்களாய் பயன்படுத்தி யாக்கோபை வேலை வாங்கியது போன்றவற்றைக் கூறலாம். எப்படி இருப்பினும் நாளடைவில் யாக்கோபு லாபானை மேற்கொண்டான். ஆனால் லாபான் தன்னுடைய தோல்வியை ஒத்துக் கொள்ளவே இல்லை. தொடர்ந்து யாக்கோபைத் தன்னுடைய இருகின பிடியில் வைத்துக் கொள்ளவே நினைத்தான். கடைசியாக லாபானின் இருகிய பிடி தளர்ந்து போனது. லாபான் யாக்கோபும், யாக்கோபின் தேவனும் பலமிக்கவர்கள் என்று உணர்ந்துக் கொண்டான்.

நாம் வேதத்தை நுனிப்புல் மேய்வது போல வாசித்தால், நாமும் லாபான் போலவே சுயநலவாதிகள் என்பதை உணராமல் போகலாம். உண்மையில் சுயநலம் என்ற பாவம் நாம் எல்லாரிடமும் இயல்பாகவே காணப்படுகிறது. லாபானைப்போல நாமும் எல்லோரையும் எல்லா சம்பவங்களையும் நம்முடைய சுயநலன் கருதியே, நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனைகிறோம். நம்முடைய சுயநலனிமித்தம் மற்றவர்களை மட்டமாய் நடத்துகிறோம். நாம் நம்முடைய சுயநலத்தை அறிவதே இல்லை. எப்படி நம்முடைய சுயநலத்தை அறிந்து கொள்ளுவது? எப்பொழுது நாம் நம்முடைய தப்பிதங்களை ஒத்துக் கொள்ளுகிறோமோ, அப்பொழுது நாம் நம்முடைய சுய நல சிந்தையை அறிந்து கொள்ளலாம். ஆனால் தன்னுடைய தப்பிதங்களை ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு சில வேளைகளில் நீங்களே உங்கள் நடவடிக்கைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டிருக்கலாம். அப்பொழுது உங்களின் சுயநலத் தன்மை என்ன என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.. ஆகவே, சுயநலம் என்பது என்ன என்று உணர்ந்து கொள்ளுவது ஒரு வேதனையான விசயம். ஆனால், அதுதான் கடவுளின் வழிக்குத் திரும்புவதற்கு முதல் படி.


2.        வலிமையும் சாதனையும்.
1.     ஆபிராகாமின் இரண்டு தலைமுறையின் திருமண பந்த்த்தைத் தனுடைய கட்டுப்பாட்டில் வைத்திருத்தல். (ரெபேக்காள், ராகேல் மற்றும் லேயால்).
2.     சீக்கிரத்தில் வளவளவென்று பேசக் கூடியவன்.

3.        பெலவீனங்களும் தவறுகளும்
1.     தன் சுயநலனுக்காக மற்றவர்கள் பயன்படுத்தியவன்.
2.     தன் தப்பிதங்களை ஒத்துக் கொள்ளாதவன்.
3.     யாக்கோபின் மூலம் பொருளாதாரத்தில் பயன் அடைந்தவன். ஆனால், ஆவீக்குரிய ஆதாயத்தை இழந்தவன்.

4.        கற்றுக் கொண்ட பாடம்
1.     யார் யார் மற்றவர்களைத் தன் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்களோ, அவர்களே பின்னர் மற்றவர்களால் பயன்படுத்தப்படுவார்கள்.
2.     கடவுளின் திட்டத்தை யாரும் தடைபண்ண முடியாது.


5.        வேதாகமப் பகுதி
ஆதிகயாகமம் 24:1-31:55ல் லாபானில் கதையை வாசித்தறியலாம்.


6.        உரையாடலின் கேள்விகள்
1.              லாபான் எவ்வாறு ஆபிராகாமின் உறவுக்காரன்?
2.              யாக்கோபு தன் சகோதரனை வஞ்சித்தான். லாபான் எவ்வாறு யாக்கோபை வஞ்சித்தான்?
3.              லாபானின் கோரப்பிடியிலிருந்து எவ்வாறு யாக்கோபு தப்பித்தான்?
4.              லாபானின் பெலவீனங்கள் யாவை?
5.              லாபானின் வாழ்க்கையிலிருந்து நாம் என்னத்தைக் கற்றுக் கொள்கிறோம்?


மொழிபெயர்ப்பு:
திரு. ராபின்சன் விக்டர்
பரி.பவுல் ஆலயம், சிலிம் ரிவர்.