Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Friday, December 30, 2011

29. ஆபகூக் தீர்க்கதரிசி




கரு வசனம்
 2 கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.  (ஆபகூக் 3:2)

கதைச் சுருக்கம்
·       ஆபகூக் அநீதியைக் கண்டு சகிக்கக் கூடாதவனாயிருந்தான்.
·       ஏன் அநீதிக்காரன் வெற்றிப் பெற்றவனாய் தோன்றுகிறான் என்று கேள்வி கேட்டவன்.
·       யெகோவா தேவன் ஆபகூக்கை அக்கேள்விகளுக்குப் பதில்களை எழுதச் சொன்னான்.
·       நீதியுள்ள யெகோவா தேவன் மேல் நித்தமும் விசுவாசம் வைக்க வேண்டும்.

1.        முன்னுரை – அவனின் கதை
‘ஆபகூக்’ என்பது ‘மல்யுத்த வீரன்’ அல்லது ‘அனைப்பவன்‘ என்ற பொருள்படும். அவனைப் பற்றி பின்னனியோ குணாதிசயங்களோ அவ்வளவோ தெரியவில்லை. ஆபகூக் அசீரியாவைக் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. ஆனால், கல்தேயர்களைப் பற்றியும் அவர்களுடைய பெருகுகிற இராணுவ பெலன்களைக் குறித்து குறிப்பிட்டுள்ளான். ஆகவே, அவன் நேபுகாத்நேச்சார் (1:6, 2:3) யூதேயாவை, தாக்கும் நாட்களுக்கு முன்பாக அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான் என்று தெரிகிறது. அக்காலக் கட்டத்தில் யோயாக்கீம் யூதேயாவை அரசாண்ட காலக்கட்டம் என்று உணரலாம்.

எதற்காக இப்புத்தகம் எழுதப்பட்டது?
இவ்வுலகத்தில் துன்மார்க்கன் ஜெயம் கொண்டவனாய் சாட்சியளித்தாலும் யெகோவா தேவன் இவ்வுலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார் என்று உணர்த்த எழுதப்பட்டுள்ளது. கிமு612 முதல் கிமு 588வரை எழுதப்பட்ட இப்புத்தகம், தென் தேசமான யூதேயாவுக்கும் மற்றும் உலகமெங்கும் உள்ள யெகோவா தேவனுடைய பிள்ளைகளுக்கு எழுதினான். இப்புத்தகத்தின் நோக்கம் பின்னணியில் வளர்ந்து வரும் பாபிலோனிய உலகம் ஆதிக்கமும் அது ஏற்படுத்தப்போகும் அழிவையும் யூதேயா உணர்ந்து தன்னை தற்காத்துக் கொள்ள எத்தனிக்க வேண்டும் என்ற கரிசனைத்தான். ஆபகூக் இப்புத்தகத்தை எழுதினான்.

ஆபகூக் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைத் தேடினவன். சுற்றிலும் காணப்படும் நிகழ்வுகளைக் கண்டு மிகவும் கடினமாக கேள்விகளைக் கேட்டு விடைகளைத் தேடிக் கொண்டிருந்தான். இவைகள் வெறுமனே அறிவுப்பூர்வமான கேள்விகளோ அல்லது கசப்பான முறையீடோ அல்ல. ஆபகூக் மாண்டுபோகும் உலகத்தைக் கண்டு மணமுடைந்து போனான். ஏன் இவ்வுலகத்தில் இவ்வளவு அநீதி, பொல்லாப்பு என்று கேட்டான். ஏன்? எப்பொழுதும் துன்பமார்க்கன் ஜெயம் கொள்ளுகிறான்?. இக்கேள்விகளை நேராக, யெகோவா தேவனிடமே கேட்டான். யெகோவா தேவனோ சாட்சியோடே பதில்களைத் தந்தார்.

ஆபகூக்கிக் கேள்விகள் ஆபகூக்கின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு:
திரு.ராபின்சன் விக்டர்
பரி.பவுல் ஆலயம், சிலிம் ரிவர்

No comments:

Post a Comment