28. கிதியோன்
இஸ்ரவேலின் ஜந்தாவது நியாதிபதியும்,
ஓர் இராணுவ போர் வியூகம் (அ. போர் தந்திரி) வகுப்பாளனும் ஆவான்.
கருவசனம்
15 அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.
16 அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
15 அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.
16 அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
(நியாயாதிபதி 6:15, 16)
கதைச் சுருக்கம்
·
நியாதிபதியாகிய இவன் இஸ்ரவேலை நாடோடி ஜனமாகிய மீதியானியரிடத்திலிருந்து
கடாச்சித்தவன்.
·
கிதியோன் என்ற பராக்கிரமசாலி எப்படிப் பட்டசவால்களையும் சர்வசாதாரனமாக
சமாளித்து விடுகிறவன்.
·
கிதியோனை நெற்கதிர்களைத் தரையில் அடித்துக் கொண்டிருக்கும்
பொழுது யெகோவா தேவன் அழைத்தார்.
·
மீதியானியரின் இராணுவத்தை ஜெயங் கொண்டவன்.
முன்னுரை
யெகோவா தேவன் சர்வ சாதாரன
ஜனங்களைக் கொண்டு அவரின் திட்டத்தை நிறைவேற்ற முடியும். ஏன்? உங்களையும் என்னையும்
கூட அவர் பயன்படுத்துவார். நாம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள எப்படிப் பட்ட ஊழியமாயிருந்தாலும் சரி,
அதைக் கண்ணும் கருத்துமாயும் மிகவும் துல்லியமாயும் செய்திட வேண்டும்.
கிதியோன் என்றால் ‘பதரை தூற்றுகிறவன்‘
அல்லது ‘போர் அடிக்கிறவன்‘ என்று பொருள்படும். கிதியோன் மனாசே கோத்திரத்தானும், யோவானின்
மகனும் ஆவான். அவனை ‘யெருபாகால்‘ (நியா.6:32) என்றும், ‘எருப்பேசேத்‘ (2சாமு.11.21)
என்றும் அழைத்த்துண்டு.
யெகோவா தேவனின் அழைப்பு மிகவும்
பிரமிக்க வைக்கிற விதமாக கிதியோனுக்கு உண்டானது. ஏழு வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்ட
இஸ்ரவேல் ஜனங்களை மீதியானியரிடமிருந்து இரட்சிக்க, கிதியோன் யெகோவா தேவன் தெரிந்து
கொண்டார். கானான் தேசத்தில் வசித்த இஸ்ரவேல் ஜனங்களின் நெல் விளைச்சள்களையும் ஆடு மாடுகளையும்,
மிகவும் ஈவு இரக்கமற்ற முறையில் வாரிக் கொண்டு மீதியானியர் வருடா வருடம் சென்றார்கள்.
கிதியோனின் போர் வியூகம் வகுத்து, மீதியான் ஜனங்களிடம் இரவு வேளையில், பாளையில் பயங்கர
பயணத்தை மூட்டி, கட்டுக்கோப்பில்லா இராணுவ வீர்ர்களை விரட்டியடித்தான். திடீர் என்று
தீவெட்டியின் வெளிச்சமும், பல முறை எதிரொலிக்கும் எதிரொலியும் முந்நூறு பேர்களின் எக்காள
தொனியும் கடுங் கலக்கத்தையும் பலத்தையும் தீதியானியரின் படையினரிடம் உண்டாகி, தாங்களுக்குள்ளே
ஒருவரோடு ஒருவர் வெட்டிக் கொண்டு தோற்றுப் போய் விரட்டியடிக்கப்பட்டனர். கிதியோன்,
இஸ்ரவேலை 50 ஆண்டுகள் நியாயம் விசாரித்தான். அவன் ஐந்தாவது நியாதிபதியும் கூட, கிதியோன்
இஸ்ரவேலின் ராஜாவாக தாம் நியமிக்கப்படுவதை விரும்பவில்லை. நாளடைவில் கிதியோன் விக்கிர
ஆராதனைக்குத் தன்னை ஒப்புக் கொடுத்து, தனக்கும் தன் குடும்பத்திற்கும் கன்னியையும்
கேடையும் வரவழைத்துக் கொண்டான். இருந்த பொழுதும் அவன் எபிரேயர் 11.32ல் பெருமையாய்
மதிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது (நியா.6:14-27); 8:1-24ஐ வாசிக்கவும்).
கிதியோனின் கதையை ஆராய்ந்து
பர்ர்ப்போம்.
a. கிதியோனின் தினசரி சவால்,
தன் குடும்பத்திற்கு உணவை சேகரிப்பதாகும். மீதியான் ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்களின் விவசாயத்திற்குப்
பெருந் தடையாய் விளங்கினார்கள்.
b. கிதியோன் பராக்கிரமசாலி ஆவான்.
மேல் கூறப்பட்ட சவாலை சமாளிக்க தன்னுடைய நெற்கதிர்களைப் போரடிக்க, திராட்சரச ஆலையையே
போரடித்தான்.
c. யெகோவா தேவன் தன்னுடைய தூதனோடு
தன்னுடைய சவால் மிக்க செய்தியைக் கொடுக்க கிதியோன் தன் நெற்கதிர்களைத் திராட்சரச ஆலையினுள்
போரடித்துக் கொண்டிருக்கும் போது அனுப்பினார்.
d. தேவ தூதன் மூன்று முறை கிதியோனின்
தட்டிக்கழித்தலை சமாளித்து அவனைச் சம்மதிக்க வைக்கிறார்.
-
கிதியோன் தன் குடும்பத்தின் ஜீவனை அம்ச காரியங்களைக் குறித்து
அக்கறையும் கரிசனையும் உள்ளவனாயிருந்தான்.
-
யெகோவா தேவனின் அழைப்பைக் குறித்து அவனுக்கு சந்தேகம் இருந்தது.
அவ்வழைப்பை ஏற்க மறுத்து விட்டான்.
-
தனக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தைச் சரிவர செய்ய முடியாமல்
போய் விடுமோ என்ற உணர்வின் நிமித்தம், யெகோவா தேவனின் அழைப்பை ஏற்க மறுத்து வட்டான்.
e. கிதியோனுக்கு பெலவீனங்களும்
தோல்விகளும் ஏற்பட்டதுண்டு. இருப்பினும் அவன் யெகோவா தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவன்
தன் கரங்களில் ஒப்படைக்கப்பட்ட ஊழியங்களைச் செம்மையாய் செய்திட்டான்.
4. கற்றுக் கொண்ட பாடங்கள
1. யெகோவா தேவன், தற்போது நம்மிடம் இருக்கும் சொற்ப கீழ்ப்படிதலின்
மத்தியிலிருந்து நம்மை அழைக்கிறார். நாம் அவ்வழைப்பை ஏற்று உத்தமும் உண்மையுமாயிருப்பின்
மேன்மேலும் பொறுப்புகளைத் தருவார்.
2. யெகோவா தேவன் தமக்குள் தேங்கியிருக்கும்
(அல்லது புதைந்திருக்கும்) அபரிவிதமான ஆற்றலைப் பயன்படுத்தி, மென்மேலும் வலுப்பெற செய்து
அதைப் பெருகச் செய்கிறார்.
3. யெகோவா தேவன் நம்முடைய தோல்வி
மற்றும் இயலாமையின் மத்தியிலும் நம்மைப் பயன்படுத்துகிறார்.
4. எப்படி நாம் ஆவிக்கரிய வாழ்க்கையில்
முன்னேற்றம் அடைந்தாலும் நாம் இடரி விழுவதற்கு ஏராளமான வழிகளுள்ளது. ஆகவே, நாம் எப்பொழுதும்
யெகோவா தேவன் அழைப்பைப் பின்பற்ற வேண்டும்.
5. தேவாகம மேற்கோள்கள்
நியாயாதிபதிகள் 6-8; எபிரேயர்
11:32
6. தியானித்து உரையாடல் கேள்விகள்.
6.1. ஏன் கிதியோனுக்கு விசுவாச வீரர்கள் மத்தியில்
ஓர் இடம் கொடுக்கப்பட்டுள்ளது?
6.2. கிதியோனின் பெலவீனங்கள் யாவை?
6.3. கிதியோனின் வாழ்க்கையிலிருந்து நீ கற்றுக் கொண்ட
பாடங்கள் யாவை?
மொழிபெயர்ப்பு:
திரு.ராபின்சன் விக்டர்
பரி.பவுல் ஆலயம், சிலிம்
ரிவர்
No comments:
Post a Comment