55. லாபான்
பெத்துவேலுடைய மகனும், ரெபெக்காளின் சகோதரனும் ஆவான்
கரு வசனம்
என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான். (ஆதி.31:42)
சுருக்கம்
· பெத்துவேலின் மகனும், யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் மாமனுமானவன். (ஆதி.24:29).
· ஈசாக்கும் ரெபெக்காவும் திருமண பந்தத்தில் இணைவதற்கு அனுமதி அளித்தவனும் இவனே.
· யாக்கோபுக்கு ராகேல் மேலுள்ள மோகத்தினிமித்தம், லாபான் யாக்கோபினிடம் 14 வருட உழைப்பை ஏமாற்றி பெற்றுக் கொண்டான். (ஆதி.??)
· லாபான் வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்து கொண்டான் (ஆதி.26).
· யாக்கோபோடு ஓர் உடன்படிக்கையை செய்து கொள்ள உடன்பட்டான் (ஆதி.30).
· யாக்கோபு ஏமாற்றியதால் ஜெயிக்கவில்லை, மாறாக, கடவுளோடு பண்ணின கிருபையின் உடன்படிக்கையினிமித்தம் ஜெயம் கொண்டான்.
முன்னுரை
எபிரேய மொழியில் லாபான் என்றால் ‘வெண்மை’ என்று பொருள்படும். நாம் எல்லோரும் ஒரு வகையில் சுயநலவாதிகள். இது எல்லாரிடமும் உள்ள பெலவீனம். அதுபோலவே, லாபானும் தன் வாழ்க்கையை சுயநலத்தேயே மையமாய் வைத்து ஓட்டிக் கொண்டிருந்தான். மற்றவர்களையும் தன் சுயநல ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். உதாரணத்திற்கு, தன் தந்தை ரெபெக்காளை, ஈசாக்கு திருமண பந்த்த்தில் இனைத்த்து, தன் மகள்களைத் தன் சுயநலத்திற்காக பந்தயப் பொருட்களாய் பயன்படுத்தி யாக்கோபை வேலை வாங்கியது போன்றவற்றைக் கூறலாம். எப்படி இருப்பினும் நாளடைவில் யாக்கோபு லாபானை மேற்கொண்டான். ஆனால் லாபான் தன்னுடைய தோல்வியை ஒத்துக் கொள்ளவே இல்லை. தொடர்ந்து யாக்கோபைத் தன்னுடைய இருகின பிடியில் வைத்துக் கொள்ளவே நினைத்தான். கடைசியாக லாபானின் இருகிய பிடி தளர்ந்து போனது. லாபான் யாக்கோபும், யாக்கோபின் தேவனும் பலமிக்கவர்கள் என்று உணர்ந்துக் கொண்டான்.
நாம் வேதத்தை நுனிப்புல் மேய்வது போல வாசித்தால், நாமும் லாபான் போலவே சுயநலவாதிகள் என்பதை உணராமல் போகலாம். உண்மையில் சுயநலம் என்ற பாவம் நாம் எல்லாரிடமும் இயல்பாகவே காணப்படுகிறது. லாபானைப்போல நாமும் எல்லோரையும் எல்லா சம்பவங்களையும் நம்முடைய சுயநலன் கருதியே, நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனைகிறோம். நம்முடைய சுயநலனிமித்தம் மற்றவர்களை மட்டமாய் நடத்துகிறோம். நாம் நம்முடைய சுயநலத்தை அறிவதே இல்லை. எப்படி நம்முடைய சுயநலத்தை அறிந்து கொள்ளுவது? எப்பொழுது நாம் நம்முடைய தப்பிதங்களை ஒத்துக் கொள்ளுகிறோமோ, அப்பொழுது நாம் நம்முடைய சுய நல சிந்தையை அறிந்து கொள்ளலாம். ஆனால் தன்னுடைய தப்பிதங்களை ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு சில வேளைகளில் நீங்களே உங்கள் நடவடிக்கைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டிருக்கலாம். அப்பொழுது உங்களின் சுயநலத் தன்மை என்ன என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.. ஆகவே, சுயநலம் என்பது என்ன என்று உணர்ந்து கொள்ளுவது ஒரு வேதனையான விசயம். ஆனால், அதுதான் கடவுளின் வழிக்குத் திரும்புவதற்கு முதல் படி.
2. வலிமையும் சாதனையும்.
1. ஆபிராகாமின் இரண்டு தலைமுறையின் திருமண பந்த்த்தைத் தனுடைய கட்டுப்பாட்டில் வைத்திருத்தல். (ரெபேக்காள், ராகேல் மற்றும் லேயால்).
2. சீக்கிரத்தில் வளவளவென்று பேசக் கூடியவன்.
3. பெலவீனங்களும் தவறுகளும்
1. தன் சுயநலனுக்காக மற்றவர்கள் பயன்படுத்தியவன்.
2. தன் தப்பிதங்களை ஒத்துக் கொள்ளாதவன்.
3. யாக்கோபின் மூலம் பொருளாதாரத்தில் பயன் அடைந்தவன். ஆனால், ஆவீக்குரிய ஆதாயத்தை இழந்தவன்.
4. கற்றுக் கொண்ட பாடம்
1. யார் யார் மற்றவர்களைத் தன் சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்களோ, அவர்களே பின்னர் மற்றவர்களால் பயன்படுத்தப்படுவார்கள்.
2. கடவுளின் திட்டத்தை யாரும் தடைபண்ண முடியாது.
5. வேதாகமப் பகுதி
ஆதிகயாகமம் 24:1-31:55ல் லாபானில் கதையை வாசித்தறியலாம்.
6. உரையாடலின் கேள்விகள்
1. லாபான் எவ்வாறு ஆபிராகாமின் உறவுக்காரன்?
2. யாக்கோபு தன் சகோதரனை வஞ்சித்தான். லாபான் எவ்வாறு யாக்கோபை வஞ்சித்தான்?
3. லாபானின் கோரப்பிடியிலிருந்து எவ்வாறு யாக்கோபு தப்பித்தான்?
4. லாபானின் பெலவீனங்கள் யாவை?
5. லாபானின் வாழ்க்கையிலிருந்து நாம் என்னத்தைக் கற்றுக் கொள்கிறோம்?
மொழிபெயர்ப்பு:
திரு. ராபின்சன் விக்டர்
பரி.பவுல் ஆலயம், சிலிம் ரிவர்.
No comments:
Post a Comment