Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, December 11, 2011

39. யெகூ


 – இஸ்ரவேலின் ராஜா

முக்கிய வசனம்:
ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை. 2இராஜா.10:31

சுருக்கமான குறிப்புகள்:
·       மற்றவர்களைக் காட்டிலும் நீண்ட காலமாக இஸ்ரவேலை அரசாண்ட அரச பரம்பரையின் ஸ்தாபகர்.
·       ஆகாபின் காலத்தில் தேசத்தின் மேல் நியாயத் தீர்ப்ப்பைக் கொண்டு வரும் கருவியாக யெகூ தேவனால் நியமிக்கப்பட்டான்.
·       யோராமின் சேனையில் சேனைத் தலைவனாக இருந்தான்.
·       யோராயும் யூதாவையும் சேர்ந்து அகசியாவையும் யெகூ கொன்றான்.
·       தூய்மையற்ற, கலப்படமான யெகோவா வணக்கத்தை அவன் ஆதரித்தான்.

1.     முகவுரை
யெகூ என்பதன் அர்த்தம் ‘அவர் யெகோவா’. இவன் யோசபாத்தின் குமாரன். நிம்சியின் பேரன். இஸ்ரவேலின் ராஜாக்களின் 4-வது அரச வம்சம் அவனுடன் ஆரம்பமாயிற்று. மற்ற ராஜ வம்சங்களைக் காட்டிலும் இதுவே இஸ்ரவேலை நீண்ட காலமாக ஆட்சி செய்தது. (2இராஜா.10).
அவனுடைய முக்கிய குணாதிசயங்கள் இரகசியம், வேகமாக செயல்படுதல், கொடூரம். அவனை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணும்படி தேவன் எலியாவுக்குக் கட்டளை கொடுத்த போது யெகூ இளைஞனாகவே இருந்தான் (1இராஜா 19:16). சில காரணங்களினால் எலியா இதைச் செய்யவில்லை. எலிசா தீர்க்கதரிசி தனக்குப் பதிலாக மற்றொருவனை அனுப்பி இரகசியமாக அவனை அபிஷேகம் பண்ணினான் (2இராஜா.9:1). அந்த நேரத்தில் யெகூ, யோராமின் சேனைத் தலைவனாக சீலேயாத்திலுள்ள ராபோத்தை முற்றுகை  போட்டுக் கொண்டிருந்தான். யோராம் தன்னுடைய போர்க்காயங்களை ஆற்றிக் கொள்வதற்கு யெஸ்ரெயேலுக்குப் போயிருந்தான். சேனையிலுள்ள மற்ற ஊழியர்கள் இந்த உண்மையை அறிந்து யெகூ ராஜாவானான் என்று சொல்லிக் கொண்டாடினார்கள் (2இராஜா.9:13). இந்த செய்தி யோராமுக்குத் தெரியாதபடி மறைத்து அவன் உடனே யெல்ரெயேலுக்குச் சென்று யோராமைத் தன் கையினாலே கொலை செய்து, யூதாவின் அரசனான அகசியாவையும் யேசபேலையும் கொல்லும்படி செய்தான் (2இராஜா.9:24, 27-35). ஆகாபின் குடும்பம் முழுவதையும் அழிக்கும் வரை படுகொலையை அடுத்துப் படுகொலையாகச் செய்து வந்தான் (2இராஜா.10:1). சமாரியாவுக்குச் செல்லும் வழியில் ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து ஆகாபினால் கட்டப்பட்ட பாகாவின் கோவிலில் (16:32) பாகாலைப் பின்பற்றுவோர் அனைவரையும் அழித்துப் போடுவதற்கு யோனதாபின் உதவியை நாடினான் (2இராஜா 16:32) பாகாலைப் பின்பற்றுவர் அனைவரையும் அழித்துப் போடுவதற்கு யோனதாபின் உதவியை நாடினான் (2இராஜா.10:23-28). பாகாலின் சிலையைத் தகர்த்து பாகாலின் கோவிலை இடித்து மல ஜலாதி இடமாக்கினார்கள். ஆகாபின் வீட்டைப் பழி வாங்கும்படி யெகூ தேவனுடைய கரங்களிலுள்ள கருவியாக இருந்த போதிலும் பொன் கன்றுக் குட்டிகளை வணங்குவதில் இஸ்ரவேலைப் பாவம் பண்ண வைத்தான். தேவனுக்குப் பயப்படும் பயம் அல்லது யெகோவா வணக்கத்தின் பரிசுத்தத்தைப் புதுப்பிக்கும் வாஞ்சையைக் காட்டிலும் அதிகமாக ஆதிக்கத்தின் பேராசையால் தூண்டப்பட்டவனாகக் காணப்பட்டான். அவனது ஆட்சிக் காலத்தின் முடிவு வரையிலும் யெரோபெயாமின் கன்றுக்குட்டி வணக்கத்தை ஆதரித்துக் கொண்டிருந்தான். அவன் சமாரியாவில் அடக்கம் பண்ணப்பட்டபின் அவனுடைய குமாரனான யோவாகாஸ் அரசனானான். (2இராஜா.10:35).

அவன் ஒரு வெற்றி சிறந்த அரசனாக இருந்தான். அவனுடைய குடும்பம் வடதிசை ராஜ்யத்தை நீண்ட காலமாக அரசாண்டார்கள். ஆகாபைத் தண்டிக்க தேவன் அவனை உபயோகித்தார். பாகால் வணக்கத்தைப் பயங்கரமாகத் தாக்கினான். அவன் கிட்டதட்ட துணிச்சலுடன் தேவனுடைய கட்டளைக்கு மேற்பட்டு, தனது அழைப்பின் ஆரம்பத்தில் கீழ்ப்படிந்தது போல் தொடர்ந்து செயல்படத் தவறிவிட்டான்.

அவன் எதிலும் ஒரு முடிவான தீர்மானம் இல்லாமல் உடனே செயல்படும் மனிதனாக இருந்தான். அவனுடைய ராஜ்யம் முன்னேறி விருத்தியடைந்தது. ஆனால் அதன் இலக்கு நிச்சயமற்றதாக இருந்தது. ஒரு வகையான விக்கிரகாராதனையை அகற்றினான். தன்னை ராஜாவாக்கிய தேவனக்குக் கீழ்ப்படிந்தவனாக இருந்திருந்தால் அவன் தேவனுக்காக இன்னும் எவ்வளவோ காரியங்களை சாதித்திருக்கலாம். தனக்கு வழி காட்டுபவர் யார் என்பதை அவன் உணராதிருந்தான்.


2.     பலமும் சாதனைகளும்
a.     ஆகாபின் குடும்பத்தினிடமிருந்து சிம்மாசனத்தை எடுத்து, அவனுடைய பொல்லாத செயல்களின் விளைவுகளை அழித்தான்.
b.     வடதிசை ராஜ்யத்தின் நீண்ட காலமாக நிலைத்திருந்த அரச பரம்பரையை ஆரம்பித்து வைத்தான்.
c.     அவன் எலியாவினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, எலிசாவினால் உறுதி செய்யப்பட்டான்.
d.     பாகால் வணக்கத்தை ஒழித்தான்

3.     பலவீனமும் தவறுகளும்.
a.     அவன் கொண்டிருந்த அசட்டுத் துணிச்சல் அவனை தைரியமுள்ளவனாகவும் தவறு செய்கிறவனாகவும் இருக்கச் செய்தது.
b.     யெரோபெயாமின் பொன்கன்றுக் குட்டிகளை வணங்கினான்.
c.     கீழ்ப்படிதலினால் தனது விருப்பங்கள் நிறைவேறும் பட்சத்தில் மட்டும் அவன் தேவனுக்கு விசுவாசமுள்ளவனாயிருந்தான்.
d.     கூட்டங் கூட்டமாக அவன் மக்களைப் படுகொலை செய்தான். (ஓசியா 1:4)

4.     அவனுடைய வாழ்க்கையிலிருந்து படிக்கும் பாடங்கள் என்ன?
a.     பயங்கரமான ஈடுபாட்டில் கட்டுப்பாடு தேவை. அல்லவென்றால் அது கண் மூடித்தனமான காரியங்களைச் செய்யும்.
b.     கீழ்ப்படிதலினால் தனது செயலும், நாம் செல்லும் பாதையும் சம்பந்தப்பட்டது.
5.     யெகூவின் சரித்திரம் 1இராஜா.19:16-2இராஜா.10:36 வரை கூறப்பட்டிருக்கிறது. 2இராஜா15:12; 2நாளா.22:76-9; ஓசியா 1:4,5உம் இவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.
6.   
  விவாதத்துக்கான கேள்விகள்:
a.     யெகூவை அபிஷேகம் பண்ணினது யார்?
b.     அவன் எவ்வாறு மத சுத்திகரிப்பு செய்தான்?
c.     அவனுடைய பெலவீனங்கள் என்ன?
d.     தன்னுடைய வெற்றியை அவன் எவ்வாறு காண்பித்தான்,
e.     அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ளலாம்?

மொழிபெயர்ப்பு:
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா

No comments:

Post a Comment