– இஸ்ரவேலின் தீர்க்கதரிசி
வட திசை ராஜ்யம் – கி.மு.753 – 714
அவனுடைய மனைவி கோமேர் ஒரு விபசாரி
முக்கிய வசனம்:
யூதா
தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய
வசனம். (ஓசியா 1:1)
சுருக்கமான குறிப்புகள்
·
ஓசியா என்பதற்கு இரட்சிப்பு என்று அர்த்தம்.
·
தேவன் ஒரு கணவன், தகப்பன், சிங்கம், சிறுத்தை கரடி -
இது போன்று பலவிதமாக சித்தரித்துக் காட்டப்பட்டிருக்கிறார்.
·
உடன்படிக்கை மக்களால் மீறப்பட்டது.
·
கோமேர் மனிதனின் பாவத்தை வெளிப்படுத்தினான்.
·
கோமேரின் வாழ்க்கை தெய்வீக –
மானிட உறவைக் காண்பிக்கிறது.
·
ஓசியா தனது கதையின் மூலமாக இஸ்ரவேலரை எச்சரித்தான்.
·
தேவன் தமது அன்பு, நம்பிக்கை, ஒப்புரவாகுதலைக் காண்பித்தார்.
1. முகவுரை – அவனுடைய சரித்திரம்.
அவனுடைய பெயர் இரட்சிப்பு என்று பொருள்படும். இவன் பெயேரியின் மகன். இஸ்ரவேலின் பெரொபெயாம் 2ன் ஆட்சிக்காலத்தில இறுதியில் நாடு சுபிட்சமாகவும் ஆனால் ஒழுக்கம் குன்றி வருவதாகவும் இருந்த வேளையில் ஓசியா தனது ஊழியத்தை ஆரம்பித்தான். மேல் மக்கள் நன்றாக இருந்த வேளையில் ஏழைகளை ஒடுக்கி வாழ்ந்தார்கள். கி.மு.722ல் சமாரியாவின் வீழ்ச்சிக்கப் பின் சிலகாலம் வரை இவன் தீர்க்கதரிசனம் உரைத்து வந்தான்.
ஓசியா இஸ்ரவேலின் தீர்க்கதரிசியும், சிறிய தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்பட்டவர்களில் முதலாவதாகவும் இருந்தான். ஓசியா என்ற பெயர் ஓசேயா என்றும் எழுதப்பட்டது. இது யோசுவாவுக்கு முதலாவது கொடுக்கப்பட்டிருந்த பெயர். (எண்.13:16; உபாகம்ம் 22:44) எப்பிராயிமின் புத்திரன் (1நாளா.27:20) இஸ்ரவேலின் கடைசியான அரசன் (2இராஜா.15:30; நெகேமியா 10:23) இவர்களும் இதே பெயரைக் கொண்டிருந்தனர்.
ஓசியா தீர்க்கதரிசி பெயேரியின் மகன் (1:1) இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வட திசை ராஜ்யத்தைச் சேர்ந்தவன் என்றும் அவனுடைய புத்தகம் தெரிவிக்கிறது. தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவன் (1:2) திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரை மணந்து கொண்டான். இவள் மூலமாக இவனுக்கு யெல்ரயேல், லோருகாமா, லோம்மீ என்று பெயரிடப்பட்ட 3
பிள்ளைகள் பிறந்தனர். கோமேர் தான் ஒரு விபசாரி என்று நிரூபித்து அவன் விட்டு சென்று விட்டான் (2:5). ஆனால்,
ஓசியா அவளை அடிமைத் தனத்திலிருந்த திரும்பக் கொண்டு வந்து (மனைவி என்ற உறவுடன் அல்ல) தன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றான் (3:1-3).
உசியா, யோதாம், ஆகாஸ், என்ற யூதாவின் ராஜாக்களும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரெபெயாமும் வாழ்ந்த சமகாலத்தில் ஓசியா வாழ்ந்தான்.
ஓசியாவின் புத்தகத்தில்அடங்கியுள்ளவற்றை இப்போது பார்ப்போம். இதில் விசேஷித்த அம்சங்கள் அடங்கியுள்ளன. தினசரி வாழ்க்கையிலிருந்து ஓசியா பல உருவங்களை உதாரணமாக உபயோகிக்கிறான். தேவன் ஒரு கணவனாக தகப்பன், சிங்கம், சிறுத்தை, கரடி, பணி, மழை, விட்டில் பூச்சி -
இது போன்று பலவிதமாகக் காண்பிக்கப்படுகிறார்.
இஸ்ரவேல் ஜனம் மனைவி, நோயாளி, திராட்சப்பழம், ஒலிவமரம், பிரசவ வேதனைப்படும் பெண், காலைப்பணி, புதர், புகை இது போன்று பல வார்த்தைகளினால் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஸ்திரீயைக் கண்டுபிடிக்கும்படி தேவன் ஓசியாவிடம் கூறினார். அத்துடன் அவள் அவனுக்கு உண்மையற்றவளாக இருப்பாள் என்பதையும் அவள் பல பிள்ளைகளைப் பெற்ற போதிலும் சிலருடைய தகப்பன் வேறு மனிதாக இருப்பார்கள் என்பதையும் முன்னதாக அறிவித்தார். தேவனுக்கு கீழ்ப்படிந்து ஓசியா கோமேரை மணந்து கொண்டான். அவளுடன் அவன் கொண்ட உறவு, அவளுடைய விபச்சாரம், அவளுடைய பிள்ளைகள் இஸ்ரவேலுக்கு உயிருள்ள தீர்க்கதரிசன உதாரணங்களாகி விட்டன.
இந்தப் புத்தகத்தில் அடங்கிள்ளவை:
இது ஒரு காதல் கதை – உண்மையானதும் துக்கரமானதுமாயிருக்கிறது.
ஒரு வாலிப மனிதன், அவனுடைய மனைவி பற்றிய கதைக்கு அப்ப்பாற்பட்டு, இது தம்மக்கள் பேரில் தேவன் கொண்டிருக்கும் அன்பையும், மணப்பெண்ணின் பதிலையும் பற்றிக் கூறுகிறது. ஒரு உடன்படிக்கை செய்யப்ட்டது. தேவன் உண்மையுள்ளவராக இருந்தார். அவருடைய அன்பு மாறாதது. அவருடைய உடனபடிக்கை மீளப்பட்டது. ஆனால் கோமேரைப் போல் இஸ்ரவேல் விபசாரியாகவும் உண்மையற்றதாகவும் இருந்தது. தேவனுடைய அன்பை ஏற்க மறுத்துப் பொய்யான தெய்வங்களை நாடிச் சென்றாள். பின்பு நியாயத்தீர்ப்பைக் குறித்து எச்சரிக்கை செய்து, தேவன் தமது அன்பை மறுபடி உறுதிப்படுத்தி, ஒப்புரவாகும்படி அழைத்தார். அவருடைய அன்பும் இரக்கமும் பொங்கி வடியும் அளவுக்கு அதிகமாக இருந்தது. ஆனால் நியாயம் வழங்கப்படும் அளவுக்கு அதிகமாக இருந்தது.
திருமணம் பற்றி ஓசியாவுக்குத் தேவன் கொடுக்கும் கட்டளையுடன் இந்தப் புத்தகம் ஆரம்பமாகிறது. அதற்குப் பின் குழந்தைகள் பிறக்கின்றனர். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தெய்வீக அர்த்தம் கொண்ட பெயர் கொடுக்கப்படகிறது (ஆதி. 1). இதன் பின்பு முன்னரே அறிவிக்கப்பட்டபடி கோமேர் தனது இச்சையை நிறைவேற்றும்படி ஓசியாவை விட்டுப் பிரிந்து சென்றாள். (அதி.2). ஆனால் ஓசியா அவளைக் கண்டுபிடித்து முற்றிலும் ஒப்புரவாகி மீட்டுக் கொண்டு திரும்பவும் தன் வீட்டிற்கு அழைத்து வந்தான் (ஆதி.3). தேவனுடைய அன்பு நீயாயத் தீர்ப்பு, கிருபை, இரக்கம் ஆகியவை இவர்களுடைய உறவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து தேவன் இஸ்ரவேலுக்கு எதிராக தனக்குள்ள வழக்கைப் பற்றிக் கூறுகிறார். அவர்களுடைய பாவங்களும் முடிவில் அவர்களுக்கு அழிவைக் கொண்டு வரும் (4:6,7,12). அவருடைய கோபத்தை எழுப்பி அதன் பலனாகத் தண்டனை அடைவார்கள். 5:8-10, 12. இஸ்ரவேலின் ஒழுக்கக் கேட்டின் மத்தியிலும் தேவன் இரக்கமுள்ளவராக, தம் மக்கள் பேரில் தமக்குள்ள அளவற்ற அன்பை எடுத்துக் கூறி அவர்களுடைய மனந்திரும்புதல் அவர்களுக்கு ஆசிர்வாதத்தைக் கொண்டுவரும் என்று கூறி அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார் (அதி.14) ஓசியாவின் புத்தகம் தேவனுடைய மாறாத உறுதியான அன்பையே நமக்குப் படம் போல் சித்தரித்துக் காட்டுகிறது.
2. முக்கியமான கருப்பொருட்கள்
a. தேசத்தின் பாவம் எடுத்துக் காட்டப்பட்டது. ஓசியாவின் மனைவி கோமேர் அவனுக்கு உண்மையாயிராதது போல் இஸ்ரவேலரும் தேவனுக்கு உண்மையற்ற ஜனமாக இருந்தார்கள். இஸ்ரவேலின் விக்கிரகாராதனை விபசாரத்திற்கு ஒத்திருந்தது.
தங்கள் சேனையின் பலத்துக்காக அசீரியாவுடனும் எகிப்துடனும் தகாத உறவை நாடி, பாகால் வணக்கத்தை தேவனுடைய வணக்கத்துடன் சேர்த்துக் கொண்டார்கள்.
b. தேவனுடைய நியாயத் தீர்ப்பு – இஸ்ரவேலைப் பின்பற்ற வேண்டாம் என்று ஓசியா யூதாவை எச்சரித்தான். யூதா தன்னுடைய உடன்படிக்கையை மீறி தேவனை விட்டு விலகி, தன் நாயகனை மறந்து அழிவையும் நாடுகடத்தப்படுதலையும் அனுபவித்து பாவத்தின் விளைவு பயங்கரமாக இருந்தது.
c. தேவனுடைய அன்பு – தனக்கு உண்மையாயிராத மனைவியைத் தேடிக் கொண்டு வரும்படி ஓசியா சென்றது போல் தேவனும் தமது அன்பினால் நம்மைத் தேடி வருகிறார். அவருடைய அன்பு மென்மையானது, உண்மையானது, மாறாதது, முடிவில்லாதது. நாம் எப்படி இருந்தாலும் தேவன் நம்மை நேசிக்கிறார்.
d. புதுப்பித்தல்
– பாவத்துக்காக தேவன் தமது மக்களைத் தண்டித்த போதிலும், மனந்திரும்பும் மக்களை அவர் புதுப்பித்து ஊக்குவிக்கிறார். உண்மையான மனந்திரும்புதல் புதிய ஆரம்பத்திற்கு வழிவகுக்கிறது. தேவன் மன்னித்துப் புதுப்பிக்கிறார்.
3. ஓசியா எழுதப்பட்ட சந்தர்ப்பம் வடதிசை ராஜ்யத்தில்
a. காலத்தின் சூழ்நிலை – இஸ்ரவேலின் கடைசியான 6 ராஜாக்களும் துன்மார்க்கராக இருந்தனர். அதிகமான வரி விதித்து ஏழைகளை ஒடுக்கி, தேவனை உதாசீனம் செய்து, விக்கிரகாராதனை செய்து வந்தார்கள். இஸ்ரவேல் அசீரியாவுக்கு அடிமைப்பட்டு கப்பம் கட்டும்படி நிர்ப்பந்தம் செய்யப்பட்டது.
b. பிரதான செய்தி – ஒரு விபசார ஸ்திரீ கணவனுக்கு விரோதமாகப் பாவம் செய்து போல் இஸ்ரவேல் மக்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தார்கள். தேவனையும் மனுஷரையும் புறக்கணித்து ஜீவிப்பதினால் நியாயத் தீர்ப்பு நிச்சயம் உண்டு. கி.மு.722ல் இஸ்ரவேல் அசீரியாவிடம் தோல்விற்றது.
c. செய்தியின் முக்கியத்துவம்
– நாம் பாவம் செய்யும போது தேவனோடுள்ள உறவை விட்டுப் பிரிந்து அவரோடுள்ள ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளுகிறோம். எல்லாரும் தங்தன் பாவத்துக்காக உத்தரவு சொல்ல வேண்டும்.
ஆனால் மனந்திரும்பி தேவனிடம் மன்னிப்புக் கேட்பவர்கள் நித்தியமான தீர்ப்புக்குத் தப்புவிக்கப் படுகிறார்கள்.
d. சம காலத்திலுள்ள தீர்க்கதரிசிகள்
i. யோனா 793 – 753
ii. ஆமோஸ் 760
– 750
iii. மீகா 742 – 687
iv. ஏசாயா 740 – 681
e. வேத வசன ஆதாரங்கள்: வேதாகமத்தில் ஓசியா தீர்க்கதரிசியின் புத்தகம்.
4. விவாத்த்துக்கான கேள்விகள்
a. ஓசியா யார்?
b. கோமேர் யார்?
c. தீர்க்தரிசியின் திருமணத்திற்கு என்ன நேரிட்டது?
d. இஸ்ரவேல் ஜனங்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?
e. ஓசியாவின் காலத்தில வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள் யார்?
மொழிபெயர்ப்பு:
திருமதி டப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment