Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, December 28, 2011

79 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ

பாபிலோனில் யூத இளவரசர்கள், ராஜ பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள்.



கரு வசனம்.
16. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி. நேபுகாத்நேச்சாரே, இந்த காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
17. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
18. விடுவிக்காமற் போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையை பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.



சுருக்கத் திரட்டு.

·       பாபிலோனில் யூத தலைவர்கள்.
·       சாத்ராக் - எரியும் உலையில் போடப்பட்ட பாத்திரம்
·       மேஷாக் - தானியேலின் தோழன்.
·       ஆபேத்நேகோ- அசரியா
·       நட்பு சோதிக்கப்பட்டு பலப்பட்டது



1. அறிமுகம் - மூன்று நம்பிக்கை நாயகர்களின் கதை.


நாம் ஒவ்வொருவராக புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

1.1      சாத்ராக் .

அனனியாவுக்கு கொடுக்கப்பட்ட பாபிலோனிய பெயர் சாத்ராக். நேபுகாத்நேச்சாரின் அரசவைக்கு அடிமைகளாக கொண்டுவரப்பட்ட மூன்று யூத இளவரசர்களில் ஒருவன். இவன் தனது தேவனை மறுதலிக்காத காரணத்தினால் எரிகிற உலையில் போடப்பட்டான். (தானி1.7,2.49,3.12-30)



1.2      மேஷாக்.

மீஷாவேலுக்கு  கொடுக்கப்பட்ட பாபிலோனிய பெயர் மேஷாக்.

தானியேலுடன்  இருப்பவனாகவும், அவனுக்கு தோழனாகவும் காணப்பட்டான் (தானி1.7,2.49,3.12-30) மேஷாக் என்ற பெயரின் பொருள் உறுதியில்லாத அல்லதுநிலையற்ற என்பதாகும்.



1.3      ஆபேத்நேகோ.

ஆபேத்நேகோ என்றால் நேகோ என்பவனின் வேலையாள் என்று பொருள். அதுதான் நேபோவாக ஆனது. இவனது உண்மையான பெயர் அசரியா என்பதாகும். யூதாவிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுவரப்பட்ட நான்கு இளவரசர்களில் இவனும் ஒருவன். இந்த பெயரானது இவனுக்கு நேபுகாத்நேச்சாரின் பிரதானிகளின் தலைவனால் வழங்கப்பட்டது (தானி1.7). இவனும் தானியேலோடு இருப்பவனாகவும் அவனது தோழனாகவும் காணப்பட்டான். நேபுகாத்நேச்சாரினால் உருவாக்கப்பட்ட பொற்சிலையை, தூரா என்னும் சம பூமியில் வைத்து வணங்க மறுத்ததற்காக எரிகிற அக்கினிச்சூளையில் போடப்பட்டவனுமாவான்.(தானி. 3)

மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிமுக உரையிலிருந்து, இந்த தேவனுடைய மூன்று சாட்சிகளுடைய மற்ற அம்சங்களை புரிந்து கொள்ள நாம் முயற்சிசெய்வோம். சோதனை மற்றும் கஷ்டங்கள் நட்புகளை பெலப்படுத்தியிருக்கிறது. இது போன்றதொரு நட்பே தானியேலோடு கூட  யூதாவிலிருந்து பாபிலோனுக்கு கொண்டுவரப்பட்ட மூன்று வாலிபர்களிடையேயும் காணப்பட்டது. நட்பின் உண்மையான அர்த்தம் என்னவென்று சிந்திக்க உதவுகின்றனர் இந்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள். இவர்களுடைய நட்பின் உறவானது இவர்கள் மரணத்தை எதிர் நோக்கின வேளையிலும் கூட ஒருபோதும் இவர்களது வாழ்க்கையில் தேவனுக்குறிய இடத்தை பறித்ததேயில்லை.


ஓன்றுசேர்ந்து ராஜாவாகிய நேபுகாத்நேசாரின் கட்டளைக்கேற்ப  பொற்சிலையை வணங்காமல் அமைதியாக மறுத்தனர். இவர்கள் உற்சாகமான செயலை செய்கின்றனர், மற்றவர்கள் ஆர்வத்தோடு ராஜாவினிடத்தில் சென்று இவர்கள் ராஐ கட்டளையை மீறியதாக தெரிவிக்கின்றனர். அது உண்மையாக இல்லாத போதிலும், நேபுகாத்நேசார் தன்னை அவமானப்படுத்த அவன் விடவில்லை.

 மரணம் அவர்களது நட்பிற்கு முடிவாக காணப்பட்டாலும், அவர்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள தயாராக இல்லை. வ்வொருவருக்கும் தேவன் மீது அதிக விசுவாசம் இருந்தது. இவர்கள் தேவனுடைய கரங்களில் தங்களுடைய உயிரை வைக்க தயங்கவே இல்லை, இதன் முடிவு வெற்றியாகவே காணப்பட்டது.



1. வல்லமையும் சாதனையும்

2.1 தானியேலோடு சேர்ந்து ராஜாவின் போஐனத்தை சாப்பிட மறுத்து எதிர்த்தனர்.

2.2 வெற்றி, தோல்வி, செல்வம், மரணம் ஆகிய இவைகளைக் கடந்து தங்களது நட்பின் மாறா தன்மையை நம்முடன் பகிர்கின்றனர்.

2.3 குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கின போதும் தங்களுடைய தேவன் மேலுள்ள நம்பிக்கையிலிருந்து சமரசமாக்க விரும்பாதவர்கள்.

2.4 எரிகிற நெருப்பு உலையிலும் பிழைத்திருந்தவர்கள்.



3. இவர்களது வாழ்க்கையிலிருந்து பாடங்கள்

3.1 நட்பு என்பது பயனுள்ள ஒன்று, ஆனால் அது நம்முடைய ஆழமான ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்யாது. நம்முடைய உறவுகளால் குறிப்பாக நம்முடைய நெருங்கிய நண்பர்கள், தேவனை விட்டுவிட்டோமானால் அவர் நம்முடைய வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமானவராக இருந்திருக்கிறார் என்பதை நாம் உணர முடியும்.

3.2 உண்மையான நட்பில் ஒரு பெரிய பெலமுள்ளது.

3.3 நாம் யாருடன் தண்டனையைப் பகிர்ந்து கொள்கிறோமோ அவர்களோடு நாம் நிற்பது அவசியாமான ஒன்று.

3.4 விளைவுகளை நம்மால் கணிக்க முடியாத போது கடவுள் ஒருவரே நம்பிக்கைக்கு உரியவராகிறார்.

3.5. தேவன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு அளித்த விடுதலையானது,  அடிமைத்தனத்திலிருந்த யூதர்களின் நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி எனலாம். இவர்கள் தீங்கிலிருந்து காக்கப்பட்டார்கள், இவர்கள் சோதனைகளிலிருந்து தேற்றப்பட்டார்கள். தேவன் மகிமைப்பட்டார் அவர்களுக்கும் சன்மானங்கள் (வெகுமதிகள்) வழங்கப்பட்டன. இந்த வாலிபர்களை நெருப்பும் வெப்பமும் சிறிதளவும் தொடவே இல்லை. தேவன் நம்மை விடுவிப்பாரானால் எந்த ஒரு மனிதனாலும் நம்மை கட்டிவைக்கவே முடியாது.



4. வேதாகம மற்றும் பிற குறிப்புக்கள்
4.1 சாத்ராக்(அனனியா), மேஷாக் (மீஷாவேல்), ஆபேத்நேகோ(அசரியா) என்பவர்களின் கதையானது தானியேல் எழுதின புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது.
4.2 எ.ஆர்.பக்லேன்ட், த யூனிவர்சல் பைபிள் டிக்ஷனரி pp.438;, p.314, p.2
4.3 என்.ஐ.வி. ஸ்டடி பைபிள். p1483
4.4 தி ஐ.டி.பி(p.302) சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ


5. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
5.1 தேவனின் மூன்று நம்பிக்கையுள்ள சாட்சிகள் யார்?
5.2 அவர்கள் எப்படி சோதிக்கப்பட்டார்கள்?
5.3 அவர்களது நம்பிக்கையை விட்டுக்கொடுத்தார்களா?
5.4 கற்றுக்கொண்ட பாடங்களை குறிப்பிட்டு காண்பி.
5.5 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் நட்பினை குறிப்பிட்டு  கூறு. 



மொழிபெயர்ப்பு:
திரு.ஜான் ஆரோக்கியசாமி,
பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான்.

No comments:

Post a Comment