Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Friday, December 30, 2011

90 பர்த்தொலொமேயு


90  பர்த்தொலொமேயு
கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவன்

கரு வசனம்
அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். அப்போஸ்தலர் 1:13

சுருக்கத்திரட்டு
  • ·       இயேசுவின் சீடர்கள் பன்னிருவருள் அறியப்படாத ஒரு சீடன்.
  • ·       இவன் தொலொமேயுவின் குமாரன். தொலொமேயு என்பதற்கு உழவன் என்பது பொருள். பர்த்தொலொமேயு என்பதற்கு தொலொமேயுவின் மகன் என்று பொருள்படும். தொலொமேயு என்றால் போர்வீரன் என்பது பொருள்.
  • ·       இயேசுவின் சீடர்களில் ஒருவன் இவனை இயேசுவிடம் அழைத்து வந்திருக்கலாம்.
  • ·       பர்த்தொலொமேயு இந்தியாவில் மிஷனரியாக பணியாற்றியபோது இரத்த சாட்சியாக மரித்தார் என்கின்றனர்.

1.அறிமுகம் - இவனது கதை
மேற்கு மலேசியா மறை மாவட்டம் மற்றும் சிங்கப்பூர் மறை மாவட்டம் ஆகிய இவ்விரண்டும் பரி.பர்த்தொலொமேயுவின் நாளில் நிறுவப்பெற்றது. நம்முடைய முதல் பேராயராகிய பெர்குசன் டேவி  1909 வருடம் பேராயராக நியமனம் பெற்றார். இவரது ஓய்வுக்கு பின், இவர் ஆபிரிக்கா செல்வதற்கு முன்னர், ஹிந்தி மொழியைப் பயின்று இந்தியாவில் மிஷனரியாக பணியாற்றினார்.

2.யார் இந்த பர்த்தொலொமேயு?
இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவன். இவன் பர்த்தொலொமேயு என அழைக்கப்பட்டான். சிலர் இவனை யோவான் 1ஆம் அதிகாரத்தில் காணப்படுகிற நத்தானியேல் என கருதுகின்றனர்.  இயேசு தண்ணீரை திராட்சைரசமாக மாற்றிய, கலிலேயாவில் உள்ள  கானா ஊரைச் சேர்ந்தவன். இந்தத் தண்ணீரைப் போல பர்த்தொலொமேயுவும் மாற்றம் பெற்றான். அர்மேனியா மற்றும் இந்தியா ஆகிய இத்தேசங்கள் இவனுடைய பணித்தளங்கள் என கூறப்படுகிறது. இவன் இரத்த சாட்சியாக மரித்த பின்பு தலைகீழாக சிலுவையில் அடிக்கப்பட்டான் என்று கூறுகின்றனர். இது சீஷத்துவத்துக்குக் கொடுக்கப்படுகிற மதிப்பு  எனலாம்.  அநேகருக்கு இந்த சீஷத்துவம், இயேசுவின் சீடனாக இருத்தல், இரத்தசாட்சியாக மரித்தல் ஆகிய இவைகளின் மதிப்பு தெரிவதில்லை.

3. நாம் பர்த்தொலொமேயுவிடம் கற்றுக்கொள்வது என்ன?
பர்த்தொலொமேயுவின் வாழ்க்கையில் குறைந்தது 3 பெரிய கவலைகள் இருந்திருக்கக் கூடும். அவையாவன
 (i)   சீஷத்துவம்                              - ஒரு மாணவனாக இருப்பது
(ii)  அப்போஸ்தலத்துவம்                 - மக்களிடத்திற்கு அனுப்பப்படுபவன்
(iii)  இரத்த சாட்சியாக மரித்தல்        - பாடு அனுபவித்து பலியாதல்
இந்த மூன்றும் மலேசியாவிலும் மற்ற நாடுகளிலும் தேவனுடைய சபையின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

(i)  சீஷத்துவம் :
பர்த்தொலொமேயு இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவன் என மத்தேயு 10:3 நமக்கு உறுதிப்படுத்துகிறது. இயேசு இவனைத் தெரிந்துகொள்ளும்போது ஒரு மாணவனாக (சீஷனாக) இருக்கும்படித்தான் இவனை அழைக்கிறார். SIKH  என்றால் என்னவென்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? சான்ஸ்கிரிட் (Sanskrit)) மொழியில் இதன் பொருள் மாணவன் என்பதாகும். இயேசுவின் மாணவன் அல்லது சீஷன் என்பது வாழ்க்கை முழுவதற்குமான தொழில் போன்றது.  இயேசுவின் சீடர்கள் இயேசுவின் குழுவோடு இருந்தனர். நமக்க குருவானவரும் இயேசு தான். நெருங்கிய உறவு அதிகம் கற்க உதகிறது.  சுவிசேஷத்தை அறிவிக்கிறவனாயும் அதன்படி நடக்கிறவனாயும் இருக்கிற அப்போஸ்தலனாக இருப்பதே நம்முடைய பணிகளில் ஒன்று. அப்போஸ்தலனாவதற்கு முன்பு தேவனின் வார்த்தைகளை கற்றறிந்து  பரிசுத்த ஆவியின் கண்காணிப்பில் நடத்தப்படவேண்டும். ஒரு கிறிஸ்தவன் கர்த்தருடைய ஆயுதமாகிய அவருடைய வார்த்தையையும் பரிசுத்த ஆவியையும் தரித்திருக்க வேண்டும். நம்முடைய முதன்மைப்பணி என்னவெனில் கிறிஸ்துவின் சீடனாக அல்லது மாணவனாக இருப்பதே (முரிட் / சீக்). இது வாழ்கை முழுவதற்குமான ஒரு பணி. இயேசு எப்போதும் எங்கேயும் அவர்களுடைய சூழ்நிலையை கருதாது தம்மைப் பின்பற்றும்படி அழைக்கிறார்.

(ii)  நம்முடைய இரண்டாவது நோக்கம் கிறிஸ்துவின் அப்போஸ்தலனாதல்
இயேசு தேவனுடைய மிஷனரியாக பூமியிலிருந்து இவ்வாறு சொல்லுகிறார் பிதா என்னை அனுப்பினது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” (யோவான் 20:21). அவர் நமக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து அனுப்புகிறார். (மாற்கு 6:7-8 & 12). இந்த அப்போஸ்தலர்கள் தங்கள் வீடுகளை விட்டு அனைவரும் தேவனிடத்தில் திரும்புங்கள் என்று கூற ஆரம்பித்தனர். இந்த கிறிஸ்தவ சாட்சியின் ஊழியத்திலே எப்பொழுதும் புறக்கணிக்கும் சாத்தியங்கள் உள்ளன. அதற்கு நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்.
நமக்கு வளருகின்ற சபைகளும் பராமரிக்கின்ற சபைகளும் உள்ளன. வளர்கின்ற சபையானது அனுப்புகின்ற சபையாகவும் காணப்படுகிறது.

(iii)  இரத்த சாட்சியாக மரித்தல்
நம்முடைய மூன்றாவது கவலையானது  இரத்த சாட்சியாக மரித்த பர்த்தொலொமேயு பற்றினது. இரத்த சாட்சி என்ற வார்த்தையின் பொருள் சாட்சியாதல் என்பதாகும்.  இரத்த சாட்சிகளினுடைய இரத்தமானது சபையின் விதைஎன சபையின் மிஷனரி ஊழியங்களைக் குறித்து ஆராய்ச்சி செய்கின்ற (missiologist) ஒருவர் கூறுகின்றார். மலேசியாவிற்கு நம்பிக்கையான, அற்பணிக்கக் கூடிய, பலியாகக்கூடிய கிறிஸ்தவ மிஷனரிகள் தேவைப்படுகிறார்கள்.

4. வேதாகமக் குறிப்புக்கள்
சுவிசேஷங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் பர்த்தொலொமேயுவைக் குறித்து அறிய உதவுகின்றன.

5.        கலந்தாலோசனைக்கான கேள்விகள்
5.1      சீஷத்துவம், அப்போஸ்தலத்துவம் மற்றும் இரத்த சாட்சி இவைகளின் பொருளை     மேற்குறியிட்டு காட்டு.
5.2      மலேசியா மற்றும் சிங்கப்பூர் மண்டலங்கள் எப்போது ஆரம்பமாயின? 
5.3      இந்த மண்டலத்தின் முதல் பேராயர் யார்?
5.4      பர்த்தொலொமேயு எப்படி இரத்த சாட்சியாக மரித்தான்?
5.5      நாம் எவ்வாறு மிஷனரிகளுக்கு உதவ முடியும்?

மொழிபெயர்ப்பு:
ஜான் ஆரோக்கியசாமி
பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான்

No comments:

Post a Comment