Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, December 14, 2011

52. யோசியா ராஜா



52. யோசியா ராஜாதிருத்தம் செய்தவன்.


 முக்கிய வசனம்:                    

          " கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப்போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை". (2 இராஜாக்கள் 23:25)


சுருக்கமான கதை:

.  ஆண்டவர்மேல் பக்தியுள்ள ராஜா.
.  விக்கிரக ஆராதனையை முற்றிலும் அழித்தான்.
.  யூதாவின் எல்லைக்கு அப்பாலும் திருத்தங்கள் செய்தான்.
.  எருசலேமிலிருந்த ஆலயத்தை பழுது பார்த்தான்.
.  ஆண்டவரின் வார்த்தையை வாசித்தது பலர் வாழ்க்கையைத் தொட்டது.


முன்னுரை: யோசியா ராஜாவின் கதை:

        யோசியா என்ற பெயருக்கு "எஹோவா ஆதரிக்கிறார் அல்லது சுகமாக்குகிறார்" என்று பொருள்.  ஆமோனின் குமாரனாகிய யோசியா தன் 8 வயதிலே யூதாவின் அரியணை ஏறினான் 2 இராஜாக்கள்21:26). அந்த சிறிய வயதிலும் அவனுடைய மிகுந்த தெய்வபக்தி எல்லாருக்கும் தெளிவாகத் தெரிந்தது. அவனுடைய ஆட்ஷியின் 12 வது வருடத்திலே அவனுடைய தேசம் முழுவதிலும் விக்கிரக ஆராதனையை நிறுத்தத் தொடங்கினான் (2 நாளாகமம் 34:3). எல்லா இடங்களிலும் மேடைகளையும், தோப்புகளையும், சொரூபங்களையும், விக்கிரக ஆராதனைக்குரிய பொருட்களையும் அழித்தான். அவன் நாடு முழுவதையும் சுற்றி வந்து இந்த கடமைகளைத் தானே முன்னின்று செய்து, ஆலய பழுது பார்க்கும் பணியை கண்காணிக்க மட்டுமே திரும்பி வந்தான்(2 நாளாகமம் 34:8). இந்த பழுது பார்க்கும்  வேளையில்தான் ஆசாரியனாகிய இல்க்கியா  நியாயப்பிரமாணப் புத்தகத்தைக்  கண்டுபிடித்தான். இந்தப் புத்தகத்தை வாசித்ததால் ஒரு ஆச்சரியமான மாற்றம் யோசியாவிடதிலும், அவனுடைய மக்கலிடத்திலும் ஏற்பட்டது. இந்தப் புத்தகம் மோசேயைக் கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தரின் நியாயப்பிரமாணப் புத்தகத்தின் மூலப் படிவமாக இருக்கலாம் (2 நாளாகமம் 34:14), அல்லது மோவாபின் சமவெளியிலே மக்களிடத்தில் புதுப்பிக்கப்பட்ட உடன்படிக்கையின் படிவமாக இருக்கலாம் ( ஏனெனில், அது உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்தில் வைக்கப்பட்டது; உபாகமம் 31:24–26), அல்லது, உபாகம புத்தகத்தின் மத்திய பாகத்தின் படிவமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மனாசே, ஆமோன் ராஜாக்களின் ஆட்சியின் போது, இந்தப் புத்தகம் வாசிக்கப்படுவது தடுக்கப்பட்டு பின்பு கைவிடப்பட்டு இருக்கலாம் என்பது சாத்தியமாகிறது. இந்தப் புத்தகத்தின் பாகங்கள் வாசிக்கப்பட்டபோது அது யோசியா ராஜாவை மிகவும் நெகிழச் செய்தது (2 இராஜாக்கள் 22:11). எசேக்கியா ராஜாவின் ஆட்சியின்போது அவன் கட்டளைப்படி இந்தப் புத்தகத்தின் பல படிவங்கள் செய்யப்பட்டபோதிலும், யோசியா ராஜா இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இந்த காலத்தில்தான் யோசியா தன் ஆட்களை தீர்க்கத்ரிசியாகிய உல்தாள் என்பவளிடத்தில் அனுப்பி, நியாயப்பிரமாணத்தைப் பழித்ததால் வரும் சாபம் அவன் காலத்தில் தேசத்தின்மேல் வருமா என்று கேட்டான். அவளும் தேசம் நிச்சயம் அழிக்கப்படும், ஆனாலும் யோசியா ராஜாவுக்கு அமைதியான முடிவு வரும் என்று தீர்க்கதரிசனம் கூறினாள் (2 நாளாகமம் 34:24). யோசியா ராஜா இந்த நியாயப்பிரமாண புத்தகம் காட்டிய வழிகளைப் பின்பற்றினான். இந்த நோக்கத்துக்காக தன் மக்களைக் கூடிவரச்செய்து, அவர்களுடனே உடன்படிக்கையைப் புதுப்பித்தான்.

     சீர்திருத்தம் செய்யவேண்டும் என்ற யோசியாவின் திட்டம், பகைக்கும் பழக்கம் கொண்ட இஸ்ரவேல் மக்களால் எதிர்க்கப்பட்டது. இதன் பின் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருந்தது ( 2 இராஜாக்கள் 22:20). எகிப்தின் ராஜாவாகிய நேகோ அப்பொழுது அசீரியர்களுடன் யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தான். யோசியா ஏதோ ஒரு வழியிலே அசீரிய ராஜாவோடு இணைந்திருந்ததால், ஐபிராத்து நதியோரமாக படையெடுத்து வந்த நேகோவை யுத்தத்தில் எதிர்க்கவேண்டி இருந்தது ( 2 நாளாகமம் 35:20). நேகோ யோசியாவை எதிர்க்க விரும்பாமல் அவனிடத்தில் தன் ஸ்தானாதிபதிகளை அனுப்பி அவனை விலகச் சொன்னான் (2 நாளாகமம் 35:21). ஆனால் யுத்தம் செய்வதில் உறுதியாக இருந்த யோசியா விலக மறுத்தான். அதனால் மெகிதோ பள்ளத்தாக்கில், மரணத்துக்கேதுவான காயமுற்று (2 நாளாகமம் 35:23), மரித்து மிகுந்த அன்போடும் ஆரவாரத்தோடும் அடக்கம்பண்ணப்பட்டான்.

    யோசியாவின் தாத்தாவின் தந்தை எசேக்கியா. அவர் ஆண்டவருடன் மிகவும் நெருக்கமான உறவு வைத்திருந்தார். எசேக்கியாவைப் போலவே யோசியாவும் ஒரு சீர்திருத்தவாதியாக இருந்தான். யோசியாவின் தந்தையும், தாத்தவும் மிகக் கொடியவர்களாக இருந்தபோதிலும், யோசியாவின் வாழ்க்கை, கீழ்ப்படியும் மக்களுக்குத் தொடர்ச்சியான வழி டத்துதலைத் தர ஆண்டவர் விருப்பமுடையவராய் இருக்கிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தன் தேசத்திலே ஆவிக்குரிய சுகவீனம் இருக்கிறது என்பதை மிகச் சிறிய வயதிலேயே யோசியா புரிந்து கொண்டிருந்தான். பயிர்களை விட வேகமாக விக்கிரகங்கள் தேசத்திலே முளைவிட்டுக்கொண்டிருந்தன. எவை எல்லாம் ஆண்டவருடைய உண்மையான வழிபாட்டுக்கு உரியவை அல்ல என்று கண்டானோ அவை எல்லாவற்றையும் அழித்துச் சுத்தம் செய்ததின் மூலம், யோசியா ஆண்டவரைத் தேடுவதைத் தொடங்கினான். இந்தச் செய்முறையில் ஆண்டவருடைய வார்த்தை மீண்டும் கன்டுபிடிக்கப்பட்டது. ராஜாவின் நோக்கங்களும் ஆண்டவருடைய எழுத்தின் வெளிப்படுத்துதலும் ஒன்றாக இணைக்கப்பட்டது.

  ஆண்டவருடைய நியாயப்பிரமாணம் யோசியாவுக்கு வாசிக்கப்பட்டபோது அவன் அதிர்ச்சியடைந்தான், பயந்தான் பின் தாழ்மையடைந்தான். ஆண்டவருடைய பரிசுத்தத்தைப்பார்த்து மகிழ்ச்சியில் திளைத்த யோசியா அந்தப் பரிசுத்தத்தை உடனே மக்களுக்கும் வெளிப்படுத்த முயன்றான். மக்களும் அதற்கு பதிலளித்தார்கள். ஆண்டவருடைய வார்த்தையினால் யோசியா தாழ்மையடைந்தான். அவனுடைய தாழ்மையான கீழ்ப்படிதல் ஆண்டவரை சந்தோஷப்படுத்தியது.


2.  யோசியாவின் பலங்களையும் சாதனைகளையும் விளக்கமாகக் காட்டுவோம்:

)  யூதாவின் ஞானமுள்ள ராஜாக்களில் ஒருவன் யோசியா.
)  ஆண்டவரைத் தேடி அவரை வரவேற்கக் காத்திருந்தான்.
)  எசேக்கியாவைப்போல ஒரு சிறந்த சீர்திருத்தவாதியாய் இருந்தான்.
)  ஆண்டவரின் ஆலயத்தைத் தூய்மையாக்கி அவரின் நீதிக்குக் கீழ்ப்படிவதை மீண்டும் துவக்கினான்.


3.  யோசியாவின் பலவீனங்களும் தவறுகளும்:

    யோசியா ஒரு பழுதற்ற ராஜா இல்லை. ஈடுபடவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்ட ஒரு ராணுவ போராட்டத்தில் ஈடுபட்டான். வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஆயர்களைக் கொலை செய்தான்.


4.  அவனுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்:

)  மனம் திருந்திய தாழ்மையான இருதயங்களையுடைய மக்களுக்கு ஆண்டவர் எப்பொழுதும் பதில் அளிக்கிறார்.
)  மிகப்பரந்த வெளியரங்கமான சீர்திருத்தங்களுக்கு மிகச் சிறிய மதிப்பே உண்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் இல்லாவிட்டால்.


5.  வேத ஆதாரங்கள்:

யோசியாவின் கதை 2 இராஜாக்கள் 21:24– 23:30; 2 நாளாகமம் 33:25–35:26 வரை உள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ளது. எரேமியா1:1–3; 22:11, 18 ஆம் வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.


6.  விவாதத்துக்குரிய கேள்விகள்:

6.1  யோசியா என்ற பெயருக்கு என்ன அர்த்தம்?
6.2  அவன் ஏன் சீர்திருத்தவாதி என்று அறியப்பட்டான்?
6.3  அவனுடைய பலவீனங்கள் என்ன?
6.4  ஆண்டவரின் வார்த்தையை அவர்கள் எங்கே கண்டுபிடித்தார்கள்?
6.5  ஆண்டவருடைய வார்த்தையை இப்பொழுது எங்கே கண்டுபிடிப்பீர்கள்?
6.6  யோசியாவின் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்போம்?


மொழி பெயர்ப்பு:
திருமதி. கிரேஸ் ஜட்சன்,
பரி. பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.


No comments:

Post a Comment