ஞானமுள்ள அரசன், சீர் திருத்தவாதி
முக்கிய வசனம்..
உன்
நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் இந்த
நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார். (2ராஜா
20..6)
(2ராஜா 20..6)
சுருக்கமான குறிப்புகள்
·
ஒரு பெரிய சீர்திருத்தவாதி
·
அசீரியனுக்கு விரோதமாக வந்தான்.
·
அரசியலிலும் அவன் சம்பந்தப்பட்டிருந்தான்.
·
தேவனுடைய வார்த்தை அவனை மாற்றினது.
·
இவன் ஒரு ஜெப வீரன். தேவன் அவனுக்கு 15 வருடங்களைக் கூட்டிக் கொடுத்தார்.
1. முகவுரை – அவனுடைய சரித்திரம்
அவனுடைய பெயர்
‘யெகோவா என் பெலன்’ எனப் பொருள் படும். தன்னுடைய தகப்பனாகிய ஆகாஸ்க்குப் பின் தன்னுடைய 25வது வயதில் சிம்மாசனம் ஏறி (கி.மு.720-607) 29 ஆண்டுகள் யூதாவை அரசாண்டான். யூதாவின் அரசர்களுள் இவன் மிகச் சிறந்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் கருதப்பட்டான்.
நற்பண்புகளும் நீதியுமுள்ள அரசன் என்று போற்றப்பட்டான். தேவனிடத்தில் மரியாதையும் தெய்வபயமும் உடையவன் என்பதை இவனுடைய ஆட்சிக் காலம் தெரிவிக்கிறது.
அவன் ஒரு பெரிய சீர்திருத்தவாதி. தான் ஆட்சிக்கு வந்தவுடனே தன் தகப்பனின் தீயவழிகளை அகற்றிப் போட்டு மேடைகளை அகற்றி சிலைகளைத் தகர்த்து விக்கிரத் தோப்புக்களை வெட்டிப்போட்டு, யெகோவாவை வணங்கும் ஆராதனையைப் புதுப்பித்தான். ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி தேசமெங்கும் பறை சாற்றினான். (2நாளா.30:5)
அவன் செய்த மத சீர்திருத்தத்தினால் மட்டுமல்ல; அவன் செய்த பொதுநல அபிவிருத்தியும் அவனுடைய ஆட்சியை சிறப்புடையதாக்கிற்று.
அந்நிய தேசங்களுடனான உறவில் அவன் பெலிஸ்தருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றதினால் அவன் மிகவும் பலமுள்ளவனானான். (2ராஜா.18:8). அசீரியாவின் அடிமைத் தனத்திலிருந்து மீட்கப்படுவதற்கான ஆயத்தங்கள் செய்தான். இதற்காக அவன் எருசலேம் நகரத்தின் பாதுகாப்பைப் பலப்படத்தி, ஒரு குளத்தையும், பூமிக்கு அடியில் ஒரு கால்வாயும் அமைத்துத் தண்ணீர் கிடைப்பதற்கான வசதிகள் செய்வித்தான்.
ஒரு அரசனால் ஆளப்படும் நாடாக அவன் தன் சுதந்தரத்தை நிலை நாட்டினான். அசீரியாவின் ராஜாவாகிய சனெகெரிப் யூதாவிலுள்ள சகல அரணான பட்டணங்களையும் பிடித்துக் கொண்ட போது, எசேக்கியா அசீரியாவுக்குக் கப்பம் கட்டினான். ஆனாலும் சானாகரிப் தொடர்ந்து யூதாவைத் தாக்கினான். அசீரியாவின் சேனை எருசலேமின் மீது படையெடுத்து வந்து (ஏசாயா 36) எருசலேம் சரணடைய வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. ராஜாவும் ஜனங்களும் இப்போது எதிர்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று உணர்ந்து, வரப்போகும் போராட்டத்தில் துணிந்து இறங்கும்படி ஆயத்தப்பட்டார்கள்.
அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட்டது. அசீரியா மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு வந்த்து. ஒரு செய்தியைக் கேட்டுத் தங்கள் முகாமிலிருந்து விரைவாகத் திரும்பிச் சென்று விட்டனர். எசேக்கியா, தன்னுடைய அசாதாரணமான தெய்வபக்தி பலம் வாய்ந்த அரசியல் அலுவல்கள் மூலமாக மிகப் புகழ்பெற்ற அரசனாக இருந்தான். தனது நோயிலிருந்து சுகம் பெற்றதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினான். (ஏசாயா 37:9-20). அவனுடைய மத சீர்திருத்தம் யாவரும் அறிந்த்தாக இருந்த்து. (2இராஜா.17:5-6).
2. எசேக்கியாவின் பலமும் சாதனைகளும்.
a. தேவனுடைய சித்தத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கீழ்ப்படிந்தான். அவனுடைய ஆட்சிக்காலத்தில சமாதானம் நிலவி நாடு சுப்டசமாக இருந்த வந்தது.
b. இலக்கியப் பணிகளுக்கு ஆதரவு கொடுத்தான். (நிதி.25:1).
c. சமூகம், மதம் சம்பந்தமான சீர்திருத்தங்களைத் தூண்டி எழுப்பி விட்டான்.
d. தேவனோடுள்ள தனிப்பட்ட உறவில் இவன் வளர்ச்சி பெற்று விட்டான்.
e. வல்லமையான ஜெப ஜீவியத்தை இவன் மேம்படுத்தினான். இவன் ஒரு திறமைசாலியும், பலமுள்ளவனும் தெய்வ பக்தி நிறைந்தவனுமாகப் பின்வரும் சந்ததியாரால் நினைவு கூரப்பட்டான். (2இராஜா.18:5; 23:20).
f. அரசியல் மத காரியங்களில் ஆர்வமுள்ளவனாகவும் தேசப் பற்றுடையவனாகவும் நினைவு கூரப்பட்டான். தேவாலயத்தில பத்திரப்படுத்தப்பட்டு, ஜனங்களால் வணங்கப்பட்டு வந்த மோசே செய்வித்த வெண்கல சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்.
தேவாலயத்தில் பத்திரப்படுத்தப்பட்டு,
ஜனங்களால் வணங்கப்பட்டு வந்த மோசே செய்வித்த வெண்கல சர்ப்பத்தை உடைத்துப் போட்டான்.
g. அரசியலிலும் யூதாவை பலமுள்ளதாக்கினான்.
அசீரியாவுக்கு எதிராக சில ஆண்டுகள் எந்த வெளிப்படையான எதிர்ப்பையும் மேற்கொள்ளாமலிருந்தான்.
3. பலவீனமும் தவறுகளும்.
a. தான் அனுபவித்த ஆவிக்குரிய நன்மைகளை மற்றவர்களும் வருங்காலத்தில அனுபவிக்கும்படி அவைகளைத் தற்காத்து வைக்கவும் எதிர்காலத்துக்கான திட்டம் வகுக்கவும் அவன் சிறிதும் யோசிக்கவோ அல்லது சிரத்தை எடுக்கவோ இல்லை.
b. சிறிதும் யோசிக்காமல், பாபிலோனிலிருந்து வந்தவர்களிடம் தனது உடைமைகள் அனைத்தையும் காண்பித்தான்.
c. தேவன் தனக்குச் செய்த நன்மைகளுக்காகவும்,
பராமரிப்புக்காகவும் தேவனுக்கு நன்றி தெரிவித்தான். ஆனாலும் பாபிலோனின் ராஜாவாகிய பெரோதாக் பலாதானின் முகஸ்துதியில் மயங்கி அவன் அனுப்பிய ஆட்களுக்கு முன்பாகத் தனக்குள்ள எல்லாவற்றையும் வீண் ஆடம்பரத்துடன் காண்பித்தான். (2இராஜா.20:15). இதினிமித்தம் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டு போகப் படுவார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசனமாகக் கூறினான். 100 ஆண்டுகளுக்குப் பின் இது நிறைவேறினது.
d. அசீரியாவுக்குக் கப்பம் கட்டும்படி எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் அரண்மனை பொக்கிஷத்திலும் உள்ளவற்றையும் ஆலயக் கதவுகளிலும் நிலைகளிலுமிருந்த பொன் தகடுகளையும் கழற்றி அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான்.
4. அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ளலாம்?
a. வருங்காலத்திலும் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யாமல் சமுதாயத்தில் பொதுவாகச் செய்யப்படும் சீர்திருத்தங்கள் வெகு சீக்கிரத்தில் பலனற்றுப் போகும்.
b. முன்னாள் தேவனுக்குக் கீழ்ப்படிதலானது, தற்போது கீழ்ப்படியாமையைத் தடைசெய்வது சாத்தியமாகாது.
c. தேவனுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிதல் வியக்கத்தக்க பலனைக் கொடுக்கிறது.
d. நமது வாழ்க்கை மற்றவர்களில் தாக்கத்தை உண்டு பண்ணலாம். அவனுக்குப் பின்னாக வந்த 3 ராஜக்கள் – மனாசே, ஆமோன், யோசியா ஆகிய இம்மூவரும் எசேக்கியாவின் சாதனைகளினாலும், பெலவீனங்களினாலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.
e. எசேக்கியாவைப் போல் நமது ஜீவனை தேவனிடமிருந்து கிடைக்கும் ஈவாகப் பெற்றுக் கொள்வோமாக. தேவன் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் பொக்கிஷமாகக் கருதுவோமாக. நமது வாழ்க்கையைத் தேவனுக்கு மகிமையுண்டாக ஒப்புக் கொடுப்போமாக. நமது வாழ்க்கையைச் சேவை செய்யக்கூடிய தருணமாகப் பார்ப்போமாக.
5. வேதாகம ஆதாரங்கள்:
a. எசேக்கியேலின் சரித்திரம் 2இராஜா.16:20-21; 2நாளா.28:27-32:33; ஏசாயா 36:1-39; 8ல் கூறப்பட்டிருக்கிறது.
b. நியா.25:1; ஏசாயா
1:1, எரேமியா
15:4; 26:19; ஓசியா
1:1; மீகா
1:1உம் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.
6. விவாதத்துக்கான கேள்விகள்
a. எப்போது எசேக்கியா அரசனாக ஆட்சி புரிந்தான்?
b. அவனுடைய தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை விவரித்துக் கூறு.
c. தேவனுடைய வார்த்தை அவனில் எவ்வாறு கிரியை செய்தது?
d. அவனுடைய பலம் எதுவாக இருந்தது?
e. அவன் செய்த தவறுகள் யாவை?
மொழிபெயர்ப்பு:
திருமதி டஃனி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment