அப்போஸ்தலர் புத்தகத்தில் உள்ள
ஒரு மிஷனரி
25 அவன் கர்த்தருடைய
மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான்
கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில்
அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய் போதகம் பண்ணிக்கொண்டு
வந்தான்.
26. அவன் ஜெப
ஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கின போது, ஆக்கில்லாவும்
பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, தேவனுடைய
மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள். (அப்போஸ்தலர்
18.25-26)
சுருக்கத்திரட்டு
- ஓர் அலெக்ஸாண்டிரிய யூதன்(அப்போ18.24)
- இவனுக்கு இயேசுவின் கதையைக் குறித்த துல்லிய அறிவு இருந்தது.
- பழைய ஏற்பாட்டினை நன்கு புரிந்து கற்றவனாயும், இயற்கையாகவே சொல்திறன் (வாய்மை) உடையவனாயும் காணப்பட்டான்.
- ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளுமாகிய இருவரும் இவனுக்கு இயேசுவைக் குறித்து முழுமையாய் தெரிந்துகொள்ள உதவினார்கள்.
- அப்பொல்லோவின் வளமான சொல்திறனால் அப்பொல்லோ மற்றும் பவுல் ஆகிய இவர்களிடையே பிரிவுகள் முளைத்திருக்கலாம்.
1. அறிமுகம்
- இவனது கதை
சிலர் இயற்கையாகவே பொது அவைகளில் வியக்கத்தக்க
பேசும் ஆற்றலைப் பெற்றிருப்பர். சிலர் அதோடு கூட ஒரு பெரிய செய்தியையும் எடுத்துச்
சொல்லிவிடுகின்றனர். எபேசுவிலிருந்து பவுல்
புறப்பட்ட சில நாட்களில் அப்பொல்லோ எபேசுவிற்கு வந்து ஒரு தாக்கத்தை
உண்டுபண்ணுகிறான். பொது மக்களிடையே தைரியமாய் பேசுகிறான். பழைய ஏற்பாட்டிலுள்ள
வேதவாக்கியங்களை திருஷ்டாந்தப்படுத்தி பேசுகிறவனாயிருந்தான். இவன் கிறிஸ்தவத்தை
எதிர்ப்பவர்களிடம் கட்டாயத்துடனும் திறமையுடனும் விவாதித்தான். ஆக்கில்லா
பிரிஸ்கில்லா ஆகிய இவர்களின் கவனத்தில் வருவதற்கு அதிகநேரம் பிடிக்கவில்லை.
அப்பொல்லோவிற்கு முழு கதையும்
தெரியவில்லை என்று இந்த இரண்டு பேருக்கும் தெரிந்துவிட்டது. இவனுடைய பிரசங்கமெல்லாம்
பழைய ஏற்பாட்டையும், யோவான் ஸ்நானகனின்
போதனையையும் அடிப்படையாக கொண்டிருந்தது. இவன் ஜனங்களைப்
பெரும்பாலும் மனந்திரும்பவும், மேசியாவின்
வருகைக்கு ஆயத்தமாகும்படியாக வற்புறுத்துகிறவனாகவும் காணப்பட்டான். ஆக்கில்லாவும்
பிரிஸ்கில்லாளுமாகிய இவர்கள் அவனைத் தங்களது
வீட்டிற்கு அழைத்துச் சென்று இப்போது நடந்து முடிந்த எல்லா விவரங்களையும்
இயேசுவின் வாழ்க்கை, அவருடைய மரணம்,
அவரின்
உயிர்தெழுதல், மேலும் பரிசுத்த ஆவியின் வரவு
இவைகளைக் குறித்து இவனுக்கு விளக்கிக் கூறினார்கள். அப்பொல்லோ இப்போது ஒவ்வொரு
சுவிசேஷமாக படிப்படியாக புரிந்து தெளிவு பெற்றதோடு மட்டுமல்லாது ஒரு புது
சக்தியால் நிறைந்தவனாயும் தைரியமுடையவனாயும் சுவிசேஷத்தின் வேலையை நிறைவேற்றினான்.
பின்பு அவன் அகாயா நாட்டிற்குப்
போக வேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள்
அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள் (அப் 18.27).
அவன்
கொரிந்து பட்டணத்தில் வல்லமையான பேச்சாளனாக விரைவில் மாறினான். சுவிசேஷத்தை எதிர்ப்பவர்களிடம்
பொது இடங்களிலேயே விவாதித்தான். சில வேளைகளில் இவனுடைய திறமைகள் இறுதியில்
பிரச்சினைகளையே உருவாக்கியது. கொரிந்திய மக்கள் சிலர் இவனது செய்தியை விட்டு இவனைப்
பின்பற்ற ஆரம்பித்தனர். கொரிந்தியர்களிடையே
இருந்த பிரிவினைகள் காரணமாக பவுல் அவர்களை எதிர்க்க வேண்டியதாயிருந்தது. அவர்களுக்குப்
பிடித்த போதகரது பெயரை வைத்து சிறிய குழுவாக உருவாக்கினர். அப்பொல்லோ
கொரிந்துவை விட்டபின் மீண்டும் அங்கு வர தயங்கினான். பவுல் பிரியமாக எழுதும்போது
அப்பொல்லோ உடன் ஊழியன் என்றும் கொரிந்துவிலே பவுல் நட்டதான சுவிசேஷ விதைகளுக்கு நீர்ப்பாச்சினவன்
என்றும் எழுதுகிறார். அப்பொல்லோ இன்னும் ஒரு சுவிசேஷ பிரயாண பிரதிநிதியாக
தீத்துவின் உதவியை நாடுகிறவனாகவே காணப்பட்டான். கடைசியாக தீத்துவுக்கு பவுல் எழுதும்போது
அப்பொல்லோவுக்கு ஒரு குறைவும் இல்லாதபடி ஜாக்கிரதையாக விசாரித்து வழியனுப்பும்படி
கோருகிறார்.
இவனது இயற்கைத்திறன் அவனை
பெருமைப்பட வைத்தாலும், இவன்
கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவன் என்பதை நிருபிக்கிறான். அப்பொல்லோவிற்கு முழு
சுவிசேஷத்தையும் வழங்கத்தக்கதாக ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளுமாகிய இவர்கள்
பவுலிடத்தில் பல மாதங்களாக கற்று அறிந்திருந்தனர். ஏனெனில்
அப்பொல்லோ ஒரு மாணவனாக இருக்க தயங்கினதே இல்லை. இவன் ஓர்
ஆசிரியரைக் காட்டிலும் மேலானவனானான். எவ்வளவு தூரம் நம்முடைய ஆர்வம்
கற்றுக்கொள்வதற்கு இல்லையோ அது தேவன் நம்மை என்னவாக வைக்க திட்டமிட்டுள்ளாரோ அதைப்
பாதிக்கும்?
2.வல்லமையும்
சாதனையும்
2.1
சொல்வண்மை மற்றும் வாதம் செய்து தன் சமயம் ஆதரிக்கும் வரம்பெற்ற ஒரு போதகனாக ஆரம்ப கால சபைகளில் காணப்பட்டான்.
2.2
கற்றுக்கொள்ள விரும்புகிறவனாகவும் காணப்பட்டான்.
2.3 எபிரேயர்
நிருபத்தை எழுதினவர்கள் யாரென்று தெரியாத நிலையில், இவன்
எழுதியிருக்கலாம்; என எண்ணத்தோன்றுகிறது.
3. இவனது
வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
3.1
நற்செய்யதியை தேவனுடைய சக்திகொண்டு திறம்பட துல்லியமாக வெளிப்படுத்துதல்
3.2
விசுவாசிகளல்லாதவர்களுக்கு சுவிசேஷத்தின் உண்மையான பொருளை தெரிவிக்கும் தெளிவான
வாதம் விசுவாசிகளுக்கும் ஊக்கமாக அமைகிறது.
4. வேதாகமக்
குறிப்புகள்
அப்பொல்லோவின் கதையானது அப்போஸ்தலர்18.24-28,19.1,
1கொரிந்தியர்1.12,3.4-6,22,4.1,6,16.12; மற்றும்
தீத்து3.13லும் கூறப்பட்டுள்ளது.
5. கலந்தாலோசனைக்கான
கேள்விகள்
5.1
சுவிசேஷத்தை பரப்புவதில் இவன் உதவினது எப்படி?
5.2 இவனது
சிறந்த திறமைகளைக் மேற்கோள் காட்டு?
5.3
இவனுக்கு இயேசுவைக் குறித்து கற்றுக்கொடுத்தது யார்?
5.4 இவன்
சுவிசேஷ விதைகளுக்கு எப்படி நீர்ப் பாய்ச்சினான்?
5.5 ஆரம்ப
கால சபைகளின் பிரிவுகளுக்கு எப்படி இவன் காரணமானான்?
மொழிபெயர்ப்பு:
திரு.ஜான் ஆரோக்கியசாமி,
பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான்.
No comments:
Post a Comment