Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Monday, December 12, 2011

38. யோசபாத்


யூதாவின் ராஜா

முக்கிய வசனம்:
எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  (2நாளாகம்ம் 32-33)

சுருக்கமான குறிப்புகள்
·       யூதாவின் 4வது ராஜா. தன் தகப்பனான ஆசாவுக்குப் பின் ராஜாவானான்.
·       ராஜ்யத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தான்.
·       உம்ரியின் குடும்பத்துடன் திருமண ஒப்பந்தம் செய்து இஸ்ரவேலுடன் நீண்ட நாளாக இருந்த விரோதத்தை முடிவுக்குக் கொண்டு வந்தான்.
·       தன்னுடைய ஒழுக்கத்தில் உறுதியுடன் இல்லை.
·       துன்மார்க்கமா ஆகாப், யேசபேலின் குமாரத்தியாயிருந்த அத்தாலியாளைத் தன்னுடைய மகன் மணந்து கொள்ள அனுமதித்தான்.

1.     முகவுரைஅவனுடைய சரித்திரம்
அவனுடைய பெயர், ‘யெகோவா நியாந் தீர்க்கிறார்என்று பொருள்படும். தன்னுடைய 35வது வயதில் யூதாவின் சிம்மாசனம் ஏறிய ஆசா ராஜாவின் மகன். 35 வருடங்கள் ஆட்சி புரிந்தான் (2 நாளா.17:10). கி.மு.873 – 849 வரை யூதாவை அரசாண்டான். இவனுடைய தாயார் அசுபாள். சில்கியின் குமாரத்தி  (2 நாளா.17:1). (1இராஜ 22:42, 2 நாளா.20:31) இஸ்ரவேலின் அரசனான பாஷாவை ஜெயித்து, தன் தகப்பனார் கைப்பற்றிய யூதாவின் பட்டணங்களிலும் இப்ராயீமிலும் பாதுகாப்புப் படைகளை நிறுத்தினான். புற சமயத்திலுள்ள தேவர்களின் உயர்ந்த இடங்களையும் பள்ளங்களையும் தகர்த்து, நிலத்தின் குறுக்காகச் சென்று, மக்களுக்கு நியாயப்பிரமானத்தைக் கற்பிக்கும் படி பல குழுக்களையும் ஆசாரியர்கள், லேவியரையும் அனுப்பினான. பெரிய சேனையை வைத்திருந்ததினால், கப்பம் கட்டும் பெலிதியர், அரேபியர் ஆகிய சுற்றிலுமுள்ள மக்களால் மதிக்கப்பட்டான். அவனைக் குறித்த பயமும் இருந்தது. விக்கிரகாராதனைக் காரனான இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் உடன் தோழமை வைத்ததற்காக அவன் கடிந்து கொள்ளப்பட்டான். பட்டணங்கள் தோறும் நியாயாதிபதிகளை நியமித்து, அவர்கள் கர்த்தருக்குப் பயந்து உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் பணிபுரிய வேண்டுமென்று கட்டளை  கொடுத்தான் (2நாளா.19ம் அதிகாரம்). அவனுடைய விண்ணட்ப்பத்திற்குப் பதிலளித்து சுற்றிலுமுள்ள மோவாபியர், அம்மோனியர் போன்ற எதிரிக்களின் மேல் பூரண வெற்றியளித்தார்.

யூதாவின் ராஜாவான யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனாக அகசியா என்னும் இஸ்ரவேலின் அரசனுடன் சேர்ந்து எசியோன் கேபேரிய்யே கப்பல் கட்டினார்கள். (2நாளா.20:35-37) கப்பல்கள் உடைந்து போயிற்று. தீர்க்கதரிசியான எலெயேசர் இதை முன்னறிவித்திருந்தான். அவர்களுடைய பரிசுத்தமில்லாத சேர்க்கைக்குத் தண்டனையாக இது நிகழ்ந்தது. இவ்விதமாக சுற்றுப்புறத்தாரோடு யுத்தமில்லாத இளைப்பாறுதலை தேவன் கட்டளையிட்டதினால் யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது. (2 நாளா.20:30).

யோசபாத் மரித்து, தாவீதின் நகரில் தன் பிதாக்களோடே அடக்கம் பண்ணப்பட்டான். (2 நாளா.21.1; 1இராஜா.22:50).

தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியில், யோசபாத் தன் தகப்பனாகிய ஆசா செய்த தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு க்கரமா செய்லகளை மட்டும் பின்னபற்றினான். ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவன் செய்த தீர்மானங்கள், அவனுடைய தகப்பனின் முன்மாதிரியான, எதிர்மறையான தன்மைகளை வெளிப்படுத்துகின்றன.

மக்களுக்கு மத போதனையின் தேவை, அல்லது எதிரியின் பெரிய சேனைகளுடன் யுத்தத்தில் அச்சுறுத்தல் போன்ற சவால்கள் தெள்ளெனத் தெரியும் போது, யோசபாத்  வழிகாட்டுதலுக்காக தேவனிடம் திரும்பி சரியான தெரிந்து கொள்ளுதலைச் செய்து கொண்டான். எல்லாம் தனக்கு விரோதமாக இருப்பதுபோல்தோன்றும் போது, அவன் உறுதியுடன் தேவன் பேரில் சார்ந்திருந்தான். அன்றாடக வாழ்க்கையன் திட்டங்கள், செயல்களுக்குத் தேவனைச் சார்ந்து ஜீவிப்பதில்தான் அவன் பெலவீனனாக இருந்தான். துன்மார்க்கனான ஆகாப், யேசபேல் இவர்களின் குமாரத்தியான அத்தாலியாளைத் தன் மகன் மணம் புரிய அனுமதித்தான். இவளும் தன் பெற்றோரைப் பேலவே பொல்லாதவளாக இருந்தாள். தேவனிடம் கேட்காமல் யோசபார் ஆகாப் உடன் சேர்ந்து கொண்ட போது அவன் ஏறக்கறைய கொல்லப்படும் நிலைமைக்கு வந்து விட்டான். பின்னர், புத்தியின்றி கப்பல் கட்டும் தொழிலில் ஆகாபின் குமாரனான அகசியாவுடன் கூடிக் கொண்ட படியால் கர்த்தர் அவர்களுடைய கிரியைகளை முறித்துப் போட்டார். கப்பல்கள் உடைந்து போயின. (2 நாளா.20:35-37)

நமது பிரச்சனைகளும், சத்துருவும் நமக்குத் தெளிவாகத் தோன்றும் போது தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்ற காரணத்தினால், பிரச்சனைகள் தெளிவாகத் தெரியாமல் சத்துரு நமது கண்களுக்கு மறைவாக இருக்கும் நேரங்களிலும் நாம் தேவனுடைய உண்மையில் நம்பிக்கை வைத்து அவருடைய வழி நடத்துதலை நாட வேண்டும். யோசபாத் இதை அறிந்திருந்ததும் அந்த அறிவை பயன்படத்திக் கொள்ளவில்வலை.

2.     பலமும் சாதனைகளும்.
a.     அவன் தைரியமாக தேவனைப் பின்பற்றினான். தன்னுடைய தகப்பன் ஆசாவின் முந்திய வருடங்களைப் பற்றி மக்களுக்கு நினைப்பூட்டினான்.
b.     தேமெங்கும் மத போதனையை ஆரம்பித்தான்.
c.     அவனுக்குப் பல ராணுவ வெற்றிகள் கிடைத்தன. அவன் ஒரு சிறந்த ஆற்றல் வாய்ந்த அரசன் என்பதை நிரூபித்து ஏதோமைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் வெற்றி பெற்றான். இந்த வெற்றியின் முக்கியத்துவம் என்னவென்றால் இதினால் வியாபாரம் யெய்யும் மார்க்கங்கள் இவனுடைய அதிகாரத்தின் கீழ் வந்து, நாட்டுக்கு ஏராளமான செய்லவத்தைக் கொண்டு வந்தது. 2 நாளா.17:5; 18;1)
d.     ராஜ்யம் முழுவதிலும் நல்ல சட்டதிட்டங்களையும் நியாயாதிபதிகளையும் ஏற்படுத்தினா.

3.     அவனுடைய பெலவீனங்களும் தவறுகளும்
a.     தனது தீர்மானங்களின் நீண்ட கால விளைவுகளைக் காணத் தவறி விட்டான்.
b.     நாட்டில் விக்கிரகாராதனையை முற்றிலுமாக அழிக்கவில்லை.
c.     திருமண உறவுகளின் மூலமாகப் பொல்லா அரசனான ஆகாப் உடன் சிக்கிக் கொண்டான்.
d.     தன்னுடைய குமாரன் ஆகாப்பின மகள் அத்தாலியாளை மணந்துகொள்ள அனுமதித்தான்.
e.     கப்பல் கட்டும் தொழிலில் அகசியாவுடன சேர்நது கொண்டான். இது தோல்வியாக முடிந்தது.


4.     வேத வசன ஆராதாங்கள்
a.     1இராஜா.15:24-22:50, 2நாளா.17-1-21:1ல் இவனுடைய சரித்திரம் சொல்லப்பட்டிருக்கிறது.
b.     2இராஜா.3:1-14; யோவேல் 3:2,12உம் இவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.

5.     விவாதத்துக்கான கேள்விகள்.
a.     அவனுடைய பலம் எவை?
b.     அவனுடைய பெயரின் அர்த்தம் என்ன?
c.     அவனுடைய பெலவீனங்கள் எங்கு காணப்பட்டன?
d.     அவன் எப்படி மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு உண்மையுள்ளவனாக இருந்தான்? (2நாளா.17:7-9)
e.     உம்ரியின் வீட்டோடு அவன் இஸ்ரவேலின் உறவை எவ்வாறு புதுப்பித்தான்?

மொரிபெயர்ப்பு:
திருமதி டஃப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.

No comments:

Post a Comment