ஆபிரகாம், சாராள் இவர்களின் குமாரன்
முக்கிய வசனம்:
அப்பொழுது
தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய்
உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று
பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப்
பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். (ஆதி.17:19)
சுருக்கமான குறிப்புகள்
·
இவன் ஒரு விசேஷித்த, அற்புதமான குழந்தை.
·
ஆபிரகாம் ஈசாக்கை பலிடச் சென்றான்.
·
ஏசா, யாக்கோபு இவனுடைய குமாரர்.
·
தகன பலிக்கான ஆடு எங்கே என்று கேட்டான.
·
ஏமாற்றப்பட்டு யாக்கோபை ஆசீர்வதித்தான்.
·
ஏசாவும் யாக்கோபும் இவனை அடக்கம் செய்தார்கள்.
1. முகவுரை
யாக்கோபு என்பதன் பொருள் ‘சிரிப்பவன்’ என்பதாகும். யூத சரித்திரத்தில் ஒரு பெயருடன் அதிகாரமும் இருந்தது. அது பிரித்து வைக்கிறது. ஞாபகங்களைத் தூண்டி எழுப்புகிறது. அதன் ஒலி உன்னுடைய கவனத்தைத் திருப்புகிறது. தேவனுடைய வாக்குத்தத்தம் ஆபிரகாம், சாராளில் நிறைவேறினது. அவருடைய வாக்குத்தத்தத்தை உண்மையாக்குவதில் தேவனுடைய வல்லமைக்கு இது ஒரு சாட்சியாக இருந்தது.
ஈசாக்கு தேவனுடைய திட்த்தில் ஒரு பகுதியாக இருந்தான். அவன் குடும்பத்தில் தலைவனாக இருந்தான். ஆனால் ரெபெக்காளுக்குத் தான் அதிகாரம் இருந்த்து.
அவனுடைய தகப்பன் ஆபிரகாமின் முன் மாதிரியானது ஒரே மெய்யான தேவனில் வைக்கும் விசுவாசமாகிய வரத்தைக் கொடுத்தது. ஈசாக்கின் மூலமாக ஒரு பெரிய ஜனத்தை உருவாக்க தேவன் வாக்குக் கொடுத்தார்.
1. அவன் ஒரு விசேஷமான குழந்தை. சாராள் 90 வயதும் ஆபிரகாம் 100 வயதுமாக இருக்கும் போது ஒர் அற்புதமாக பிறந்த குழந்தை. கூடாதது ஒன்று ஈசாக்கில் கூடியதாகி விட்டது. நம்மால் கூடாத எந்தக் காரியமும் தேவனால் கூடும்.
சாராள் ஆபிரகாம் இருவரும் வயதானவர்களாகும் வரை அவர்களுடைய விசுவாசத்தைச் சோதித்து, இந்தக் குழந்தை வாக்குத் தத்தத்தின் குழந்தை, தேவனுடைய ஈவு என்பதை மிகத் தெளிவாக்கும் பொருட்டு, ஈசாக்கின் பிறப்பு தேவனால் காலதாமதம் செய்யப்பட்டது. (ஆதி.17:19).
சாராள் ஆபிரகாம் இருவரும் வயதானவர்களாகும் வரை அவர்களுடைய விசுவாசத்தைச் சோதித்து, இந்தக் குழந்தை வாக்குத் தத்தத்தின் குழந்தை, தேவனுடைய ஈவு என்பதை மிகத் தெளிவாக்கும் பொருட்டு, ஈசாக்கின் பிறப்பு தேவனால் காலதாமதம் செய்யப்பட்டது. (ஆதி.17:19).
2. அவனுடைய வளர்ச்சி, முன்னேற்றத்தின் சவால்:
a. 12 வயதான போது தன்னுடைய தகப்பனால் பலியிடப்படப் போகும் நேரத்தில தேவன் ஒன்று விட்ட சகோதரனான இஸ்மவேலின் பரிகாசத்துக்கு ஆளானான் (ஆதி.21.9). பின்பு கர்த்தர் அதைத் தடுத்தார் (ஆதி.22:6-19). ஆபிரகாமுடைய கீழ்ப்படிதலை மேலும் அதிகரிக்கும் படியாக தேவன் அவனைச் சோதித்தார். ஈசாக்கு மரிப்பதைத் தேவன் விரும்பவில்லை. ஆனால் தான் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த வாக்குத்தத்தத்தின் குமாரனை விட அதிகமாக தேவனை நேசிக்கிறானா என்பதை தெளிவாகத் தெரியும்படி, ஆபிரகாம் தன் இருதயத்தில் அவனைப் பலியாகக் கொடுக்க வேண்டுமென்று தேவன் விரும்பினார். “இவைகளிலும் அதிகமாக என்னை நேசிக்கிறாயா?” என்று தேவன் நம்மிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். நம்முடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தி, நாம் தேவனுக்கு அவருடைய நேரத்திற்கும் நம்மை ஒப்புக்கொடுக்கும்படி செய்வதே, அவர் நம்மை சோதிப்பதின் நோக்கமாக இருக்கிறது.
b. ஈசாக்கை பலிசெலுத்துதல், தேவன் தம்முடைய குமாரன் இயேசுவை பலியாக்க் கொடுத்தார் என்பதை நினைவுகூரச் செய்கிறது. (யோவான் 3:16) ஈசாக்குக்குப் பதிலாக பலிசெலுத்தப்பட்ட ஆட்டுக் கடாவை, நமது பாவங்களுக்காக (தன்னுடைய பாவத்திற்காக அல்ல) மரித்த இயேசுவுக்கு அடையாளமாகச் சிலர் பார்க்கிறார்கள். தன் மகன் என்றும் பாராமல் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததினால்,
ஆபிரகாம் நிறைவான ஆசீர்வாத்த்தைப் பெற்றான். உனக்கு தேவனுடைய ஆசீர்வாதம் வேண்டுமனால், நீயும் எதையும் தேவனுக்காகக் கொடுக்காமல் வைத்துக் கொள்ளாதே.
c. ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்கின் நிறைவேறுதலில் ஈசாக்கு முதலாவது சந்ததி. 40 வயதாகும் போது அவன் திருமணம் செய்து கொண்டான். மனைவியின் பெயர் ரெபெக்காள். இவனுக்கு ஏசா, யாக்கோபு என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.
d. கேராரிலே தேவன் ஈசாக்குக்கு தரிசனமானார். இந்த இடத்தில்தான், தன் மனைவியை சகோதரி என்று பொய்யாக கூறித் தன் தகப்பனாகிய ஆபிரகாம் செய்த தவற்றைத் தானும் செய்தான். (26:7) அமலேக்கியரின் கண்டனத்துக்கு ஆளானான்.
e. ஈசாக்கு ஏமாற்றப்பட்டு, தனது ஆசீர்வாதத்தை யாக்கோபின் மேல் கூறி பின்னர் தீர்க்கதரிசனமாகக் கூறி ஏசாவை ஆசீர்வதித்தான். தேவன் ஆபிரகாமுக்கு அருளின ஆசீர்வாதம் யாக்கோபின் மூலமாக வரும் என்று ஈசாக்கு தன் மரிக்குமுன் கூறினான் (28:4).
அவன் 80 வயதில் மரித்து மக்பேலாவில் அடக்கம் செய்யப்ட்டான்.
அவன் 80 வயதில் மரித்து மக்பேலாவில் அடக்கம் செய்யப்ட்டான்.
3. பலமும் சாதனைகளும்
a. சாராள் 80 வயதும் ஆபிரகாம்
100 வயதுமாக இருந்த போது அவர்களுக்குப் பிறந்த ஒரு அற்புதத்தின் குழந்தை இவன்.
b. ஆபிரகாமுக்குத் தேவன் கொடுத்த வாக்குத்தத்ததின் நிறைவேறுதலில் இவன் முதலாவது சந்ததி.
c. தன்னுடைய குமாரர் பிறக்கும் வரை இவன் அக்கறையுடன் பராமரிக்கும் சிறந்த கணவனாக இருந்தான்.
d. இவன் மிகுதியான பொறுமையைக் காண்பித்தான்.
4. பெலவீனங்களும் தவறுகளும்.
a. இக்கட்டான நேரத்தில் பொய் சொன்னான்.
b. பிரச்சனைகள் வரும்போது அதைவிட்டு விலகிப் போய் விடுவான்.
c. தன் குமாரர்களிடம் பாரபட்சம் காண்பித்தான். தன மனைவியை அசட்டை செய்தான்.
5. இவனுடைய வாழ்க்கையிலிருந்து படிக்கக் கூடிய பாடங்கள்:
a. பொறுமை எப்போதும் பலனளிக்கும்.
b. தேவனுடைய திட்டங்களும் அவருடைய வாக்குறுதிகளும் மக்களை விடப் பெரிதாக இருக்கின்றன.
c. தேவன் தமது வாக்குறுதிகளைக் காத்துக் கொள்கிறார். நாம் உண்மையற்றவர்களாக இருந்த போதிலும் அவர் எப்போதும் உண்மையுள்ளவராக இருக்கிறார்.
d. பாரபட்சம் காட்டுவது குடும்பத்தில் பிரச்சனை உண்டு பண்ணும்.
6. வேதாகம ஆராதரங்கள்:
a. ஈசாக்கின் சரித்திரம் ஆதி.17:15-35: 29ல் கூறப்பட்டிருக்கிறது.
ரோமர்
9:7-8; எபி.11:17-20;
யாக்கோப்பு 2:21-24உம் இவன் குறிப்பிடப் பட்டிருக்கிறான்.
7. விவாதத்துக்கான கேள்விகள்
a. இவனுடைய பெற்றோர் யார்?
b. அவன் ஏன் ஒரு விசேஷித்த குழந்தை என்று சொல்லப்பட்டான்-
c. இவனுடைய பிள்ளைகள் யார்,
d. இவனுடைய தகப்பனார் ஏன் இவனைப் பலி செலுத்தச் சென்றார்?
e. அவன் ஏன் யாக்கோபை மாத்திரம் ஆசீர்வதித்தான்?
மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment