Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Monday, December 26, 2011

53. யூதா,


யோசேப்பின் சகோதரன் ( எகிப்தின் பிரதம மந்திரி).


முக்கிய வசனம்:
             " யூதாவே, சகோதரர்களால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும். உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள். யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்து கொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான். அவனை எழுப்புகிறவன் யார்? சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதஙளைவிட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்". (ஆதியாகமம் 49:8-10)


சுருக்கமான கதை:
.  யாக்கோபுக்கு லேயாளின் மூலம் பிறந்த நான்காவது குமாரன் யூதா.( ஆதியாகமம் 29:35)
.  தன் சகோதரர்களுக்குள்ளே ஒரு தலைமைப் பொறுப்பை ஏற்றான். ( ஆதியாகமம் 38:26-27) 
.  யோசேப்பை அடிமையாக விற்க தன் சகோதரர்களுக்கு அறிவுறுத்தினான்.
.  தன் மருமகளாகிய தாமாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காக்கத் தவறினான்.


1. முன்னுரை:
     யூதா என்ற பெயருக்கு "போற்றுதல்" என்று பொருள். தலைவர்களாய் இருக்கும் மக்கள் பிரசித்தமாகத் தெரிவார்கள். தேவை ஏற்படும் வரை ஒரு குறிப்பிட்ட பாணியில் நடக்க மாட்டார்கள். அவர்களுடைய திறமைகள் வெளிப்படையாகப் பேசுவது, தீர்மானிக்கும் திறன், செயலாக்கம், கட்டுப்படுத்தும் திறமை ஆகியவை. இந்தத் திறமைகள் ஒரு பெரிய நன்மைக்கோ அல்லது பெரிய தீமைக்கோ பயன்படுத்த முடியும். அவனுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் இந்தத் திறமைகளை செயல்படுத்த பல சந்தர்ப்பங்களைத் தந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, யூதாவினுடைய  தீர்மானங்கள் ஆண்டவருடைய திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் ஆசையால் அல்லாமல் அந்த நேரத்தின் பிரச்சினைகளின் அழுத்தத்தால் வடிவு பெற்றன. ஆனால், அவன் தன் தவறுகளை உணர்ந்த போது அதை ஒப்புக்கொள்ளத் தயாராக இருந்தான். தாமாருடன் அவனது அனுபவங்களும், யோசேப்புடன் ஏற்பட்ட கடைசி எதிர்முகத்தாக்குதலும்,  பழியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் யூதாவின் குணத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இதுவே யூதா தன் பின் சந்ததியானாகிய தாவீதுக்கு விட்டுச்சென்ற குணங்களில் ஒன்று.

     யூதாவின் இந்த இயற்கையான வழி நடத்தும் திறமை நம்மிடம் இருக்கிறதோ இல்லையோ, தன் பாவத்துக்கு குருடாயிருக்கும் தன்மை நம்மிடம் இருக்கிறது. அனேக நேரங்களில் யூதாவைப்போல் தவறுகளை ஒத்துக்கொள்ளும் மனம் நம்மிடம் இருப்பதில்லை. நம்முடைய சிறுதவறுகள் பெரிய பாவத்துக்கு இழுத்துச் செல்லும் வரை நாம் காத்திருக்கக்கூடாது என்பதை நாம் யூதவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, பழியை ஏற்றுக்கொண்டு, மன்னிப்பு கோருவதே சிறந்தது.

2.  பலங்களும் சாதனைகளும்:
 அ)  யூதா இயற்கையிலேயே வழி நடத்தும் திறமை உள்ளவன்- வெளிப்படையாக பேசும் முடிவெடுக்கும் திறமையும் உள்ளவன்.
ஆ)  மிகவும் நெருக்கடியான சூழ் நிலையில் தெளிவாக யோசித்து செயலாற்றியவன்.
இ)  தான் சொன்ன வாக்குப்படியே நின்று தேவைப்பட்ட நேரத்தில் பழியையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தான்.
ஈ)  12 பேரில் 4 வது குமாரன். அவன் வழியில்தான் ஆண்டவர் தாவீதையும் மேசியாவாகிய இயேசுவையும் இறுதியாகக் கொண்டு வருவார்.


3.  பலவீனங்களும் தவறுகளும்:
அ)  யோசேப்பை அடிமையாக விற்கும்படி தன் சகோதரர்களுக்கு கருத்துரைத்தான்.
ஆ)  தன் மருமகளாகிய தாமாருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றத் தவறினான்.


4.  அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்:
அ)  தற்போதைய சூழ்னிலையை மட்டுமல்லாமல் எதிர் காலத்தையும் கட்டுப்படுத்துபவர் ஆண்டவர்.
ஆ)  பிறகு செய்யலாம் என்று தள்ளிப்போடுவது அனேக நேரங்களில் பிரச்சினைகளை இன்னும் மோசமாக்கும்
இ)  பென்யமீனின் உயிருக்குப் பதிலாகத் தன் உயிரைக் கொடுக்க யூதா முன்வந்தது அவன் சந்ததியாகிய இயேசு எல்லா மக்களுக்காகவும் தன் உயிரைக் கொடுப்பார் என்பதைக் காட்டுகிறது.


5.  வேத ஆதாரங்கள்:
   யூதாவின் கதை ஆதியாகமம் 29:35-50; 26 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 1 நாளாகமம் 2-4 ஆம் அதிகாரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.


6.  விவாதத்துக்குரிய கேள்விகள்:
6.1  யூதா யார்? அவன் எப்படி யோசேப்புக்கு உதவினான்?
6.2  அவனுடைய பலவீனங்களும் தவறுகளும் என்ன?
6.3  அவன் தன் சகோதரனாகிய பென்யமீனை எவ்வாறு மற்ற சகோதரர்களுடன் எகிப்துக்குச் செல்லும்படி செய்தான்? (ஆதியாகமம் 43).
6.4  அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள் என்ன?
6.5  தன் வழினடத்தும் திறமைகளை யூதா எவ்வாறு வெளிக்காட்டினான்?


மொழி பெயர்ப்பு:
திருமதி. கிரேஸ் ஜட்சன்,
பரி. பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.

No comments:

Post a Comment