– ஈசாக்கன் மகன்
(தந்திரக் காரன்)
ஏமாற்றுபவனைப் பெரிய தலைவனாகும் படி தேவன் மாற்றினான்.
முக்கிய வசனம்
நான்
உன்னோடே இருந்து,
நீ போகிற இடத்திலெல்லாம்
உன்னைக் காத்து,
இந்தத் தேசத்துக்கு
உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச்
செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
(ஆதி.28:15)
சுருக்கமான குறிப்புகள்
·
ஈசாக்கின் மகன்
·
தன் தகப்பனையும் சகோதரனையும் ஏமாற்றினான்.
·
பயத்தினால் பெத்தேலுக்குச் சென்றான்.
அவனுடைய பயணத்திற்கு அவனுடைய தாய் ஆதரவு கொடுத்தாள்.
·
ராகேல், லேயாள் இருவரையும் மணந்து கொண்டான்.
·
அவன் மாற்றப்பட்டதின் அடையாளமாக இஸ்ரவேல் என்னும் புதிய பெயர் கொடுக்கப்பட்டது.
1. முகவுரை
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு – இவர்கள் பழைய ஏற்பாட்டில்;
குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்நத மக்களாக இருக்கின்றனர். இவர்களுடைய சிறப்பு இவர்களுடைய தனிப்பட்ட குணத்தைப் பற்றியதல்ல, தேவனைப் பொறுத்ததாக இருக்கிறது. இவர்கள் செல்வந்தர்களும் சக்தி வாய்ந்தவர்களாகவும் இருந்த போதிலும் பொய் பேசவும், ஏமாற்றக் கூடியவர்களாகவும் சுய நலக்காரராகவும் இருந்தனர். நாம் எதிர்பார்க்கும் அவளவுக்கு அவர்கள் குற்றமற்றவர்களாகவோ,
தலைவர்களாகவோ இருக்கவில்லை.
அவர்கள் நம் போலவே, தேவனைப் பிரியப்படுத்த மனதுள்ளவர்களாக, ஆனால் அடிக்கடி தவறிப் போகிறவர்களாக இருந்தனர்.
யாக்கோபு பிறப்பதற்கு முன்பே, தேவன் தமது திட்டம் யாக்கோபின் மூலமாக நிறைவேற்றப்படும்; அவனுடைய இரட்டை சகோதரன் ஏசாவின் மூலமாக அல்ல என்று வாக்குக் கொடுத்திருந்தார். யாக்கோபு செயல்பட்ட முறைகள் தவறாக இருந்த போதிலும், அவனுடைய திறமை, உறுதியான தீர்மானம், பொறுமை ஆகியவற்றை நாம் பாராட்ட வேண்டும்.
யாக்கோபின் வாழ்க்கையில்
4 கட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அவன் தனிப்பட்ட முறையில் தேவனைச் சந்தித்த விவரத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. முதலாவது கட்டத்தில் யாக்கோபு, “குதிங்காலைப் பிடித்தான்” என்று பொருள்படும், தன் பெயருக்கேற்றபடி வாழ்ந்தான். (அவன் ஏமாற்றுகிறான் பிறக்கும் போது ஏசாவின் குதிங்களைப் பிடித்தான். பின்பு வீட்டை விட்டு ஓடிப் போவதற்கு முன், தன் சகோதரனின் பிறப்புரிமையையும் அசீர்வாதத்தையும் எடுத்துக் கொண்டான்
2. இரண்டாவது கட்டத்தில், யாக்கோபு தன் மாமானான லாபானால் ஏமாற்றப்பட்ட அனுபவத்தைப் பெற்றான். தான் விரும்பியதை அடையவதற்காக கடினமாக உழைக்க ஆயத்தமாக இருந்தான். அவன் ராகேலை நேசித்ததினால் அவளுக்காக மற்றொரு 7 ஆண்டுகள் வேலை செய்தான். அந்த நாட்டின் வழக்கத்தின்படி தான் நேசிக்காத லேயாளை மணந்து கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டான்.
(ஆதி.29:26)
மொத்தத்தில் லேயாளையும் ராகேலையும் மணந்து கொள்ளும்படி 14 வருடங்கள் வேலை செய்தான். ராகேலுக்காக 7 வருடங்கள் வேலை செய்த போதிலும், அவள் மேல் வைத்திருந்த அன்பினால் அது சில நாட்கள் போல் கழிந்து விட்டது. (ஆதி.29:20).
3. மூன்றவாது கட்டத்தில், கைப்பற்றிக் கொள்பவன் என்ற புதிய பெயருடன் இருக்கிறான். அவனுடைய பெயர் மாற்றப்பட்டு விட்டது. இந்த முறை யோர்தான் நதியோரத்தில், அவன் தேவனைப் பிடித்துக் கொண்டு அவரைப் போகவிடவில்லை. தன்னைத் தொடர்ந்து ஆசிர்வதிக்க வரும் தேவனைத் தான் சார்ந்திருப்பதை உணர்ந்தான். தேவனோடு அவனுக்குள்ள உறவு அவன் வாழ்க்கைக்கு அத்தியாவசியமாற்று. அவன் பெயர் ‘இஸ்ரவேல்’ என்று மாற்றப்பட்டது. இதன் பொருள், ‘தேவனோடு போராடினான்’ என்பதாகும்.
4. நான்காவது கடைசியானதுமான கட்டம் – பிடித்துக் கொள்ளப்படுதல்
– தேவன் அவன் மேல் உறுதியன பிடியைப் பிடித்துக் கொண்டார். எகிப்துக்கு வரும்படி யோசேக்பு கொடுத்த அழைப்புக்கு மறு உத்தரவாக, யாக்கோபு தேவனுடைய அனுமதியில்லாமல் தான் எங்கும் போக விரும்பவில்லை (ஆதி.46:1-4).
2. முடிவுரை
ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குறுதிகள் யாக்கோபின் மூலமாக தொடர வேண்டும்; ஏசாவின் மூலமாக அல்ல என்பது தேவனுடைய நோக்கமாக இருந்த போதிலும், ரெபெக்காளும் யாக்கோபும் மேற்கொண்ட தீய உபாயங்கள் தண்டனையைக் கொண்டு வந்தன. தங்கள் ஏமாற்று வேலையினிமித்தம் இருவரும் வேதனைப் பட்டார்கள். தாய்க்கும் மகனுக்குமிடையே வாழ்நாள் முழுவதும் பிரிவு ஏற்பட்டது. இரண்டாவதாக, யாக்கோபு தன் சொந்த மாமன் லாபானால் ஏமாற்றப்பட்டான். ராகேலுக்காக 7 வருடம் வேலை செய்த போதிலும் முடிவில் ராகேலுக்குப் பதிலாக லேயாளைக் கொடுத்து லாபான் அவனை ஏமாற்றினான். ராகேலுக்காக இன்னும் 7 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டியதாயிற்று. வலி கொடுக்கும் விஷயத்திலும் லாபான் யாக்கோபை ஏமாற்றினான். ஆனால் தேவன் அவனோடு கூட இருந்தார். அவன் வாழ்க்கையின் இறுதி காலம் சமாதானம், சந்தோஷம், சுபிட்சம் நிறைந்ததாக இருந்தது. அவனுடைய கடைசி வார்த்தைகளாக, ‘சமாதான கர்த்தர் வருவார்’ என்று முன்னறிவித்தான் (ஆதி.49:10).
3. வேதாகம ஆதாரங்கள்
a. இவனைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் வேதத்தில் ஆதியாகமம் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
4. விவாதத்துக்கான கேள்விகள்
a. அவனுடைய குடும்பத்தைப் பற்றிய விவரங்களைக் கூறு.
b. அவன் ஏன் தன் தகப்பனையும் சகோதரனையும் ஏமாற்றினான்?
c. லாபான் அவனை எவ்வாறு ஏமாற்றினான்?
d. அவனுடைய மனைவிமார்கள் யார்?
e. ராகேலுக்காக உழைத்த 7 வருடங்கள் அவனுக்கு எப்படியிருந்த்து? (ஆதி.29:20)
மொழிபெயர்ப்பு
திருமதி டஃப்னி ஜோசப்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment