Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Thursday, October 6, 2011

129 சீமோன் பேதுரு


129 சீமோன் பேதுரு


முக்கிய வாக்கியம்:- நான் உனக்குச் சொல்லுகிறேன். நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.



1.          சுருக்கமான விளக்கம்.
-    பேதுரு இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய சீஷன்.
-    இந்தச் சாதாரண மீன் பிடிப்பவன் கிறிஸ்துவின் உதவியால் புது வெற்றியோடும், புது சலுகைகளோடும் புதிய மனிதனாக மாறினான்.
-    அவன் பூரண மனிதனாக மாறவில்லை. என்றாலும் சீமோன் பேதுருவாக இருப்பதைத் தடை செய்யவில்லை.
-    கிறிஸ்து புது நாமத்தைக் கொடுத்தார். பேதுரு தேவனுக்காகப் பெரிய பெரிய காரியங்களைச் செய்து கொண்டேயிருந்தான்.
-    அவன் அப்போஸ்தலர் நடபடிகளிலும், முந்தின தேவாலயங்களிலும் முக்கியமான பதவி வகித்தான்.
-    ரோம கத்தோலிக்க சபை அவனை முதல் ரோம பேராயர் எனக் கெளரவித்தது. கத்தோலிக்க சபை மத குரு பேதுருவின் வாரிசு என உரிமை கொண்டாடினார்.



2.          அவன் கதை.

இயேசு சீமோன் பேதுருவிடம் முதன் முதலாகப் பேசிய வார்த்தைகள்என் பின்னே வாருங்கள்” (மாற்கு: 1:17). அவரின் கடைசி வார்த்தைகள்நீ என்னைப் பின்பற்றி வா” (யோவான்: 21:22). அந்த இரண்டு சவால்களுக்கும் இடையில் அவர் வழியின் ஒவ்வொரு படியிலும் பேதுரு அடிக்கடி இடறி விழுந்தாலும் அவரைப் பின்பற்றுவதைக் கைவிடவில்லை.

பேதுருவின் வாழ்க்கையில் இயேசு பிரவேசித்தது முதல், இந்தச் சாதாரண மீன் பிடித்தவனுக்கு புதிய வெற்றியும், புதிய சலுகைகளும் கிடைத்தன. அவன் பூரண மனிதனாக மாறவில்லை. என்றாலும் சீமோன் பேதுருவாக இருப்பதைத் தடை செய்யவில்லை. பேதுருபாறைஎன்ற புதிய பெயரோடு திறமை மிக்கச் சீஷனாக நியமிக்க சீமோனிடம் இயேசு என்ன கண்டார் என்று நாம் ஆச்சரியப்படலாம். உணர்ச்சி வசப்பட்ட பேதுரு, அதிகமான நேரங்களில் பாறைபோல் நடந்து கொள்ளவில்லை. ஆனால் இயேசு தன் சீஷர்களாக மாதிரி உருவங்களை அல்ல. உண்மையான மனிதர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர் தன் அன்பினால் மாறக்கூடிய ஜனங்களைத் தேர்ந்தெடுத்தார். பிறகு அவர்களை அவர் ஏற்றுக்கொண்ட தேவையான யாராய் இருந்தாலும் அடிக்கடி தவறி விழுந்தவர்களாயிருந்தாலும் அவர்களிடம் தொடர்பு கொள்ள அனுப்பினார். இயேசு நம்மைத் தன்னைப் பின்பற்ற அழைக்கும்போது நம்மிடம் அவர் என்ன கண்டார் என்று ஆச்சரியப்படலாம். ஆனால் இயேசு பேதுருவை ஏற்றுக்கொண்டு, அவரின் தோல்விகளில் ஊக்கமளித்து வழிநடத்தினார் என்று நமக்குத் தெரியும். பேதுரு தேவனுக்காகப் பெரிய மேன்மையான காரியங்களைச் செய்து கொண்டே இருந்தார். நீ தவறி விழுந்தாலும் இயேசுவைப் பின்பற்றிச் செல்ல உறுதியாயிருக்கிறாயா? கர்த்தர் பெந்தெகொஸ்தே நாளில் 3000 பேர் மனந்திரும்பப் பிரசங்கம் செய்ய அவருக்கு ஞானம், தைரியம் கொடுத்தார். இது ஒரு அருமையான சாதனை. பேதுரு அப்போஸ்தலருடைய நடபடிகளில் எழுதியிருக்கிறபடி தலைமை அப்போஸ்தலனாக மாறினார். தேவன் அவர் சபையைப் பலப்படுத்த பவுலோடும் மற்றவர்களோடும் இணைந்து ஊழியம் செய்ய ஏற்படுத்தினார். பரி.பவுல் போன்ற மற்ற சபைத் தலைவர்களோடு ஊழியம் செய்ய தேவன் அவருக்கு ஞானத்தைக் கொடுத்தார். பேதுரு அநேக வழிகளில் சாதாரண மனிதர்களாகிய நம்மைப் பிரதிநிதிக்கிறார். அவருக்கு விரோதமாகத் தவறி விழுந்தாலும் பாவத்தில் அகப்பட்டாலும் நாம் கிறிஸ்துவைப் பின்பற்ற அதிகமாகக் கற்க வேண்டும்.


3.          தைரியமும் திறமையும்.
1)              ஒரு மீன்பிடிப்பவர் பெரிய அப்போஸ்தலராக மாற்றப்பட்டார்.
2)              தேவனின் வல்லமையால் அவர் 3000 பேருக்குப் பெந்தெகொஸ்தே நாளில் போதித்து, ஞானஸ்நானம் கொடுத்தார்.
3)              கலிலேயருக்கு உணர்த்திய சுபாவம், பேதுருவின் தெளிவான சக்தி, சுதந்திரம், வெளிப்படையான பேச்சு, கபடமற்ற குணம் தெளிவாகத் தெரிகிறது.
4)              அவர் மாற்கு பெரிய சுவிசேஷகனாக மாற பராமரித்து பலப்படுத்தினார்.
5)              அவர் இயேசு கொடுத்த நாமத்திற்கேற்ற விதமாய் வாழ்ந்து வந்தார். (யோவான்: 1:42)
6)              இயேசுவின் சீஷர்களுக்கு இடையில் அங்கீகரிக்கப்பட்ட தலைவனானார் உள்ளடங்கிய மூன்று பேருள்ள குழுவில் ஒருவரானார்.
7)              அவர் பெந்தெகொஸ்தே நாளிலும் அதன் பிறகும் சுவிசேஷத்தைத் தெரிவிக்கும் முதல் பெரிய நபராயிருந்தார்.
8)              1 & 2 பேதுரு நிருபங்களை எழுதினார்.
9)              அவர் யவீருவின் குமாரத்தி உயிரோடே எழுப்பப்பட்டதற்குச் சாட்சியாய் இருந்தார். (மாற்: 5:38; லூக்: 8:51)
10)           இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான். (மத்: 14:28-30)
11)           கிறிஸ்துஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துஎன்று ஒப்புக்கொண்டான். (மத்: 16:13-20)
12)           மறுரூபமானதற்கும் சாட்சியாய் இருந்தான். (மத்: 17:1-4; மாற்: 9:2-4; லூக்: 9:28-32; 2பேதுரு: 1:17-18)
13)           மீனின் வாயில் வரிப்பணத்தைக் கண்டுபிடித்தான். (மத்: 17:24-27)
14)           எல்லாவற்றையும் விட்டு கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களுக்குக் கிடைக்கும் வருங்கால மகிமையைப் பற்றி நம்பிக்கை ஏற்பட்டது. (மத்: 19:27-30; மற்: 10:28-31)
15)           கடைசி பஸ்கா பண்டிகையில் பேதுரு இயேசு அவன் காலைக் கழுவுவதற்கு முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. (யோவான்: 13:6-9)
16)           கிறிஸ்துவிடம் தன் சொந்த விசுவாசத்தைக் கூறினான். ஆனால் எதிர்வரும் இடறலைப் பற்றி எச்சரிக்கப்பட்டான். (மத்: 26:33-35)
17)           அவன் கெத்செமனே என்னும் இடத்திற்கு இயேசுவோடு கூடப் போனான். (மத்: 26:36-40)
18)           அவன் மல்குஸ் என்பவனுடைய காதை வெட்ட தேவையான தைரியம் உடையவனாயிருந்தான். (யோவான்: 18:10)
19)           அவரைப் பிடித்துக் கொண்டு போகும்போது தன் தலைவருக்குப் பின் சென்று போக அவன் தைரியம் உடையவனாயிருந்தான். அவன் மறுதலிப்புக்கு மனங்கசந்து வருத்தப்பட பணிவுள்ளவனாயிருந்தான். (மத்: 26:69-75)
20)           அவன் முதல் ஆளாகக் கல்லறையினிடத்திற்கு ஓடினான். (லூக்: 24:12)
21)           அவன் தனியாக இருக்கும்போது உயிர்த்தெழுந்த கிறிஸ்து தரிசனமானார். (லூக்: 24:34)
22)           அவன் இயேசு பரமேறின நாளில் சபை கூடியிருந்த இடத்தில் தங்கி இருந்தான். (அப்: 1:13)
23)           கர்த்தர் சப்பாணியைக் குணமாக்கவும், மரணமடைந்தவனை உயிரோடு எழுப்பவும் அவனுக்கு வல்லமை கொடுத்தார். (அப்: 3:4; 9:36)
24)           அவன் சிறையில் அடைக்கப்பட்டான். சாட்டையால் அடிக்கப்பட்டான். விடுவிக்கப்பட்டான். (அப்: 5:12-42)
25)           சமாரியாவில் தேவ வசனத்தை ஏற்றுக்கொண்டவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற அவன் தெரிந்து கொள்ளப்பட்டான். (அப்: 8:14)

26)           அவன் கொர்நேலியு வீட்டிற்கு அனுப்பப்பட்டான். (அப்: 11:2; 11:18)
27)           ஏரோது அவனைச் சிறையில் அடைத்தான். ஆனால் அவன் அற்புதமாக விடுவிக்கப்பட்டான்.

4.          பலவீனம் & தவறுகள்.
1)              சிந்திக்காமல் அடிக்கடி பேசுவது; அவசரப்படுவது, உணர்ச்சி வசப்படுவது.
2)              இயேசுவின் விசாரணை சமயத்தில் இயேசுவை நன்றாகத் தெரிந்திருந்தும் மூன்று தடவைகள் மறுதலித்தான்.
3)              புறஜாதி கிறிஸ்தவர்களைச் சமமாக நடத்துவது மிகவும் கஷ்டம் என்று பின்னால் தெரிந்து கொண்டான். பரி.பவுல் பேதுருவின் குணத்தைக் கண்டித்தார். ஆனால் மூப்பர்கள் இளம் அப்போஸ்தலர்களோடு ஒத்துழைத்து கடைசி வரைக்கும் அவனோடு நண்பனாகத் தரித்திருந்தார்கள். (2பேதுரு 3:15)
4)              தேவன் அவனை மன்னித்து, காப்பாற்றி திரும்பவும் தலைவனாக்கினார்.


5.          அவன் வாழ்க்கையின் மூலம் உள்ள பாடங்கள்.
1)           ஆர்வம், நம்பிக்கை, விவேகம் இவற்றின் மூலம் பின்பற்றக்கூடும். இல்லையென்றால் அது தோற்றுப்போகும்.
2)              தேவனின் நம்பிக்கையில்லாமை நமது உயர்ந்த நம்பிக்கையை ஈடு செய்யும்.
3)              பின்பற்றிச் செல்ல தவறியவர்களை விட தவறினவர்களைப் பின்பற்றுவது மிகச் சிறந்தது.


6.          வாதத்திற்கான கேள்விகள்.
1)              பேதுரு என்பதின் பொருள் என்ன?
2)              பெந்தெகொஸ்தே நாளில் அவன் பங்கு என்ன?
3)              அவனின் கலிலேயப் பின் சந்ததி அவனுடைய மனோபாவத்தில் பிரதிபலித்தது எப்படி?
4)              அவன் எப்படி ஜான் மாற்குவிற்கு உதவி செய்தான்?
5)              அவனுடைய சக்திகள் எவைகள்?
6)              அவனுடைய வாழ்க்கையின் மூலம் நாம் நமது வாழ்க்கை சாட்சியாய் விளங்க என்ன கற்றுக்கொள்ள முடியும்?
7)              ஆதி கால சபைக்கு அவன் எப்படி உதவி செய்தான்?





மொழிபெயர்ப்பு:
திருமதி மேபல் பட்டுவின் தாயார்,
பரி.யாக்கோபின் சபை, கோலாலம்பூர்.


டைப்செட்டிங்
திருமதி மேபல் பட்டு,
பரி.யாக்கோபின் ஆலயம், கோலாலம்பூர்




No comments:

Post a Comment