43. எத்திரோ
மோசேயின் மாமன்
(மீதியானின் ஆசாரியன்)
முக்கிய
வசனம்:
"கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தியரின்
கைக்கும், பார்வோனின் கைக்கும் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையும் குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டான்". (யாத்திராகமம் 18:9)
சுருக்கமான
குறிப்புகள்:
·
எத்திரோ,
மீதியானின் ஆசாரியன், மோசேயின் மாமன்.
·
சிப்போராள்,
எத்திரோவின் ஏழு குமாரத்திகளில் ஒருத்தி,
மோசேயின் மனைவி.
·
மற்ற தேவர்களை வணங்கிய எத்திரோ
"கர்த்தர் எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்" என்று
ஒப்புக்கொண்டான்.
·
எத்திரோ மோசேயின் நியாயம்
விசாரிக்கும் பாரத்தைக் குறைக்க, "ஆண்டவருக்கு முன்பாக மக்களுக்காக நியாயம் விசாரிக்கும் பெரிய காரியங்களை
மட்டும் உம்மிடம் கொண்டு வரட்டும்", என்று அறிவுரை கூறினான். (யாத்திராகமம் 18:19)
முன்னுரை:
அவரது கதை
"எத்திரோ" என்ற பெயருக்கு
"மிகவும் பிரசித்தி பெற்றவர்" என்று பொருள். எத்திரோ,
மெல்கிசெதேக் போன்றவர்கள்- இஸ்ரவேலர்கள்
இல்லாவிட்டாலும் கூட மெய்யான தேவனை வழிபட்டவர்கள், பழைய ஏற்பாட்டில் முக்கிய பாத்திரம் வகித்தவர்கள். ஆண்டவருக்கு உலகத்தின்
மேல் இருந்த அக்கறையான பங்களிப்பை நமக்கு நினைவூட்டுபவர்கள். ஆண்டவர் தன்
சித்தத்தை நிறைவேற்ற ஒரு தேசத்தைத் தேர்ந்த்தெடுத்திருந்தாலும்,
அவருடைய அன்பும் கருணையும் எல்லா தேசங்கள் மேலும்
இருந்தது.
எத்திரோவின் மதப் பிண்ணனி அவரை
விசுவாசத்தோடு ஆண்டவருக்கு பதில் சொல்ல தயார் படுத்தியது,
தடுக்கவில்லை. இஸ்ரவேலருக்கு ஆண்டவர் பன்னிய எல்ல
நன்மைகளையும் கண்டபோதும், கேட்ட போதும் அவர் ஆண்டவரை முழு மனதோடு வழிபட்டார். 40 வருடங்கள் மோசேயின் மாமனாக இருந்து, ஆண்டவருடைய நடத்துதலையும், அவர் எப்படி ஒரு தலைவனை உருவாகினார் என்பதையுன் எத்திரோ
பார்த்துக்கொண்டிருந்தார். மோசேக்கும் எத்திரோவுக்கும் இடையே இருந்த உறவு மிகவும்
நெருக்கமானதாக இருந்திருக்க வேண்டும் ஏனென்றால் மோசே தன் மாமன் சொன்ன அறிவுரைகளை
உடனே ஏற்றுக்கொண்டான். ஒருவரைப் பற்றி மற்றவர் அறிந்திருந்ததால் இருவருக்குமே
நன்மையாயிற்று. எத்திரோ மோசேயின் மூலமாக ஆண்டவரை தரிசித்தார்,
மோசே எத்திரொவின் மூலம் உபசரிப்பையும்,
மனைவியையும், ஞானத்தையும் பெற்றான்.
ஒரு மனிதன் மற்றொருவருக்கு கொடுக்கும்
மிகப்பெரிய பரிசு அவரை ஆண்டவருக்கு அறிமுகப்படுத்துவதுதான். ஆனால்,
அவர் மனதில் "நான் உனக்கு இவ்வளவு பெரிய
பரிசைக் கொடுக்கிறேன் ஆனால் எனக்குக் கொடுப்பதற்கு உன்னிடத்தில் ஒன்றுமில்லை"
என்று எண்ணினால் தவறு. உண்மையான நண்பர்கள் ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்து
வாங்கிக்கொள்வார்கள். நம் நண்பருக்கு ஆண்டவரை அறிமுகப்படுத்துவதின் முக்கியத்துவம்
அந்த நண்பரின் பரிசை குறைத்து மதிப்பிடக்கோடாது. இதில் விசுவாசிக்கு இரட்டிப்பு ஆசீர்வாதமே-
முதலில் அந்த நண்பன் கொடுக்கும் பரிசை பெற்றுக்கொள்வது அடுத்தது ஆண்டவரைப்பற்றிய
அறிவில் வளர்வது. ஆண்டவருக்கு ஒருவரை அறிமுகப்படுத்தும்ப்போது,
நாம் ஆண்டவரைப்பற்றிய அறிவில் வளர்வதைக்
காண்கிறோம். நாம் மற்றவர்களுக்கு ஆண்டவரை கொடுக்க கொடுக்க,
அவரை நமக்கே இன்னும் அதிகமாக கொடுக்கிறோம்.
ஆண்டவரைப்பற்றிய அறிவு ஒரு ஒழுங்கில்லாத
சிறிதானதா? அல்லது நம் வழ்நாள் முழுதும் தொடரும் உறவா? முதலில் நமக்கு ஆண்டவருடன் ஒரு வல்லமையான உறவு இருந்தால்தான் நாம்
மற்றவர்களுக்கு ஆண்டவருடைய வழிநடத்துதலின் உற்சாகத்தை கொடுக்க முடியும்.
எத்திரோவைப்போல " மற்ற எல்லா தேவர்களையும்விட நம் ஆண்டவரே பெரியவர்"
என்று சொல்லும் நிலையை நீங்கள் அடைந்துவிட்டீர்களா? (யாத்திராகமம் 18:11)
2. பலமும், சாதனைகளும்:
1. மோசேயின் மாமனாக இருந்த்ததன் மூலமாக எத்திரோ மெய்யான ஒரே தேவனைக்
கண்டுகொண்டார்.
2. அவர் செயல்முறையில் தவறுகளைத் திருத்துவதிலும், எல்லவற்றையும் ஒழுங்காகச் செய்வதிலும் சிறந்தவர்.
3. அவருடைய
வாழ்க்கையிலிருந்து பாடங்கள்:
1. மேற்பார்வை பார்ப்பதும், காரியங்களை நடத்துவதும் குழுவாகச் செய்யப்படவேன்டும்.
2. ஆண்டவருடைய திட்டம் எல்லா தேசங்களையும் சேர்ந்தது.
4. வேத ஆதாரங்கள்:
எத்திரோவினுடைய கதை யாத்திராகமம் 2:15- 3:1;
18:1-27 ஆம் வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
நியாயாதிபதிகள் 1:16 லும் சொல்லப்பட்டிருக்கிறது.
5. விவாதத்துக்கான கேள்விகள்:
1. ஆண்டவரால் உபயோகப்படுத்தப்பட்ட இரண்டு இஸ்ரவேலர் அல்லாதவர்களுடைய பெயர் என்ன?
2. எத்திரோவின் மகளுடைய பெயர் என்ன?
3. மோசேக்கு எத்திரோவின் அறிவுரை என்ன?
4. அவருடைய பலங்கள் என்ன?
5. அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள் என்ன?
மொழி
பெயர்ப்பு:
திருமதி
கிரேஸ் ஜட்சன்
பரி.
பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment