5. அப்னேர் – சவுலின் சேனையின் படைத் தலைவர்
முக்கிய வசனம்
ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனுஷனுமாகிய ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா? (2சாமுவேல் 3:38)
சுருக்கமான குறிப்பு
- · சவுலின் படைத் தலைவன்
- · சவுலின் குமாரனான இஸ்போசேத்தை ராஜாவாக்கி, தாவீதுக்கு விரோதமாக நடந்து கொண்டான். (2சாமு.2:8-9).
- · அவனுடைய உண்மையான பெயர் இஸ்பால்.
- · இவன் யோவாபினால் கொலை செய்யப்பட்டான்.
- · தனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் படியாகவும், யூதாவையும் இஸ்ரவேலையும் ஒன்றாக இணைக்கும் படியாகவும், தாவீதுடன் சேர்ந்து கொண்டான்.
முகவுரை – இவனுடைய சரித்திரம்
அப்னேர்
என்ற பெயர் ‘என் தந்தை ஒரு தீபம்’ என்ற பொருள்படும். அப்னேரின் தந்தையான நேர் என்பவர்
சவுலின் தந்தையான கீஸ்-இன் சகோதரன். இதினால் சவுலும் அப்னேரும் ஒன்றுவிட்ட சகோதர்ர்.
கோலியாத்துடன் சண்டையிட்ட பின் இவன் தாவீதை சவுலினிடம் கூட்டிக் கொண்டு போனான் (1சாமு.17:17-57).
சவுல் தாவீதைப் பின் தொடர்ந்த போது அப்னேரும் சவுலோடு கூடச் சென்றான் (1சாமு.26:3-14).
சவுல் மரித்து 5 ஆண்டுகளுக்குப் பின் கிபியாவில் பெரிஸ்தியரிடம் தோல்வியுற்றபின், அப்னேர்,
சவுலின் குமாரனான இஸ்போசேத்தை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக்கினார் (2சாமு.2:8,9). தாவீது
ஆட்சி செய்த யூதாவைத் தவிர மற்றவர்கள் அவனைத் தங்கள் ராஜாவாக ஏற்றுக் கொண்டார்கள்.
அமாவாசி நாளின் வருந்தில் அப்னேர் சவுலின் பக்கத்தில் இருந்தான் என்பது அவனடைய முக்கியத்துவத்தைக்
காண்பிக்கிறது (1சாமு.20:25). அப்னேரின் தலைமையின் கீழ் இஸ்ரவேலுக்கும், தாவீதின் சகோதரியாகிய
செருயாவின் குமாரனாகிய யோவாபின் தலைமையின் கீழ் யூதாவின் மனிதருக்கும் இடையே கிபியோனில்
பெரிய யுத்தம் நடைபெற்றது. அப்னேர் தோற்கடிக்கப்பட்டு ஓடிப்போனான். யோவாபின் இளைய சகோதரனாகிய
ஆசகேல் அப்னேரைப் பின்தொடர்ந்து துரத்திக் கொண்டு போனான். அப்னேர் தன்னைத் தற்காத்துக்
கொள்ளும்படி ஆசகேலைக் கொன்று போட்டான். சவுலின் மறு மனையாட்டியாகிய ரிஸ்பாளை அப்னேர்
மணந்து கொண்டதால் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் அவனை நிந்தித்த படியினால், அப்னேர்
கோபங் கொண்டு சவுலின் குடும்பத்தை விட்டு விட்டுத் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டான்.
தாவீது அவனை நிந்தித்த படியினால் அப்னேர் கோபங் கொண்டு சவுலின் குடும்பத்தை விட்டு
விட்டுத் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டான். தாவீது அவனைத் தன் படைத் தலைவனாக
ஆக்குவதாக வாக்கு கொடுத்தான். இதற்குப் பதிலாக அப்னேர் இஸ்ரவேலர் அனைவரையும் தாவீதின்
பக்கமாக கொண்டு வரவேண்டும். ஆனால், அப்னேர் எதுவும் செய்வதற்கு முன்பே, ஆசகேலின் கொலைக்குப்
பழிவாங்கும்படி அவனது மூத்த சகோதரர்களான யோவாப், அபிசாய் ஆகியவர்களால் அப்னேர் கொலை
செய்யப்பட்டான். ஆனால் உண்மையில் அப்னேர் தாவீதுடன் சேர்ந்து தங்களை வெறுத்து விடுவான்
என்ற பயமும் பொறாமையுமே காரணமாக இருந்தது. நம்பிக்கைத் துரோகமான இந்தக் காரியத்தைத்
தாவீது வெறுப்புடனும் கோபத்துடனும் பார்த்த போதிலும் அப்போதிருந்த நிலைமையின் காரணமாகத்
தாவீது அந்தக் கொலைக்காகப் பழிவாங்காமல் விட்டு விட்டான். ஆனால் அப்னேரின் சவ அடக்கத்தில்
பங்கு கொண்டு அவனுக்காக துக்கித்து, அழுது, அவனைக் குறித்து பேசி அவன்பால் தனக்குள்ள
மரியாதையைக் காண்பித்தான் (2சாமு.3:33-34).
அப்னேரும்
தாவீதும் ஒருவருக்கொருவர் எதிராகப் பார்த்துக் கொண்ட போதிலும் அவர்கள் ஒருவர் மீது
மற்றவர் வைத்திருந்த மரியாதையை வேதாகமம் ஓரளவுக்கு நமக்குக் காண்பிக்கிறது. ஒரு வாலிபனாகத்
தாவீது அப்னேரின் கீழ் சேவை செய்திருக்கிறான். ஆனால், பின்பு தாவீதைக் கொலை செய்வதற்கு
சவுல் மேற்கொண்ட உபாயங்கள் அப்னேரின் மூலமாகவே செயல்படுத்தப் பட்டன. சவுலின் மரணத்திற்குப்
பின் அப்னேர் தற்காலிகமாக அரச குடும்பத்தின் அதிகாரத்திற்கு ஆதரவளித்தான். ஆனால், அப்னேருக்கும்
சவுலின் குமாரனாகிய இஸ்போசத்துக்கும் இடையே ஏற்பட்ட மனவருத்தத்தினால், தாவீது ராஜாவாகும்படி
ஆதரவளிக்க அப்னேர் தீர்மானம் செய்தான். இவ்வாறாக இஸ்ரவேலை ஒன்றுபடுத்த முயற்சி செய்த
சமயத்தில் தானே அப்னேர் யோவாபினால் கொலை செய்யப்பட்டான்.
பல
வருடங்களுக்கு முன் அப்னேரின் தலைமையின் கீழ் தாவீதின் யுத்த வீரர்களுக்குமிடையே நடைபெற்ற
போரில் அப்னேர் தோல்வியுற்று ஓடிப் போகையில் யோவாபின் சகோதரனான ஆசகேல் அவனைப் பின்
தொடர்ந்தான். தன்னைப் பின் தொடர வேண்டாம் என்று அப்னேர் 2 முறை கேட்டுக் கொண்ட போதிலும்
ஆசகேல் மறுத்து விட்டான். எனவே, அப்னேர் அவனைக் கொன்று போட்டு விட்டான். தன் சகோதரனுக்காகப்
பழிவாங்க யோவாப் தீர்மானமாயிருந்தான்.
சவுலின்
குடும்பம் பலவீனப்பட்டு, தாவீது ராஜாவாகப் போகிறான் என்பதை உணர்ந்து அப்னேர் இடம் மாறத்
தீர்மானித்தான். தாவீது அரசனாவதற்கு உதவிசெய்தால், அதற்குப் பதிலாகத் தாவீது தன்னைத்
தனது சேனையின் படைத் தலைவனாக ஆக்குவான் என்று அவன் எதிர்ப்பார்த்தான். இதற்குத் தாவீது
விருப்பம் தெரிவித்ததும் யோவாபின் செயலுக்கு மற்றாரு காரணமாயிற்று.
அப்னேர்
தனது அறிவு, சுய சித்தத்தின்படி வாழ்ந்தான். அவனைப் பொறுத்த மட்டும், தனது திட்டத்திற்கு
ஏற்றதாக இருக்குமானால், தேவன் தான் ஒத்துழைக்கக் கூடிய ஒருவர். அதாவது தேவன் விரும்புவதை
அவன் செய்வான். அல்லவென்றால் தனக்குச் சிறந்ததாகத் தோன்றுவது எதுவோ அதையே செய்தான்.
தேவனுக்கு நிபந்தனை விதித்து அவர் விரும்புவதைச் செய்யும் சுபாவம் நமக்குள்ளும் இருப்பதை
நாம் உணரலாம். அப்னேர் எப்ரோனிலுள்ள தனது கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான் (2சாமு.3:32).
விதியின் விளையாட்டு என்று சொல்லத்தக்கதாகக் கொலை செய்யப்பட்ட அவனுடைய தலைவன் இஸ்போசேத்தின்
தலையும் அதே கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டது (2சாமு.1-2,12).
1.
அவனுடைய பலமும் சாதனைகளும்
1.1.
சவுலுடைய சேனையின் படைத் தலைவனாக இருந்தான்.
1.2.
இவன் மிகத் திறமை வாய்ந்த ஒரு சேனைத் தலைவன்.
1.3.
இஸ்போசேத் என்ற பலமற்ற அரசனின் கீழ் பல ஆண்டுகளாக இஸ்ரவேலை
ஒன்றுபடுத்தி வைத்திருந்தான்.
1.4.
இஸ்ரவேல், யூதா முழுமைக்கும் தாவீது அரசனாக வேண்டும்
என்ற தேவனின் திட்டத்தை இவன் அறிந்து ஏற்றுக் கொண்டான்.
2.
இவனுடைய பலவீனமும் தவறுகளும்.
2.1.
தேவனுடைய திட்டம் என்ற திட நம்பிக்கை இல்லாதவான். யூதாவையும்
இஸ்ரவேலையும் இணைப்பதில் தனது நலத்தையே நாடினான்.
2.2.
சவுலின் மரணத்திற்குப் பின் சவுலின் மறுமனையாட்டியுடன்
சயனித்தான்.
3.
அவன் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்கள்.
3.1.
நிபந்தனை விதித்து அரைமனதுடன் தேவனுக்குப் பிரியமானதைச்
செய்வதைக் காட்டிலும், முழுமையான நிபந்தனையற்ற ஒத்துழைப்பையே தேவன் விரும்புகிறார்.
3.2.
இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் படைத் தலைவனாக நீண்ட நாட்களாக
அவன் செய்த அனைத்தும் அதிகமாகக் குறிப்பிடப்படவில்லை.
4.
வாசிக்க வேண்டிய வேத பகுதிகள்
4.1.
1சாமு.14:5-2சாமு.4:12; 1இராஜா.2:5,32; 1நாளா.26:28;
27:16-22-லும் இவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.
5.
விவாதிக்க வேண்டிய கேள்விகள்:
5.1.
அப்னேர் யார்?
5.2.
அவன் ஏன் தாவீது ராஜாவுக்கு விரோதமாக அவனை எதிர்த்தான்?
5.3.
அவனைக் கொலை செய்தது யார்?
5.4.
அவன் தன் நாட்டுக்காக என்னென்ன செய்தான்?
5.5.
அவனுடைய சுயநலமான எண்ணங்கள் யாவை?
மொழிபெயர்ப்பு:
திருமதி டப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங்
ஜெயா
No comments:
Post a Comment