Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, October 16, 2011

142. பென்யமீன்


பென்யமீன்
யோசேப்பின் சகோதரன் எகிப்தின் பிரதம மந்திரி

முக்கியமான வசனங்கள்: ஆதி 42:15 “யோசேப்பு அவர்களை நோக்கி, உங்கள் இளைய சகோதரன் (பென்யமீன்) இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக் கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன். இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்கள் சகோதரனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள். உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும் நீங்கள் காவலில் இருக்கவேண்டும். (ஆதி: 45:20) ஆனால் நீங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டு வாருங்கள்.(ஆதி: 45:34)

1.              சுருக்கமான விளக்கம்.
1.1                    பென்யமீனும் யோசேப்பும் யாக்கோபின் பட்சமுள்ள குமாரர்கள். யாக்கோபுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். (ராகேல், லேயாள்) இந்த இரண்டு குமாரர்கள் யாக்கோபுக்கும் ராகேலுக்கும் பிறந்தவர்கள். பென்யமீனைப் பிரசவிக்கும்போது ராகேல் மரணமடைந்தாள். இதனால் தகப்பன் யாக்கோபு தன் இளைய குமாரனை அதிகமாய் நேசித்தான். எகிப்தியர்களிடம் யோசேப்பு விற்கப்பட்டபிகு, எல்லா நேரங்களிலும் வீட்டில் இருந்த பென்யமீனிடம் யாக்கோபு மிக நெருக்கமாய் இருந்தான். நெருக்கடி எழும்பும் வரைக்கும் அவன் மற்ற சகோதரர்களோடே வேட்டைக்குப் போவதற்கும், ஆடுகளைக் கவனிக்கப் போவதற்கும் அனுமதிக்கப்படவில்லை.
1.2                    பரம்பரைத் தலைவனான யாக்கோபுடைய 12 குமாரர்களில் பென்யமீன் கடைசி இளைய குமாரன். ராகேல் அவன் தகப்பனுடைய மிருதுவான அன்பைப் பகிர்ந்து கொண்டாள். பென்யமீன் வயது முதிர்ந்த தகப்பனுக்கு மிகுந்த ஆறுதலாயிருந்தான். அவனுடைய மூத்த பூரண சகோதரனாகிய யோசேப்பின் இயற்கயான அன்பை விசேஷித்த உற்சாகத்தோடு திருப்பிக் கொடுத்தான்.(ஆதி: 45:14) பென்யமீன் பாலஸ்தீனாவில் பிறந்ததினால் அவன் வாழ்வு அவனுடைய தாயின் சொந்தமாக விலை மதிக்கப்பட்டது. (ஆதி: 35:16)
1.3                    எகிப்திலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் எகிப்தில் யோசேப்பு தலைவனாயிருந்தான். அந்தக் காலத்தில் அவன் குணம் நேசமான, நன்றாக அன்புகூர்ந்த மகனாகவும், சகோதரனாகவும் எட்டிப் பார்த்தது.
1.4                    முழுக் குடும்பத்தினருக்கும் அவன் பட்சமுள்ளவன். மற்றவர்கள் கவனமாக நோக்கிப் பார்க்கப்பட்ட ஒருவனாகவும், மற்றவர்கள் கவனமாக காப்பாற்றப்படவும், போஷிக்கப்படவும், நோக்கிப் பார்க்கப்பட்ட ஒருவனாகவும் அவன் வெளிப்படையாய்த் தோன்றினான். (ஆதி: 44:20)

1.5                    இந்தக் குறிப்பிலிருந்து அவனுடைய குலத்தார் எண்ணிக்கையில் குறைவுள்லவர்களாயிருந்தாலும் தனிப்பட்ட முறையில் பலமுள்ளவர்களாயும் போரில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் விளங்கினார்கள்.

1.6                    பென்யமீனின் ராஜ்யம் (நியா: 3:15) எப்பிராயீம், யூதாவுக்கு இடையில் ஏற்பட்டு அவன் சகோதரன் பென்யமீன் மூலம் யோசேப்போடு சரித்திரப் பிரகாரமாக இணைக்கப்பட்டது.

1.7                    யோசேப்பு எகிப்தில் மற்றச் சகோதரர்களோடு அவனைப் பார்க்கும் பொழுது உள்ளம் பொங்கி எழுந்ததால் பென்யமீனை தயாள சிந்தையோடு உபசரித்தான் (ஆதி: 43:30). அவன் பென்யமீனைப் பார்த்த பொழுது அழகான யோசேப்பின் மேஜையிலிருந்து போஜனத்தில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பும்போது அவர்கள் எல்லாருடைய பங்குகளைப் பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்து மடங்கு அதிகமாயிருந்தது. (ஆதி: 43:34)

1.8                    யோசேப்பு தன் வெள்ளிப் பாத்திரம் பென்யமீனின் சாக்குப்பையில் போடும்படியாக ஒழுங்குபடுத்தினான் (ஆதி: 44:2). யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம் அவனுடைய அதிகாரத்திற்கு அடையாளமாயிருந்தது. அது தெய்வீகமான சக்தி வாய்ந்தது என்று கருதப்பட்டது. ஆதலால் அதைக் களவாடுவது ஒரு பயங்கரமான குற்றம் (ஆதி: 44:2).

1.9                    எகிப்தியரிடம் யோசேப்பை விற்ற யூதா பென்யமீனிடம் மிகுந்த அக்கறையுள்ளவனாயிருந்தான் (ஆதி: 44:16-34). அவன் பென்யமீனிடத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தான். அவன் பென்யமீனுக்காகத் தைரியமாய்ப் பேசினான். யூதா இளைய பென்யமீனின் பாதுகாப்பிற்குத் தான் உத்தரவாதம் என்று யோசேப்பிடம் வாக்குத்தத்தம் பண்ணனான் (ஆதி: 44:9). அவன் பென்யமீனுக்காக அடிமையாக இருக்கத் தயாரானான். (ஆதி: 44:22-23) யூதா பென்யமீன் தன் தகப்பனிடத்திற்குத் திரும்பப் போக வேண்டும் என்று பென்யமீனின் தண்டனையைத் தான் அனுபவிக்க முன் வந்தான்.

2.              அவன் கதை
2.1                    பென்யமீன் என்பதற்குவலது கையின் குமாரன்என்று பொருள். இந்தப் பெயர் அவன் தகப்பன் யாக்கோபினால் கொடுக்கப்பட்டது. அவன் தாயார் மரண காலத்தில் ராகேல் முன்னதாகவே புதிதாகப் பிறந்த பிள்ளைக்கு பெனொனி, மனவருத்தத்தின் குமாரன் எனப் பேரிட்டாள் (ஆதி: 35:18). பரம்பரைத் தலைவன் (தகப்பன்) யாக்கோபின் 12 குமாரர்களில் பென்யமீன் இளையவன். அதே தாயார் ராகேல் என்பவருக்குப் பிறந்த குமாரன் அவன் சகோதரனாகிய யோசேப்புடன்கூட அவன் தகப்பன் யாக்கோபுடன் பணிவையும் அன்பையும் பகிர்ந்து கொண்டான். பென்யமீன் வயதான தகப்பனுக்கு மிகுந்த ஆறுதலுள்ளவனாயிருந்தான். அவன் மூத்த, முழுமையான சகோதரனாகிய யோசேப்பின் இயற்கையான அன்பை விசேஷமான அன்பைத் திரும்ப செலுத்தினான் (ஆதி: 45:14). அவன் பாலஸ்தீனாவில் பிறந்தான். அவன் பிறக்கும்போது அவன் தாய் மரணமடைந்தாள் (ஆதி: 35:16).

2.2                    அவன் சகோதரன் யோசேப்பு, அவன் சகோதரர்களால் எகிப்துக்கு அடிமையாக விற்கப்பட்டான். இது தேவனின் தெய்வீகச்சக்தி. பிறகு அவன் சகோதரர்கள் அவர்கள் தகப்பன் யாக்கோபால் தானியம் வாங்க எகிப்துக்கு அனுப்பப்பட்டார்கள். பென்யமீன் முழுக் குடும்பத்திற்கும் பிரியமுள்ளவனாயிருந்தான். நான் அநேகமான பிள்ளைகளுக்குத் தகப்பனாக இருந்தாலும் (ஆதி: 46:21); மற்றவர்கள் கவனமாகக் காப்பாற்றப்படவும், போஷிக்கப்படவும் வெளிப்படையாகத் தெரிந்து கொள்ளப்பட்டான் (ஆதி: 44:20), அவன் சரித்திரம் அவன் குலத்தில் தோன்றினதால் அவனுக்குப் (பென்யமைட்) என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அவன் 12 பேர்களில் கடைசியானவனாயிருந்தாலும் பயங்கரமான யுத்தம் செய்கிற குலத்தவர்களின் ஸ்தாபகர் ஆனான். ஆனால் அவர்களின் பலமும், யுத்த சம்பந்தமான தன்மைகளும் அவர்களின் கரடு முரடான தேசத்தின் இயற்கையான முடிவாயிருந்தது. ஒருவர் வெளியிலுள்ள எதிரிகளின் தாக்குதலுக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். இவைகள் சாகப் போகும் யாக்கோபினால் முன்னறிவிக்கப்பட்டது (ஆதி: 49:27). அவன் பரம்பரை சிறிய எண்ணிக்கை உள்ளவர்களாயிருந்தாலும், தனிப்பட்ட முறையில் பலமுள்ளவர்களாயும், போரில் தேர்ச்சி பெற்றவர்களாயுமிருந்தார்கள். அவர்கள் வனாந்திரப் போர்வீரர்கள் (எண்: 1:37;26:41). பின்னால் யூதாவம்சத்தாரும் பென்யமீனியர்களும் ஒன்று சேர்ந்தார்கள். பென்யமீனைட் பென்யமீன் கோத்திரத்தில் ஒரு உறுப்பினன் (நியா). எருசலேமில் உள்ள வாசல்களில் ஒன்று பென்யமீன் வாசல் என்று அழைக்கப்படுகிறது (எரே: 20:1;27:13;38:7, சகரி: 14:10). புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் முதன்மையான அப்போஸ்தலனாகிய பவுல் பென்யமீன் கோத்திரத்திலிருந்து தோன்றினார். பவுல் ஒரு சிறுவன்’ (அப்: 13:9) பென்யமீன் கோத்திரத்தின் இரத்த உறவில் ஒன்று சேராத யூதராயிருந்தார் (ரோமர்: 11:1).

2.3                    முடிவுரை: யோசேப்பும் பென்யமீனும் இருவரும் பெரிய தலைவர்களாகத் தோன்றினார்கள். யோசேப்பைப் பற்றிச் சொல்ல அதிகம் இருந்தது. பென்யமீனுக்கு அதிகக்குறைவான குறிப்புகளே இருந்தது. ஆன போதிலும் யோசேப்பு பவுல் மூலமாக அவன் (பென்யமீன்) வரலாறு தொடர்ந்தது.

3.              வேதாகமக் குறிப்பு: அவன் விவரங்கள் ஆதியாகமத்தில் இருக்கின்றன.

4.              விவாதிப்பதற்கான கேள்விகள்:
4.1                    அவனுடைய பெற்றோர் யார்?
4.2                    அவன் எப்படி யாக்கோபின் பட்சமுள்ள குமாரனாகவும், யோசேப்பின் விசேஷமான சகோதரனாகவும் பொருத்தமாயிருந்தான்?
4.3                    யாக்கோபின் கோத்திரத்தார் எகிப்துக்குத் திரும்பி வர அவன் பங்கு என்ன?
4.4                    பென்யமீன் பிந்தி எகிப்துக்கு வந்தபோது யோசேப்பு எப்படி உபசரித்தான்?
4.5                    பரி.பவுல் பென்யமீன் வரலாற்றோடு எப்படி சம்பந்தப்பட்டவராயிருந்தார்?

மொழிபெயர்ப்பு:
திருமதி நாயகம்
பரி.யாக்கோபின் ஆலயம், கேலாலாம்பூர்

No comments:

Post a Comment