44. யேசபேல்
ஆகாப் ராஜாவின்
மனைவி
முக்கிய
வசனம்:
" தன் மனைவியாகிய யேசபேல்
தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய தன்னை விற்றுப்போட்ட
ஆகாபைப்போல் ஒருவனுமில்லை". (1 ராஜாக்கள் 21:25)
சுருக்கமான
குறிப்புகள்:
·
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின்
மனைவி யேசபேல்.
·
பாகாலை வழிபட்டுவந்த அவள்
எலியாவைப்போன்ற ஆண்டவரின் தீர்க்கதரிசிகளைக் கொல்ல முயன்றாள்.
·
நாபோத்தைக் கொல்லவும்
திட்டமிட்டாள்.
·
அவள் யெகூவினால் கொல்லப்பட்டாள்.
முன்னுரை:
யேசபேலின் கதை
யேசபேல் சீதோனியரின் ராஜாவாகிய
ஏத்பாகாலின் குமாரத்தி. இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மனைவி.(1 ராஜாக்கள் 16:31).
அவள் பாகாலையும், அஷேராவையும் மற்ற பினிசியர்களின் விக்கிரகங்களையும் வணங்கும் சீரியரின்
வழிபாட்டு முறையை சமாரியா தேசத்துக்குக்கு அறிமுகப்படுத்தினாள். இந்த வழிபாட்டு
முறையின் மூலமாக ஆண்டவருக்குப் பிரியமில்லாத, கானானியருக்கு எதிராக ஆண்டவருக்குக் கோபமூட்டிய பல அருவருப்பான காரியங்களை
தேசத்துக்குள் கொண்டுவந்தாள். இந்த விக்கிரக ஆராதனையில் அவள் அதிக தீவிரம்
காட்டியதால் தன் வீட்டின் மேஜையில் பாகாலின் தீர்க்கதரிசிகள் 450 பேருக்கும், அஷேராவின் தீர்க்கதரிசிகள் 400 பேருக்கும் உணவு கொடுத்தாள்.(1 ராஜாக்கள் 18:19).
ஆகாப் ராஜா இந்த வேற்று தேசத்து ராணியை
இஸ்ரவேலின் அரியணைக்கு கூட்டிவந்த நாள் மிகவும் மோசமான நாள். தன் வேற்று நாட்டு
மனைவிகளை தன்னிடமிருந்து தள்ளியே வைத்திருந்த சாலெமோன் ராஜாவைப்போல் இல்லாமல்,
ஆகாப் யேசபேலுக்கு நாட்டை நடத்துவதற்கும்,
சில சமயங்களில் ஆகாபை ஆலோசிக்காமல் முடிவெடுக்கவும்
உரிமை கொடுத்து வைத்திருந்தான்.(1 ராஜாக்கள் 21:25). ஆண்டவரின்
தீர்க்கதரிசிகளை யேசபேல் கொன்று போட்ட போதுதான் (1 ராஜாக்கள் 18:13) வெகுண்டெழுந்த மக்கள் எலியாவின் தலைமையில் பாகாலின் தீர்க்கதரிசிகளை
முற்றிலுமாக அழித்துப் போட்டனர். (1 ராஜாக்கள் 19:1). இந்த செய்தி அறிந்து யேசபேல் மிகுந்த சினமடைந்த செய்தியைக் கேட்ட எலியா
பயந்து போய் தன் உயிரைக் காத்துக்கொள்ள ஓடிவிட்டான். (1 ராஜாக்கள் 19:3).
மேக்பெத்தின் மனைவியைப் போல் யேசபேலும்
தன் கணவனைவிட அதிக வலுவான கொள்கைகள் உடையவளாய் இருந்தாள். ராஜாவின் கையில் மட்டுமே
இருக்க வேண்டிய அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு நாபோத்தைக் கொன்றாள். (1 ராஜாக்கள் 21:14). அதன் பின்பு ஆகாப் பல நாட்களாக ஆசைப்பட்ட
நாபோத்தின் நிலங்களை போய் கவர்ந்து கொள்ள அனுப்பினாள். தனக்காக
இல்லாவிட்டாலும் தன்னிடமிருந்த அதிகாரத்துக்காகவே இந்தச் செயலை அவள் செய்ததனால்
அந்த தீர்க்கதரிசியின் சாபம் அவள் மேல் விழுந்தது. (1 ராஜாக்கள் 21:23). இரக்கமற்ற யெகூவின் கையில் அவளுக்கு ஏற்பட்ட பயங்கரமான முடிவைப்பற்றி
மிகவும் விளக்கமாக 2 ராஜாக்கள் 9: 30-37 வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. யெகூவின் வார்த்தையிலே அவன்
ஊழியக்காரரிடம் அவளை அடக்கம் பண்ணும்படி சொன்னபோது, " அவள் ஒரு ராஜ குமாரத்தி" என்றான். அவர்கள் திரும்பி வந்து,
அவளுடைய தலை ஓட்டையும், கால்களையும், உள்ளங்கைகளையும் தவிர வேறொன்றையும் காணவில்லை சொன்னபோது,
யெகூ எலியாவின் தீர்க்கதரிசனத்தை நினைவு
கூர்ந்தான்(2 ராஜாக்கள் 36-37). அவள் இறந்த போது மிகவும் வயது சென்றவளாக இருந்திருக்க வேண்டும். ஆகாப் இறந்த
பிறகு 14 ஆண்டுகள் வாழ்ந்த யேசபேல் தன் கணவனின் ஆட்சியின் போது இருந்ததைப்போலவே தன்
மகன்களின் ஆட்சியின் போதும் அதேபோல் கொடுங்கோலாட்சி செய்தாள். இஸ்ரவேலை ஆண்ட
அரசிகளில் மிகவும் அறிவுள்ள ஆனால் மிகவும் கொடுமையான் அரசி யேசபேல் தான்.
சுருக்கமாக, வேதாகமத்தின் மிகவும் கொடுமையான பெண்களின் வரிசையில் முதல் இடம் வகிப்பது
யேசபேல்தான். ஆண்டவரை முற்றிலுமாக புறக்கணிப்போருக்கு உதாரணமாக வேதாகமம் அவள்
பெயரைத்தான் உபயோகிக்கிறது.(வெளி.2:20-21). இஸ்ரவேல் முழுவதும் தன் விக்கிரகங்களை வணங்குமாறு செய்தாள். இரண்டாவதாக,
மிகவும் அதிகாரம் உள்ளவளாக இருந்தாள். அவளிடம்
விக்கிரக ஆராதனை செய்யும் ஆசாரியர்கள் 850 பேர் இருந்தார்கள். நாபோத்தின் மரணத்துக்கும் அவள்தான் காரணம். யேசபேலையும்,
எலியாவையும் ஒப்பிடும்போது அவரவர் கடவுளிடம்
இருவருக்கும் இருந்த ஆழ்ந்த ஒப்புக்கொடுக்கும் குணத்தை நாம் பாராட்ட வேண்டும்.
2. பலவீனமும் தவறுகளும்:
1. ஆண்டவருடைய ஊழியக்காரர்களை வரிசைக்கிரமமாக இஸ்ரவேலிலிருந்து நீக்கினாள்.
2. பாகால் வழிபாட்டை முன்னேற்றி தேவையான பணமும் கொடுத்தாள்.
3. எலியாவைக் கொல்லுவேன் என்று மிரட்டினாள்.
4. ராஜாக்களும், ராணிகளும் எதை வேண்டுமானாலும் செய்யலாம், எடுத்துக்கொள்ளலாம் என்று நம்பினாள்.
5. தன்னிஷ்டம்போல் எல்லாவற்றையும் செய்ய தன் தீவிர நம்பிக்கையை பயன்
படுத்தினாள்.
3. அவளுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்:
1. தீவிர நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது, அந்த நம்பிக்கை எதன் மேல் இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
2. ஆண்டவரை புறக்கணிப்பது எப்பொழுதும் அழிவை நோக்கி இட்டுச்செல்லும்.
4. வேத ஆதாரங்கள்:
1 ராஜாக்கள் 16:31- 2 ராஜாக்கள் 9:37. யேசபேலின் பெயர் மிகுந்த தீமைக்கு மறுபெயராக வெளி. 2:20 ல் கூறப்படுகிறது.
5. விவாதத்துக்குரிய கேள்விகள்:
5.1.
வேதாகமத்தின் மிகவும் தீய
பெண்களில் ஒருத்தி என்று அவள் கூறப்பட்டது ஏன்?
5.2.
நாபோத்தின் சொத்துக்களை எப்படி
அபகரித்தாள்?
5.3.
அவள் பிரசித்தப் படுத்திய மதம்
என்ன?
5.4.
அவள் எப்படி இறந்தாள்?
5.5.
அவளுடைய வாழ்க்கையிலிருந்து நாம்
கற்ற பாடம் என்ன?
மொழி
பெயர்ப்பு:
திருமதி.
கிரேஸ் ஜட்சன்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment