Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Friday, October 14, 2011

41. எரேமியா


41.   எரேமியா 
சிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவர்

முக்கிய வசனம்:
 6 அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன். Exod 3:1-22; Exod 4:1-31; Exod 6:12; Exod 6:30;
 7 ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. 8 நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி, Ezek 3:9; Deut 31:6; Deut 31:8; Josh 1:5;  (ஏரேமியா
1:6 -8)


முக்கிய குறிப்புகள்:
  •  யூதாவின் கடைசி ஐந்து ராஜாக்களின் கீழ் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
  • அவருடைய ஊழியத்தில் துன்பப்பட்டார்.
  • தன் சிந்தைக்கு எதிராக நடக்கும் இளைஞன் என்று அழைக்கப்பட்டார்.
  • ஆவிக்குரிய புரட்சியின் ஊக்கியாக இருந்தார்.
  • விக்கிரக ஆராதனைக்கு எதிராக இருந்தார்.



முன்னுரை - அவருடைய கதை

         எரேமியா என்றால் "எஹோவா இழந்தார் (கருப்பையை) அல்லது "எஹோவா உயர்ந்தவர்" அல்லது "யாஹ்வே வீழ்த்தினார்" என்று பொருள். வர் அனடோத்தின் ஆசாரியனாகிய ஹில்க்கியாவின் மகன். முக்கியமான தீர்க்கதரிசிகளில் ஒருவர். கி.மு. 626 முதல் 580 வரை அற்புதமான ஊழியம் செய்தவர். அவருடைய பாவ அறிகக்கையை பவுல், அகஸ்டின், லூதர் ஆகியோருடைய பாவ அறிக்கையோடு ஒப்பிடலாம். "நான் உன்னை அறிவேன்", "நான் உன்னை அபிஷேகம் செய்கிறேன்", "நான் உன்னை நியமிக்கிறேன்', "நான் உன்னை அனுப்புகிறேன்', 'நான் உனக்குக் கட்டளை இடுகிறேன்', 'நான் உன்னுடனே இருக்கிறேன்', 'என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன்', 'நான் உன்னை தேசங்களுக்கு மேலாக வைக்கிறேன்' என்று மிகவும் பிரத்தியேகமாக அவருக்கு அழைப்பு வந்தது (1:5-10). ஹில்க்கியா அந்த கால கட்டத்தில் பிரதான ஆசாரியனாக இருந்திருக்க முடியாது (2 ராஜாக்கள் 22:4) இருந்திருந்தால் "அந்த ஆசாரியர்கள்" என்று பேசியிருக்க முடியாது (ஏரேமியா 1:11)  மற்றும் அனடோத்தின் ஆசாரியர்கள் இதாமார் வீட்டைச் சேர்ந்தவர்கள் (1 ராஜாக்கள் 2:26). ஆனால் வெகு காலமாக பிரதான ஆசாரியர்கள் பினெஹாஸ் வழியை சேர்ந்தவர்கள் (1 நாளாகமம் 6:13). ஏசாயா தீர்க்கதரிசி இறந்து 70 வருடங்கள் ஆன பிறகு, யோசியாவின் 13 ஆம் ஆண்டிலே, மிகவும் சிறிய வயதிலே, ஆன்டோத்திலே வசிக்கும்போது எரேமியா தீர்க்கதரிசனம் சொல்ல அழைக்கப்பட்டார். (எரேமியா 1:6). அதன் பிறகு எருசலேமில் ஒரு செய்தியை கொடுக்க அனுப்பப்பட்டார் (2:1). அவர் எல்லா ஊர்களையும், நகரங்களையும் சுற்றிப்பார்த்து, அங்கிருந்த மக்களுக்கு ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நீதியின் புத்தகத்தைப் பற்றி சொல்லவே சென்றதாக சிலர் நினைத்தனர் (11:2,6; 2 ராஜாக்கள் 22). அவர் அனடோத் திரும்பிய பின்பு அந்த ஊர் மக்கள் மற்றும் அவர் குடும்பத்தார் சிலரின் தீய செயல்களைக் குறித்து அவர் எதிர்த்து பேசியதால் அவர்கள் அவருக்கு எதிராக திட்டம் போட்டனர். அதனால் அவர் எருசலேமில் குடியேறினார் (11:21, 12:6).

         யோசியா ராஜாவின் ஆட்சியின் போது எரேமியா தீர்க்கதரிசி மக்களின் மத திருத்தங்களில் உதவினார். ஆனால் 18 ஆண்டுகளின் முடிவில் பார்வோன் படையெடுத்த போது ராஜா கொல்லப்பட்டார்.  அவருடைய மகன் சல்லும் அல்லது யெஹோஆகாஸ் (22:10-12) எகிப்தில் சிறைபடுத்தப்பட்டார். யோயாக்கீம் அவருக்குப் பின் ராஜாவானார். எரேமியா தீர்க்கதரிசி பல எதிர்ப்புகளுக்கிடையே தன் ஊழியத்தைத் தொடர்ந்தார். நாட்டைக் குறித்து அவர் சொல்லிய தீர்க்கதரிசனத்தால் மற்ற "ஆசாரியரும் தீர்க்கதரிசகளும்" அவரை குற்றம் சாட்டி அவரைக் கொலை செய்ய நினைத்தார்கள்.  ஆனால் ஆண்டவரை இப்படி எதிர்க்க ராஜாக்கள் விரும்பவில்லை. அதனால் எரேமியா சிறை படுத்தப்பட்டார் அல்லது மக்களுக்கு முன் வர தடை செய்யப்பட்டார். இந்த நிலைமையில் ஆண்டவர் எரேமியாவை தன் தீர்க்கதரிசனகளை எழுதும்படி கட்டளை இட்டார். இவற்றை பின்னாளில், "யோயாக்கீமின் நாலாவது" "நெபுகாத்நேசாரின் முதலாவது" வருடத்திலே, ஆலயத்திலே பாருக் வாசித்தான். யூதா தேசம் வளர்ந்து வரும் பாபிலோனின் பலத்தால் திணறும் என்று அதில் தெளிவாக எழுதியிருந்தது. இளவரசர்கள் பயந்து, ராஜாவிடம் எரேமியாவின் வார்த்தைகளைப் பற்றி சொன்னார்கள். ஆனால், சில பக்கங்களை வாசித்த பின், ராஜா அந்த பக்கஙளைக் கிளித்து, தீயில் இட்டு, எரேமியாவையும் பாருக்கையும் சிறை பிடிக்க உத்தரவிட்டான்.  ஆனால் ஆண்டவர் அவர்களைக் காத்து, மீண்டும் எரேமியாவை எழுத பணித்தார்.

         எரேமியா யோயாக்கீமையும் எச்சரித்தார். ஆனால் பலன் இல்லை (2 ராஜாக்கள் 23:12; எரேமியா 22:24-30). செதேக்கியா ராஜாவின் ஆட்சியின் போது கல்தேயர் எருசலேமை கைப்பற்றி தீயிட்டு கொளுத்துவார்கள் என்று திரும்பத் திரும்ப தீர்க்கதரிசனம் சொல்ல பணிக்கப்பட்டார். ஊரை விட்டு வெளியேறும் போது அவர் எதிரிகளோடு சேரப்போகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு, எருசலேம் பிடிபடும் வரை சிறையில் இருந்தார். அவரை மிகவும் மதித்த நெபுகாத்நேசார் அவரைக் காக்கும்படி தன் தளபதி நெபுசராதானுக்கு கட்டளை இட்டான். பாபிலோனுக்குச் செல்கிறாரா அல்லது தன் மக்களோடு இருக்கிறாரா என்ற முடிவு எடுக்கும்படி கேட்ட போது அவர் தன் மக்களோடு இருக்க முடிவு எடுத்தார். அதன் பின் மக்களை எகிப்துக்குப் பயந்து ஓட வேண்டாம் என்று எச்சரித்தார். ஆனால் கீழ்ப்படியாத மக்கள் எரேமியாவையும் பாருக்கையும் இழுத்துக்கொண்டு எகிப்துக்கு சென்றனர் (43:6). எகிப்திலும் அவர் மக்களை ஆண்டவரிடம் திருப்ப பாடு பட்டார். அவருடைய பிற்கால வாழ்க்கையைப் பற்றி அவர் எழுத்துக்களில் ஒன்றும் இல்லை. அவருடைய வார்த்தைகளால் கோபப்பட்ட யூதர்கள் அவரை எகிப்தில் கல்லெறிந்து கொன்றதாக பழங்கால எழுத்தாளர்கள் கூறுகின்றனர்.

           எரேமியா தீர்க்கதரிசி வாழ்ந்த காலத்தில் செபனியா, ஆபகூக், எசேக்கியேல், தானியேல் போன்றவர்களும் வாழ்ந்தனர். எரேமியாவை விட எசேக்கியேல் மத முறைமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவர்கள் இருவரும் கொள்கைகளிலும் வெளிப்பாடுகளிலும் வேறுபட்டு இருந்தார்கள். எரேமியா தீர்க்கதரிசியில் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து தீர்க்கதரிசனம் சொல்லும் போது வாழ்க்கைக்கு அதிக விருப்பம் இல்லாமல் வந்து, எங்கு தவறு நடந்தாலும் ஆண்டவருக்காக எதிர்த்து நின்று, உண்மைக்காக போராடி அதனால் ஆபத்தில் சிக்கிய ஒரு மனிதனைப் பார்க்கிறோம். ஆனால், எசேக்கியாவில் ஏற்கெனவே மிகவும் வலிமையான, தைரியமான ஒரு மனிதனில் ஆண்டவருடைய மகிமையான வல்லமை வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம்.

           இந்தப் பிண்ணனியில் எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகத்தைப் பற்றி பார்ப்போம்.


2. பலமும் சாதனைகளும்: 
1.     எரேமியா, புலம்பல் என்ற இரண்டு பழைய ஏற்பாட்டு பாடங்களை எழுதினார். புலம்பல் எரேமியாவுடையது என்று தொன்று தொட்டு கூறப்பட்டாலும், இப்போதுள்ள அறிஞர்கள் அதை ஒப்புக்கொள்வதில்லை.
2.    யூதாவின் கடைசி 5 ராஜாக்களின் காலத்தில் ஊழியம் செய்தார். (யோசியா, யோயாக்கீம், யோயாச்சின், செதேக்கியா, யெஹோ ஆகாஸ்)
3.    யோசியாவின் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டார்.
4.    அவரைக் கொல்ல அநேக முயற்சிகள் நடந்த போதிலும், ஆண்டவருடைய விசுவாசமான அறிவிப்பாளராக இருந்தார்.
5.    யூதா தேசத்தின் வீழ்ச்சியுற்ற நிலைமையைக் கண்டு மிகவும் துக்கப்பட்டதால் அவருக்கு "அழுகின்ற தீர்க்கதரிசி" என்ற பட்டம் கிடைத்தது.


3.       அவர் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்: 
1.     1.எரேமியாவுக்கு கிடைத்த அழைப்பு ஆண்டவர் எவ்வளவு அந்நியோந்நியமாக நம்மை அறிகிறார் என்பதை படிப்பிக்கிறது. நம் உடல்கள் உருவாகிக் கொண்டிருக்கும்போதே ஆண்டவர் நம் வாழ்க்கையை திட்டமிடுகிறார். நாம் நம்மை மதிப்பிடுவதைவிட அதிகமாய் ஆண்டவர் நம்மை மதிப்பிடுகிறார்.
2.    எதையும் தாங்கும் சக்தியை பெருக்கிக்கொள்ளும்போது, எரேமியா ஆண்டவருடைய அன்பையே சார்ந்து இருந்தார். அவர் வாழ்க்கையில் மிகுந்த துன்பங்களையும் தாக்குதல்களையும் பார்த்தவர்; கடைசியில் பாபிலோனியர்களின் கைகளில் யூதா தேசம் வீழ்ந்ததைக் கண்டார்.
3.    இவை எல்லாவற்றுக்கும் ஆண்டவருடைய செய்திகளையும் மக்களின் கண்ணீரையும் கொண்டு பதில் அளித்தார்.  ஆண்டவர் மக்களின் மேல் வைத்திருந்த அன்பையும் அந்த அன்பை மக்கள் நிராகரித்ததையும் நேரடியாகக் கண்டார். பல சோதனைகளை அனுபவிக்க அழைக்கப்பட்டார்.
4.    அநேகமான எண்ணங்கள் கட்டாயமாக ஆண்டவருடைய சித்தம் இல்லை.
5.    பாவத்திற்குத் தண்டனை மோசமானதாக இருந்தாலும், ஆண்டவருடைய கருணையில் நம்பிக்கை உண்டு.
6.    ஆண்டவர் அர்த்தமில்லாத அல்லது நேர்மையில்லாத வழிபாட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
7.    ஆண்டவருக்கு ஊழியம் செய்தால் இவ்வுலகத்தில் பாதுகாப்பு தானாக கிடைக்காது.


4. வேத ஆதாரங்கள்:
1. எரேமியாவின் கதை எரேமியா எழுதிய புத்தகத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. எஸ்றா 1:1, தானியேல் 9:2, மத்தேயு 2:17; 16:14; 27:9 ஆகிய பகுதிகளிலும் சொல்லப்பட்டு இருக்கிறது. யோசியாவின் காலத்தில் ஆவிக்குரிய மறுமலர்ச்சியைப் பற்றி நாளாகமம் 34:35 லும் காணலாம்.


5. விவாதத்துக்குரிய கேள்விகள்: 
5.1  ஆண்டவர் அழைத்தபோது எரேமியா  எவ்வாறு பதில் அளித்தார்?
5.2  அவருடைய காலத்தில் ஆண்ட ராஜாக்கள் யார்?
5.3  அவருடைய காலத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள் யார்?
5.4 எரேமியா விக்கிரக ஆராதனைக்கு எதிராக போராடினார். இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். (எரேமியா 7:31; 19:5; 32:35)
5.5 அவருடைய பலமும், சாதனைகளும் என்ன?
5.6 அவருடைய வாழ்க்கையில் இருந்து நாம் படிக்கும் பாடங்கள் என்ன?


மொழி பெயர்ப்பு:
திருமதி கிரேஸ் ஜட்சன்
பரி. பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.




ஒருங்கிணைப்பாளர் குறிப்பு.....
திருமதி கிரேஸ் ஜட்சன் பேராயர் டத்தோ டாக்டர் பத்துமலை அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அவரே கைபேசியில் தொடர்பு கொண்டு மொழிபெயர்ப்புப் பணிக்கு முன்வருவதாக வாக்குக் கொடுத்தார். இது அவருடைய மொழிபெயர்ப்பு என்றாலும் மிகவும் செம்மையாகப் பணியைச் செய்திருக்கிறார். கணினி அறிவு மிகக் குறைவாக இருந்தாலும், குடும்ப உறுப்பினர் உதவியோடு இதனை டைப் செய்து அனுப்புவதாகத் தெரிவித்திருக்கிறார். அவருக்கு நமது வாழ்த்துகள்.

2 comments:

  1. கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்

    ReplyDelete
  2. கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்

    ReplyDelete