Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, October 5, 2011

128. சுவிசேஷத்திலுள்ள இயேசு கிறிஸ்து




ஒரு வரலாறுஅநேக பரிமாணங்கள்



(இந்தக் கட்டுரையில் கர்த்தருடைய வாழ்க்கையிலும், ஊழியத்திலும் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களையும் பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யப்படவில்லை.)
நாம் குறிப்பிட்டவர்களைப் பற்றி விளக்க முயற்சி செய்வோம்.
நாம் இந்த விளக்கத்தைப் பிரிப்போம்: இயேசுவும் இரட்சகரும்.



1.     முக்கிய வசனங்கள்: மத்தேயு 1:1

a)              ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு. 

b)              மாற்கு 1:1 தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.

c)              லூக்கா 2:11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். 

d)              யோவான் 1:14 & 1:1-2: ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம். 

e)              கிறிஸ்துவினிடம் பேதுருவின் பாவ அறிக்கை; இயேசு உங்களைப் பற்றி என்ன என்று கேட்டார். (நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்) பேதுரு பிரதியுத்தரமாகநீர் தேவனுடைய கிறிஸ்துஎன்றான். லூக்கா 9:20 

f)               இயேசு நான் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறதற்கே வந்தேன் என்று சொன்னார். (மத்தேயு 5:17)



2.     இயேசு (இலக்கியத்தின்படி அவர் ஒரு இரட்சகர்)

a)              அவர் பெத்லகேமில் பிறந்து நாசரேத்தில் வளர்க்கப்பட்டார். 

b)              அவர் ஆசிரியர் குணமாக்குகிற வழிகாட்டியாக மாறினார். 

c)              இயேசு அநேக அற்புதங்களை நிறைவேற்றினார். 

d)              இயேசு தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிப் போதித்தார். 

e)              இயேசு வித்தியாசமான பிரதிபலன்களை அவருடைய ஊழியத்திற்கு ஏற்படுத்தினார். 

f)               இயேசு ஒலிவமலையில் போதித்தார். 

g)              அவர் ஜனங்களுக்குப் பிரசங்கங்கள் (அதிகாரத்தோடு) உதாரணங்கள், உவமைகள் மூலம் போதித்தார். அவர் நம்பிக்கையின் உண்மையான பொருளை அள்ளிக் கொடுத்தார். கனியற்ற கபடவாழ்க்கைக்கு விரோதமாக எப்படி காப்பாற்றப் படவேண்டும் என்பதையும் உணர்த்தினார். 

h)              இயேசு விலக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டார். அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால் இயேசு, அவர் உயிர்த்தெழுதலின் மூலம் மரணத்தின் மேலும் நாம் அவருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கக் கிடைத்த வெற்றி வழி மூலமும் அவருடைய அதிகாரத்தை நிரூபித்தார். அவர் உண்மையான அடையாளத்தைக் காண்பித்தார். அவருடைய மரணத்தின் மேல் வெற்றிமூலம் அவர் ராஜாவாகவும், அவர் அதிகாரம் உடையவராகவும், பாவத்தின் (தீமை) மேல் அதிகாரமுடையவராகவும் அவருடைய நற்கீர்த்தியின் மூலம் நிரூபித்தார் 

i)               மேசியா: இயேசு தான் மேசியா. அவருக்காகத் தான் யூதர்கள் ரோமானியரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுதலை பெறக் காத்திருந்தார்கள். அனுப்பப்பட்டவரால் அபிஷேகிக்கப்பட்ட தேவனின் உண்மையான நோக்கம் என்னவென்றால் எல்லா மனிதர்களும் பாவத்தின் கொடுமையிலிருந்து விடுவிக்கப்பட மரணத்தைத் தழுவுவது ஆகும்.

இயேசு கிறிஸ்து மேசியா இரட்சகர் என்று தெளிவான சாட்சி கொடுப்பதுதான். பரி.மத்தேயு சுவிசேஷத்தின் முக்கிய நோக்கம் இயேசுவின் சீஷர்கள் மேசியா (கிறிஸ்து) தேவனுடைய குமாரன் என்று நம்பினார்கள்.

மாற்கு சுவிசேஷம் இயேசுவின் பிரசங்கத்தை விட அற்புதங்களை மிகவும் அதிகமாகக் குறிப்பிட்டிருக்கிறது. இயேசு அதிகாரமும் செயல்பாடுமுள்ள மனிதர் என்பது தெளிவாகிறது. வசனங்களில் மட்டுமல்ல இயேசு அவர் யார் என்பதை ஜனங்கள் நம்பவும், அவர் உண்மையான அடையாளமுள்ள தேவன் என்று சீஷர்களுக்குப் போதிக்கவும் அற்புதங்கள் செய்தார்.



3.     இயேசு கிறிஸ்து

நமது தேவனின் நாமம் புதிய ஏற்பாட்டில் (பு.) உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில்இயேசுஎன்று பொருள் கொண்டது. கிரேக்கு, எபிரேய பாஷைகளுக்குச் சமமாகயோசுவா”(யெகோவா அனுப்பப்பட்டவர்) இந்த நாமம் நமது தேவன் பிறப்பதற்கு முன்பே கொடுக்கப்பட்டது. (மத்: 1:21; லூக்: 1:31) இது சுவிசேஷங்களில் அடிக்கடி உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இயேசு என்ற நாமம் 600 தடவைகளுக்கும் அதிகமாகக் காணப்படுகிறது. மேசியாவுக்குச் சமமாக அபிஷேகம் பண்ணப்பட்ட கிரேக்க பாஷையிலிருந்து வந்தகிறிஸ்துஎன்னும் நாமம் சுவிசேஷங்களில் தனியாக 50 தடவைகளில் மட்டும் காணப்படுகிறது. நமது தேவனின் வாழ்க்கை வரலாற்றுக்கு நமது முக்கிய அதிகாரிகள் 4 சுவிசேஷங்கள் தான். நாம் பின்வரும் நிகழ்ச்சிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
 

a)              நமது தேவனின் பிறப்பும், குழந்தைப் பருவமும்.
-    பெத்லகேமில் இயசுவின் பிறப்பு.
-    அவர் தேவாலயத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
-    எகிப்துக்குப் பயணம் செய்து பின்பு அவர் நாசரேத்திற்குத் திரும்பினார்.
-    12ம் வயதில் இயேசு பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போனார்.
 

b)              நமது தேவனின் பொதுவான ஊழியத்தைப்பற்றி அறிவிப்பும் அறிமுகமும்.
-    யோர்தான் நதியில் இயேசுவின் ஞானஸ்நானம்.
-    அவருடைய சோதனைகள்.
-    இயேசு 12 சீஷர்களைத் தெரிந்து கொண்டார்.


c)              நமது தேவனின் முதல் பஸ்காவிலிருந்து இரண்டாவது பஸ்காவரை பொது ஊழியம்.
-    அவர் தேவாலயத்தைச் சுத்தம் செய்தார்.
-    இயேசு நிக்கோதேமுவுடன் உரையாடினார்.
-    இயேசுவைப் பற்றி யோவான் ஸ்நானகனின் சாட்சி.
-    இயேசு நாசரேத்தூரில் ஏற்க மறுக்கப்பட்டார்.
-    இயேசுவின் குணமாக்கும் ஊழியம். (ஒரு குஷ்டரோகியைக் குணப்படுத்தினார்; ஒரு திமிர்வாதக்காரனைக் குணப்படுத்தினார்.)



d)              இரண்டாவது பஸ்காவிலிருந்து மூன்றாவது வரை.
-    யூதர்கள் அவரைக் கொல்ல வகை தேடினார்கள்.
-    மலையின் மேல் பிரசங்கம்.
-    இயேசு நாயீன் ஊரில் ஒரு விதவையின் மகனை உயிரோடு எழுப்பினார்.
-    இயேசு காராசின், பெத்சாயிதா, கப்பர்நகூம் என்ற இடங்களில் உள்ள குடியிருப்பு வாசிகளைக் கடிந்து கொண்டார்.
-    அவருடைய தாயார், சகோதரர்களை அவர் குறிப்பிட்டது.
-    இயேசுவின் உவமைகளின் மூலம் போதனை.
-    இயேசு கடலின் மேல் நடந்தார்.
-    இயேசு ஜெப ஆலயங்களில் உபதேசம் பண்ணினார்.


e)              3வது பஸ்காவிலிருந்து பெத்தானியாவுக்கு வரும் வரை.
-    இயேசு தைரோ, சீயோன் எல்லைக்குப் போனார்.
-    அவர் 4000 பேர்களையும் 5000 பேர்களையும் போஷித்தார்.
-    பரிசேயர்களுடைய சவால்.
-    இயேசு மறுரூபமாகுதல்.
-    இயேசு தன் சொந்த மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முன்னறிவித்தார்.
-    70வது ஊழியம்.
-    இயேசு எருசலேமில் உபதேசம் பண்ணினார்.
-    இயேசு பெத்தானியாவில் லாசருவை உயிரோடு எழுப்பினார்.
-    யூத ஆலோசனை சங்கத்தார் இயேசுவை மரணத்திற்குட்படுத்தத் தீர்மானித்தார்கள்.
-    இயேசு பரிசேயத் தலைவர்களோடு போஜனம் பண்ணினார்.
-    இயேசு சிறு பிள்ளைகளை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதித்தார்.
-    அவர் தன் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முன்னறிவித்தார்.
-    அவர் எரிகோவில் சகேயுவை வரவேற்றார்.


f)               கடைசி பஸ்கா வாரம்.
-    இயேசு எருசலேமுக்குள் பகிரங்கமாகப் பிரவேசித்தார்.
-    அவர் கனியற்ற அத்திமரத்தைச் சபித்தார். ஜெப ஆலயத்திலுள்ள வியாபாரிகளை விரட்டினார்.
-    அவர் ஜெப ஆலயத்தில் உபதேசித்தார்.
-    குறிப்பிட்ட சில கிரேக்கர்கள் இயேசுவைக் காண ஆவலாயிருந்தார்கள்.
-    யூத சாம்ராஜ்யத்தின் அழிவையும் தோல்வியையும் முன்னறிவித்தார்.
-    இயேசு பஸ்காவிற்காக ஆயத்தப்படுதலும், பஸ்காவின் கொண்டாட்டமும்.
-    அவர் சீஷர்களின் பாதங்களைக் கழுவினார்.
-    அவர் யூதாஸால்  காட்டிக் கொடுக்கப்பட்டார்.
-    பேதுரு கிறிஸ்துவை மறுதலித்தார்.
-    இயேசு பிரதான ஆசாரியர், ஆலோசனைச் சங்கத்தாரால் விசாரிக்கப்பட்டார்.
-    இயேசு பிலாத்துவிடம் கொண்டுபோகப்பட்டு அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டார்.
-    யூதாஸ் மனஸ்தாப்பட்டு தானே தூக்கில் தொங்கினார்.
-    இயேசு சிலுவையிலறையப்பட்டு சிலுவையின் மேல் உயிர் விட்டார்.
-    இயேசு அடக்கம்பண்ணப்பட்டார்.
-    கல்லறைக்குக் காவல்சேவகர்கள் நியமிக்கப்பட்டார்கள்.


g)              இயேசுவின் உயிர்த்தெழுதல்.
-    ஸ்திரீகள் கல்லறையைப் பார்க்கவந்தார்கள். இயேசு அவர்களைச் சந்தித்தார்.
-    மகதலேனா மரியாளும் கல்லறைக்கு வந்தாள்.
-    இயேசுவைப் பேதுருவும் மற்றவர்களும் பார்த்தார்கள். (உதா: தோமா)
-    இயேசு சீஷர்களுக்குத் தம்மைக் காண்பித்தார்.
-    இயேசு 500 பேர்களைக் கலிலேயாவிலுள்ள மலையில் சந்தித்தார்.
-    அவர் எல்லா அப்போஸ்தலர்களாலும் காணப்பட்டார்.
-    அவர் தன் ஊழியத்தை முடித்து விட்டு பரலோகத்திற்கு ஏறிப் போனார்.



h)              நமது தேவனின் தெய்வீகத் தன்மை அவரால் தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அவருடைய முன்கூட்டிய வருகை.(யோவான்: 8:58) பிதாவுடன்) பரலோகத்தில் (யோவான்:17:4-5. இயேசு பிதாவோடு உள்ள உறவை தெளிவுபடுத்தினார்.(யோவான்: 10:30;14:23) பிதாவினிடத்திலிருந்து அனுப்பப்பட்டவர் (யோவான்: 10:36). இவைகள் நமது பிதாவினால் திட்டவட்டமாக உரிமை கொண்டாடப்பட்டது. அவர் கிறிஸ்துவாக ஏற்றுக்கொள்ளப்பப்டார் (மத்: 8:27). அவரில் அன்பு கூர்ந்தால் பிதாவும் அன்பாயிருப்பார்.(யோவான்: 14:23) அவருக்குக் கீழ்ப்படிந்தால் தேவனுக்குக் கீழ்ப்படிந்தது போலாகும். ரோமர் நிருபம் இயேசு தேவன் என்று ஏற்றுக்கொள்கிறது (ரோமர்: 9:5) குமாரன் பிதாவினால் அனுப்பப்பப்டார்.(எபி: 1:2) சர்வ வல்லமையுள்ளவர்.
(பிலி: 3:21; கொலோ: 1:16-17)



i)               நமது தேவனின் மனிதத்தன்மை பரிசுத்த வேதாகமத்திலிருந்து தெளிவாகச் சமப்படுத்தப்பட்டிருக்கிறது.

நாம் நம்புகிறபடி குமாரன் பிதாவின் வார்த்தை, நிரந்தரமான பிதா, நித்திய தேவன் பிதாவோடு உண்மையான செய்தி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் மனிதனின் இயற்கை உருவத்தை ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னியின் உண்மையான கருவிலிருந்து எடுத்தார். சொல்லப்போனால் முழுமையான பூரணமான இரண்டு இயற்கைத் தன்மைகள் தேவத் தலைமையும், மனிதத் தன்மையும் ஒரு நபரிடத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒருக்காலும் பிரிக்கமுடியாது. கிறிஸ்து ஒருவர். நிஜமான தேவன். நிஜமான மனிதன். (39 ஆகமங்களில் 11வது ஆகமம்) அந்த வார்த்தை மாம்சமானது. (யோவான் 1:14) அவர் பிறப்பு பரிசுத்த ஆவியின் ஏவுதலால் தெய்வீகமானது. அவர் மனிதர்களுக்குச் சாதாரணமாகத் தேவைப்பட்டதை அனுபவித்தார். அவருக்குப் பசி உண்டாயிற்று. (மத்: 4:2) தாகமாயிருந்தார். (யோவான்: 4:6-7) நித்திரை தேவையாயிருந்தது. (மாற்கு: 4:38) அவர் மனிதனுக்குப் பழக்கமான உணர்ச்சிகளை அனுபவித்தார். அவர் அதிசயம், வியாகூலம் இவைகளுக்குத் தகுதியுள்ளவராயிருந்தார். (யோவான்: 12:27;13:21) அதற்கு அடையாளம். (மாற்கு: 2: 5) மனவேதனை, மனதுருக்கம். (மத்: 20:34) அவர் பரிசுத்த ஆவியின் முரண்பாடுகளைச் சகித்துக்கொண்டார். (மத்: 4:11) அவர் ஜெபத்தின் வல்லமையை உணர்ந்தார். (மாற்கு: 1:35; லூக்: 6:12) ஆனாலும் அவருக்கே சோதனை ஏற்பட்டது. (மத்: 4; லூக்: 4; எபி: 4:15) பாவமில்லாதவர். (2கொரி: 5:21; எபி: 4:15; 7:26; 9:14; 1பேதுரு: 2:22)


4.     நமது தேவனின் வருகையின் (அவதாரம்) நோக்கம்.
a)              யோவான் 3:16; தேவன் நம்மில் அன்புகூர்ந்தார். அதினால் பிதாவானவர் குமாரனை உலக இரட்சகராக அனுப்பினார். (1 யோவான் 4:14)
b)              தேவனின் ஊழியம் யூதர்களுக்கும், புறஜாதியாருக்கும் உரியது. (யோவான் 10:16; 1தீமோ: 2:26)
c)              உலகம் அவரிடத்தில் சமாதானமாயிருக்க அவர் நம்மை அதிகமாக நேசித்தார். ஆனபடியினால் அவர் நாம் அவரோடு சமாதானமாயிருக்க நம்மைத் தேடி வந்தார்.


5.     நமது தேவனின் குணம்.
a)              அவருடைய பரிசுத்தம் அநேகரின் மனதில் பதியவைக்கிறது. (மத்: 26:59-60; யோவான்: 8:46)
b)              அவருடைய தயவு, இரக்கம் நிரூபித்துக் காட்டப்படுகிறது.
c)              அவரின் கருணை, அன்பு காட்டப்படுகிறது. (மத்: 14:27; லூக்: 19:5; யோவான்: 11:19)
d)              அவருடைய சாந்தம், பணிவு காட்டப்படுகிறது. (மத்: 5:9,28)
e)              அவருடைய நன்னடத்தை, தைரியம், உறுதி காட்டப்படுகிரது. (மத்: 26:39; மாற்கு: 10:32)
f)               அவருடைய உண்மையான அன்பு, வெளிவேஷத்தை வெறுத்தல் இவைகளை நாம் பின்பற்றும்படி காட்டப்படுகிறது. (மத்: 6; மத்: 10/ மாற்கு: 12:38; லூக்: 11:44)
g)              அவருடைய நிதானம், குறிப்பிட்ட கண்டிப்பு இல்லாமை நமக்குக் காட்டப்படுகிறது.
 

முடிவுரை: நாம் மிக நவீன விமர்சகர் சாமுவேல் லேங்: ”அவரின் புகழைச் சேர்த்துக் கொள்ளலாம். அது இயேசுவின் உதாரணம், போதனை. நாசரேத் என்னும் ஊரிலுள்ள தச்சனின் குமாரன், தெய்வீக அன்பின் எண்ணங்களைப் பரப்ப முக்கியமான உபகரணம், உலக முழுவதிலும் தர்மம், தூய்மை, கருணையுள்ள, பலமான, நியாயமான ஆயுதங்கள், சட்டம் தெரியாதவர்கள். ஆனால் சாதாரணத் திட்டம். அவர் அதிகாரம் உள்ளவர்களை ஏற்றுக்கொண்டு, யாருக்கு முடியுமோ அவர்களை வைத்துக் கொள்ளுவார்.


6.     வேதாகமக் குறிப்பு:- சுவிசேஷங்கள், நிருபங்கள்.
மற்றக் குறிப்புகள்:
a)              பொதுவான வேதாகம அகராதி. (. ஆர். பக்லண்ட், லட்டர் வொர்த், லண்டன்)
b)              புதிய ஏற்பாடு. வேத சாஸ்திர அறிமுகம். அலன் ரிச்சர்ட்சன் (எஸ்சிஎம் லண்டன், 1966)





மொழிபெயர்ப்பு:
திருமதி மேபல் பட்டுவின் தாயார்
பரி.யாக்கோபின் ஆலயம், செந்தூல்

No comments:

Post a Comment