யூதாவின் ராஜா
முக்கிய
வசனம்:
2Chr 16:9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான். 2 நாளாகம்ம் 16:9
சுருக்கமான
குறிப்புகள்:
· இவன் அபியாவின் மகன், யூதாவின் ராஜா.· விக்கிரக ஆராதனையை அகற்றப் பிரயாசப்பட்டு, அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் சிலைகளையும் உடைத்துப் போட்டு தேசத்தைச் சுத்தப்படுத்தினான்.
· அவனுடைய ஆட்சியின் பிற்பகுதியில் அவன் திடீரென தேவன் பேரிலுள்ள தனது நம்பிக்கையை விட்டு விட்டான்.
· அவன் 41 ஆண்டுகள் நாட்டை அரசாண்டான்.
· கடைசி வரையிலும் அவன் தேவனைத் தேடவில்லை. 2நாளா.16:12
1.
முகவுரை – அவன் சரித்திரம்
a.
ஆசா என்பது வைத்தியன் என்று பொருள் படும். (அராபிக் மொழியில்). ஆசா என்பது ‘சுகமளிக்க’ என்றும், அல்லது ‘தேவன் சுகமளித்து விட்டார்’ என்றும் பொருள் படலாம்.
b.
இவன் அபியாவின் மகனும் யூதாவின் ராஜாவுமாக இருந்தான். யெகோவாவை மாத்திரமே
வணங்கும்படி இவன் தீர்மானமாக விக்கிரகாராதனையை எதிர்த்து தேசத்திலிருந்து அகற்றினான். (1இராஜா.15:9-24). தோப்பிலே அருவருப்பான
விக்கிரகத்தை உண்டு பண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய்
இராதபடிக்கு விலக்கி விட்டான். அவளுடைய விக்கிரகத்தையும் சுட்டெரித்து சாம்பலைக் கீதரோன்
ஆற்றிலே போட்டுவிட்டான். (1 இராஜா.15:3) ஆசா யூதாவிலே பல அரணான பட்டணங்களைக்
கட்டி,
பெரிய
சேனையையும் எழுப்பினான் (2நாளா.14:8). இந்தப் பெரிய சேனையைக் கொண்டு, தன்னை எதிர்த்து வந்த
சேராவை முறியடித்தான். எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, ஜனங்களைக் கூட்டமாகக் கூடி
வரச் செய்து,
தங்கள்
பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும்
தேடுவோம் என்று உடன் படிக்கை செய்து தேவனக்கென்று தங்களை அர்ப்பணித்தனர். (2நாளா.15). தமஸ்குவின் அரசனான
பென்னாதாத்துடன் சேர்ந்து கொண்டு, ஆசா ராமாவைக் கட்டாதபடி இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவை
விரட்டியடித்து விட்டு அந்தக் கற்களையும் மரங்களையும் கொண்டு கேபா, மிஸ்பா என்ற பட்டணங்களைக்
கட்டினான்.
ஆசா மக்களால்
நேசிக்கப்பட்டு கனம் பண்ணப்பட்டான். ஆசா தான் ஆண்ட நாற்பத்தோராம் ஆண்டில் மரித்தான். தாவீதின் நகரத்தில்
அவன் தனக்காக வெட்டி வைத்திருந்த கல்லறையில் ராஜ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டான்.
c.
ஒரு ராஜாவாக அவன் முதலில் மிகவும் நல்லவனாகவே இருந்தான். அவனுடைய வாழ்க்கையில்
நெடுந்தூரம் அவன் தேவனோடு கூட நடந்தும், பிற்பகுதியில் அவன் வழி விலகிச் சென்று விட்டான். அவனுடைய பாவம் கீழ்ப்படியாமை
என்று மட்டும் சொல்லமுடியாது. சரியான பாதையைத் தள்ளிவிட்டு இலகுவான பாதையைத் தெரிந்து
கொண்டதே அவனுக்குப் பாவமாக இருந்தது.
d.
எத்தியோப்பியனாகிய சேரா எதிர்த்து வந்தபோது எதிர்த்துப்
போராடத் தன்னால் முடியாது என்பதை உணர்ந்த ஆசா, தேவன்பேரில் சார்ந்திருக்க
வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தான். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தால்
அமைதி நிலவும் என்ற வாக்கின்படி நாட்டில் பல வருடங்களாக ஜனங்கள் நலமுடன் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் ஆசா கடுமையான சோதனையைச் சந்திக்க
வேண்டியதாக இருந்தது.
e.
ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் இடையே
பல வருடங்களாக இருந்த பகைமை இப்போது அதிகமாகி விட்டது. வட தேசத்து ராஜாவான பாஷா, யூதாவின் சமாதானத்துக்கும்
பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக ராமா என்ற பட்டணத்தைக் கட்டினான். ஆசா இதற்கு எதிராக
யோசனை செய்தான்.
பென்னாதாத்
என்னும் சீரியாவின் ராஜா, பாஷாவுக்கு விரோதமாக வரும்படி கேட்டுக் கொண்டான். பாஷா ராமாவைக் கட்டுவதை
விட்டுவிட்டுப் போய் விட்டான். ஆனால், தேவன் இவ்விதமாக விரும்பவில்லை. ஞானதிருஷ்டிக்காரனான
அனானி வந்து ஆசாவைக் கடிந்து கொண்டபோது ஆசா கோபமடைந்து அவனைக் காவலறையிலே வைத்தான். சிலரைக் கொடுமையாக
நடப்பித்தான்.
(2நாளா.16:7-10). ஆனாலும் ஆசா தன் வாழ்நாளெல்லாம்
கர்த்தருக்கு உண்மையாக ஜீவித்தான் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது (1ராஜா.15:14). ஆசா தான் தவறு செய்த
போது திருத்தப்படுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. தேவனுக்கு விரோதமாகத்தான் செய்ததை
ஒப்புக் கொள்ள மறுத்து விட்டான். தேவனுக்கு முன்பாக அவன் தாழ்மையாக இருந்திருப்பானானால்
தேவன் அவனுடைய வாழ்க்கையில் என்ன
செய்திருப்பாரோ அவற்றையெல்லாம் இழந்து போனதே அவனுடைய மிகப் பெரிய தோல்வியாகும். அவனுடைய பெருமையே அவனுடைய
ஆட்சியின் நலனைக் கெடுத்து விட்டது. மரிக்கும் வரையிலும் அவன் திருந்தவேயில்லை.
2.
அவனுடைய பலமும் சாதனைகளும்.
a.
ஆட்சியின் முதல் 10 வருட காலத்தில் தேவனுக்கு ஒப்புக்
கொடுத்தான்.b. விக்கிரகாராதனையை ஒழிக்க முயற்சிசெய்து ஓரளவுக்கு வெற்றி பெற்றான்.
c. விக்கிரகாராதனைக் காரியாகிய தன் தாய் மாகாளை விலக்கிப் போட்டான்.
d. எத்தியோப்பியரின் பலத்த சேனையை முறியடித்தான்.
3.
பலவீனமும் தவறுகளும்
a.
பாவத்தைச் சுட்டிக் காட்டிய போது மிகுந்த
கோபத்தைக் காண்பித்தான்.b. அந்நிய நாடுகளுடனும் பொல்லாத மக்களுடனும் உடன் படிக்கைகள் செய்து கொண்டான்.
4.
அவனுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்கள்.
a.
தேவன் நன்மையை விரும்புவது மட்டுமல்ல; தீமையை எதிர்க்கிறார்.b. தேவனுடைய திட்டங்களையும் சட்டங்களையும் பின்பற்றும் முயற்சி வெற்றிறகரமான விளைவுகளைக் கொண்டு வந்தது.
c. ஒரு திட்டம் எவ்வளவு நன்றாக வேலை செய்கிறது என்பதைக் கொண்டு அது சரியானதா அல்லது தேவனுடைய அனுமதியைப் பெற்றுள்ளதா என்று எடைபோட முடியாது.
5.
வேத வசன ஆதாரங்கள்:-
a.
ஆசாவின் வெற்றி 1 ராஜா.15:8-24ல், 2நாளா.14-16 அதிகாரங்களிலும் கூறப்பட்டிருக்கிறது. எரோமியா 41:9ல், மத்தேயு 1:7ல் இவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.
6.
விவாதம் செய்வதற்றகான கேள்விகள்
a.
தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்ப முதல் முடிவு வரையிலும்
தேவனுக்கு உண்மையுள்ளவனாக
இரந்தானா?b. அவன் விக்கிரகாராதனையை முற்றிலும் ஒழித்தானா?
c. அவன் பென்னாதாத்துக்கு ஏன் லஞ்சம் கொடுத்தான்?
d. அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் படிக்கக் கூடிய பாடங்கள் யாவை?
மொழிபெயர்ப்பு:
திருமதி
டப்னி ஜோசப்பரி.பவுல் ஆலயம்,
பெட்டாலிங் ஜெயா
No comments:
Post a Comment