Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Sunday, October 2, 2011

120. ஸ்தேவான்


சபையின் முதலாவது இரத்த சாட்சி



கரு வசனம்

59. அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுது கொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்.

60. அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். (அப் 7:59-60)
 

சுருக்கத்திரட்டு 

1.   சபை மூப்பர்கள் 7 பேரில் ஒருவன்.

2.   குண நலன்:

a.   நம்பிக்கை நாயகனாகவும், பரிசுத்த ஆவி நிறைந்தவனாகவும் காணப்பட்டான்.

b.   வல்லமையும் விசுவாசமும் நிறைந்தவனாய் காணப்பட்டான் (அப்6:8)

c.   எதிர்த்து நிற்க முடியாத ஞானத்தையும், ஆவியையும் பெற்றிருந்தான்  

d.   (அப்6:10)

e.   முழுவதும் பரிசுத்த ஆவியால் நிறைக்கப்பட்டவனாக காணப்பட்டான் (அப்7:;55)



3.   வேலை.

a.   ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையம் அடையாளங்களையும் செய்தான்(அப்6:8)

b.   லிபத்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிடத்திலும் தர்க்கம் செய்தான்.



c.   போதனை.

d.   யெகோவா தெய்வத்தின் வழிபாடு இனி ஒரு தேசம், ஒரு நகரம், ஒரு ஆலயம் என கட்டுப்படுத்தப்பட்டது அல்ல என இவன் கூறுகிறான்.

e.   இவன் ஜனங்களுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டான்.

f.    இவன் தேவாலய சட்டங்களுக்கு மாறாக பேசுவதாக அவன் மீது தவறான குற்றம் சாட்டினர்.

g.   ஸ்தேவான், தேவனின் பிரசன்னமும் அன்பும், புனித ஸ்தலம் அல்லது எருசலேம் தேவாலத்துக்கு மட்டுமல்ல என எதிர்வாதிடுகிறான். யூதர்களின் முழு வரலாற்றிலும் இவர்கள் தேவனுக்கு அடங்காதவர்களாகவே இருந்ததை இவன் எடுத்து காட்டுகிறான்.



4.   விதி:

a.   கல்லெறிந்து கொல்லப்பட்டான். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள். (அப்.7:58, 22:20)





1.      அறிமுக உரை- அவனது கதை   

ஸ்தேவான் என்பது கிரேக்க பதமாகும். இதன் பொருள் கிரீடம்என்பதாகும். சமுதாயப் பணிக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் சிறந்த ஊழியக்காரனாக மாறி இரத்த சாட்சியாக மரித்தது இதுவே முதல் முறை.



சுவிசேஷமானது பெரும்பாலும் இப்படி இரத்த சாட்சியாக மரித்தவர்களின் மூலம் உலகம் முழுவதிலும் அதிகமாக பரவிற்று எனலாம்.  ஒருவன் சுவிசேஷத்திற்காக தன் வாழ்க்கையை கொடுக்கும் முன்பாக எப்படியும் அவன் சுவிசேஷத்திற்காக வாழ்ந்திருக்க வேண்டும். மிகவும் சிறியதாக எண்ணப்படும் ர் இடத்தில் வைத்து தேவன் தம்முடைய ஊழியக்காரருக்கு பயிற்சி அளிக்கிறார். கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் மற்றவர்களுக்கு உண்மையாக சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பமாக மாறி விடுகிறது. ஸ்தேவான் தியாகியாவதற்கு முன்பு ஒரு சிறந்த நிர்வாகியாகவும் தூதுவனாகவும் காணப்பட்டான்.



ஸ்தேவான் ஆதி சபைகளிலே உணவு விநியோக குழுவின் மேலாளர்களில் ஒரு பெயர் பெற்றவனாக காணப்பட்டான். கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக கடுமையான துன்புறுத்தல்கள் வெளிப்படுவதற்கு அநேக நாட்களுக்கு முன்னரே  ஒருவனை சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கும் முறை இருந்தது. இயேசுவை மேசியா என்று ஏற்றுக்கொண்டவர்களைக்  குடும்பங்களிலிருந்து வெளியேற்றினர். இதனால் இப்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருந்தனர். வீடுகளைப் பகிர்தல், உணவு மற்றும் அவர்களது வளங்களை பகிர்தல் ஆகிய இவ்விரண்டும்; ஆதி திருச்சபைகளிலே அவசியமான மற்றும் நடைமுறையில்  இருந்த அடையாளமாக காணப்பட்டது. இறுதியாக, பல விசுவாசிகள் இந்த பகிர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்துவது அவசியம் என்று கண்டனர்.



ஜனங்கள் கவனிக்கப்படாமல் விடுபட்டுப்போனர். இதினால்  புகார்கள் எழும்பின. நிர்வாக உதவிக்கு தேர்வு செய்யப்பட்டோர்  அவர்களது நேர்மை ஞானம் தேவபக்தி, இவைகளினாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஸ்தேவான் ஒரு சிறந்த நிர்வாகி மட்டுமல்ல இவன் ஒரு வல்லமையான பேச்சாளனும் கூட. ஆலயத்தில் பல்வேறு மாறான குழுக்கள் இவனை எதிர்கொண்ட போது இவனது மறுமொழி அறிவுப்பூர்வமான தர்க்கமாகவும் நம்பத் தக்கதாயுமிருந்தது. இது இவன் அவையின் முன்பாக செய்த எதிர் வாதத்திலிருந்து தெளிவாகிறது. இவன் யூதர்களின் சுய வரலாற்றை சுருக்கமாக முன்வைத்து, அவையினரைக் கவர்ந்து ஈர்த்து ஒரு சிறந்த விண்ணப்பத்தை முன்வைத்தான். இவனது எதிர் வாதத்தின் போது, ஸ்தேவான் தனது சொந்த மரண தீர்ப்பைப்  பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறிந்திருக்க வேண்டும். அவையின் உறுப்பினர்கள் தங்களது தீய நோக்கத்தை வெளிப்படுத்த முடியாமல் போயிற்று. அவன் அவர்களுடைய மன்னிப்புக்காக வேண்டிக் கொண்டிருக்கும் போது  அவர்கள் அவனை கல்லெறிந்து கொன்றனர். இவனுடைய கடைசி வார்த்தைகள், குறுகிய காலத்தில் இவன் இயேசுவைப்போல எப்படி மாறியிருந்தான்; என்பதை நமக்கு உணர்த்துகிறது. இவனது மரணம் தர்சு பட்டணத்தின் வாலிபனான சவுலுக்கு (பவுல்) ஓர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இவன் ஒரு காலத்தில் வன்முறையாக கிறிஸ்தவர்களை கொடுமைப் படுத்தினவன். ஸ்தேவானின் மரணத்திற்குப் பின்னர் இவன் ஒரு தலைச்சிறந்த சுவிசேஷகனாக மாற்றம்பெற்றான்.



ஸ்தேவானின் வாழ்க்கையானது கிறிஸ்தவர்கள் அனைவருக்கும்  ஒரு தொடர்ச்சியான அறை கூவலாக காணப்படுகிறது. ஏனெனில்  இவனே விசுவாசத்திற்காக முதன் முதலில் மரித்தவன். இவனது தியாகம் நம்மைக் கேட்கும் கேள்வி என்னவெனில்: இயேசுவைப் பின் பற்றுகிறவர்களாகிய நாம் அவருக்காக எத்தனை இன்னல்களை சந்தித்திருக்கிறோம், என்பதாகும். நாம் அவருக்காக மரிக்க ஆயத்தமா? உண்மையாகவே அவருக்காக வாழ ஆவலோடிருக்கிறோமா?



ஸ்தேவானின் இறப்பின் மூலமாக ஏற்பட்ட பாதிப்பு அல்லது தாக்கம் என்ன?

ஸ்தேவானின் மரணத்தின் விளைவு

ஸ்தேவானின் மரணம் வீணடையவில்லை.



கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில நிகழ்வுகள், ஸ்தேவான் இரத்த சாட்சியாக மரித்ததைத் தொடர்ந்த உபத்திரவ  காலங்களின் விளைவுகளாகும்.

1) பிலிப்புவின் சுவிசேஷ பயணம் (அப்போஸ்தலர் 8:4-40)

2) பவுலின் (சவுல்) மன மாற்றம் (அப்போஸ்தலர் 9:1-30)

3) பேதுருவின் மிஷனரி பயனம் (அப்போஸ்தலர் 9: 32- 11:18)

4) சீரியாவிலுள்ள அந்தியோகியா சபை அடையாளம் காணப்பட்டது (அப்போஸ்தலர் 11:19)



2. பெலனும் பெலவீனமும்

1) ஆதி திருச்சபையில் ஏழைகளுக்கு உணவு பகர்ந்தளிக்கும் குழுவின் ஏழு

பேர்களில் இவனும் ஒருவன்.

2) இவனுடைய அவிக்குரிய குணங்களான நம்பிக்கை, ஞானம், கருணை,

   ஆற்றல் மற்றும் ஆவியின் நிறைவு இவைகளால் பிரபலமானவன்.

3) இவன் ஒரு முதன்மையான தலைவன், ஆசிரியர் மற்றும் தர்க்கம் செய்பவன்.

4) சுவிசேஷத்திற்காக தன்னுடைய ஜீவனைக் கொடுத்த முதல் மனிதன்.



3. இவனது வாழ்க்கையிலிருந்து பாடங்கள்

1) ஒப்படைக்கப்பட்ட சிறிய வேலையையும் சிறப்பாக செய்யும் முயற்சி

   ஒருவனை பெரிய பொறுப்புகளுக்கு அதிகாரியாக மாற்றுகிறது.

2) கடவுளோடு உண்மையான அன்பு கொண்டிருப்பவன் மனிதர்களிடத்தில் தன்

  இரக்க குணத்தை செயல் முறையில் காண்பிப்பான்.

3) ஸ்தேவானுடைய பேச்சிலிருந்து (அதிகாரம் 7) அவன் மீது தவறாக  

  குற்றஞ்சாட்டினர் என்பதைக் நாம் காண முடிகிறது. ஒருவன் மீது தவறாக

  குற்றம் சாட்டி அவனை கொல்லவும் முடியும் என்று இங்கு பார்க்கிறோம்.

4) ஸ்தேவான் இஸ்ரவேலர்களுக்கு தேவனோடு உள்ள உறவு எப்படிப்பட்டது 

  என்பதைக் குறித்து ஒரு நீண்ட பேச்சைத் தொடங்கினான். அவனுடைய 

  பேச்சிலே அவர்களை தாக்கத் தொடங்கினான், வாய்ப்பை பயன்படுத்தி

  இயேசுவைக் குறித்து சுருக்கமாக போதித்தான். நாம் கிறிஸ்துவின்

  சாட்சிகளாய் இருக்கும்போது நாம் சுய பாதுகாப்புடன் இருக்க வேண்டிய

  அவசியமில்லை. மாறாக நம்முடைய நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளலாம்.

  பழைய ஏற்பாட்டின் காலத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கை எப்படி செயல்பட்டது

  என்பதைக் குறித்தும் சுருக்கமாக கூறினான்.



4. வேதாகமக் குறிப்புக்கள்

ஸ்தேவானின் கதையானது அப்போஸ்தலர் 6:3 முதல் 8:2 வரை, மற்றும் அப்போஸ்தலர் 11:19, 22:20லும் காணலாம்.



5. கலந்தாலோசனைக்கான கேள்விகள்

1) ஸ்தேவானின் போதனைகளை வரையிட்டுக்காட்டுக(அப் 4:21)

2) இவனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?

3) பரிசுத்த ஸ்தலத்தக்கு விரேதமான பேசினான் என்ற குற்றச்சாட்டிலிருந்து

   இவன் தன்னை எப்படி தற்காத்துக் கொண்டான்?

4) ஸ்தேவானுடைய பேச்சு பவுலை எங்ஙனம் மாற்றியது?

5) ஆசியா கண்டத்தின் முதல் மிஷனரியான பரி. பிரான்சிஸ் சேவியர்

   உண்டாக்கிய தாக்கம் என்ன?

மொழிபெயர்ப்பு:

திரு.ஜான் ஆரோக்கியசாமி

பரி.பர்னபாவின் சபை, கிள்ளான்.

No comments:

Post a Comment