இஸ்ரவேலில் ஒரு நியாயாதிபதி
முக்கிய வசனம்:
11 கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ, நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும். 2Kgs 21:12; Jer 19:3; 12 நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன். 1Sam 2:31; 13 அவன் குமாரர்
தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன். 14 அதினிமித்தம் ஏலியின்
குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார். (1சாமுவேல் 3:11-14)
1.
சுருக்கமான குறிப்புகள்:
·
சீலோவில் ஆசாரியனாக இருந்த இவர் சாமுவேல் தீர்க்கதரிசியைப் பயிற்றுவித்தார்.
·
இவனுடைய குமாரர் ஓப்னி,
பினெகாஸ் தேவனுக்கு விரோதமாக நடந்து கொண்டனர்.
·
இஸ்ரவேலை 40 ஆண்டுகள் நியாயம் விசாரித்தான்.
·
அதிர்ச்சியினால் மரணமடைந்தான்.
2.
முகவுரை
ஏலி என்ற பெயரின் பொருள்
“உன்னதர்”.
அவன் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக இருந்தான்.
ஆரோனின் சந்ததியில் வந்தவன்.
சாமுவேலுக்குமுன் ஆசாரியனாக இருந்தான்.
ஓப்னி பினெகாஸ் என்ற தனது இரு குமாரரின் அக்கிரமத்தை அறிந்திருந்தும் ஏலி அவர்களை அடக்காமல் போனதினால்,
அவர்கள் மூலமாக தேவன் ஏலியைத் தண்டிப்பார் என்று அவனுக்குச் சொல்லப்பட்டது.
இந்த செய்தி சிறுவனாகிய சாமுவேலின் மூலமாக ஏலிக்கு அறிவிக்கப் பட்டது.
(1சாமு.3).
27
ஆண்டுகளுக்குப் பின் இந்தத் தீர்க்கதரிசினம் நிறைவேற்றப்பட்டது. பெலிஸ்தருடன் சண்டையிட்டபோது ஓப்னி பினெகாஸ் இருவரும் கொல்லப்பட்டனர். அதே நாளில் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் பெலிஸ்தர் வசமாகப் பிடிபட்டது.
98 வயதான ஏலி யுத்த களத்திலிருந்து கொண்டு வரப்பட்ட துக்கச் செய்திகளைக் கேட்டவுடனே மயங்கி விழுந்து,
தன் பிடரி முறிந்த செத்துப் போனான்
(1சாமுவேல்
4:18).
ஏலியின் குடும்பத்தில் பிரதான ஆசாரியனாகப் பணியாற்றிய முதல் மனிதன் ஏலி.
சாமுவேலின் மூலமாக அவனுக்கு முன்னறிவிக்கப்பட்ட தண்டனையின் ஒரு பகுதியாக,
ஆசாரித்துவ ஊழியம் எலெயாசாரின் குடும்பத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
ஏலியின் குமாரர் கொல்லப்பட்டு விட்டதால் ஏலியின் பேரன் அகிதூப்
(1 சாமு.14:3)
அந்தப் பதவிக்கு வந்தான்.
ஆனால் அகிதூப்பின் பேரனான அபியத்தார் கர்த்தருடைய ஆசாரியனாயிராத படிக்குத் தள்ளிப் போடப் பட்டான்
(1இராஜா.2:27).
ஏனென்றால் சாலொமோனுக்கு விரோதமாக அதோனியா செய்த கலகத்தில் ஆசாரியனாகிய அபியாத்தாரும் சேர்ந்திருந்தான். சாதோக் ஏற்கனவே அபியாத்தாருடன் பிரதான ஆசாரியனாக இருந்தான்
(1இராஜா.2:35).
3.
ஏலியின் பலம்
என்ன என்று பார்க்கலாம்:
a.
இஸ்ரவேலை 40 வருடங்கள் நியாயம் விசாரிக்கக் கூடியவனாக இருந்தான்.
b.
சாமுவேலின் தாயாகிய அன்னாளுடன் பேசி தேவனடைய ஆசீர்வாதங்களை உறுதியுடன் கூறினான்.
c.
இஸ்ரவேலில் பெரிய நியாயாதிபதியாகிய சாமுவேலை வளர்த்துப் பயிற்சி கொடுத்தது ஏலி.
d.
ஏலி தனது கடமையை உணர்ந்தவனாக தேவனுடைய தீர்ப்பை ஒப்புக் கொண்டான்
(1சாமு.3:18).
4.
அவனுடைய பெலவீனங்களையும் தவறுகளையும்
காணலாம்:
a.
தன்னுடைய குமாரரை நல்லொழுக்கத்தில் வளர்க்கவும்
அவர்கள் பாவம் செய்த போது திருத்தவும் அவன் தவறி விட்டான். அவன் சிறந்த ஆசாரியனாக இருந்திருக்கலாம்.
ஆனால் ஒரு தகப்பனாகத் தன் கடமையைச் செய்யவில்லை. அவனுடைய குமாரர் துக்கத்தையும் அழிவையும்
கொண்டு வந்தார்கள். பெற்றோருக்குத் தேவையான இரண்டு பண்புகள் ஏலியிடம் காணப்படவில்லை.
b.
தீர்மானித்து செயல்படுவதைத் தவிர்த்து,
சூழ்நிலைக்கேற்றவாறு நடந்து கொள்ளும் தன்மையுடையவன்.
c.
தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை ஒரு புனிதமான
ஞாபகச் சின்னமாகவே பார்த்தான். தேவனுடைய பிரசன்னம் இஸ்ரவேலுடன் இருப்பதற்கு அடையாளமாக
அதைப் பார்க்கவில்லை. தனது மதத்தின் சின்னத்தைப் பற்றியே கருத்துள்ளவனாக இருந்தானே
தவிர, அந்தச் சின்னங்கள் பிரதிநிதிக்கும் தேவன் மேல் கருத்துள்ளவனாக இருக்கவில்லை.
5.
அவனுடைய வாழ்க்கையிலிருந்து கற்கும்
பாடங்கள்:
a.
பெற்றோர் பொறுப்புடன் தங்கள் பிள்ளைகளைக்
கட்டொழுங்கு படுத்த வேண்டும்.
b.
வாழ்க்கையில் நாம் சிந்திப்பது மட்டும்
போதாது. செயல்படவும் வேண்டும்.
c.
கடந்தகால வெற்றியைக் கொண்டு அதேபோல் நிகழ்காலத்தில்
நம்பிக்கை வைக்க முடியாது.
6.
வேதவசன ஆதாரங்கள்
a.
1சாமு.1-4; 1இராஜா.2:26-27-உம் குறிப்பிடப்பட்டிருக்கின்றான்.
7.
விவாதிக்க வேண்டிய கேள்விகள்:
a.
ஏலி என்ற பெயரின் அர்த்தம் என்ன?
b.
எவ்வளவு காலம் சேவை செய்திருக்கிறார்?
c.
அவன் பயிற்சியளித்த தீர்க்கதரிசியின் பெயர்
என்ன?
d.
அவனுடைய பலம் என்ன?
e.
அவனுடைய பெலவீனங்கள் யாவை?
மொழிபெய்ரப்பு:
திருமதி டப்னி ஜோசப்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா
No comments:
Post a Comment