Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, October 12, 2011

18. ஏகூத்


தேவனுடைய தூதன், நியாயதிபதி,
(இடது கை பழக்கமுடைய வீரன்)

1.   முக்கிய வசனம்
Judg 3:15 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள்.  (நியா.33:15)

2.   சுருக்கமான குறிப்புகள்
·         ஊனமுற்ற ஒரு தலைவனின் சரித்திரம்.
·         ஏகூத் தன் ஜனங்களை மோவாபியரிடமிருந்து காப்பற்றினான்.
·         ஏகூத் 80 வருடங்கள் ஸ்தானாபதியாகவும் ஒரு இரட்சகனாகவும் சேவை செய்தான்.
·         தேவன் அவனுடைய ஒப்பற்ற தனித் தன்மையை உபயோகித்தார்.


3.   முன்னுரை
இடதுகை பழக்கமுடையவனாக அவன் ஊனமுற்றவனாக கருதப்படலாம். பென்யமீன் கோத்திரத்தில் அநேகர் இடதுகை பழக்கமுடையவர்களாக இருந்தனர். ஆனால், ஏகூத்தின் இந்த பெலவீனத்தை இஸ்ரவேலருக்கு வெற்றியளிக்கும்படி தேவன் உபயோகித்தார்.

இவன் கேராவின் மகன், இஸ்ரவலேலின் இரண்டாவது நியாயாதிபதி அல்லத இரட்சகன் (நியா.3:15). இஸ்ரவேலருக்கு வெற்றியளிக்கும்படி தேவன் உபயோகித்தார்.

இவன் கேராவின் மகன், இஸ்ரவேலின் இரண்டாவது நியாதிபதி அல்லது இரட்சகன் (நியா.3:15) இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை கொடுக்கும்படி ஏகூத்தை அனுப்பினர்கள். ராஜாவாகிய எக்லோனைத் தனிமையில் சந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு ஏகூத் அவன் கிட்டப் போய் கத்தியால் குத்திக் கொலை செய்தான். எகூர் எப்பிராயீம் மலைக்கு நேராக டிப்போய் ராஜாவினால் ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலரைத் தன் பக்கமாகக் கூப்பிட்டு, அவர்கள் யோர்தானுக்கு எதிரான துறைகளைப் பிடித்து, சுற்றிலும் பாதுகாப்புப் படைகளை வைத்திருந்த மோவாபியர் தப்பி ஓடாதபடி செய்து, மோவாபியர் அனைவரையும் பட்டயத்தால் வெட்டிக் கொன்று போட்டுத் தன்னுடைய தேசத்தை விடுதலை செய்தான். தன் தேசத்தாரில் அநேகர் இடது கைப்பழக்கமுடையவர்களாக இருந்ததுபோல் ஏகூத்தும் தனது இடது கையினாலேயே எக்லோனைக் குத்திக் கொலை செய்தான்.


4.   ஏகூத்திடமிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்?
a.     இடது கைப் பழக்கம் உள்ளவனாக இருந்தும் அவன் தேவனுக்காகப் பெரிய காரியத்தைச் செய்தான். சில நிலைமைகளில் ஏகூர் காண்பித்ததுபோல் உடனடியாக செயல்பட வேண்டியதாக இருக்கிறது. ராஜாவாகிய எக்லோனை நம்பவைத்துத் தந்திரமாக்க் கொலை செய்து தன் தேசத்தையும் ஜனங்களையும் 18 வருடகால மோவாபியரின் ஒடுக்குதலிலிருந்து விடுவித்தான். மோவாபிய சேனை தப்பிச் செல்லாதபடி தடை செய்து அவர்களை அழித்துப் போட்டு இரண்டு தலைமுறைகளுக்கு இஸ்ரவேலில் அமைதியைக் கொண்டு வந்தான் (நியா.3:112-4:11).
b.     மோவாபியரின் ஆதிக்கத்திற்கு விரோதமாகப் போகும்படி தேவன் அவனை உபயோகித்து இஸ்ரவேலுக்கு 80 வருடகாலம் சமாதானமும் அமைதியையும் கொடுத்தார்.
c.     தேவனுடைய வார்த்தைகளுக்கு நம்மை ஒப்புக் கொடுக்கும்போது, இந்த்த் தலைவனை நாம் புறக்கணிக்கக் கூடாதென்று நமக்கு சவால் விடுகிறது. ஏகூத்தைப் பற்றி நாம் வாசிக்கும்பது சில கேள்விகள் கேட்கப்படலாம். எப்பொழுது தேவன் கடைசியாக என் வாழ்க்கையிலுள்ள சில தவறுகளைச் சுட்டிக் காட்டியபோது வேதனையாக இருந்த போதிலும் நான் அதைத் திருத்திக் கொள்ளும்படி உடனடியாக செயல் பட்டேன்?

தேவன் என்னிலுள்ள தனிப்பட்ட தன்மையை எப்படி உபயோகிக்கக்கூடும் என்று எனக்குக் காண்பிக்குமாறு எப்பொழுது நான் கடைசியாக வேண்டிக் கொண்டேன்? (ஏகூத்தின் இடது கை பழக்கதை உபயோகித்த்து போல்) கடைசியாக நான் எப்போது என்னுடைய வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் தேவனுக்குக் கீழ்ப்படிய ஒரு திட்டம் வகுத்து அதின்படியே செய்தேன்?
எப்போது தேவனுக்குக் கீழ்படிவதில் என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தது?

5.   முடிவுரை
சரீரப் பிரகாரமாக நல்ல சுகத்துடன் இருப்பவர்களையும் ஏதோ சில குறைகளுடன் இருப்பவர்களையும் தேவன் தமது ஊழியத்துக்காக உபயோகிக்கக் கூடியவராக இரக்கிறார். நமது ஒவ்வொரு செயலும் தேவனால் ஊக்கவிக்கப்பட்ட அல்லது வழி நடத்தப்பட்ட செயல் என்று நாம் தீர்மானிக்க்க் கூடாது. தேவனுடைய வார்த்தை, பரிசத்தாவியானவரின் உதவியைக் கொண்டே நாம் நிதானித்து அறியக் கூடும்.

6.   வேத வசன ஆதாரங்கள்.
ஏகூத்தின் சரித்திரம் நியா.3:12-20ல் கூறப்பட்டிருக்கிறது.

7.   விவாதிக்க வேண்டிய கேள்விகள்.
a.     ஜனங்கள் கூப்பிடும் சத்த்த்தை நீ கேட்க்க்கூடுமா?
b.     ஜனங்களை அவர்களுடைய பிரச்சனைகளிலிருந்து யார் விடுவிக்கக் கூடும்?
c.     ஏகூத் தனது ஜனங்களை விடுவிக்கத் தீவிரமானதும் ஏன் கொடூரமானதுமான செயலைப் புரிந்தான்?
d.     மோவாப் உடன் ஏகூத் செய்த யுத்தம் துரிதமானதும் கொடியதாகவும் இருந்தது. மலேசியாவின் உன் சவால்களைக் குறிப்பாக எடுத்துக் கூறு.

மொழிபெயர்ப்பு:
திருமதி டப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா.

No comments:

Post a Comment