Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Tuesday, October 11, 2011

12. காயீன்


12.        காயீன்
ஆதாம் ஏவாளின் மூத்த குமாரன்; முதலாவது கொலைகாரன்

முக்கிய வசனம்:
நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். (ஆதி.4:7)

முக்கிய குறிப்புகள்:
·         ஆதாம் ஏவாளின் மூத்த குமாரன்.
·         காயீன், ஆபேல் இருவரும் கர்த்தருக்குக் காணிக்க கொண்டு வந்தார்கள்.
·         காயீன் கோபமடைந்து தன் சகோதரனைக் கொலை செய்யத் தீர்மானித்தான். (ஆதி.4:2-8).
·         அவன் தனது தேசத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் தூரமாகப் பிரிக்கப்பட்டான்.
·         காயீனை தேவன் காதுகாத்தார்.


1.   முகவுரை – அவனுடைய வரலாறு
காயீன் என்பதன் அர்த்தம் – ஈட்டி (2சாமு.21:16). பெற்றோரின் கவனங்கள், முயற்றசிகள் இருந்த போதிலும் குடும்பத்தில் பிள்ளைகளுக்கிடையே சண்டை, ச்ச்சரவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக்க இருக்கிறது. சகோதர்ருக்கிடையேயுள்ள உறவுகளில், பேபாட்டிகளும் ஒத்துழைப்பும் காணப்படலாம். பல சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் அன்புப கூருதலும் சண்டையிட்டுக்கொள்வதும் சேர்ந்து, சகோதர சகோதரிகளுக்கிடையே ஒரு வலிமையான பந்த்த்தை ஏற்படுத்துகிறது. தங்கள் பிள்ளைகளைக்க குறித்து பெற்றோர், “இவர்கள் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொன்று போட்டு விடுவார்களோ? இப்படிச் சண்டை போடுகிறார்களே” என்று சொலவதைக் கூடக் கேட்டிருக்கலாம். காயீனைப் பொறுத்த மட்டில் இது இது ஒரு சோக சம்பவமாக முடிந்த்து. இந்த மூத்த குமாரனின் வாழ்க்கையைப் பற்ற்றி நாம் நுணுக்கமாக எதுவும் அறியாவிட்டாலும் இவனடைய சரித்திரம் நமக்கு ஒரு பாடமாக இருக்கிறது.

காயின் மிகவும் மூர்க்கமான கோபம் கொண்டான். அவனும் அவனுடைய சகோதரனும் தேவனுக்குக் காணிக்கை செலுத்தினார்கள். காயீனுடைய காணிக்கைகை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே காயீனுடைய எண்ணம் சரியாக இல்லை என்பதற்கு அடையாளமாக அவன் செய்த காரியம் காணப்பட்டது. காயீன் இரண்டில் ஒன்றைறத் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருந்த்து. அவன் தன் தேவனுக்குக் கொடுக்கும் காணிக்கை பற்றிய தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தருக்கலாம்; அல்லது தன் சகோதரன் மேல் தனது கோபத்தைக் காண்பித்திருக்கலாம். அவன் செய்த தீர்மானம், நாமும் கூட இவ்வாறு ஒன்றுக்கொன்றுற எதிரான தீர்மானங்களில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டிய நேரங்களில் காயீன் செய்த்து போல் தவறானதையே தெரிந்து கொள்கிறோம் என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. கொலை செய்வதை நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். ஆனால், நாம் தவறானது என்று தெரிந்தும அதையே தெரிந்து கொள்கிறோம்.

நமது நடத்தைக்குக் காரணமாக நம்மைத் தூண்டிவிடும் நமது உணர்வுகள், நமது யோசனா சக்தியினால் மட்டும் எப்போதும் மாற்றப்பட முடியாது. ஆனால், தேவன் நமக்கு உதவிபுரிய ஆவலுடன் இருக்கிறார் என்பதை நமது அனுபவத்தில் நாம் அறிந்து கொள்ள ஆரம்பிக்கலாம். சரியானவற்றைச் செய்வதற்குத் தேவனுடைய உதவி தேவை என்று நாம் வேண்டிக் கொள்வோமானால், பின்னால் நாம் வருந்த்த் தக்க காரியங்களைச் செய்யாதபடி இது நம்மைத் தடுக்க்க் கூடும்.


2.   பலமும் சாதனைகளும்
a.   முதலாவது மனிதக் குழந்தை.
b.   தன் தந்தையின் தொழிலைத் தொடர்ந்து செய்த முதல் மனிதன் (விவசாயம்).

3.   பலவீனங்களும் தவறுகளும்
a.   ஏமாற்றமடைந்த போது கோபத்தை வெளிக்காட்டினான்.
b.   நலமானதைச் செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்ட போதிலும் அவன் எதிர்மறையான செயலைத் தெரிந்து கொண்டான்.
c.   முதலாவது கொலைகாரன்.

4.   அவனுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்கள்
a.   கோபம் கொள்வது மட்டும் பாவமல்ல. ஆனால், அந்தக் கோபத்தினால் தூண்டப்பட்டு செய்யும் செயல்கள் பாவமாக இருக்கலாம்.
b.   நாம் தேவனுக்குக் கொடுக்கும் காணிக்கை நமது இருதயத்திலிருந்து வரவேண்டும். நம்மிலும், நமக்குள்ளவற்றிலும் மிக நலமானதாகவும் உயர்ந்த்தாகவும் இருக்க வேண்டும்.
c.   பாவத்தின் பலன் வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம்.

5.   வேத ஆதாரங்கள்
a.   காயீனின் சரித்திரம் ஆதி.4:1-17ல் சொல்லப்பட்டிருக்கிறது. எபி.1:4, 1யோவான் 3:12; யூதா 111-உம் இவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.

6.   விவாத்த்துக்கான கேள்விகள்
a.   காயீன் யார்?
b.   அவன் ஏன் தன் சகோதரன் ஆபேலைக் கொன்றான்?
c.   அவனுடைய தொழில் என்ன?
d.   காயீனுடைய பாவத்தின் விளைவுகள் என்ன?
e.   ஆபேல், காயீன் ஆகிய இவர்களை எவ்வாறு யாக்கோபு, ஏசாவோடு ஒப்பிடலாம்?


மொழிபெயர்ப்பு:
திருமதி டப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம்.

No comments:

Post a Comment