123 தீத்து
பவுலால் மனம்
மாறினவன்; பிரயாணத்தில் கூட்டாளி
கருவசனம்:
நீ குறைவாயிருக்கிறவைகளை
ஒழுங்கு படுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும்
மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னை கிரேத்தா தீவிலே விட்டுவந்தேனே. (தீத்து 1:5)
கதைச்சுருக்கம்:
·
தீத்து ஒரு கிரேக்க விசுவாசி
·
பவுலால் பயிற்றுவிக்கப்பட்டு பேணி
வளர்க்கப்பட்டவன். கிறிஸ்துவுக்கு ஒரு ஜீவனுள்ள சாட்சியாக நின்று கிறிஸ்து புறமதஸ்தரிடம்
செய்தது போல இவன் எருசலேமில் தேவாலய தலைவர்கள் மத்தியில் செய்தான். (கலாத்தியர்2:1-3)
·
தீமோத்தேயுவைப்போல இவனும் பவுலின் பயணத்தில்
உடனிருந்த நம்பிக்கையான நெருங்கிய நண்பன்.
·
பின்னர் பவுலின் சிறப்பு தூதனாக மாறியவன் (2கொரிந்தியர்7:5)
·
பிற்காலத்தில் இவன் கிரேத்தா தீவிலுள்ள சபைகளுக்கு
மேற்பார்வையாளன் ஆனான் (தீத்து1:5).
·
இது தீத்துவுக்கு ஒரு போதகரது கடிதமாகும்.
அறிமுக
உரை - இவனது கதை
தீத்து ஒரு கிரேக்க
விசுவாசி,
பவுலால்
பயிற்றுவிக்கப்பட்டு பேணி வளர்க்கப்பட்டவன். இவன் ஒரு நல்ல தலைவனுக்கு, பிரகாசிக்கும்
உதாரணமாகக் காணப்பட்டான். தீமோத்தேயு வைப்போல, இவனும் பவுலின் பயணத்தில்
உதவிய ஒரு நம்பிக்கையான நெருங்கிய நண்பன். பின்னர் பவுலின் சிறப்பு தூதராகவும்
கூடவே பயணிக்கும் கூட்டாளியாகவும்
மாறினான் (2கொரிந்தியர்7:5). இவன் கிரேத்தா தீவிலுள்ள சபைகளுக்கு மேற்பார்வையாளனாக
அழைக்கப்பட்டான். பவுல் தீத்துவை ஒரு முழு வளர்ச்சியுற்ற கிறிஸ்தவனாகவும்
பொறுப்பான தலைவனாகவும் உருவாக்கியிருந்தார். தீத்துவுக்கு எழுதப்பட்ட
இந்த கடிதமானது அவனுக்கு சீஷத்துவ செயல் முறையின் ஒரு படியாக அமைந்தது. சபைகளை
எப்படி ஒழுங்குபடுத்துவது, எப்படி நடத்துவது என தீமோத்தேயுவுக்கு கற்பித்தது
போல தீத்துவுக்கும் கற்பிக்கிறார். கிரேத்தாவிலே தீத்துவுக்கு பொறுப்புக்கள்
இருந்தன (தீத்து1:4-5). கிறிஸ்தவ வாழ்க்கையில் நற்செயல்கள் எவ்வளவு
முக்கியமானது என பவுல் தீத்துவுக்கு வலியுருத்திக் கூறுகிறார். சபையிலே
காணப்படும் பல்வேறு வயதினார்கள் மத்தியில் எப்படி ஐக்கிய உறவு கொள்வது என்பது
குறித்தும் அவனுக்கு கூறுகிறார்(2:2-6). வளர்ச்சியுற்ற கிறிஸ்தவனுக்கு ஒரு நல்ல
உதாரணமாக இருந்து (2:7-8). தைரியத்தோடு பேசி, போதித்து, சகல
அதிகாரத்தோடும் கடிந்துகொள் என அறிவுரை கூறி அவனுக்கு உற்சாகமளிக்கிறார் (2-9-15). பின்னர் பவுல்
கிறிஸ்தவ சமுதாயத்தில் இருக்கவேண்டிய பொதுவான பொறுப்புக்கள் குறித்து விவாதிக்கிறார். தீத்து இந்த
காரியங்களை மக்களுக்கு நினைவுருத்தவேண்டும் (3:1-8) என்றும்
புத்தியீனமான தாக்கங்களையும் வம்ச வரலாறுகளையும், சண்டைகளையும் விட்டு
விலகுமாறும் (3:9-11)
இன்னும்
சில பயணத்திற்குத் தேவையான வழிகாட்டுதலையும் விவரங்களையும் கூறி சில விஷயங்களில்
தனிப்பட்ட வாழ்த்துதலைக் கூறி முடிக்கிறார்.
2. செயற்பாடு
பவுல் தீத்துவை
கிரேத்தாவிலுள்ள சபைகளை ஒழுங்குபடுத்தவும் கண்காணிக்கவும் அனுப்பினார். அந்த வேலைகளை
எப்படி செய்ய வேண்டும் என்று பவுல் இந்த கடிதத்தில் கூறுகிறார். குறைவாயிருக்கிறவைகளை
ஒழுங்குபடுத்தவும், பட்டணங்கள் தோறும் மூப்பரை ஏற்படுத்தும் படிக்கும்
பவுல் கட்டளையிடுகிறார்(1:5). இந்த நிருபமானது 1தீமோத்தேயுவில்
கூறப்பட்டிருக்கிறதைப் போன்று சபைத் தலைவர்களுக்கு வழிமுறைகளைக் கூறுகிறதாய்
காணப்படுகிறது. இந்த கடிதமானது கி.பி 64ல் எழுதப்பட்டிருக்கலாம். கிரேத்தா
தீவிலுள்ள சபைகளை மேற்பார்வையிடும் தீத்துவுக்கு அவனுடைய பொறுப்புக்களைக் குறித்து
ஆலோசனை வழங்குவதே இந்த நிருபத்தின் நோக்கமாகும்.
3. ஆற்றல் மிக்க ஒரு கடிதத்தை பவுலிடமிருந்து பெற்றவன்.
1.
திருச்சபையின் தலைமைத்தவம் (1:1-16).
2.
கிரேத்தா தீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச்
சோம்பேறிகளாக (1:12)
இருந்தபடியினால்
பவுல் ஆலயத்திலுள்ளவர்களை ஒழுங்கான மற்றும் சரியான வாழ்க்கை வாழ அழைக்கிறார்.
3.
ஆலயங்களில் செவ்வையான வாழ்வு வாழுதல் (2:1-15).
4.
சமுதாயத்தில் சரியான வாழ்வு வாழுதல் (3:1-15).
முக்கிய
கருத்துக்கள்
கருப்பொருள் விளக்கம் முக்கியத்துவம்
நல்ல வாழ்க்கை - நல்ல வாழ்க்கை
வாழ்வதனால் மட்டும் இரட்ச்சிப்படைய முடியாது. நாம் விசுவாசத்தினால் மாத்திரமே
இரட்ச்சிப்படைய முடியும். சுவிசேஷமானது மக்களின் வாழ்வில் மாற்றத்தை
ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக அவர்கள் நற்செயல்கள் செய்கின்றனர். நாம் சேவை செய்ய
இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நல்ல வாழ்க்கை
என்பது சுவிசேஷத்தின் வல்லமைக்கு ஒரு சாட்சியாகும். நமக்கு கட்டுப்பாடும்
பொறுப்பும் மிக அவசியமாக இருக்க வேண்டும்.
கதாபாத்திரம் - கிரேத்தா தீவில்
தீத்துவுடைய பொறுப்பானது தலைவர்களை ஏற்படுத்துவதும் நிலையான நிர்வாகத்தையும்
ஒழுக்கத்தையும் ஏற்படுத்துவதாகும். தலைவர்களுக்கு தேவையான குணங்களை பவுல் இங்கே
பட்டியலிட்டுக் காட்டுகிறார். ஒருவர் சுய கட்டுப்பாடு, ஆவிக்குரிய
ஒழுக்கம்,
கிறிஸ்தவ
குணநலன்கள் கொண்டவராகவும் இருக்க வேண்டும். நீங்கள் யார் என்பது எவ்வளவு முக்கியமோ
அதே போன்று உங்களால் என்ன செய்ய முடியும்
என்பதும் மிகவும் முக்கியமாகும்.
சரியான வாழ்க்கை - சபையின் போதனையானது பல இனத்தினருக்கும்
ஒத்திருக்க வேண்டும். மூத்த கிறிஸ்தவர்கள், இளம் தலைமுறையான வாலிப
ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். பல்வேறு
வயதினருக்கும் பிரிவினருக்கும் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளும் படியான பாடங்களும், நாம் நிகழ்த்த
வேண்டிய பங்கும் உண்டு. சரியான வாழ்க்கை
சரியான உறவு இரண்டும் சரியான போதனையில் செல்ல வேண்டும். மற்ற விசுவாசிகளோடு
கொள்ளும் உறவு விசுவாச வளர்ச்சிக்கு உதவும்.
குடியுரிமை - கிறிஸ்தவர்கள் நல்ல குடிமக்களாக
தேவாலயத்தில் மட்டுமல்லாது சமுதாயத்திலும்; இருக்க வேண்டும். அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும்
தங்கள் வேலைகளை நேர்மையாக செய்கிறவர்களாயும் இருக்க வேண்டும். உங்கள் குடியுரிமைக் கடமைகளை நீங்கள் எப்படி
நிறைவேற்றுகிறீர்கள் என்பது உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிற உலகத்திற்கு ஒரு
சாட்சியாகும். தேவாலயங்களில் எப்படி நடக்கிறீர்களோ அது போல கிறிஸ்துவின் அன்பை
சமூக வாழ்க்கையிலும் பிரதிபலிக்க வேண்டும்.
4. வேதாகமக்
குறிப்புக்கள்.
தீத்துவுக்கு எழுதின நிருபத்தை படிக்கவும்.
5. கலந்தாலோசனைக்கான
கேள்விகள்
1.1.
பவுல் பயிற்றுவித்த இரண்டு சபைத்தலைவர்களின் பெயர்கள்
என்ன?
1.2.
தீத்து பவுலோடும் பர்னபாவோடும் எருசலேமுக்கு உடன்
சென்றது ஏன்?
(கலாத்தியர் 2:1)
1.3.
இவன் விருத்த சேதனம் ஏன் செய்துகொள்ளவில்லை?
1.4.
தீமோத்தேயுவைவிட இவன் அதிக வலுவான தனித்தன்மை
வாய்ந்த நபர் என ஒப்புக்கொளகிறீர்களா? (1கொரிந்தியர்16:10)
1.5.
மக்கெதோனியாவிலே தீத்து பவுலுக்கு எங்ஙனம் உதவி
செய்தான்?
மொழிபெயர்ப்பு:
ஜான் ஆரோக்கியசாமி
பரி.பர்னபாவின் ஆலயம்
No comments:
Post a Comment