Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Monday, October 17, 2011

122 தீமோத்தேயு


122  தீமோத்தேயு
பவுலின் கூட்டாளி

கரு வசனம்:
உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.
1 தீமோத்தேயு 4:12

கதைச் சுருக்கம்
·                பவுலின் ஊழியத்தில் உடனிருந்த  கூட்டாளி.
·                இவன் ஒரு போதகன் மற்றும் பவுலால் ஆதரிக்கப்பட்டவன்.
·                கிரேக்க மற்றும் யூத பின்னணியிலிருந்து வந்தவன்.
·                பவுலிடமிருந்து இரண்டு தனிப்பட்ட கடிதங்களை இவனுடைய சபைத் தலைமைத்துவத்திற்காக பெற்றவன்.
·                இளம் பருவ  போதகனாக போராடினவன்.

அறிமுகவுரை - இவனது கதை
இவனது பெற்றோர் கிரேக்க மற்றும் யூத கலப்பு இனத்தினர். இவன் பவுலின் சீடனாகவும் பவுலுக்கு நெருங்கிய கூட்டாளியாகவும் காணப்பட்டான். இந்த தீமோத்தேயு பவுலால் ஆதரிக்கப் பட்டவனாயும், எபேசுவில் ஒரு சபைப் போதகனாயும் காணப்பட்டான். ஒரு இளம் போதகனாக இருந்து, இவன் சபையினராலும், சுற்றியிருந்த ஜனங்களாலும் அவர்களது கலாச்சாரத்தாலும் பல தொல்லைகளையும், குழப்பங்களையும், சவால்களையும் சந்திக்க வேண்டியதாயிற்று. பவுல் இவனுக்கு உற்சாகமும் ஆலோசனையும் வழங்கும் வண்ணம் ஒன்று மற்றும் இரண்டு தீமோத்தேயு ஆகிய இவ்விரண்டு நிருபங்களையும் எழுதுகிறார்.

தேவபக்தி நிறைந்த உறவினர்களால் உண்டான தாக்கத்திற்கு தீமோத்தேயு ஒரு முக்கிய உதாரணமாகக் காணப்படுகிறான். யூத விசுவாசிகளாகிய இவனது தாயார் ஐனிக்கேயாள் மற்றும் இவனது பாட்டி லோவிசாள் ஆகிய இருவரும் இவனது வாழ்க்கையை வடிவமைக்கவும் இவனது ஆன்மீக வாழ்கையில் முன்னேறவும் உறுதுணையாக இருந்தனர் (2தீமோத்தேயு 1:5, 3:15). எபேசு சபையிலே காணப்பட்ட தவறான போதனைகளை எதிர்க்கும் வண்ணம் அங்கே அனுப்பப்பட்டான். இவன் அங்குப் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது.  தீமோத்தேயுவுக்கு  ஊழியத்தைக் குறித்த நடைமுறை அலோசனைகளை வழங்கி இவனை உற்சாகப்படுத்தும் வண்ணம் பவுல்  நிருபங்களை எழுதுகிறார்.

முதலாம் தீமோத்தேயு நிருபமானது ரு தனிப்பட்ட கடிதமாகவும், சபை நிர்வாகத்திற்கும், ஓழுக்கத்திற்கும் ஒரு கையேடு போலவும் காணப்படுகிறது. சத்திய வசனத்தை நிதானமாய் போதிக்கிறவனாயிரு என பவுல் அறிவுறுத்துகிறார் (2தீமோத்தேயு 2:15). இது பவுலின் கடைசி கடிதமானபடியால் பவுல் தனது இருதயத்தின் விருப்பமாகிய வல்லமையான போதனைகள், விசுவாசத்தில் தரித்திருத்தல், தன்னம்பிக்கை, சகிப்புத்தன்மை மற்றும் மாறாத அன்பு ஆகிய இவைகளில் நிலைத்திருக்கும்படி போதிக்கிறார். பவுல் இந்த நிருபத்தை புதிய தலைமுறையினராகிய திருச்சபை தலைவர்களுக்கு ஒரு வழிகாட்டும் ஒளியாக அமையும் வண்ணம் எழுதுகிறார். இந்த நிருபமனது எபேசு சபையின் போதகனாயிருந்த தீமோத்தேயுவுக்கு உற்சாகமூட்டும் போதனையாகக் காணப்படுகிறது.

பர்னபாஸ் என்பவன் ஜான் மற்றும் மார்க் என்பவர்களை தன்னுடன் மிஷனரி பயணத்தில் புதிதாக சேர்த்துக்கொள்கிறான். பவுலும் ர்வமுள்ள இளைஞனாகிய தீமோத்தேயுவைத் தனது உதவியாளனாக இணைத்துக் கொள்ளுகிறார். இவர்களது தனிப்பட்ட உறவு, தீமோத்தேயு பவுலுக்கு ரு மகனைப் போல மாறினான். பவுல் லீஸ்திராவுக்கு மிஷனரி பயணம் மேற்கொண்ட போது தீமோத்தேயு அநேகமாக கிறிஸ்தவனாக மாறியிருக்கவேண்டும் (அப்போஸ்தலா; 16:1-5). தீமோத்தேயு ஏற்கெனவே நல்ல திடமான யூத பாரம்பரியத்தில் பயிற்சி பெற்றவனாயும், இவனது பாட்டி மற்றும் இவனது தாயின் மூலமாக வேதாகமத்தை அறிந்தவனாயும் காணப்பட்டான். பவுலின் இரண்டாவது பயணத்தின் போது இவன் இயேசுவின் மதிப்பிற்குரிய சீஷனாக வளர்ந்திருந்தான். பவுலோடும், சீலாவோடும் சேர்ந்து பயணம் செய்ய இவன்  தயங்கவில்லை. ஒரு வளர்ந்த மனிதனாக காணப்பட்டாலும் இவன் விருத்தசேதனம் செய்ய அனுமதித்தது இவனுடைய பொறுப்புணர்வுக்கு ஒரு அடையாளமாக காணப்படுகிறது. இவனுடைய யூத மற்றும் கிரேக்கம் கலந்த பாரம்பரிய பின்னணி இவர்களது மிஷனரி பயணத்தில் பல பிரச்சனைகளைக் கொண்டு வந்திருக்கக் கூடும். ஏனெனில் இவர்களது சபையினர் அநேகர் யூதர்களாயும் யூதர்களது பாரம்பரியத்தை கட்டாயமாய் கடை பிடிப்பவர்களாயும் காணப்பட்டனர். தீமோத்தேயு விருத்தசேத்திற்கு அனுமதித்தது வரவிருந்த பிரச்சினைகளைத் தடுக்க உதவியது.

இவனது கலப்பின பின்னணியினால் உருவாக்கப்பட்ட பதற்றங்களுக்கு அப்பால், தீமோத்தேயு தன்னுடைய பயந்த சுபாவத்தினாலும் இவனது வாலிப பருவத்தின் உணர்திறனுடனும்  போராட வேண்டியிருந்தது. துரதிஷ்டவசமாக, தீமோத்தேயுவின் குணாதிசயங்களைப் பகிர்ந்து கொள்ளும் பலர் அதிக பொறுப்பு உடையவராக வேண்டுமெனில் அதிக இடையூறுகளைச் சந்திக்க வேண்டும் என்கின்றனர். தேவ கிருபையால், பவுல் தீமோத்தேயுவிடம் அபார ஆற்றலைக் கண்டார். பவுல் தீமோத்தேயுவிடம் முக்கிய பொறுப்புக்களை ஒப்படைத்து அவன் மீது உள்ள நம்பிக்கையை நிரூபித்துக் காட்டுகிறார். பவுல் இவனைக் கொரிந்து பட்டணத்திற்கு ஒரு பதற்றமான வேளையில் தனது பிரதிநிதியாக அனுப்புகிறார் (1கொரிந்தியா;4:14-17) அந்தக் கடினமான வேளையில் இவன் வெளிப்படையாக பயனற்றவனாக காணப்பட்டாலும், பவுல் இவனை விட்டுவிட வில்லை. தீமோத்தேயு பவுலோடு தொடர்ந்து பயணிக்கிறான்.

முதிர்வடைந்து தன் வாழ்க்கையின் இறுதி காலத்தை எட்டிய போதும் அவனது சேவை செய்யும் எண்ணமானது அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததே தவிர மங்கிப்போகவில்லை. பவுல் தனது நெருங்கிய நண்பன் ஒருவருக்கு எழுதும்போது, அவர்கள்  ஒன்றாக பயணித்தது, சேர்ந்து பாடு அநுபவித்தது, சேர்ந்து அழுதது மற்றும் சிரித்தது ஆகிய இவரது அநுபவங்களை எழுதுகிறார். ஜனங்கள் நற்செய்திக்குச் செவி கொடுத்ததினால் உண்டான பெரும் மகிழ்ச்சி, சுவிசேஷம் புறக்கணிக்கப்பட்ட மற்றும் திரித்துக் கூறப்பட்டதினால் உண்டான வேதனையையும் பகிர்ந்து கொள்கிறார்.

எபேசு பட்டணத்தில் உள்ள இளஞ் சபைகளைக் கண்கானிக்கும் படியாக பவுல் தீமோத்தேயுவை அங்கே விட்டுச்செல்கிறார் (1தீமோத்1:3-4). பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோனை வழங்கி அவனை உற்சாகப்படுத்தும் படியாக இந்த நிருபத்தை எழுதுகிறார். இந்தக் கடிதமானது தீமோத்தேயு போன்ற இன்னும் எண்ணிக்கைக்கு அடங்காத அநேகருக்குப் பல ஆண்டுகளாக போதிய ஆறுதலையும் தேறுதலையும் அளிக்கக் கூடியதாய் காணப்படுகிறது. உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதனைக்குள்ளாகும் போதெல்லாம் இந்த முதலாம் மற்றும் இரண்டாம் நிருபமாகிய தீமோத்தேயுவை வாசித்து உங்கள் அனுபவங்களைப் பிறர் கண்டு பகிர்ந்து கொண்டதை நினைவு கூறுங்கள்.

பெலனும் சாதனைகளும்
1.     பவுலின் முதலாவது மிஷனரி பயணத்தின் மூலம் விசுவாசியானவன் பின்னர் பவுலோடு வேறு இரண்டு மிஷனரி பயணத்தைத் தொடர்கிறான்.
2.     இவனது சொந்த ஊரில் மதிப்பிற்குரிய ஒரு கிறிஸ்தவனாக காணப்பட்டான்.
3.     பல சந்தர்ப்பங்களில் பவுலின் சிறப்பு பிரதிநிதியாகக் செயல்பட்டான்.
4.     பவுலிடமிருந்து இரண்டு தனிப்பட்ட நிருபங்களைப் பெற்றுக் கொண்டவன்.
5.     பவுலை குறித்து மற்றவர்களைக் காட்டிலும் இவன் அதிகமாக அறிந்திருந்தான். 
6.     இவன் பவுலுக்கு ஒரு மகனைப்போலக் காணப்பட்டான்.
7.     பவுலின் பல நிருபங்களுக்கு இணை அனுப்புனராக தீமோத்தேயு காணப்பட்டான்.

பெலவீனங்களும் தவறுகளும்
1.     தைரியமின்மை மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் தயக்கம் ஆகிய இக்குணங்களோடு சிரமப்பட்டவன்.
2.     இவனது வாலிபப்பிராயத்தின் அநுபவங்களை மற்றவர்களும் காண  அனுமதித்தவன்.
3.     பவுல் இவனை கொரிந்து பட்டணத்திற்கு அனுப்பின போது அங்குள்ள பிரச்சனைகளை தீர்க்கமுடியாதவனாக காணப்பட்டான்.

4) இவனுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள் 
1.     வாலிபம் நம்முடைய திறனற்ற நிலைக்கு ஒரு காரணமாக அமையக்கூடாது.
2.     நம்முடைய பலவீனம் மற்றும் பற்றாக்குறைகள் நம்மை தேவனைவிட்டு பிரிக்கக்கூடாது.

5. வேதாகமக் குறிப்புக்கள்
தீமோத்தேயுவின் கதை கீழ்கண்ட வேதபகுதிகளில் காணலாம். அப்போஸ்தலர் 16வது அதிகாரத்திலும், ரோமர் 16:21,  1கொரி 4:17,16:10,11, 2கொரி 1:1,19 பிலி 1:1,2:19-23, கொலோ 1:1, 1தெசலோ 1:1-10,3:2-6, 1 & 2 தீமோத்தேயு, பிலேமோன் 1 மற்றும் எபிரேயர் 13:23 காணலாம்.

6. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
1.        கிறிஸ்தவ விசுவாசத்தில் இவனைப் பயிற்றுவித்தது யார்?
2.        பவுல் தீமோத்தேயுவைக் கண்டது எங்கே?
3.        பவுல் இவனை விருத்தசேதனம் செய்வித்தது ஏன்?
4.        தீமோத்தேயு போதகனாக பணியாற்றியது எங்கே?
5.        பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டு கடிதங்களின் பெயர்கள் என்ன?


மொழிபெயர்ப்பு:
ஜான் ஆரோக்கியசாமி,
பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான்.

No comments:

Post a Comment