Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Tuesday, October 11, 2011

15. தாவீது



இஸ்ரவேலின் மிகச் சிறந்த அரசர்களில் ஒருவன்

முக்கிய வசனம்:
இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம் பண்ணினீர்.  இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான். (2சாமு.7:28,29)

சுருக்கமான குறிப்புகள்:
·         8 சகோதர்ருள் தாவீது இளையவன் (1 சாமு.17:12)
·         தாவீது சவுல் ராஜாவுக்குப் பின் அரசனானான். 33 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
·         தாவீது பல ஆண்டுகள் அகதியாக வாழ்ந்தான்.
·         தவறான வழியில் பத்சேபாளை எடுத்துக் கொண்டான்.
·         இயேசு தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டார்.
·         சவுலுக்குப் பின் தாவீதுதான் ராஜ்யத்தைக் கட்டினான்.

1.   முகவுரை
தாவீதின் சரித்திரம் நமக்குப் போதித்து, வழிகாட்டி, எச்சரிப்பதாக இருக்கிறது. அவனுடைய பெயர் ‘பிரியமானவன்’ என்று பொருள்படும். இஸ்ரவேல் மக்களின் இரண்டாவது அரசனும் எல்லா அரசர்களைக் காட்டிலும் பெரியவனுமாயிருநதான். இவன் ஈசாயின் மகன். ரூத்தினுடைய பூட்டப் பேரன். 10 பிள்ளைகளுள்ள குடும்பத்தில் இளையவன். இவனுடைய தகப்பன் நல்ல ஆஸ்தியும் வசதியுமுள்ளவராக இருந்த போதிலும், பொதுவாகக் கிழக்கத்திய நாடுகளில் அடிமைகளே செய்யும் தொழிலாகிய மேய்ப்பனின் தொழிலைத் தனது வாலிப நாட்களில் தெரிந்து கொண்டான். இருந்த போதிலும் சாமுவேல் தீர்க்கதரிசி இவனை இஸ்ரவேலின் வருங்கால அரசனாக அபிஷேகம் செய்தார். சுரமண்டலம் வாசிப்பதில் இவன் கெட்டிக்காரனாக இருந்ததினால், கர்த்தரால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி சவுலைக் கலங்கப்பண்ணும் நேரங்களில் தாவீது சுரமண்டலத்தை எடுத்து வாசிப்பான். அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க சவுல் சொஸ்தமாவான் (1சாமு.16ம் அதிகாரம்). தாவீது கோலியாதைச் சந்தித்த இடம் எபேஸ்-தம்மீம். இரண்டு சேனைகளும் இரண்டு மலைகளின் மேல் நிற்க, நடுவில் பள்ளத்தாக்கு இருந்தது. தாவீது பெலிஸ்தியனைக் கொன்று புகழ் பெற்றதினால் சவுல் தன் மகனாகிய மீகாளைத் தாவீதுக்குக் கொடுத்த போதிலும் சவுல் தாவீதின்மேல் பொறாமையும் எரிச்சலும் கொட்ணடிருந்தான். ஆனாலும் தாவீதுக்கு உயர்ந்த பதவியைக் கொடுத்தான்.

சவுலின் குமாரன் யோனத்தான் தாவீதின் மேல் மிகவும் பிரியமாயிருந்தான். இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். ஆனால் சவுல் எப்போதும் தாவீதைக் கொலை செய்ய வகை தேடிக் கொண்டிருந்தான். தாவீது அவனுக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியே ஓடிப் போய்க் கொண்டிருந்தான். சாமுவேலிடம் போய் அடைக்கலம் புகுந்தான். பின்பு காத்தின் ராஜாவாகிய ஆசீசிடத்தில் போனான். தன்னை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்று பயந்து, தாவீது பைத்தியம் பிடித்தவன் போல் நடித்து அங்கிருந்து தப்பி அப்துல்லாம் என்னும் கெபிக்குப் போனான். பின்னர் என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான். பின்னர் யூதாவுக்குத் தெற்கேயுள்ள ஆரேத் என்னும் காட்டில் வசித்து வந்தான். தாவீதுக்கு உண்மையாயிருந்த சில மனிதர்கள் அவனுடைய கஷ்டங்களிலும் பங்குகொள்ள ஆயத்தமுள்ளவர்களாக அவனோடு கூட இருந்தார்கள். அவர்கள் கர்த்தர் கொடுத்த உத்தரவின்படி கேகிலா பட்டணத்துக்குப் போய் பெலிஸ்தருடன் யுத்தம் செய்து கேகிலாவின் மக்களை இரட்சித்தான் (1சாமு.23ம் அதிகாரம்). சவுலைக் கொல்வதற்குத் தனக்கு ஒரு வாய்ப்புக் கிட்டிய போதிலும் தாவீது எங்கேதியில் சவுலின் உயிரைத் தப்ப விட்டான் (1சாமுவேல் 24). நாபாலை மன்னித்து, விட்டுவிடும்படி அவன் மனைவி அபிகாயில் தாவீதிடம் மற்றாடிக் கேட்டுக் கொண்டாள்.

கில்போவாவிலே பெலிஸ்தருடன் நடைபெற்ற யுத்தத்தில் குப்பின் (1சாமுவேல் 31) சவுல், யோனத்தான் இவர்களின் மரணத்தைக் குறித்து தாவீது புலம்பினான் (2 சாமு.3:1). இஸ்ரவேல் முழுமைக்கும் ராஜாவான பின் தாவீது எருசலேமைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டான். உடன்படிக்கைப் பெட்டி பயபக்தியுடன் எருசலேமுக்குக் கொண்டு வரப்பட்டது. அவனுடைய வெற்றியும் செல்வமும் அவனைப் பாவத்திற்கு வழிநடத்திச் சென்றன. அவன் விபசாரம் செய்த்து மட்டுமல்ல; உரியாவின் மரணத்திற்குக் காரணமாக இருந்தான் (2சாமு.11). அவன் குற்றம் சாட்டப்பட்டான். மனஸ்தாப்ப்பட்டு மன்னிக்கப்பட்டான். ஆனால், அவன் வாழ்நாளின் மீதியான நாட்கள் குடும்ப விரோத்த்தினால் கசப்பான நாட்களாக இருந்தன. அவனுக்குப் பிரியமான மகன் அப்சலோம் தகப்பனுக்கு விரோதமாகக் கலகம் பண்ணி சில காலம் தன் தகப்பனாகிய தாவீதை நாட்டை விட்டே ஓடச் செய்தான். கடைசியில் அழிந்து போனான் (2சாமு.15-18). தாவீது சாலொமோன் எருசலேம் தேவாலயத்தைக் கட்டினான். தாவீதின் நகரமாகிய பெத்லெகேமில் தாவீது அடக்கம் செய்யப்பட்டான் (1இராஜா2:10).

தாவீதின் ஜீவியத்தில் விசித்திரமான சம்பவங்களும் ஆச்சரியமான மாறுபாடுகளும் நிறைந்ததாக இருந்தது. தாவீதின் சரித்திரம் பெலவீனங்களையும், பலத்தையும் காண்பிக்கிறது. தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாக இருந்தான் என்று வேதாகமம் கூறுகிறது (1சாமு.13:14).

முதலாவது அவனுடைய பலம் என்ன என்று பார்ப்போம்.


2.   தாவீதின் பலமும் சாதனைகளும்.
a.     இஸ்ரவேலின் மிகப்பெரிய ராஜாவாக இருந்தான். தாவீதின் ராஜ்யத்தை ஸ்தாபித்தான்.
b.     அவன் இயேசு கிறிஸ்துவின் முற்பிதா.
c.     எபி.11ல் விசுவாச வீரர்களின் பட்டியலில் சேர்க்கப் பட்டிருக்கிறான்.
d.    அவன் பாவம் செய்த போதிலும், தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவன் என்று தேவன்தாமே அவனைக் குறித்து சொல்லியிருக்கிறார்.
e.     வெகு சிலரே இவனைப் போன்று பலவிதமானதும் மாறுபட்டதுமான தன்மைகளைக் கொண்டவர்களாக இரப்பார்கள்.
பழைய ஏற்பாடு முழுவதிலுமே தாவீதுடைய குணாதிசயங்களுக்கு ஒப்பிடத் தக்க வேறு எவரும் இல்லை. கிறிஸ்து ஆபிரகாமின் குமாரன் என்று அழைக்கப்படவில்லை. ஆனால், தாவீதின் குமாரன் என்று அழைக்கப்படுகிறார்.


3.   தாவீதின் பெலவீனங்களு தவறுகளும்:
a.     அவன் பத்சேபாளுடன் விபசாரத்தில் ஈடுபட்டான்.
b.     பத்சேபாளின் கணவனைத் திட்டம் போட்டுக் கொலை செய்தான்.
c.     மக்களின் ஜனத்தொகை கணக்கெடுத்ததில் தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை.
d.    தன் பிள்ளைகளின் பாவங்களைச் சரியானபடி கண்டிக்கவில்லை.

4.   அவன் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்கள்:
a.     தன் தவறுகளை ஒப்புக் கொள்ள ஆயத்தமாக இருந்தான்.
b.     மன்னிப்பானது, பாவத்தின் விளைவுகளை அகற்றுவதில்லை.
c.     தேவன் நமது முழுமையான நம்பிக்யையும் ஆராதனையையுமே பெரிதும் விரும்புகிறார்.


5.   வேத வசன பகுதிகள்:
a.     ஆமோஸ் 6:15; இவனுடைய சரித்திரம் 1சாமு.16 – 1 இராஜா 2ம் அதிகாரித்தின் மூலம் அறியலாம். மத்தேயு 1:11,6; 22:433-45; லூக்கா 11:32, அப்.13:22; ரோமர் 1:3; எபிரேயர் 11:32உம் குறிக்கப்பட்டுள்ளது.

6.   விவாதம் செய்வதற்கான கேள்விகள்:
a.     தாவீது ஏன் இஸ்ரவேலில் பெரிய அரசர் எனப்படுகிறார்?
b.     அவன் பாவம் செய்த போதிலும் தேவன் தாமே ஏன் ‘என் இருதயத்திற்கு ஏற்றவன்’ என்று அவனைப் பற்றி விவரித்துக் கூறினார்?
c.     அவனுக்குப் பிரியமான மகனும், ஞானி என்று அழைக்கப்பட்டவனும் யார்?
d.    தாவீது எழுதியவற்றுள் நாம் அதிகமாக நமது ஆராதனையில் உபயோகிப்பது எது?
e.     அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்கள் கற்றுக் கொல்ல்லாம்?


மொழிபெயர்ப்பு:
திருமதி டப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம்.

No comments:

Post a Comment