Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, October 12, 2011

17. தெலீலாள்



சிம்சோனை வசீகரித்த பெண்

1.   முக்கிய வசனங்கள்:
16 இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, 17 தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.  (நியாதிபதிகள் 16:16,17)


1.   சுருக்கமான குறிப்புகள்
·         பெலிஸ்தியப் பெண்ணான தெலீலாள் சிம்சோனை மயக்கினாள்.
·         சிம்சோனிடம் அவள் காட்டிய அன்பு உண்மையானதல்ல.
·         சிம்சோன் அவள் பேரில் கொண்டிருந்த துராசையை அவள் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டாள்.
·         அவள் சிம்சோனுக்கு அழிவை உண்டு பண்ணினாள்.


2.   முன்னுரை
தெலீலாள் என்பது அரேயி மொழியில் ‘ஆசைப்படு’ அல்லது ‘சரசமாடு’ என்று பொருள்படும். சோரேக் ஆற்றங்கரையில் வசித்த தெலீலாள் என்ற பெயர்கொண்ட பாலஸ்தீன ஸ்திரியினவளால் சிம்சோன் வசீகரிக்கப்பட்டான். அவனுடைய பலத்தின் இரகசியத்தைப் பெலிஸ்தருக்குக் காட்டிக் கொடுத்த்தினால் அவர்கள் அவனைப் பிடித்து சங்கிலியால் கட்டி காசாவுக்குக் கொண்டு போனார்கள். அங்கே அவன் இறந்தான். தாண் கோத்திரத்தில் பலசாலியான சிம்சோன் பெலிஸ்தியரை அடிக்கடி தாக்கி வந்ததினால், அவர்கள் தெலீலாளுக்கு மிகுதியான பணம் கொடுத்து, “நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறதென்று அறிந்து கொள்” என்றார்கள் (நியா.1:5). அவள் அதேபோல் அறிந்து  கொண்டு அவனைக் காட்டிக் கொடுத்த்தினால் பெலிஸ்தியர் அவனைப் பிடித்து சிறையிலடைக்க ஏதுவாயிற்று.

இந்த தெலீலாள் தன் உதடுகளில் தேனும் இருதயத்தில் விணயமும் கொண்ட வஞ்சகமான பெண். தனது சொந்த இலாபத்தைக் கருதி சிம்சோனைக் காதலிப்பது போல் பாசாங்கு செய்தாள். சிம்சோன் எப்படி இவ்வளவு அறிவில்லாதவனாக இருந்திருக்கக் கூடும்? 4 தடவைகள் தெலீலாள் அவனிடம் கேட்டுப் பார்த்தள். தெலீலாள் சொல்லிய பொய்களை சிம்சோன் நம்பினதினால் ஏமாற்றப் பட்டான். அவன் ஒரு சிங்கத்தைக் கொலை செய்யக் கூடிய பலம் வாய்ந்தவனாக இருந்த போதிலும், தன்னுடைய மாம்ச இச்சையைக் கட்டுப்படுத்த முடியாமல் தெலீலாள் யார் என்பதைக் கண்டு கொள்ளாமல் போனான்.

பெலிஸ்தியர் 5 அதிகாரிகளால் ஆளப்பட்டனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு பட்டணங்களிலிருந்து ஆட்சி புரிந்தனர் – அஸ்தோத், அஸ்கெலான், எக்ரோன், காத், காசா – இந்தப் பட்டணங்கள் ஒவ்வொன்றும் வியாபார மையங்களாக இருந்தன. தெலீலாளின் குணத்தைப் பார்க்கும்போது இங்கு வரும் பணமும் பலமும் உடைய வியாபாரிகள் அவளுக்குக் கொடுத்த பணத்திற்காக அவள் சிம்சோனைக் காட்டிக் கொடுத்ததில் வியப்பில்லை.

ஒரு மனிதனின் மிகப் பெரிய சாதனை மற்றவர்களும் பெரிய காரியங்களைச் சாதிக்கும்படி உதவி செய்வதாகும். அது போலவே ஒரு மனிதனின் மிகப் பெரிய தோல்வி, மற்றவர்கள் உயர்ந்த நிலைமைக்கு வராதபடி தடை செய்வதாகும். தெலீலாள், சிம்சோனின் வாழ்க்கையில் ஒரு சிறிய பங்காற்றினாள். ஆனால், அதன் விளைவு அவன் வாழ்க்கையை நாசமாக்கி விட்டது. ஏனென்றால் தேவனிடமிருந்து அவன் பெற்ற விசேஷித்த அழைப்பைக் காட்டிக் கொடுக்கும்படி அவள் அவனைத் துண்டி விட்டாள். தன்னுடைய பேராசையினால் தூண்டப்பட்டுத் தன்னுடைய வார்த்தைகளினால் அவனை நெருக்கி சிம்சோன் சோர்வுற்றுப் போகச் செய்தாள். அவனுக்கிருந்த சரீர பெலத்தின் முன் தெலீலாள் ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆனாலும் அவளுடைய விருப்பத்திற்காக விட்டுக் கொடுத்ததினால், அதற்கு விலைக்கிரயமாக அவன் தன் உயிரை இழக்க வேண்டியதாயிற்று. இதற்குப் பின் தெலீலாளின் பெயர் வேதாகமத்தில் எங்கும் கண்டறியப்பிடப்படவில்லை. அவளுடைய உண்மையற்ற தன்மை அவனுக்கும் அவளுடைய மக்களுக்கும் அழிவைக் கொண்டு வந்தது.
 

3.   பலமும் சாதனைகளும்
a.     தடைகளைச் சந்தித்த போதும் அவள் பிடிவாதமுள்ளவளாக இருந்தாள். அவளுடைய துரோகத்திற்குக் கூலியாக அவள் 5000 சேக்கல்கள் (700 பவுன்) பெற்றாள்.

4.   பலவீனங்களும் தவறுகளும்
a.    உறவைக் காட்டிலும் பணத்திற்கு மதிப்புக் கொடுத்தாள்.
b.     தன்னை நம்பின மனிதனைக் காட்டிக் கொடுத்தாள்.

5.   அவளுடைய வாழ்க்கையிலிருந்து கற்றக் கொள்ளும் பாடங்கள்
நம்பிக்கைக்குப் பாத்திரமான மக்களிடம் நம்பிக்கை வைக்கும்படி நாம் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். பினவரும் கேள்விகளை நாம் கேட்க வேண்டும்:- உன்னை அறிந்த பின்பு மக்கள் உதவியைப் பெற்றிருக்கிறார்களா? உன்னை அறிந்ததினால் தாங்களும் கூடிய மட்டும் சிறந்த மக்களாக இருக்க வேண்டும் என்று சவாலை அவர்கள் உணருகிறார்களா? உன்னை அறிந்திருப்பது, தேவனோடு உறவு கொள்ள அவர்களக்கு உதவியாக இருக்கிறதா? என்பதே மிக முக்கியம். மற்றவர்களுடைய வாழ்க்கையில் தேவன் உபயோகிக்கும் கருவியாக இருக்க நீ விரும்பிகிறாயா?

6.   வேதவசன ஆதாரங்கள்
அவளுடைய சரித்திரம் நியா.16ம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

7.   விவாதத்திற்கான கேள்விகள்:
a.     தெலீலாள் யார்?
b.     சிம்சோன் ஏன் பெலிஸ்தியரைத் தாக்க விரும்பினான்?
c.     அவனுடைய பலம் என்ன?
d.     தெலீலாளின் வாழ்க்கையின் மூலமாக நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?
e.     அவளுடைய துரோகத்திற்காக எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது?


மொழிபெய்ரப்பு:
திருமதி டப்ன ஜோசப்
பரி.பவுல் ஆலயம்.

No comments:

Post a Comment