தீர்க்கதரிசியானவள்
இஸ்ரவேலின் ஒரே பெண் நியாயாதிபதி
முக்கிய வசனம்:
அக்காலத்தில்லே எபிதோத்தின் மனைவியாகிய தெபொராள்
என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். (வசனம் அறியப்படவில்லை)
சுருக்கமான குறிப்புகள்:
·
சாமர்த்தியமுள்ள
தலைவி / இஸ்ரவேலின் நியாயாதிபதி.
·
இவன் ஒரு
மத்தியஸ்தராகவும் ஆலோசகராவும் சேவை செய்து வந்தாள்.
·
பாடல்கள்
எழுதுவபராக இருந்தான்.
1. முகவுரை
தேவன் தம்முடைய தராதரத்தின்படி
தலைவர்களைத் தெரிந்தெடுக்கிறார்; நாம் கணக்கிடுவது போல் அல்ல.
தெபொராள் என்பதன்
பொருள் ‘தேனீ’. வேதாகமத்தில் வேறு சில தெபொராளையும் பார்க்கிறோம். முதலாவது, ரெபெக்காளின்
தாதியாகிய தெபொராள் (ஆதி.35.8). ரெபெக்காள் தன் கணவன் வீட்டுக்குப் போகும் போது இவளும்
கூடப் போனாள் (ஆதி.24:59). ஆனால் நாம் இப்போது பார்க்கப் போவது இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகிய
தெபொராள் (நியா.4:5).
அவள் இஸ்ரவேலை நியாயம்
விசாரித்த தீர்க்கதரிசி (நியா.4:5) எப்பிராயீம் மலைத் தேசத்தில் பேரீச்ச மரத்தின் கீழ்
அவள் நியாய விசாரணை செய்தாள். அவளுடைய தீர்க்கதரிசன வரத்தினால் தேசத்தில் ஏமாற்றமும்
குழப்பமுமான சமயத்தில் அவளுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது (நியா.4:6). இஸ்ரவேலில் அவள்
ஒரு நல்ல தாயாக விளங்கிளாள். 20 வருடங்களாக இஸ்ரவேலை ஒடுக்கிய ஆத்ரின் ராஜாவாகிய பாபீனுக்கு
விரோதமாக இஸ்ரவேலைத் தூண்டி எழுப்பினாள். பாராக்கின் உதவியுடன் அவள் 10 ஆயிரம் பேர்
கொண்ட சேனையைக் கொண்டு யாபீனின் சேனாதிபதியாகிய சிசெராவின் சேனையைத் தோற்கடித்தாள்.
தேசத்தில் 40 வருடங்களாக அமைதி நிலவச் செய்தாள் (நியா.5:31).
2. இவளைப்
பற்றி நாம் என்ன அறிகிறோம்?
a.
இஸ்ரவேலில்
இவள் ஞானமும் சாமர்த்தியமுமுள்ள ஒர மத்தியஸ்தரும், ஆலோசகரும், சட்டம் பேசுகிறவளுமாயிருக்க
விசேஷித்த தகுதியுடையவளாயிருந்தாள். ஞானமுள்ள தலைவர்கள் அநேகர் இல்லை. இவர்கள் தாங்கள்
நேரில் இடைபடாமலே, பெரிய அளவிலான வேலைகளைச் செய்து முடிக்கிறார்கள். ஏனென்றால் மற்றவர்கள்
மூலமாக எவ்வாறு வேலையை நடப்பிக்கலாம் என்று இவர்கள் அறிந்திருக்கிறார்கள். இவள் தேவனோடு
நெருங்கிய உறவு கொண்டிருந்தாள். தேவன் இவளுக்குக் கொடுத்த ஆழமான அறிவும் திட நம்பிக்கையும்
பழைய ஏற்பாட்டில் இவளுக்கு ஓர் இணையற்ற சிறப்பான இடத்தைக் கொடுத்திருக்கிறது. சரித்திரத்தில்
முக்கியமான இடம் பெற்ற பெண்களுள் தெபொராளும் இருக்கிறாள்.
b.
இவள் ஒரு
முன்மாதிரியான தலைவி – இவள் அதிகாரத்தில் ஆசை வைக்கவில்லை என்பதை இவளுடைய சரித்திரம்
கூறுகிறது. தேவனுக்குச் சேவை செய்வதையே விரும்பிளாள். தனக்குப் புகழ்ச்சி கிடைக்கும்போது
அது தேவனுக்கே உரிதானது என்று தேவனை மகிமைப் படுத்தினாள். கலாச்சாரத்தின்படி தான் ஒரு
மனைவியும் தாயுமாக இருப்பதை அவள் ஒருபோதும் மறுக்கவில்லை. ஆனாலும் தேவனால் வழிநடத்தப்படுவதை
விரும்பும் மக்களின் மூலமாக தேவன் பெரிய காரியங்களைச் செய்யக் கூடும் என்பதை இவளுடைய
சரித்திரம் நமக்குக் காண்பிக்கிறது. தீர்க்கதரிசனம் உரைக்கும் அவளுடைய திறமை அல்லது
வரம் யாவரும் அறிந்ததாக இருந்தது. யூதர்களின் சரித்திரத்திலேயே அவள்தான் ஒரே ஒரு பெண்
நியாயாதிபதி.
c.
பாடல்கள்
எழுதுபவள் – இவளது பெற்றியைக் குறிக்கும் படல் அதே அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிறது
(நியா.5ம் அதிகார) எபிரேய பாடல்களில் பழமையானதும் மகா சிறப்பு வாய்ந்ததுமான இந்தப்
பாடல் இலக்கியத்திலேயே முதல் தரமான பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. 5ம் அதிகாரத்தில்
காணப்படும் வெற்றிப் பாடலுடன் சந்தோஷமான கொண்டாட்டமும் தொடர்ந்து வருகிறது. தேவனே இந்த
வெற்றிக்குக் காரணமானவர் என்று கூறி தேவனுடைய மகத்துவத்தை அறிவித்தது. இந்த அதிசயமான
சம்பவத்தைப் பின்வரும் தலைமுறைகளுக்கு அறிவிக்க இதைப் பத்திரப்படுத்தவும் மறுபடி கூறவும்
இது ஒரு சிறந்த வழியாக இருந்தது. தங்கள் வெற்றியினிமித்தம் பாராக் தெபொராள் தேவனைத்
துதித்துப் பாடினார்கள்.
3. முடிவுரை
யூத கலாச்சாரம் ஆண்களையே முக்கியமாக
அங்கீகறித்த போதிலும், பெண்கள் மறக்கப்பட்டதில்லை. தெபொராளும் அத்தாலியாளும் பழைய ஏற்பாட்டில்
பெண்களின் ஊழியத்தை முக்கியப்படுத்திக் காண்பிக்கின்றனர். கர்த்தருடைய ஆவியினால் நிறைந்த
ஒரு தலைவியாக இருந்தாள். தேவன் அவளை ஏவி எழுப்பினார் (நியா.6:34); 11:29; 114:6). அவளுடைய
பாடல் அவளுடைய சாதனைகளைக் கொண்டாடுகிறது. அது ஒரு வெற்றிப் பாடல்.
4. வேத
வசன ஆதாரங்கள்.
அவளுடைய சரித்திரம்
நியாயாதிபதிகள் 4, 5ம் அதிகாரங்களில் கூறப்பட்டிருக்கிறது.
5. விவாதத்துக்கான
கேள்விகள்:
a.
தெபொராள்
ஏன் வேதத்திலுள்ள முக்கியமான பெண்களில் ஒருவராக கருதப்படுகிறாள்?
b.
நியாயாதிபதிகளில்
புத்தகத்தில் வெற்றிப் பாடலை நாம் எங்கு பார்க்கிறோம்?
c.
அவள் எப்படி
ஒரு நியாயாதிபதியாக நியாயம் விசாரிக்க முடிந்தது?
d.
அவள் பெற்றுள்ள
மற்ற வரங்கள் யாவை?
e.
அவளுடைய
பெயரின் அர்த்தம் என்ன?
மொழிபெயர்ப்பு:
திருமதி டப்னி ஜோசப்,
பரி.பவுல்
ஆலயம்.
No comments:
Post a Comment