Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Thursday, October 6, 2011

121 தோமா


121 தோமா
இயேசுவின் சீடர்களில் ஒருவன்

கரு வசனம்:
27. பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
28. தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்  (யோவான் 20:27-28)

சுருக்கத் திரட்டு:
·       இவனுடைய பெயர் ஆராம் என்கின்ற மொழியிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் இரட்டைஎன்பதாகும். இவனுடைய புனைப்பெயர் யூதாஸ். (இவனுடைய செல்லப் பெயர் தாமஸ்) யூதாஸ் என்கிற பெயர்தோமாவின் சுவிசேஷம்;” போன்ற  சில தள்ளுபடி ஆகமங்களில் காணப்படுகிறது. இந்தத் தகவல்கள் நம்பப்படத்தக்கது அல்ல.
·       இவன் இயேசுவோடு லாசருவின் கல்லரைக்குச் செல்லவும், யூதர்களால் மரணம் வந்தாலும் அதை எதிர்கொள்ளவும் ஆயத்தமுள்ளவனாய் காணப்பட்டான்.
·       இயேசு நிகழப்போகிற தன்னுடைய புறப்பாடு குறித்து அவருடைய 12 சீஷர்களுக்குக் கூறுகையில், இயேசு எங்கே போகிறார்? என்பதை புரிந்து கொள்ள முடியாத அவன் தன்னுடைய புரிந்து கொள்ள முடியாமையை அறிக்கையிடுகிறவனாய் காணப்படுகிறான்.
·       ஆரம்பத்தில் இவன் இயேசுவின் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கவில்லை. எனவே இவனுடைய பெயர்சந்தேகத் தோமாஆனது.
·       இவனுடைய முக்கிய அறிக்கை என் ஆண்டவரே என் தேவனே” (யோவான்20:28) என்பதாகும்.

அறிமுகவுரை: இவனது கதை
இந்தப் பெயர் அராம் என்கிற மொழியிலிருந்து  வந்ததாகும். தியோமா, என்றால் இரட்டை என்று பொருள். தோமா என்றாலே நம் நினைவுக்கு வருவது சந்தேகத் தோமா’ (அல்லது நம்பாத் தோமா) என்பதே. இவனது நம்பிக்கையே இவனை மதிப்பிற்கு தகுதி உடையவனாக்குகிறது. இவன் சந்தேகப்படுபவன் தான். ஆனால் இவன் உண்மையை அறிந்து கொள்ள விரும்பியதே இவனுடைய சந்தேகத்திற்கு காரணமாயிருந்தது.  தோமா தனது சந்தேகத்தை வைத்து வணங்கிக் கொண்டிருக்கவில்லை. மாறாக சரியான காரணங்கள் கிடைத்த பொழுது  சந்தோஷமாக அதை நம்பினான். இவனுடைய சந்தேகங்களை முழுமையாக வெளிப்படுத்தி அதற்குரிய பதிலையும் பெற்றுக்கொள்பவனாகவே காணப்படுகிறான். சந்தேகப்படுவது, இவன் மறுமொழி கூறும் வழியே தவிர சந்தேகமே இவனது வாழ்க்கையல்ல.

தோமாவைக் குறித்த நமது கண்ணோட்டம் சுருக்கமாக காணப்பட்டாலும் இவனுடைய குணம் ஒரு மாறா நிலைத்தன்மையுடையதாய் காணப்படுகிறது. அவன் தான் உணர்ந்த காரியங்களை விட தனக்கு தெளிவாகத் தெரிந்த காரியங்களில் உண்மையாயிருக்க போராடினான்.

ஒரு தருவாயில், இயேசுவின் வாழ்க்கை ஆபத்தில் இருக்கிறது என அனைவரும் அறிந்த போது அவர்களது உணர்வுகளை இந்த தோமா மாத்திரமே வார்த்தையில் வெளிப்படுத்துகிறான்.  அவரோடே கூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்என்கிறான் (யோவான்11:16). இவன் இயேசுவை பின் தொடர்வதை வெறுக்கவில்லை.

உயிர்தெழுந்த பின் இயேசு சீஷர்களுக்குத் தரிசனமான போது தோமா அங்கு ஏன் இல்லை என்று நமக்குத் தெரியாது. ஆனால் அவன் கிறிஸ்து உயிர்தெழுந்தார் என்ற அவர்களின் சாட்சியை நம்ப தயக்கங்காட்டினான். அவனுடைய நண்பர்கள் கூட அவனுடைய எண்ணங்களை மாற்ற முடியவில்லை!

வாழ்க்கையில் சந்தேகம் வரலாம். ஆனால் சந்தேகமே வாழ்க்கை ஆகிவிடக்கூடாது. சந்தேகமானது நாம் மீண்டும் சிந்திக்க வழிசெய்கிறது. அதன் நோக்கம் அதிலிருந்து மாறுவதைவிட அதைக் குறித்து தெளிவடைய செய்கிறது. சந்தேகமானது  ஒரு கேள்வியை முன்வைத்து, அதற்குரிய பதிலைப் பெற்று ஒரு புதிய முடிவை எடுக்க உதவுகிறது. ஆனால், சந்தேகமானது நிரந்தர நிலை தீர்வாகாது. சந்தேகம் என்பது, ஒரு காலைத் தூக்கி முன் அல்லது பின் செல்ல ஆயத்தமாக்குகிறது. இந்த கால் திரும்ப அதன் நிலைக்கு வரும்வரை நாம் அசைய முடியாது.

நீங்கள் சந்தேகத்துக்குள்ளாகும் போது தோமாவிடமிருந்து  உற்சாகத்தை கற்றுக்கொள்ளுங்கள். இவன் தனது சந்தேகத்திலேயே நிலைத்திருக்காமல் இயேசு அவனுக்கு நம்பிக்கை கொண்டுவர அவரை அனுமதித்தான். இயேசுவைப் பின்தொடர்ந்த இன்னும்  அநேகர் இந்த சந்தேகத்திலே சிக்கித் தவித்தனர் என்பதை நினைத்து நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளுவோமாக. தேவன் அவர்களுக்குக் கொடுத்த பதில் உங்களுக்கும் பிரயோஜனமாயிருக்கும். ந்தேகத்திலேயே வாழ்க்கையை நடத்திவிடாதபடி அதிலிருந்து வெளியேறி ஒரு முடிவுக்கும் நம்பிக்கைக்கும் வருவோம். உங்கள் சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய நம்பிக்கையான நல்ல விசுவாசியைத் தேடுங்கள். அமைதியான சந்தேகங்கள்  பதில் காண்பது அரிதே.
இந்தியாவிலுள்ள ஆதி கிறிஸ்தவ திருச்சபைகள் தோமாவால் நிறுவப்பட்டவைகள் என கூறப்படுகிறது.

2. வலிமையும் சாதனையும்        
1.        இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவன்.
2.        சந்தேகிப்பதிலும், விசுவாசிப்பதிலும் மும்முரமானவன்.
3.        நேர்மையும் நம்பிக்கையுமானவன்.
4.        இயேசுவைக் கடவுள் என அழைத்த முதல் நபர் இவனே.

3. பெலனும் பெலவீனமும்
1.        இயேசு கைது செய்யப்பட்டபோது, மற்றவர்களோடு சேர்ந்து இயேசுவை கைவிட்டுச்         சென்றவன்.
2.        கிறிஸ்துவைக் கண்டதாக மற்றவர்கள் கூறியதை ஏற்க மறுத்தது மட்டுமல்லாது, நிறுபிக்குமாறும்       கேட்டவன்.
3.        ஒரு எதிர்மறையான (நம்பிக்கையில்லாத) கண்ணோட்டத்தோடு போராடினவன்.

4. இவனுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள் 
1.        நேர்மையான மற்றும் நம்பிக்கைக்கு நேராக வழிநடத்தும்  சந்தேகத்தை ஒருபோதும் இயேசு     நிராகரித்தது இல்லை.
2.        அமைதியாக இருந்து நம்பிக்கை இல்லாமலிருப்பதிலும், பலத்த குரலோடு சந்தேகத்தை        தெரிவிப்பது   நலம்.

5. வேதாகமக் குறிப்புக்கள்
தோமாவின் கதை சுவிசேஷங்களில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் அப்போஸ்தலர் 1:13லும் காணலாம்.

6. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
6.1      சந்தேகத் தோமா(நம்பாத் தோமா) என்று இவன் அழைக்கப்படுவது ஏன்?
6.2      இயேசுவுக்காக மரிக்கவும் தயார் என்ற தைரியத்தையும், துணிவையும் எப்போது         காண்பித்தான்.(யோவான் 11:16)
6.3      உயிர்த்தெழுந்த தேவனை விசுவாசிக்க முடியாத அவனுக்கு தேவன் எப்படி உதவினார்?
6.4      இவன் பரிசுத்த தோமா ஆனது எப்படி?
6.5      சந்தேகத்திலிருக்கும் ஒருவருக்கு நீங்கள் எப்படி உதவுவீர்கள்?


மொழிபெயர்ப்பு:
திரு. ஜான் ஆரோக்கியசாமி,
பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான்.
7.10.20111

    
    

No comments:

Post a Comment