ஒரு விவசாயி தீர்க்கதரிசியானார்
முக்கிய வசனம்:
Amos 5:24 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது. (ஆமோஸ் 5:24)
சுருக்கமான குறிப்புகள்:
1. கி.மு. 8ம் நூற்றாண்டில் தெக்கோவா உரிலுள்ள மேய்ப்பன்.
2. ஆமோஸ் அநீதி, விக்கிராராதனை இவற்றுக்கு விரோதமாகப் பிரசங்கித்தான்.
3. ஆமோஸ் பயமற்றவனாகவும் தேவனுக்குப் பயந்தவனாகவும் இருந்தன்.
4. தனிப்பட்ட முறையிலும், சமய ரீதியிலும் காணப்டும் பாவங்களுக்காக மனஸ்தாப்ப்பட்டு, மெய்யான தேவனையே வணங்கும்படிக்குத் திரும்பி வரும்படி ஆமோஸ் மக்களுக்கு அழைப்பு கொடுத்தான்.
1. முகவுரை – அவன் சரித்திரம்
இவனுடைய பெயர் ‘சுமப்பவன்’ என்று பொருள்படும். இந்தப் புத்தகம் எழுதிய ஆமோஸ் இதை இஸ்ரவேலருக்காகவும், எவ்விடத்திலுமுள்ள தேவனுடைய மக்களுக்காகவும் எழுதினார். இஸ்ரவேலின் அரசன் யெரொபெயாம் 4. யூதாவின் அரசன் உசியாவின் அரசன் ஆட்சிக்காலத்தில் இது எழுதப்பட்டிருக்கலாம் (சுமார் கி.மு.760). இப்புத்தகத்தை எழுதியதின் நோக்கம் என்ன? இஸ்ரவேலின் வடபகுதியான ராய்த்தின் மேல், அவர்களுடைய மெத்தனமான திருப்தி, விக்கிரகாராதனை, எளியவர்களை ஒடுக்குதல் ஆகியவற்றுக்காக அவர்கள் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் கூறும் படியாகவே எழுதப்பட்டது. செல்வந்தரான இஸ்ரவேலர் சமாதானமும் சந்தோஷமும் அனுபவித்து வந்தனர். இவர்கள் தங்களைக் குறித்து சுயதிருப்தியுள்ளவர்களாக ஏழைகளை ஒடுக்குவதுடன் அவர்களை அடிமைகளாக விற்கவும செய்தனர். வெகு சீக்கிரமே இஸ்ரவேல் அசீரியாவினால் தோற்கடிக்கப்பட்டு, செல்வந்தர்களும் கூட அடிமைகளாகுவார்கள்.
சிறிய தீர்க்கதரிசிகள் என்று குறிறப்பிடப்படுபவர்களில் ஆமோஸ் ஒருவர் ஆவார். இவர் எழுதியது, தீர்க்கதரிசன புத்தகங்களில் முன்னதாகவே எழுதப்பட்டதாக இருக்கிறது. உசியா, எரோபேயாம் அரசாண்ட நாட்களில் இவர் தமது தீர்க்கதரிசன ஊழியத்தை நிறைவேற்றினார் (ஆமோஸ் 1:1). இவன் ஓசியாவின் காலத்தில் வாழ்ந்தவன். இஸ்ரவேலின் 10 கோத்திரங்களுக்கும் இவன் ஊழியம் செய்தான் (7:10-113).
ஆனால், இவன் இஸ்ரவேல் நாட்டைச் சேர்தவனல்ல. யூதாவிலே பெத்லெகேமுக்குத் தெற்கேயுள்ள தெக்கோவா ஊரிலிருந்து வந்து இஸ்ரவேல் நாட்டில் வசித்தவன். அவனது தனிப்பட்ட ஜீவியத்தில், மந்தை மேய்க்கிற மேய்ப்பனாக இரந்தான். (7:14) “தீர்க்கதரிசியல்ல, தீர்க்கதரிசியின் மகனுமல்ல”
அதாவது அந்த ஊழியத்திற்குப் பயற்சி பெற்றவனல்ல. ஆனால் கர்த்தர் தாமே இஸ்ரவேலுக்குத் தீர்க்கதரிசனம் உரைக்கும்படி அழைத்தர். (7:115). பெத்தேலில், விக்கிரகாராதனைக்கார ஆசாரியனான அமத்சியா எரொபெயாமுக்கு விரோதமாக ஆமோஸ் சதியாலோசனை செய்கிறான் என்று குற்றம் சாட்டியபோது ஆமோ இந்த உண்மையைக் கூறுகிறான். அவன் மேய்ப்பனாக இருந்த்தினால், தாவீதின் குடும்பத்தோடு தனக்கு எந்த அரசியல் சம்பந்தமும் இருக்கிறதோ என்ற சந்தேகம் அகற்ற்றப்பட வேண்டும்.
எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவன் செய்தி கொடுத்தான்?
இஸ்ரவேல் சமாதானமும் செல்வமும் நிறைந்த வாழ்க்கையுடன் சந்தோஷமாக இருந்த்து. ஆனால் இந்த விதமான ஆசீர்வாதம் இஸ்ரவேலை சுயநலமும் பொருளாசையுமுள்ள சமயமாகும்படி செய்து விட்டது. வாழ்க்கையில் உயர்ந்த நிலைமையில் இருந்தவர்கள் வசதிகுறைந்த மக்களின் தேவைகளை அசட்டை செய்தனர். மக்கள் தங்களைப் பற்றிய எண்ணமுடையவர்களாக, தேவனைக் குறித்து அலட்சியமாக இருந்தனர்.
அவன் கொடுத்த பொதுவான செய்தி என்ன?
தேவையுள்ள மக்களை உதாசீனம் செய்து அல்லது தங்கள் சுயநலனுக்காக உபயோகிப்பவர்களுக்கு விரோதமாக ஆமோஸ் பேசினார்.
அவனுடைய முக்கியமான செய்தி என்ன?
சமுதாயத்தில் காணப்படும் அநீதிக்கு விரோதமாக செயல்படவும் கஷ்டப்படுவோருக்கு உதவி செய்யவும் விசுவாசிகள் அனைவரையும் தேவன் அழைக்கிறார்.
அவர் காலத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள் யார்?
யோனா தீர்க்கதரிசி - கி.மு. 793 – 753
ஓசியா தீர்க்கதரிசி – கி.மு. 753 – 715.
ஆமோஸின் செய்தி விரிவான கருத்துக்கள் உடையதாக இருக்கிறது.
• ஒவ்வொருவரும் தேவனுக்குப் பதில் கூற வேண்டும் – மக்கள் தங்கள் பாவங்களுக்காக கணக்கொப்புவிக்க வேண்டும். தேவனே எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். நாம் எவ்வாறு ஜீவிக்கிறோம் என்று தேவனுக்கு அறிக்கை செய்ய வேண்டும்.
• இது போதும் என்று மெத்தனமாக இருத்தல் – செல்வச் சிறப்பான நிலைமை, நேர்மையற்ற தன்மையையும் அழிவையும் கொண்டு வந்தது. சுய தேவையை மாத்திரம் பூர்த்தி செய்து கொள்ளும் மனப்பான்மை உன்னுடைய வீழ்ச்சியாக இருக்கலாம்.
• ஏழைகளை ஒடுக்குதல் – ஏழ்மை நிலைமையில் இருப்பவர்களை உதாசீனம் செய்வது, தேவன் அன்பு கூரும் மக்களையும், கிறிஸ்து இரட்சிக்கும்படியாக வந்த மக்கனைளயும் உதாசீனம் செய்வதாகும். அநியாயத்தைக் கட்டுப்படுத்தவும், வசதிகுறைந்த மக்கள் பேரில் அக்கரை கொண்டு அவர்களுக்கு உதவி செய்யவும் நாம் மன உருக்கத்துடன் செயல்பட வேண்டும்.
• உறுதியில்லாத மேல்மட்டமான சமயம / மதம் – ஆவிக்குரிய உண்மையும், தேவனுக்குக் கீழ்ப்படிதலும் இல்லாமல் மக்கள் வெளிப்படையான மத சம்பிரதாயங்களை மட்டும் செய்து வந்தனர்.
2. இந்தப் புத்தகத்தின் அதிகாரங்கள் 5 பகுதிகளாகப் பிரிக்கப்படலாம்:-
a. 1-2 அதிகாரங்கள் – தெய்வபயமற்ற அந்நிய நாடுகளின் மேலும், யூதா இஸ்ரவேலின் மீதும் அவைகளின் பாவங்களுக்காக தேவனுடைய நியாயத் தீர்ப்பும் தண்டனையும்.
b. அதி.3-5:117 - சமாரியா (இஸ்ரவேலின் வடதேச ராஜ்யத்தைக் குறிக்கும்)வின் பாவங்களும் அதற்கு வரப்போகும் தண்டனையும்.
c. அதி.5-.18-6:14 – தவறான பாதுகாப்பின் நம்பிக்கை காண்பிக்கப்படுகிறது. நியாயத் தீர்ப்புகள் பற்றி மறுபடியும் கூறப்படுகிறது.
d. 7:1-9 முதல் 9:10 – தேவனுடைய பொறுமை, நீதியான நியாயத் தீர்ப்புகளை வெவ்வேறு விதங்களில் காண்பிக்கும் 5 தரிசனங்கள். 3வது, 4வது தரிசனங்களுக்கிடையே ஆமோஸைக் குறித்த சுவையான ஒரு சம்பவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (7:10-17).
e. 9:11-15 – முடிவில் தேசம் எப்படி முன்போல் செழிப்புடன் புதிதாக்கப்படும் என்பதைக் காட்டுகிறது. வருங்கா ஆசீர்வாதங்களைப் பற்ற்றிய இந்த அறிவிப்புகளை, ப்போஸ்தலனாகிய யாக்கோபு அப்.115:116, 17ல் எடுத்துக் காண்பித்து, யூதருக்காக வைக்கப்பட்டிருக்கும் கிருபையானது, பூமியிலுள்ள எல்லா ஜனங்களுக்கும் கொடுக்கப்டும் என்று கூறுகிறார்.
3. அவனுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்கள்:-
a. தேவன் ஒரு சாதாரண மனிதனாக மந்தை மேய்த்தவனை அழைத்தது போல், தம்முடைய ஊழியத்துக்காக எந்த ஒரு நபரையும் அழைக்கலாம். மோசேயும் கூட அழைக்கப்படும்போது மேய்ப்பனாகவே இருந்தான்.
b. ஆமோஸ் கீழ்ப்படிந்த்து போல் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் கீழ்ப்படிய வேண்டும்.
c. ஆமோஸ் கொடுத்த செய்தி பல நூற்றாண்டு காலமாக மக்களில் பல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றும் கூட அது தனிப்பட்ட மக்களும், தேசங்களும் கேட்பதற்கு அவசியமானதாக இருக்கிறது.
d. ஆமோஸ் மனிதருக்குப் பயப்படாத, உண்மையும் நேர்மையுமுள்ள மேய்ப்பன். இவன் இஸ்ரவேலின் தென் பகுதியைச் சேர்ந்தவன். மக்களின் பாவங்களைச் சுட்டிக்காட்டி, வரப்போகும் நியாயத் திர்ப்பைக் குறித்து அவர்களை எச்சரித்தான்.
e. மற்ற நாடுகளின் பாவங்களைக் குறித்துக் கண்டனம் பண்ணி ஆமோஸ் பேசியதைக் கேட்டவர்கள், இஸ்ரவேலின் மேல் தேவனுடைய நியாயத் தீர்ப்பைக் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது. தேவனுடைய தரிசனத்திற்கு நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கும்படி அழைக்கப் பட்டிருக்கிறோம். பின்பு தேவன் அவர்களைச் சீர்ப்படுத்தினார்.
4. ஆமோஸ் தேவனைப் பற்றிக் கூறுவது:-
a. “பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்து கொண்டேன். ஆகையால் உங்கள் எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்” – ஆமோஸ் 3:2
b. ஆமோஸ் தேவனுடைய நியாயத் தீர்ப்பைக் கறித்து எச்சரித்தான். தேவனுக்கும் இஸ்1ரவேலுக்குமிடையேயுள்ள அன்பின் உடன் படிக்கையே மற்ற நாடுகளைக் காட்டிலும் இஸ்ரவேலுடன் தேவன் மிகக் கண்டிப்புடன் செயல்படச் செய்தது.
c. பாவமுள்ள ஜனத்தின் மரணத்தைத் தேவன் விரும்பவில்லை. ஆனால் அவர் தன் பாவத்தை விட்டுத் திருமபி ஜீவிக்க அவர் விரும்புகிறார்.
d. “என்னைத் தேடுங்கள், அப்பொழுது கண்டுபிடிப்பீர்கள். 5:4. மனந்திரும்புதலுக்கும், மனந்திரும்புதலின் மூலமாகப் புதுப்பிக்கப்படுதலுக்குமான வாசலை ஆமோஸ் மூடவில்லை. இஸ்ரவேலின் மேல் தேவனுடைய கிருபை மிகுந்த பொறுப்புள்ளதாக இருந்த்து. (3:1-20 ஆமோஸ் ஒரு போதும் தேவனைக் குறித்து, “‘இஸ்ரவேலின் தேவன்” என்று பேசவில்லை. தேவன் இஸ்ரவேலையும் மற்ற ஜனங்களையும் பாவம் போக்கி சுத்தம் செய்வார். எந்த ஜனத்தில் மக்கள் ஒருவரோடொருவர் நியாயமாக நடது கொள்ளுகிறார்களோ, அவர்களே உண்மையாக தேவனோடுள்ள உடன்படிக்கையின் மக்கள் என்பது ஆமோஸின் இருதயத்தில் திட நமபிக்கையாக இருந்தது.
5. விவாதம் செய்வதற்கான கேள்விகள்:
a. தீர்க்கதரிசியாக அழைக்கப்படுவதற்கு முன் ஆமோஸ் என்ன வேலை செய்து கொண்டிருந்தான்?
b. அவனுடைய பொதுவான செய்தி என்ன?
c. அவனுடைய முக்கியமான செய்தி என்ன?
d. தாவீதின் நகரம் புதுப்பிக்கப்படுவது பற்றி கூறு. (9:111,12).
e. இஸ்ரவேலின் கீழ்ப்படியாமையும், மாய்மாலம தேச சத்தை அழிவின் உச்ச நிலைக்குக் கொண்டு போவதை ஆமேஸ் எப்படிப் பார்த்தான். (1:1-3)
f. மலேசியா நாட்டின் பிரச்சனைகள் யாவை?
மொழிபெய்ரப்பு:
திருமதி டப்னி ஜோசப்
பரி.பவுலின் ஆலயம், பெட்டாலிங் ஜெயா
No comments:
Post a Comment