42. யெரொபெயாம்- இஸ்ரவேலின் ராஜா
முக்கிய வசனம்:
"இந்த நடபடிக்குப் பின்பு, யெரொபெயாம் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினான்; எவன் மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப்
பிரதிஷ்டை பண்ணினான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள்.
யெரொபெயாமின் வீட்டாரைப் பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக்
காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று." (1 ராஜாக்கள் 13:33-34)
சுருக்கமான குறிப்புகள்:
- · அவரது ஆரம்ப காலம் மிகவும் தாழ்மையானது. அவரது தாய் ஒரு விதவை.
- · சாலொமோன் ராஜாவின் ஒடுக்குமுறையை அவர் எதிர்த்ததால் எகிப்துக்கு விரட்டப்பட்டார்.
- · தாணிலும் பெத்தேலிலும் எருசலேம் விக்கிரஹங்களை மிஞ்சும் படியாக ஆலயங்களை கட்டியதால் தெய்வ கோபத்துக்கு ஆளானார்.
- · இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களுக்கும் அவர்தான் முதல் ராஜா.
- · பரம்பரை உரிமையில்லாமல் மக்களால் தேர்வு செய்யப்பட்டு அரியணைக்கு அவர் வந்ததே வடக்கு ராஜாங்கம் வலுவிழந்து விழுந்து போவதற்கு காரணம் ஆயிற்று.
முன்னுரை: அவரது கதை
யெரொபெயாம் என்றால் "அதிகமான மக்கள்" என்று பொருள். யெரொபெயாம் நேபாத்துக்கும் செரூகாள்
என்ற விதவைக்கும் பிறந்த மகன். (1 ராஜாக்கள் 11:26)
"இஸ்ரவேல் மக்களைப் பாவம்
செய்ய வைத்தார்" என்று முத்திரை குத்தப்பட்டார். (1 ராஜாக்கள் 12:26) சாலொமோன் ராஜா மில்லோவை (எருசலேம் சுவற்றின் ஒரு
பகுதி) கட்டிக்கொண்டிருக்கும் போது
யெரொபெயாமைப் பற்றி அறிந்தார். அதன் பின் கட்டாய ஊழியம் செய்ய எப்பிராயீமரை
தேர்ந்தெடுக்கும்
பணிக்கு அவரை அதிகாரியாக நியமித்தார். (1 ராஜாக்கள் 11:27)
அகியா என்னும் தீர்க்கதரிசி அவரை
10 கோத்திரங்களுக்கும் அதிபதியாக இருக்க வேண்டும்
என்று வற்புறுத்தினான். அவர் ஆண்டவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தால் தாவீதைப் போலவே அவரும் செழித்து வளருவார் (1 ராஜாக்கள் 11:29).
பயந்து போன சாலொமோன் எரொபெயாமைச்
சிறை பிடிக்க முயன்றான். ஆனால் அவர் எகிப்துக்கு தப்பி
ஓடி சாலொமொன் ராஜா இறக்கும் வரைக்கும் அங்கேயே இருந்தார். பின்னர் தன் சொந்த
ஊருக்கு திரும்பினார். ஆனால் தாவீதின் அரியணைக்குப் புதிய ராஜாவான ரெஹோபெயாம் 10 கோத்திரங்களையும் விலக்கி வைத்திருந்தான். யெரொபெயாம் திரும்பி வந்ததை அறிந்த 10 கோத்திரங்களும் அவரை "இஸ்ரவேல் முழுதுக்கும் ராஜாவாக்கினார்கள்".
அவர் சீகேமில் தன் இருப்பிடத்தைக் கட்டி அதைப் பலப்படுத்தினார். பின்பு யோர்தான் நதிக்குப் புறம்பே பெனுவேல் என்ற
நகரத்தைக் கட்ட, அதை யோர்தானின் அக்கரையிலே இருந்த கோத்திரங்களை
அமைதியாக வைத்திருக்க எப்போதும் தயார் நிலையில் வைத்திருந்தார் (1 ராஜாக்கள் 12:1).
ஆனால்
யெரொபெயாம் எந்த ஒப்பந்தத்தின் பேரில் நாட்டுக்கு செழிப்பு கிடைத்தது என்பதை
விரைவில் மறந்து போனார். (1 ராஜாக்கள் 11:38).
10 கோத்திரத்தாரும் ஆண்டுதோறும்
நடக்கும் விழாவுக்கு எருசலேமுக்கு சென்றால் தன்னை விட்டு விலகி போய்விடுவார்கள்
என்று எண்ணிய யெரொபெயாம் அங்கே தாண், பெத்தேல் என்ற இடங்களில் 2 ஆலயங்களைக் கட்டி விக்கிரக ஆராதனையை ஸ்தாபித்தார் (1 ராஜாக்கள் 12:28).
அவர் எஹோவாவை கன்றுகுட்டி
வடிவில் ஸ்தபித்தது எகிப்தியரின் வழக்கமாய் இல்லாமல்,
பண்டைய இஸ்ரவேலர் மற்றும்
கானானியரின் வழக்கமாய் இருந்தது. அவர் ஆலயங்களைக் கட்டி அதில் ஆசாரியர்களாக ஜனத்தில்
ஈனமானவர்ளை நியமித்தார். அவர்கள் ஆரோன் குடும்பதாருமில்லை லேவியர்
கோத்திரத்தாருமில்லை (1 ராஜாக்கள் 12:31). ஆண்டவர் ஒரு தீர்க்கதரிசி மூலமாகவும், தன் மரத்துப்போன கை மீண்டும் சரியானதின் மூலமாகவும் யெரொபெயாமை எச்சரித்தார்
(1 ராஜாக்கள் 13:1).
அதன் பின் கண் தெரியாத அகியா
என்ற தீர்க்கதரிசியின் மூலமாகவும் எச்சரித்தார். (1 ராஜாக்கள் 14:10)
ஆனால் தெய்வ எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத எரொபெயாமும் அவன் வீட்டாரும்
தொடர்ந்து பாவம் செய்தார்கள் (1 ராஜாக்கள் 13:34).
22 ஆண்டுகள் அரசாண்ட பின்
யெரொபெயாம் மரித்தான். அவனது மகன் நாதாப்
ராஜாவானான் (1 ராஜாக்கள் 13:14:1).
2. அவருடைய பலமும் சாதனைகளும் என்ன?
1.
மிகவும் நல்ல முறையில் நடத்துபவர்,
ஒழுங்கு படுத்துபவர். சாலொமோன்
ராஜா அவருடைய வழிநடத்தும் தகுதியைப் பார்த்து அவரை ஒரு பணிக்குத் தலைவராக்கினார்.
2.
பிரிக்கப்பட்ட ராஜ்ஜியத்தில் 10 கோத்திரங்களுக்கும் அவர்தான் முதல் ராஜா.
3.
அவர் மிகவும் வல்லமையான, மக்கள் ஒத்துழைப்பு அதிகம் இருந்த ஒரு தலைவர்.
3. அவருடைய பலவீனங்களும் தவறுகளும்:
1.
மக்களை எருசலேம் ஆலயதிற்கு செல்லாமல் தடுக்க இஸ்ரவேலில் விக்கிரஹங்களை
ஏற்படுத்தினார்.
2.
லேவியர் கோத்திரத்துக்கு வெளியில் இருந்து ஆசாரியர்களை நியமித்தார்.
3.
ஆண்டவருடைய வார்த்தைகளை விட தன்னுடைய ஞானத்தையே நம்பினார்.
4. அவருடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்:
1.
தவறான முடிவுகளால் பெரிய வாய்ப்புகளும் அழிந்து போகும்.
2.
மற்றவர்களுடைய தவறுகளைத் திருத்த சரியான முறையில் எடுக்காத முயற்சிகள் அதே
தவறுக்கு இட்டுச் செல்லும்.
3.
ஆண்டவருடைய நடத்துதலுக்காக காத்திராமல்
அதை நாமே செய்ய முற்படும்போது எப்போதும் தவறுகள் நேரிடும்.
5. வேத ஆதாரங்கள்
யெரொபெயாமின் வரலாறு 1 ராஜாக்கள் 11:26-
14:20 வசனங்களில்
சொல்லப்பட்டிருக்கிறது. 2 நாளாகமம் 10-13 லும் சொல்லப்பட்டிருக்கிறது.
6. விவாதத்துக்கான கேள்விகள்:
6.1 அவர் யார்?
6.2 அவருடைய பலங்கள் என்ன?
6.3 அவருடைய பலவீனங்கள் என்ன?
6.4 அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்ற பாடங்கள் யாவை?
6.5 அவரை எகிப்துக்கு விரட்டியது யார்?
மொழி பெயர்ப்பு:
திருமதி கிரேஸ் ஜட்சன்
பரி. பவுல் ஆலயம்,
பெட்டாலிங் ஜெயா.
No comments:
Post a Comment