Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Tuesday, October 11, 2011

13. காலேப்


13.    காலேப்
கானான் தேசத்திற்குள் சென்ற முன்னோடி மக்களில் ஒருவன்

முக்கிய வசனம்
(வசனம் முரண் படுகிறது!) (எண்.14:24)

முக்கிய குறிப்புகள்:
·         மோசேயின் சிறந்த தொழிலாளி – வேவுக்காரன் (ஒற்றன்)
·         யூதாவின் சிறப்பான தலைவன்.
·         தேவனோடு தனிப்பட்ட உறவு கொண்டிருந்தான்.
·         அவனுடைய கீழ்ப்படிதலுக்குத் தக்கதாக சன்மானம் பெற்றான்.


1.   முகவுரை
காலேப் என்ற பெயர் ‘நாய்’ என்று பொருள் படலாம். (அதாவது அடிமை). அவன் யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் (எண்.13:6). இவன் பிறப்பில் ஒரு கானானியன் என்று நம்பப்படகிறது. இவன் யூதா வம்சத்தாருடன் இணைக்கப்பட்ட கோராசியரின் இனத்தைச் சார்ந்தவன். குறிப்பாக, காலேப் ஒரு விசேஷித்த ஆவியைக் கொண்டவனாக கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றிய தேவ ஊழிய்க்காரன் என்று புகழப்பட்டான் (எண்.14:24, (உபா.1:36).

2.   காலேப் செய்த பயனுள்ள காரியங்கள் யாவை?
a.   கானான் தேசத்தை வேவு பார்க்கும்படி மோசேயினால் அனுப்பப்பட்ட இருவரில் இவன் ஒருவன். வல்லமையான தேவனிடத்தில் விசுவாசமுள்ள மனிதன். தேவனை நன்கு அறிந்திருந்ததே அவனுடைய தைரியத்திற்குக் காரணமாக இருந்த்தே தவிர, தேசத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு இஸ்ரவேலின் தகுதியின் மேல் அவன் நம்பிக்கை வைக்கவில்லை. மற்ற மனிதர்கள் சொல்வதை அவன் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அதை ஒப்புக் கொள்வது தேவன் பேரில் நம்பிக்கை வைக்காதது போலிருக்கும். “தேவன் என்ன சொல்கிறார்?” என்பதைதான் அவன் கேட்கிறான். வேதாகமத்தை நாம் ஆராய்ந்து படிக்கும்போது நாம் கற்றுக் கொள்ளும் அடிப்படையான சத்தியங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வழியைக் காட்டுகின்றன. முக்கியமாக நாம் கவனம் செலுத்த வேண்டியது, தேவனோடு நமக்குள்ள தனிப்பட்ட உறவாகும். காலேப் சொன்ன காரியம் ஒப்புக் கொள்ளபட்டது. அதிகமானோர் சொல்லும் கருத்தைக் கண்டு, அது சரியா அல்லது தவறா என்று அளவிட முடியாது.

b.   எகிப்திலிருந்து புறப்பட்டவர்களில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்த இருவரில் இவனும் ஒருவன்.

c.   காலேப் தன் முழு இருதயத்தோடும் தேவனைப் பிற்பற்றித் தன்னுடைய கீழ்ப்படிதலுக்கான சன்மானத்தைப் பெற்றான். காலேப், யோசுவா இவர்கள் இருவர் மாத்திரமே தேசத்தை வேவு பார்த்து அது குறித்து நல்ல அறிக்கை கொண்டு வந்தது, மற்ற ஜனங்களுக்குப் பிரியமாக இல்லை. ஏனென்றால், அவர்கள் கானானோடு போர் தொடுப்பதைத் தவிர்க்க முயற்சித்தனர்.

3.   முடிவுரை
a.   தேவன் அவனை ஆசீர்வதித்தார். அவன் 85 வயதாக இருக்கும்போது, யோசுவா காலேப்பை ஆசீர்வதித்து எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாக்க் கொடுத்தான்: யோசுவா 14:113-15. தேவனுடைய உண்மையில் நம்பிக்கை வைத்ததே அவனுடைய தைரியத்தின் அடித்தளமாக இருந்தது. வெளிப்படையாகப் பல தடைகள் இருந்த போதிலும் அவன் தேவனுடைய வாக்குறுதியில் விசுவாசம் வைத்தான்.

4.   வேத வசன ஆதாரங்கள்
a.   காலேபின் சரித்திரம் எண்.13, 14ம் அதிகாரங்களில் கூறப்பட்டுள்ளது. நியாயாதிபதிகள் 1ம் அதிகாரத்திலும் 1நாளா.4:11-உம் இவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.

5.   விவாதம் செய்வதற்கான கேள்விகள்
a.   நமது சூழ்நிலையில் தேவனுடைய செயல்களை நாம் எவ்வாறு பகுத்தறிந்து கொள்ளக் கூடும்?
b.   நமது செயல்களில் காணப்படும் குறைகள் என்ன?
c.   நமது சமூகத்தில் திருச்சபை செய்துவரும் செயல்களை நாம் எவ்வாறு மதிபிட்டுப் பாராட்டுகிறோம்?
d.   நமது சபைகளில் வயது முதிர்ந்தவர்களை ஊழியத்தில் எவ்வாறு உபயோகப்படுத்தலாம்?
e.   காலேபின் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?

மொழிபெயர்ப்பு:
திருமதி டப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம்.

No comments:

Post a Comment