தேவனின்
திட்டமும் நமது மறுமொழியும்
1.
முன்னுரை –
தேவனால் உந்தப்பட்ட நோக்கம்
1.1.
a) ஒரு திட்டத்திற்காக நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் (யோவான் 17:18; அப். 20:24)
b) பிதா என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்
(1கொரி.12:5)
c) தேவனுக்குப் பகைவர்களாக இருந்த நம்மை சிநேகிதர்களாக
மாற்றி,
பிறரையும்
அவருடைய சிநேகிதர்களாக மாற்றும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். (2கொரி.5:18)
1.2.
நமது தரிசனத்தின் முக்கியத்துவம்.
a.
இயேசு இந்த லோகத்தில் நிறைவேற்றிய கடமைகளைத் தொடர்ந்து
செய்வது நமது தரிசனமாகும்.
b.
தம்மண்டை வருவதற்கு மட்டுமல்ல; தம்மிடத்தில் இருந்து
புறப்படுவதற்கும் இயேசு அழைத்திருக்கிறார். (மத்தேயு 28:19-20).
c.
சுகப்படுத்துதல், உறவை ஏற்படுத்துதல் (புதுப்பித்தல்), எச்சரித்தல், புலம்புதல், ஆறுதல் கூறுதல் (ரோவன் வில்லியம்) போன்றவை (எசேக்கியேல் 3:18).
1.3.
உறவைப் புதுப்பிக்கும் நமது தரிசனம் அற்புதமானது (2கொரி.5:18; 2கொரி.5:20). நித்திய வாழ்வைப் பெற்றுக்
கொள்ளும் செய்தியைப் பிறருக்கு அறிவிக்கும் கடமை மகத்தானது.
2.
உங்கள் தரிசனத்தின் மூலம் நிலையான பயன்கள்
உண்டாகும்
2.1.
இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் ஒவ்வொருவருக்கும் பெரும்
பணி வழங்கப்பட்டிருக்கிறது.
2.2.
நமது ஜீவியத்தின் பிரதான ஆதாயம் என்னவென்றால், நிலையான நன்மையைத்
தரும் காரியத்தைச் செய்வதுதான், என்று வில்லியம் ஜேம்ஸ் கூறுகிறார்.
2.3.
தேவனின் அற்புதமான இரக்கத்தையும் அன்பையும் பிறருக்கு
எடுத்துக் கூற நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.
2.4.
நமது தரிசனம் இந்த உலகம் முழுவதையும் சார்ந்திருக்கிறது (அப்.1:7-8; மத்24:114).
3.
உங்கள் தரிசனத்தை நிறைவேற்றுவதற்கு என்ன
தேவைப்படுகிறது?
3.1.
உன்னை முழுமையாக தேவனிடத்தில் சமர்ப்பித்து விடு (ரோமர் 6:12). தேவனுடைய ஆயுதம் என்ற
முறையில் நீ முழுமையாகப் பயன்படுவாய்.
3.2.
இத்தரிசனத்திற்குத் தேவைப்படும் அனைத்தையும் தேவன் ஈடுகட்டுவார் (மத்.6:33).
3.3.
கிறிஸ்துவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பே அவர்
இத்தரிசனத்திற்காக நம்மைத் தயார்படத்தி விட்டார் (எபே.1:11).
4.
பூமியின் படைப்பில் தேவனின் அன்பு உணர்த்தப்பட்டிருக்கிறது.
4.1.
அன்பின் வெளிப்பாடாக தேவன் உலகைப் படைத்தார்.
4.2.
தம் படைப்பை நேசிப்பதோடு, அவரின் படைப்பாகிய நாம், தம் ஜனங்களுக்குப்
பணிவிடை,
துதி, ஆராதனை போன்ற நடவடிக்கைகள்
மூலம் அவரோடு உறவாட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்.
4.3.
தேவன் தம் ஜனங்களை எழுப்பினார் – யூதர்கள் (யோனா, ரூத்) ஆனால் அவர்கள் தேச
சித்தத்தை நிறைவேற்றவில்லை.
5.
தம் சித்தத்தை நிறைவேற்ற தேவன் புதிய
சமுதாயத்தை எழுப்பினார் (யோவான் 3:16)
5.1.
திசை மாறிச் சென்ற தம் ஜனங்களை மீட்க இயேசு அனுப்பப்
பட்டார்.
5.2.
மனந் திரும்ப வேண்டும் என்பதுதான் அந்த அழைப்பு (புதிய ஏற்பாட்டிலும்
பழைய ஏற்பாட்டிலும் காணப்படுகின்ற பொதுவான சொல் அது).
5.3.
சீஷர்களையும் அப்போஸ்தலர்களையும் எழுப்பினார் (உபதேசிக்க, சுகமளிக்க)
5.4.
பவுல், பர்னபாஸ், பிறர் உட்பட பன்னிரெண்டு பேரும்
சுவிசேஷப் பணி மேற்கொண்டனர்.
6.
ஆசியா மற்றும் பிற உலக நாடுகளில் சுவிசேஷப்
பணி
6.1.
விலகிச் சென்ற ஜனங்களை தேவனிடத்தில் மீட்டெடுக்க சுவிசேஷப்
பணி மேற்கொள்ளப் பட்டது.
6.2.
சுகமளிக்கும் அருட்பணி (சரீரம், உள்ளம் போன்றவை).
6.3.
கல்வி (தேவ ஞானம் மற்றும் பிற உலக ஞானம்).
6.4.
பிற உலக தேசங்களை அறிந்து கொள்ளுதல் மற்றும் கண்டு பிடித்தல்.
7.1.
தேவனையும் நமது அயலானையும் நேசிப்போம் (இரண்டு பிரதான கற்பனை).
7.2.
ஆராதிப்போம்.
7.3.
அறிவார்ந்த கிறிஸ்தவர்களாகத் திகழ்ந்து சுவிசேஷம் கூறுவோம் (அனைவருக்கும் நற்செய்தி).
7.4.
சுகமளிப்போம் (காயப்பட்ட சரீரத்திற்கும் உள்ளத்திற்கும்).
7.5.
அருட்பணி தேவைக்காக நமது தசம பாகத்தை வழங்குவோம்.
7.6.
இந்த உலக நலனில் அக்கறை காட்டுவோம். இவ்வுலகம் தேவனுக்குச்
சொந்தம்.
நாம்
அவருடைய தளபதிகள் மாத்திரமே. மரங்களை நடவு செய்வதோடு நீரின் பயனிலும் ஜாக்கிரதையாய்
இருப்போம்.
பேராயர் டத்தோ
எஸ்.பத்துமலை (4/10/2011)
மொழிபெய்ர்ப்பு: ஜான்சன் விக்டர்
No comments:
Post a Comment