11. போவாஸ்
1. முகவுரை
– அவன் வரலாறு
அவனுடைய பெயரின் அர்த்தம், ‘பெலன்’, ‘உறுதி’
என்பதாகும். இவன் பெத்லெகேம் ஊரானும், யூதா வம்சத்தில் பிறந்தவனும் ஒரு யூத ராஜாவின்
முற்பிதாவும் (மத்.1:5) நமது இரட்சகராகிய இயேசுவின் முன்னோராகவும் இருந்தான். அவன்
மிகுந்த நற்குணமும் நீதியுமுள்ளவனாயிருந்தான் என்பது, மோவாபியப் பெண்ணாகிய ரூத்துக்கு
அவன் காண்பித்த தயவிலும், அவளுக்குத் தான் சுதந்தரவாளி என்பதை அறிந்து அவனை மணந்து
கொண்டதிலும் தெரிய வருகிறது.
போவாஸ் ஒரு தைரியசாலியாகப் பாராட்டப் படுகிறான்.
இவனைப் போன்ற வீரர்கள், தாங்கள் வீரச் செயல் புரியும் நேரங்களைப் பொதுவாக உணர்ந்து
கொள்வதில்லை; மற்றவர்களும் அதை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், தங்களுடைய
செயல்கள் பிறரில் ஏற்படுத்தும் விளைவுகளை உணர்ந்தோ அல்லது உணராமலோ அவர்கள் சரியான நேரத்தில்
சரியான காரியங்களைச் செய்பவர்களாக இருக்கிறார்கள்.
மற்றவர்களுடைய காரியங்களில் ஈடுபடும்போது அவன்
எப்போதும் அவர்களுடைய தேவைகளை உணர்ந்து அறியக் கூடியவனாக இருந்தான். தன்னுடைய வேலையாட்கள்,
உறவினர், மற்றவர்களோடும் அவன் பேசிய வார்த்தைகள் பட்சமும், தயவும் நிறைந்நதவனாக இருந்தன.
தாராள மனதுடன் வெளிப்படையாக மற்றவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தான். ரூத் யார் என்பதை
அறிந்து கொண்டபோது அவளுக்கு உதவி செய்யும் படி பல நடவடிக்கைகள் எடுத்தான். ஏனென்றால்,
தனக்கு உறவினனான நகோமிக்கு ரூத் உண்மையுள்ளவனாக இருந்தாள். அவன் தனக்குப் பாதுகாப்பு
அளிக்க வேண்டுமென்று கேட்கும்படி நகோமி ரூத்துக்கு ஆலோசனை கூறினபோது, சட்டப்பிரகாரமான
தடைகளையெல்லாம் அகற்றியபின் அவன் ரூத்தை மணந்து கொண்டான்.
போவாஸ் சரியானபடி செய்தது மட்டுமல்ல; அதை உடனே
சொல்லவும் செய்தான். ரூத்தும போவாசும் தாவீது குடும்பம், இயேசுவின் குடும்பத்தின் ஒரு
பகுதியாகி விட்டனர். தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையில் அவன் சரியான முடிவுடுத்து செய்லபட்டான்.
2. அவனுடைய
பலமும் சாதனைகளும்:
a.
தான் சொல்லிய
வார்த்தையின்படி செய்பவன்.
b.
தேவையுள்ளவர்களின்
தேவைகளை அறிந்தவனாக தன்னுடைய வேலையாட்களிடம் அக்கரை காண்பித்தான்.
c.
நல்ல பொறுப்புணர்வும்
நேர்மையும் உள்ளவனாக இருந்தான்.
d.
அவன் ஒரு
வெற்றி பெற்ற, புத்திசாலியான தொழிலதிபராக இருந்தான்.
3. அவன்
வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ளலாம்?
a.
செய்ய
வேண்டியவற்றை சரியான பிரகாரம் செய்வதே வீரமுள்ள செயலாகும்.
b.
தேவன்
அடிக்கடி, சிறிய தீர்மானங்களைத் தமது பெரிய திட்டத்தை நிறைவேற்ற்றுவதில் உபயோகிக்கிறார்.
c.
நமது அன்றாட
வாழ்க்கையில் தீர்மானங்களைச் செய்ய வேண்டிய சவாலை நாம் எதிர்நோக்குகிறோம். நகோமியின்
நெருங்கின உறவினரைப் போல் நாமும் சரியான தெரிந்து கொள்ளுதலை செய்வதைவிட்டு, இலகுவானதைத்
தெரிந்து கொள்பவர்களாக இருக்கிறோம். அநேகமாக, எது சரியான தெரிந்து கொள்ளுதல் என்பது
தெளிவாகத் தெரிகிறது. இன்று நாம் தெரிந்து கொள்ளுதலில் தேவன் நமக்கு விசேஷித்த விழிப்புணர்வைத்
தந்து, அத்துடன் நாம் சரியான தெரிந்து கொள்ளுதலை செய்யத் தக்கதாக புதுப்பிக்கப்பட்ட
ஒப்புக் கொடுத்தலுக்காகவும் தேவனை வேண்டிக் கொள்வோமாக.
மொழிபெயர்ப்பு:
திருமதி டப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம்.
No comments:
Post a Comment