Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Tuesday, October 11, 2011

14. தானியேல் தீர்க்கதரிசி


14.    தானியேல் தீர்க்கதரிசி
இரு பாபிலோனிய அரசர்களுக்கும் இரு மேதியா பெர்சியா அரசர்களுக்கும் ஆலோசகர்


முக்கிய வசனம்
ராஜாவினால் பெல்தெஷாத்சாரென்னும் பெயரிடப்பட்ட அந்தத் தானியேலுக்குள் சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிறதும், புதைபொருள்களை வெளிப்படுத்துகிறதும், கருகலானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும் புத்தியும் விசேஷித்த ஆவியும் உண்டென்று காணப்பட்டது; இப்போதும் தானியேல் அழைக்கப்படட்டும், அவன் அர்த்தத்தை வெளிப்படுத்துவான் என்றாள். தானியேல் 5:12

சுருக்கமான குறிப்புகள்
·         நாடு கடத்தப்பட்ட தானியேல் பாபிலோன், பெர்சியாவின் கொலு மண்டபத்தில் சேவை செய்தான்.
·         நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்திற்கு அவன் அர்த்தம் கூறி விளக்கினான்.
·         அவனுடைய தேவ பக்தி, விசுவாசத்திற்காக சிங்கங்களின் கெபியுவில் போடப்பட்டான்.
·         அவன் ஒரு ஜெப வீரன்.
·         தேவனுக்கு உண்மையாக இருப்பதில் அனைவரும் தானியேலின் முன் மாதிரியைப் பின்பற்ற வேண்டும்.

1.   முன்னுரைஅவனுடைய வரலாறு
தானியேல் என்பதுதேவன் என் நியாயாதிபதிஎன்று பொருள். இவன் யூதாவிலிருந்து வந்தவன். பாபிலோன், பெர்சியாவின் ராஜ சமூகத்தில் (கொலு மண்டபத்தில்) பணி புரிந்தான். முதலாவது இஸ்ரவேலிலிருந்து கைதியாக வந்து பின்பு ராஜாகளுக்கு ஆலோசகர் ஆனார். அனனியா மிஷாவேல், அசரியா, நேபுகாத் நேச்சார், பெல்ஷாத்சார், தரிவு, சைரஸ் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தான்.

தானியேலின் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது தவிர தானியேலின் வாழ்க்கை சரித்திரம் பற்றி அதிகமாக எதுவும் தெரியவில்லை. எலேமியா, எசேக்கியேலைப்போல் தானியேல் ஆசாரியன் அல்லன். ஆனால், ஏசாயாவைப் போல், யூதா கோத்திரத்தில் ராஜ குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தான் (11:3-6). யோயாக்கும் அரசாண்ட 3ம் வருடத்தில் (கி.மு.605) எசேக்கியேலுக்கு 8 வருடங்களுக்கு முன், அவன் ஒரு வாலிபனாக பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்டான். அங்கு அவன் நேபுகாத் நேச்சரின் அரண்மனையில் கல்தேயரின் பாஷையையும் எழுத்தையும் கற்றுக் கொண்டு ஞானத்திலும் புத்தியிலும் சிறந்து விளங்கினான். தானியேல் பிரசித்தி பெறுவதற்குக் காரணமாக இருந்த முதலாவது சம்பவம், நேபுகாத் நேச்சாரின் சொப்பனத்திற்கு அர்த்தம் சொன்னதுதான். இது இந்த அரசனின் இரண்டாவது வருட ஆட்சி காலத்தில் நேரிட்டது (அதாவது கி.மு.603). இதைத் தொடர்ந்து சிலையை வணங்க மறுத்ததற்காக நெருப்பில் போடப்பட்ட 3 சிநேகிதர்களும் எரிகிற நெருப்பிலிருந்து காப்பாற்றப் பட்டனர். சில வருடங்களுக்குப் பின் நேபுகாத்நேச்சாரின் இரண்டாவது சொப்பனம் வந்தது. இந்த சம்பவங்கள் நடந்த வரும் 5ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஜாவாகிய பெல்ஷாத்சாரைப் பற்றி சுவரில் எழுதப்பட்ட சம்பவம் கி.மு.538இல் நடைபெற்றிருக்கலாம். அந்த இரவில் பெல்ஷாத்சார் என்ற அந்த இளமையான அரசன் கொலை செய்யப்பட்டான். ராஜ்யத்திலே தானியேல் 33ம் அதிகாரியாக நியமிக்கப்பட்டான். தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாக இருந்தான். தானியேல் தான் வணங்கிய தேவனுக்கு உண்மையாக ஜெபித்து வந்ததினால் தரியுவின் ஆட்சியில் சிங்கக் கெபியுவுக்குள் போடப்பட்டான். ஆனால், அவன் அதிசயமாகக் காப்பாற்றப் பட்டான். அவன் தைதியாக இருந்த காலம் முழுவதும் தீர்க்கதரிசனம் உரைத்தான் (1:21). இரண்டு வருடங் கழித்து கோரேஸ் அரசாண்ட 3ம் வருஷத்திலே தனது கடைசி தீர்க்கதரிசனம் உரைத்தான் (10:1). அந்நிய தேசத்திலும் கூட யெகோவாவின் மேலுள்ள விசுவாசத்தில் உண்மையுள்ளவர்களாக இருப்பதற்றகு உதாரணமாக நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறான். நோவா யோபு இவர்களுடன் தானியேலையும் நீதிமான் என்று எசேக்கியேல் குறிப்பிடுகிறார் (ஏசா.114:14, 20). அத்துடன் அவன் விசேஷித்த ஞானம் வாய்ந்தவன் என்றும் குறிப்பிடுகிறார் (எசே.28:3). கர்த்தராகிய இயேசுவும் அவன் ஒரு தீர்க்கதரிசி என்று கூறுகிறார் (மத்.24:5).

தானியேலின் புத்தகத்தைப் பற்றிப் பேசுவதற்குமுன் நாம் தானியேலின் வாழ்க்கையிலிருந்து ஆழமான கருத்துகளைக் கண்டறியலாம்.

தானியேலும அவனுடைய சிநேகிதரும் யூதாவிலுள்ள தங்கள் வீடுகளிலிருந்து சிறைப்பிடித்து பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்டனர். அவர்ளுடைய எதிர்காலம் நிச்சயமற்தாக இருந்தது. ஆனாலும் அவர்கள் ராஜாவின் அரண்மனையில் வேலை செய்யத்தக்கதாகத் தனிப்பட்ட திறமைகளையுடையவர்களாக இருந்தார்கள். தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொண்டனர். தேவனைக் குறித்த தனது திட நம்பிக்கையை விட்டுக் கொடுக்க மறுத்ததினால் இவன் ஒரு மிக உயர்ந்த மனிதனாகிறான். தனது சொந்த வாழ்க்கையில் இவன் தேவனுடைய சித்தத்திற்கே கீழ்ப்படிந்தான். தான் கடைப்பிடித்து வந்த நற்பழக்கங்களை அவன் மாற்றிக் கொள்ள இடம் கொடுக்கவில்லை. அவனுடைய சரீரப் பிரகாரமான ஆத்துமாப்பிகாரமான ஆகாராம், தேவனோடு அவன் கொண்டிருந்த தனிப்பட்ட உறவின் முக்கிய பங்காக இருந்தது. அவன் சாப்பிடுவதில் கவனமாக நல்ல ஜெப ஜீவியம் செய்து வந்தான். அரசனுக்குச் சேவை செய்யப் பயிற்சி பெறுவதின் பலாபலன் என்னவென்றால், பயிற்சி பெறுபவர்களும் ராஜ போஜனத்தை உண்ணலாம். ஆனால் தானியேலோ விசாரிப்புக்காரனிடம் பேசி, பருப்பு, மரக்கறி, ஆகிய உணவைத் தெரிந்து கொண்டு அதுவே ஆரோக்கியமான உணவு என்று நிரூபித்தான். தானியேலைப் போலவே, சாப்பிடும் நேரங்கள்தான் வெளிப்படையாக, நமது பசியைக் கட்டுப்ப்படுத்தும் முயற்சிகளை நாம் சோதித்துப் பார்க்கலாம்.

அவன் ஒரு ஜெப வீரனாக இருந்தான். தேவனோடு தொடர்பு கொள்ளக் கூடியவனாக இருந்தான். ஏனென்னறால் அவன் அதைப் பழக்கப்படத்திக் கொண்டான். சிங்கக் கெபியுவில் போடப்படுவதாக இருந்தாலும் அவன் தனது திட நம்பிக்கையைச் செயலில் காண்பித்தான். அவனுடைய தெரிந்து கொள்ளுதல் சரியானது என்பதை அவனுடைய வாழ்க்கை நிரூபித்துக் காட்டினது.

தானியேலின் புத்தகத்தில் அடங்கியுள்ளவை:-
இந்தப் புத்தகம் 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
1.    சரித்திர சம்பந்தமானது (அதி. 1-6)
2.    தீர்க்கதரிசனம் பற்றியது (அதி. 7-12)

தானியேலும் அவன் சிநேகிதரும் நேபுகாத் நேச்சாரின் அரன்மனையில் இருந்தார்கள். சிங்கக் கெபியுவில் போடப்படும் பரீட்சையானது யாவருக்கும் நன்கு தெரிந்ததாக இருந்தது. தேவனைப் பின்பற்றுபவர்கள் பலவிதமான சோதனைகளையும் சந்திக்க அழைக்கப்படுகிறார்கள் என்பதை இந்தப் புத்தகம் தெரிவிக்கிறது. தானியேலின் ஜெபங்களும் உபவாசமும் அவனது சோதனைகளைச் சந்திக்கவும் உறுதியுடன் நிற்கவும் அவனுக்கு வழி வகுத்த்து.


2.   பலமும் சாதனைகளும்
a.     பாபிலோனுக்குச் சிறைக் கைதியாகக் கொண்டு போகப்பட்டபோது இவன் ஒரு வாலிபனாக இருந்த போதிலும் தன்னுடைய தேவன் பேரிலுள்ள விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருந்தான்.
b.     இரு பாபிலோனிய அரசர்களுக்கும் இரு மேதியா பெர்சிய அரசர்களுக்கும் சேவை செய்தான்.
c.     இவன் ஒரு ஜெப வீரனாக இருந்ததுடன் அரசியல் நிர்வாகத் திறமையும், தீர்க்கதரிசன வரமும் உடையவனாக இருந்தான்.
d.    சிங்கங்களின் கெபியுவிலும் உயிர்த் தப்பினான்.

3.   அவன் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்கள்:-
a.     வாழ்க்கையில் என்ன நேரிட்ட போதிலும தேவன் சொல்லுகிற படியே செய்யத் தக்கதாக நீ தேவனில் வைத்திருக்கும் விசுவாசத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கிறாயா? இப்படிப்பட்ட திட நம்பிக்கைகளுக்கு மரியாதை கொடுக்கப்படும்.
b.     கஷ்டமான நிலைமைக்குள் பிரவேசிக்கும் வரை ஜெபத்தைப் பற்றி அறிந்து கொள்ள காத்துக்  கொண்டிருக்க வேண்டாம்.
c.     மக்கள் தேவனுக்கு உண்மையாயிருக்கும் பட்சத்தில், அவர்கள் எங்கெங்கு இருந்தாலும், அங்கே அவர்களை தேவன் உபயோகிக்கக் கூடும்.

4.   வேத ஆதாரங்கள்:
a.     தானியேலின் சரித்திரம் தானியேலின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மத்தேயு 24:15உம் இவன் குறிறப்பிடப்பட்டிருக்கிறான்.

5.   விவாதம் செய்ய வேண்டிய கேள்விகள்:
a.     தானியேல் ஏன் பாபிலோனுக்குக் கொண்டு போகப் பட்டான்?
b.     அரசாங்கத்தில் நல்ல நிர்வாக அதிகாரி என்பதை எவ்வ்வாறு நிரூபித்தான்?
c.     தஒரு ஜெப வீரன் என்பதை எவ்வாறு நிரூபித்தான்?
d.    சிங்க்க் கெபியுவில் எவ்வாறு உயிர் தப்பினான்?
e.     அவன் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளம் பாடங்கள் யாவை?

மொழிபெயர்ப்பு:
திருமதி டப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம்.

No comments:

Post a Comment