புறஜாதியான், குறி சொல்பவன், தீர்க்கதரிசி, ஏதோமிலிருந்து
வந்தவன்.
முக்கிய வசனம்:
15 மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.
16 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். 2 பேதுரு 15,16
சுருக்கமான குறிப்புகள்:
· பிலேயாம் ஒரு சூனியக்காரன்.
·
அந்நிய தேசத்தானாக இருந்த போதிலும் தேவன் அவனை உபயோகித்தார்.
·
சபிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் அவன் இஸ்ரவேல்
மக்களை சபிக்கவில்லை.
·
மோவாபியருக்கு ரஜாவான பாலாக் அவனை வேலைக்கு அமர்த்தினான்.
·
ஒரு விசேஷமான தேவைக்காக தேவன் அவைனை உபயோகித்தார்.
·
அவனுக்கு போதிக்க தேவன் ஒரு கழுதையை உபயோகித்தார்.
· பிலேயாமின் நோக்கங்கள்
தவறான போதிலும் அவன் நேர்மையுடன் நடந்து கொண்டான்.
1. முகவுரை:
a.
இவன் பெயரின் அர்த்தம் தெரியவில்லை. ‘விழுங்குபவன்’
அல்லது ‘அதிகமாகச் சாப்பிடுபவன்’ என்று சொல்லப்படலாம். இஸ்ரவேலின் தேவனின் கட்டளைக்குக்
கட்டுப்பட்ட அந்நிய தேசத்தான். அவன் தேவனுடைய வார்த்தைக்குச் செவிகொடுத்தான் (எண்.24:12).
தேவனை அறியாத மக்களின் மத்தியில் வாழ்ந்த போதிலும் பிலேயாம் உண்மையான தேவனைப் பற்றி
அறிந்திருந்தான். அத்துடன் இவன் சிறந்த புத்திமானாகவும் தூய்மையானவனாகவும் பேர் பெற்றிருந்தான்.
தேவன் இவனைத் தமது நோக்கத்திற்காக்கப் பயன்படுத்தினார். அவன் செய்ய வேண்டிய பங்கு ஒரு
குறிப்பிட்ட அளவுக்குட்பட்டதாக இருந்தது. தேவனுடைய வார்த்தைக்கு அப்பாற்பட்டு அவன்
நன்மையோ தீமையோ செய்ய முடியாது.
b.
இஸ்ரவேல் ஜனத்தைச் சபிக்கும்படி அவன் அழைக்கப்பட்டான்.
ஆனால் சபிப்பதற்குப் பதிலாக அவன் தற்காலத்தின் ஆசீர்வாதங்களை உறுதிப்படுத்தி, வருஙகாலத்திலும்
இஸ்ரவேல் உயர்வான நிலைமைக்கு வரும் என்று கூறி ஆசீர்வதித்தான்.
c.
பிலேயாம் மோவாபுக்கு வந்து சேர்ந்த போது, அவன் வாயிலிருந்து
வரும் சாபமான வார்த்தைகள், இஸ்ரவேலைக் குறித்து மோவாபுக்கிருந்த பயத்தைக் குறைத்துவிடும்
என்று நம்பிக்கையுடன் ஆயுதங்கள் செய்யப்பட்டன. ஆனால், ஆசீர்வதிக்கப்பட்ட இஸ்ரவேலை பிலேயாம்
சபிக்கவில்லை. மொத்தத்தில் பிலேயாம் 4 முறை இது போன்ற ஆசீர்வாதங்களைக் கூறினான். இவ்வாறு
பிலேயாம் ஆசீர்வதித்தது யாக்கோபு, மோசே (உபா.33) இவர்கள் தங்கள் மரணப் படுக்கையில்
(ஆதி.29) கூறின ஆசீர்வாதங்களுக்கு ஒத்ததாக இருந்தது என்று கூறப்படுகிறது.
2. பிலேயாமிடமிருந்து கற்றுக் கொள்ளும் பாடம் என்ன?
a.
ஒரு அந்நிய தேசத்தான் தேவனால் உபயோகிக்கப்பட்டான். கர்த்தர்தாமே
ஒரே மெய்யான தேவன் என்று அவன் விசுவாசியாதிருந்தும் அவன் தேவனால் உபயோகிக்கப்பட்டான்.
பாலாக் அனுப்பிய மூப்பர்கள், குறிசொல்லுதற்குரிய கூலியை எடுத்துக் கொண்டு வந்ததினால்
பிலேயாம் குறிசொல்லும் தொழிலைச் செய்து வந்தான் என்று தெரிய வருகிறது. கடைசியில் அவன்
அந்த ஜனத்துக்கு விரோதமாகப் பேசினான். அவன் தேவனை உண்மையாகப் பின்பற்றினான் என்று நாம்
நினைக்கக் கூடாது. அவனுடைய முக்கியமான நோக்கம் செல்வம். பாலாக் அவனை வேண்டிக் கொண்டபோதிலும்
அவன் தேவனுக்குக் கீழ்ப்படிந்து இஸ்ரவேலை ஆசீர்வதித்தான். ஆனால் அவன் தேவனுக்குக் கீழ்ப்படிந்து
இஸ்ரவேலை ஆசீர்வதித்தான். ஆனால் அவன் தேவனுக்குக் கீழ்ப்படிவதில் உறுதியாக இருக்கவில்லை.
b.
மிருகங்களின் மூலமாகக்கூட தேவன் நமக்கு நினைவூட்டலாம்
என்று தேவன் காண்பித்தார். பிலேயாமுக்குப் போதிக்கும்படி அவர் கழுதையின் வாயைத் திறந்தார்.
தேவன் தாம் விரும்பும் விதத்தில் எப்படியாவது நம்முடன் பேசலாம்.
c.
அவனுடைய பெலவீனமும் தவறுகளும்: விக்கிரகங்களை வணங்கும்படி
அவன் இஸ்ரவேலரை ஊக்குவித்தான் (எண்.31:16). நமது சுய ரூபத்தை மறைக்கும்படியாக நாம்
போடும் முகத்திரைகள் சிதைந்து, நாம் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்ற உண்மை வெளியாகிவிடும்.
எப்படியானாலும் தேவன் நம்மை மன்னித்து, நாம் இருக்கிற வண்ணமாகவே நம்மை ஏற்றுக் கொள்ள
சித்தமுடையவராக இருக்கிறார்.
d.
தேவனை உண்மையாகப் பின்பற்றும் அனைவருக்கும் பிலேயாம்
ஒரு எச்சரிக்கையாக இருக்கிறான். மீதியானியருக்காக இஸ்ரவேலுடன் யுத்தம் செய்யும்போது
அவன் மரித்தான் (எண்.31:8,16).
3. அவன் வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள்:
a.
நோக்கங்கள் செயல்களைப் போலவே முக்கியமானவை.
b.
உங்கள் கொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயம்
இருக்கிறது.
4. தேவ வசன ஆதாரங்கள்:
a.
எண்.22:1-25;
b.
நெகேமியா 13:2;
c.
மீகா 6:5; 2பேதுரு 2:15, 16;
d.
யூதா 11;
e.
வெளி.2:14.
5. விவாதம் செய்வதற்கான கேள்விகள்:
a.
பிலேயாமைத் தவிர தேவன் தமது நோக்கத்திற்காக உபயோகித்த
இஸ்ரவேலர் அல்லாத (புற ஜாதியார்) வேறு ஒருவர் யார்?
b.
தேவனுக்குக் கீழ்ப்படிவதில் பிலேயாமின் நோக்கம் என்ன?
c.
பிலேயாம் செய்த தவறுகளை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
d.
2பேதுரு 15,16ன் படி பிலேயாம் எப்படிப் பட்டவன்?
e.
பாலாக் என்பவன் யார்?
மொழிபெயர்ப்பு:
திருமதி டப்னி ஜோசப்,
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங்
ஜெயா.
பிலேயாமைத் தவிர தேவன் தமது நோக்கத்திற்காக உபயோகித்த இஸ்ரவேலர் அல்லாத (புற ஜாதியார்) வேறு ஒருவர் யார்? நேபுகாத்நேச்சார்
ReplyDelete