Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, October 12, 2011

19. எலெயாசர்,



ஆரோனின் மகன் (ஓர் ஆசாரியனின் மகன்)

முக்கிய வசனம்:
23 ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 24 ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை. 25 நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி, Num 33:38; Deut 32:50; 26 ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார்.  (எண்ணாகம்ம் 20:23-26)

சுருக்கமான குறிப்புகள்:
·         ஆரோன், எலிசபாளின் மூன்றாவது குமாரன் (யாத்.6.23) பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியின் கணவன்.
·         ஆரோனும் அவனுடைய 4 குமார்ரும் கர்த்தருக்குச் சேவை செய்யும்படி பிரதிர்ஷ்டை செய்ப்பட்டார்கள் (லேவி.9:9)
·         நதாப், அபியு இவர்களின் மரணத்திற்குப் பின் ஆரோனும் அவனுடைய மற்ற இரு குமாரர் எலெயாசாரும் இத்தாமாரும் தொடர்ந்து ஆசாரிய ஊழியத்தைச் செய்தார்கள் (எண்.4:16).
·         ஆரோன் உடுத்தியிருந்த ஆசாரிய வஸ்திரங்களை மோசே கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவித்தான் (எண்.20:28).
·         எலெயாசார் லேவியருக்குத் தலைவனாக நியமிக்கப் பட்டான் (எண்.3:32). பரிசுத்த ஸ்தலத்தை விசாரிக்கவும், ஆசாரித்துவ ஊழியத்தைச் செய்யும் படியாகவும் நியமிக்கப் பட்டான் (எண்.4:16).
·         அவனுக்கு அலோசகராக இருந்த போதும் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக மோசே யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்தான்.
·         ஜனங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதில் எலெயாசர் மோசேக்கு உதவி செய்தான்.
·         யோசுவாவின் காலத்தில் தீர்மானங்களைச் செய்வதிலும் அவன் பங்கு பெற்றான்.

1.   முகவுரை
இவனுடைய பெயர்தேவன் உதவி செய்பவர்என்று பொருள்படும் ஒரு நடிகன் தன் பங்கு என்ன என்பதை முழுவதுமாக அறிந்து கொண்டு, அழைக்கப்பட்ட உடனே அந்தப் பாத்திரத்தில் நடிக்க விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும். எலெயாசரும் இதுபோல் தனது பங்கை அறிந்திருந்தது மட்டுமல்ல. அதைத் திறமையுடன் செய்வதற்கு நல்ல பயிற்சி பெற்றவனாகவும் இருந்தான். அவனுடைய இரு சகோதரர்களின் மரணமும் தகப்பனாகிய ஆரோனின் மரணமும் சோகம் நிறைந்ததாக இருந்தது. ஒரு சந்தர்ப்பதில் தேவனுடைய பரிசத்தத்தைக் குறித்துக் கவலையீனமாய் இருந்ததினால் தன்னுடைய இரண்டு மூத்த சகோதரர்களும் நெருப்பில் எரிந்து மாண்டு போனதை எலெயாசர் நேரில் பார்த்தான். பின்பு அவனுடைய தகப்பனார் இறந்தபோது அவன் பிரதான ஆசாரியனாக்கப் பட்டான். ஸ்ரவேலில் இது மிகப் பெரிய பொறுப்பு வாய்ந்ததும் கஷ்டமானுதுமான பதவிகளுள் ஒன்றாகவும் இருக்கிறது.

நடிக்க விரும்பும் ஒருவனுக்குத் தேவையான வாசகமும், அந்தக் கதாப்பாத்திரத்தின் மாதிரியும் அவனுக்கு உதவியாக இருக்கும். சிறு பிள்ளைப் பிராயத்திலிருந்தே எலெயாசர் மோசே, ஆரோன் இவர்களின் வாழ்க்கையின் மாதிரியைப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது யோசுவாவையும பார்த்துக் கற்றுக் கொள்ளக் கூடியவனாக ருந்தான். இதோடு கூ இவன் ஒரு ஆசாரியனாகவும் யோசுவாவுக்கு ஆலோசகராகவும் ழியம் செய்யும் போது வழிகாட்ட தேவனுடைய கட்டளைகளும் இருந்தன.


2.   பலமும் சாதனைகளும்
a.     தன்னுடைய தகப்பனாகிய ஆரோனுக்குப் பின் பிரதான ஆசாரியனாகப் பதவி ஏற்றான்.
b.     ஜனங்கள் வாக்குப்பண்ணப்பட்ட சேத்திற்குள் போவதற்கு உதவி செய்ததின் மூலமாகத் தன் தகப்பன் செய்த வேலையை முடித்தான்.
c.     மோசேயை அடுத்து வந்த யோசுவாவுடன் சேர்ந்து கர்த்தருடைய வேலையைச் செய்து வந்தான்.
d.     தேவனுக்காக ஜனங்களுடன் பேசினான்.

3.   இவன் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்கள் யாவை?
a.     தற்போது நமக்குள்ள சவால்கள், பொறுப்புக்களில் முழுமையான கவனம் செலுத்தி செய்லபடுவதுதான் தேவன் நமது வருங்காலத்திற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறாரோ, அதற்காக ஆயத்தப்படும் சிறந்த ழியாக இரக்கிறது.
b.     நமத வாழ்நாள் முழுவதும் நாம் எல்லாவற்றிலும் தேவனுக்குக் கீழ்படிவதையே தேவன் விரும்புகிறார்.

4.   வேத வசன ஆதாரங்கள்.
யாத்.6:23, லேவி.0:16-20; எண்.3:1-4; 4:16; 6:3640; 20:25-29; 26:1-3; 27:2; 34:117; உபா.10;116; யோசுவா 14:1; 17:4; 24:33.


5.   விவாதிப்பதற்கான கேள்விகள்
a.     எலெயாசர் என்பதன் அர்த்தம் என்ன?
b.     எலெயாசரின் பலமும் சாதனைகளும் பற்றிப் பேசவும். அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்கள் கற்றுக் கொள்ளலாம்.
c.     அவன் எப்படி யோசுவாவுக்கும் மற்ற தலைவர்களுக்கும் உதவி செய்தான்?
d.     அவன் எங்கு, எப்பொழுது ரோனுக்குப் பதிலாக ஆசாரியன் ஆக்கப்பட்டான்? (எண்.20:23-26)


மொழிபெய்ரப்பு:
திருமதி டப்னி ஜோசப்
பரி.பவுல் ஆலயம், பெட்டாலிங் ஜெயா

No comments:

Post a Comment